பக்கங்கள் செல்ல

cross tab2

Wednesday, May 6, 2015

அர்த்தமுள்ள கேள்விகள் - 14 - காட்டுவாசிகளின் நிலை என்ன?


முஸ்லிம்களாகிய நாங்கள் இஸ்லாத்தை ஏற்காவிட்டால் அந்த மனிதர் செல்லும் இடம் நரகம் என்று கூறிவருகின்றோம். ஆனால், இஸ்லாம் என்றால் என்ன என்று அறியாத மக்கள் அதாவது காட்டு வாசிகள் & பழங்குடியினர் பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை பார்ப்போம்.....

கேள்வி:

இஸ்லாத்தை ஏற்காதவர்களுக்கு நரகம் எனக் கூறுகிறீர்கள். அப்படியானால் இஸ்லாமிய போதனைகள் சென்றடையாத காட்டுவாசிகள் போன்றோரின் நிலை என்ன ?? என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கின்றனர்.

எஸ். சீனி சலாபுதீன், எம். ராஜா முஹம்மது, எம். சாஹுல் ஹமீது, டி. சீனி நைனா, எஸ். சித்தீக், பி. அப்துல் ரஹ்மான் ஷாஹிது கூல்பார், பெரிய கடைவீதி, மண்டபம்

பதில்:

மூஸா நபியவர்கள் ஃபிர்அவ்னிடம் ஓரிறைக் கொள்கையப் பிரச்சாரம் செய்த போது நீங்கள் எந்த கேள்விையக் கேட்கிறார்கேளா அந்தக் கேள்வியைத் தான் அவன் மூஸா நபியிடம் கேட்டான். 'முந்தைய தலைமுறையின் நிலை என்ன?' என்று அவன் கேட்டான். 'அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம்  (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 20:51, 52) இப்போது தான் நீர் ஒரே ஒரு கடவுளைப் பற்றிப் பேசுகிறீர்கள். உமது பிரச்சாரம் சென்றடையாத மக்களைப் பற்றி என்ன தீர்ப்பு சொல்லப் போகிறீர்?  என்பது  இக்கேள்வியின்  கருத்து.

அது பற்றிய ஞானம் என் இறைவனுக்குத் தான் உள்ளது; என் இறைவன் தவறான முடிவுகளை எடுக்கவும் மாட்டான்; எதையும் மறக்கவும் மாட்டான் என்று மூஸா நபியவர்கள் விடையளித்தார்கள்.  அவர்கள் நரகவாசிகள் என்றோ சுவர்க்கவாசிகள் என்றோ கூறாமல் அதன்  முடிவை  இறைவனிடம் விட்டு விட்டார்கள். நீதி செலுத்துவதை அதிகம் விரும்புகிற இறைவன் எந்த அநீதியான தீர்ப்பும் வழங்க மாட்டான். நியாயமான தீர்ப்பே வழங்குவான். யார் யார் சொர்க்கம் செல்வார்கள்? நரகம் செல்வார்கள்? என்று முடிவு செய்வது நமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது. எனவே, எந்தப் பிரச்சாரமும் சென்றடையாத மக்கள் விஷயமாக உங்களை விட அதிகம் நியாயம் வழங்கும் இறைவன் சரியான தீர்ப்பை வழங்குவான் என்ற பதிேலாடு நிறுத்திக் கொள்வது தான் நமக்குள்ள உரிமையாகும்.

சகோதரர் P. ஜெயினுலாப்பதீனால் எழுதப்பட்ட அர்த்தமுள்ள கேள்விகள் அறிவு பூர்வமான பதில்கள் என்னும் புத்தகத்தில் இருந்து........ 

Tuesday, May 5, 2015

யாராலும் கொல்ல முடியாத தலைவர் - குரானின் அறைகூவல்!

"அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்"
இவ்வசனத்தில் 5:67 நபிகள் நாயகத்தை யாரும் கொல்ல முடியாது என்ற கருத்து சொல்லப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்சிகள் நடந்தன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. குடிசையில் தான் வசித்தார்கள். வாயிற்காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதாரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. போர்க்களங்களிலும் பங்கெடுத்து, கொல்லப்படுவதற்கான வாய்ப்பை தாமாகவே எதிரிகளுக்கு வழங்கி இருந்தார்கள். ஆனாலும் அவர்களை யாரும் கொல்ல முடியவில்லை.
தினமும் ஐந்து நேரத் தொழுகை நடத்துவதற்காக மக்களோடு மக்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கலந்து கொள்வார்கள்.
அன்றைய நிலையில் மிக எளிதாக ஒருவரைக் கொல்வது என்றால் அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலிடத்தில் இருந்தார்கள். அப்படியிருந்தும் "உம்மை இறைவன் காப்பான்'' என்று இவ்வசனத்தில் சொல்லப்படும் முன்னறிவிப்பு நிறைவேறியது.
இப்படி அறைகூவல் விட்டதை முறியடிப்பதற்காகவாவது எதிரிகள் அவரைக் கொன்றிருந்தால் இது பொய்யான மார்க்கம் என்று நிரூபித்திருப்பார்கள். ஆனாலும் இயலவில்லை.
இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் முஹம்மது நபியவர்கள் என்றோ கொல்லப்பட்டிருப்பார்கள்.அவர்கள் கொல்லப்படாதது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான நிரூபணம்.
என்னை எவரும் கொல்ல முடியாது என்று அறிவித்து விட்டு, சர்வ சாதாரணமாக இன்றைய உலகில் எவரும் நடமாட முடியாது. அதுவும் தீய சக்திகளை எதிர்த்துப் போரிடுபவர் இப்படி அறிவித்தால் அடுத்த நாளே அவரது கதை முடிக்கப்பட்டு விடும்.
அன்றைய நிலையில் முஹம்மது நபியைப் போல் சர்வசாதாரணமாக எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மக்களோடு மக்களாகப் பழகும் ஒருவரை எளிதாகக் கொல்ல முடியும். ஆனாலும் தன்னைக் கொல்ல முடியாது என்று அறிவித்து, தாம் கூறுவது இறைவாக்கு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிரூபித்தார்கள்.

 நன்றி: OnlinePJ.com

அர்த்தமுள்ள கேள்வி - 13 - கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?



நாத்திகர்கள், வேற்று மதத்தினர் & பகுத்தறிவாதிகள் அடிக்கடி எம்மிடம் கேட்கும் கேள்விகளில் ஒன்று உலகில் அநீதி நடக்கும் போது அவர்களை நேர்வழிப்படுத்த இறைதூதர்கள் வந்ததாக கூறுகிறீர்களே கடவுளே மனித வடிவில் வந்து அவர்களுக்கு நானே கடவுள் என்னை வணங்குங்கள் என்று கூறி இருக்கலாமே? ஏன் அவ்வாறு கடவுள் மனித வடிவில் வரவில்லை???

கேள்வி: உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்?
முஹம்மது கனி, சித்தார்கோட்டை.

பதில்: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும். நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்! மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்!

உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும், மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது. முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச் சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது. இருக்கின்ற தகுதியை விட இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்க மாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வான்?
இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது தான் எந்த வகையில் நியாயமானது? இப்படிச் சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம். கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்படும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம். நான் தான் கடவுள்; அல்லது கடவுளின் அவதாரம் எனக் கூறி யாரேனும் ஏமாற்ற நினைத்தால் கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் எளிதில் ஏமாற்றி விட முடியும். அவர்களைச் சுரண்ட முடியும். போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை. 'கடவுள் மனிதனாக வரவே மாட்டான்' என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம். இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம். கடவுள் மனிதனாக வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்பட வேண்டும். உண்ண வேண்டும்; பருக வேண்டும்; மலஜலம் கழிக்க வேண்டும்; மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட வேண்டும். சந்ததிகளைப் பெற்றெடுக்க வேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கடவுளாகவே இருப்பான்; கடவுளின் பிள்ளைகளான கடவுள்கள் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும். ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப் பேர் இன்றைக்கு பூமியில் இருக்க வேண்டும். ஆனால் கடவுளின் ஒரே ஒரு பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. இதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம். எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்குத் தகுதியானதும் அல்ல.

சகோதரர் P. ஜெயினுலாப்பதீனால் எழுதப்பட்ட அர்த்தமுள்ள கேள்விகள் அறிவு பூர்வமான பதில்கள் என்னும் புத்தகத்தில் இருந்து........ 

Saturday, May 2, 2015

அர்த்தமுள்ள கேள்விகள் - 12 - முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றாதது ஏன்?

நாத்திகர்கள்  உடன் வாதிடும் போது பல முறை எழுப்பபடும் வினாக்களில்  ஒன்று தான் முஸ்லிம்கள் இந்த உலகத்தில் அறிவியல் வளர்ச்சி அடைய என்ன பங்களிப்பு செய்துள்ளார்கள் என்பது உண்மையை சொல்லப்போனால் முஸ்லிம்கள் கால் பதிக்காத துறையே இல்லை எனலாம்.


கேள்வி:  இன்றைய  உலகில் கண்டுபிடிப்புகளுக்கும், விஞ்ஞான வளர்ச்சிகளுக்கும்  முழுவதும்  காரணமாக இருந்தவர்கள், இருப்பவர்கள், மேற்கத்திய நாட்டினர்  தான்.  இவர்களால்  உலகில்  சில தீமைகள்
ஏற்பட்டிருக்கலாம்.  அதை  விடப்  பன்மடங்கு நன்மைகளை  உலகிற்குச் செய்துள்ளனர். இன்று  அரபு தேசங்களில்  மக்கள்  வசதியாக வாவதற்கு  வழி வகுத்தவர்கள்  மேற்கத்திய நாட்டினர்.  எண்ணெய்க் கண்டுபிடிப்பு, கடல்நீரை குடிநீராக  மாற்றும்  தொழில்  நுட்பம் ஆகியவற்றை  உதாரணமாகக் கூறலாம். ஆனால்,  முஸ்லிம்கள்  இந்த  உலகின் வளர்ச்சிக்கு  எந்த  விதப் பங்கும் ஆற்றவில்லை மாறாக,  உலகத்தைக் குழப்பத்தில்  ஆழ்த்தி, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்  கொண்டு  -  தானும்  அழிந்து கொண்டு, மற்ற நாட்டினரையும்  அழித்து தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் செய்து  கொண்டு  இந்த  உலகத்தை நிம்மதியிழக்கச்  செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி  உலகத்திற்கு  எந்த  நன்மையும் செய்யாத இவர்களை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஆதரிப்பது ஏன்?

இன்று  உலகில்  கிறிஸ்தவர்கள், கல்விச் சாலைகள், மருத்துவ மனைகள் ஆரம்பித்து தொண்டாற்றி வருகிறார்கள்.  அப்படி  இந்த உலகத்திற்கு  சேவை  செய்த, மருத்துவ மனைகள்  ஆரம்பித்து  தொண்டாற்றி கண்டுபிடிப்புகளை  நிகழ்த்திய  முஸ்லிம்கள் யாரேனும் உண்டா? என மாற்று மத நண்பர் கேட்கிறார். இதற்கு விரிவான பதில் அளிக்கவும்.

- அபூ மஸ்ஹாத், நெல்லிக்குப்பம்.

பதில்: நவீன கண்டுபிடிப்புகளுக்கு முழுவதும் காரணமாக இருந்தவர்கள் மேலை நாட்டவர் என்ற கூற்று முற்றிலும் தவறானதாகும். மேலை  நாட்டவர்கள் விஞ்ஞான  ஆய்வு செய்திட மதத்தின் பெயரால் தடுக்கப்பட்ட காலத்திலேயே முஸ்லிம்கள் மிகப் பெரும் கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கினார்கள். இன்றைய கண்டுபிடிப்புகளுக்குப் பெரும்பாலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கேள முஸ்லிம்கள் தாம்.

வியக்கத்தக்க சாதனைகள் படைத்த முஸ்லிம் விஞ்ஞானிகளில் சிலர்...

(மேற்கத்திய உலகில் இவர்கள் அறியப்படும் பெயர்கள் அைடப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது)

பெயர் காலக்கட்டம் துறை (கி.பி.)
அல்குவாரிஸ்மி 780-850 கணிதம்-வானவியல் (அல்காரிஸ்ம்)
அல் ராஜி 844-946 மருத்துவம் (ரேஜஸ்)
அல் ஹைதம் 965-1039 கணிதம்-ஒளியியல்(அல்ஹேஜன்)
அல்பிரூணி 973-1048 கணிதம்-தத்துவம்-வரலாறு
இப்னு சீனா 980-1037 மருத்துவம் (அவிசென்னா)
அல் இத்ரீஸி 1100 புவியியல் (டிரேஸஸ்)
இப்னு ருஸ்து 1126-1198 மருத்துவம்-தத்துவம் (அவிர்ரோஸ்)
ஜாபிர் இப்னு 803 பௌதீகம் ஹையான் (ஜிபர்)
அல் தபரி 838 மருத்துவம்
அல் பத்தானி 858 தாவரவியல் (அல்பதக்னியஸ்)
அல் மசூதி 957 புவியியல்
அல் ஜஹ்ராவி 936 அறுவை சிகிச்சை (அல்புகேஸிஸ்)
இப்னு ஹல்தூண் 1332 வரலாறு
இப்னு ஜுஹ்ர் அறுவை சிகிச்சை (அவன்ஜோர்)

இன்றைய நிலையில் மேலை நாட்டவரின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என்று கூறினால் அது சரிதான்.

இன்றைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு இஸ்லாம் காரணம் அல்ல.

மேலை நாட்டவர் அதிகம் பங்களிப்புச் செய்வதற்கு அவர்களின் மதமும் காரணம் அல்ல.

மாறாக பொருளாதார வசதி, ஆள்வோரின் ஊக்குவிப்பு போன்றவை காரணங்களாகவுள்ளன. காலச் சக்கரம் சுழலும் போது மேலை நாடுகள் பின் தங்கும் நிலையை அடையலாம். பொருளாதார வசதிகள் இன்னொரு பக்கம் குவியலாம். அப்போது அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
முந்தைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் அறிவாளிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் பெரியளவில் ஊக்குவித்தனர்.

இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்கேளா சுகேபாகங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
எனவே தான் முஸ்லிம்களின் பங்களிப்பைக் காண முடியவில்லை.

ஆயினும், கடந்த காலத்தின் மீது பழியைப் போட்டு விட்டு முஸ்லிம்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது.

அந்த நண்பன் விமர்சனத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு முஸ்லிம் இளைஞர்கள் முயற்சி செய்தாக வேண்டும்.

நமது நாட்டில் கிறித்தவர்கள் தாம் கல்விக் கூடங்கைளயும், மருத்துவ மனைகைளயும் நிறுவியுள்ளனர் என்று நண்பர் கூறுவது உண்மை தான். இந்த நிலையை மாற்றும் கடமை முஸ்லிம்களுக்கு இருப்பதும் உண்மை தான்.

ஆனாலும், இதற்கான காரணத்தையும் அந்த நண்பருக்கு விளக்க வேண்டும்.
ஆங்கில வழிக்கல்வி தான் இன்றைக்குக் கல்வி எனப்படுகிறது.

வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்ட போது அவர்களை நாட்டை விட்டே விரட்டும் பல்வேறு போரட்டங்களில் கலவியைப் புறக்கணிப்பதும் ஒரு போராட்ட முறையாக அறிவிக்கப்பட்டது.

எல்லாச் சமுதாயமும் இந்தப் போராட்டத்தில் பெயரளவுக்குத் தான் பங்களிப்புச் செய்தன.
ஆனால், முஸ்லிம்கேளா முழு அளவுக்கு இப்போராட்டத்தில் குதித்தனர்.

ஆங்கிலம் படிப்பது பாவம் என்று பள்ளிவாசல் களில் மார்க்க அறிஞர்கள் பிரகடனம் செய்தனர்.

இதன் காரணமாக படித்துக் கொண்டிருந்த முஸ்லிம்கள் கல்விச் சாலையை விட்டு வெளியேறினார்கள்.

முஸ்லிம்கள் யாரும் கல்விச் சாலைக்குள் நுழையவில்லை. பாவமான காரியம் என்ற முஸ்லிம் மத அறிஞர்களின் அறிவிப்பினால் தேச பக்தி என்ற பெயரால் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டனர்.
(காயிதே மில்லத் அவர்கள் கூட இவ்வாறு படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வெளியேறியவர் தாம்)

கிறிஸ்தவர்களும், பிராமணர்களும் எவ்விதப் புறக்கணிப்பும் செய்யாமல் கல்விக் கூடங்களை நிறுவி வந்த போது முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்பது ஹராம்' என்று கூறினார்கள்.
இதனால் வெள்ளையர்கள் மீது கடும் வெறுப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு விடுதைலப் போரில் தங்களின் சதவிகிதத்தை விட அதிகமான பங்கைச் செய்தனர். நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு இந்தப் புறக்கணிப்பு உதவியது. ஆனால், முஸ்லிம்களுக்குப் பேரிழப்பை அது ஏற்படுத்தியது.

வெள்ளையர்கள் காலத்தில் முஸ்லிம்களுக்கு என தனியாக இட ஒதுக்கீடு இருந்தும் தேச பக்தியின் பெயரால் அதைப் பயன்படுத்தத் தவறினார்கள்.

நாடு சுதந்திரம் பெற்றதும் முஸ்லிம்களுக்கு வெள்ளையர்கள் வழங்கிய இட ஒதுக்கீட்டை நீக்கி ஆள்வோர் நன்றிக் கடன் செலுத்தினார்கள்.

· வெள்ளையர்கள் காலத்தில் நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்களின் தொடர்ச்சி,

· நிறையக் கல்வி கற்றவர்கள் உருவானதால் அவர்களால் உருவாக்கப்பட்ட கல்வி நிைலயங்கள்,

· மேலைநாடுகளிலிருந்து தாராளமாகக் கிடைக்கும் நிதியுதவி
போன்றவை காரணமாக கிறித்தவர்கள் கல்விக்கு அதிகம் பங்களிப்பைச் செய்தனர்.

ஆனால், நாடு விடுதலையைடந்த பிறகு தான் அடிப்பைடக் கல்வியிருந்து முஸ்லிம்கள் ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு பணக்கார முஸ்லிம் நாடுகளின் உதவியும் இல்லை. தமது சொந்தக் காலில் தான் நிற்க வேண்டிய நிலை.

ஆனாலும், 250 ஆண்டு காலத்தில் கிறித்தவ சமுதாயத்தினர் பெற்ற வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது முஸ்லிம்களின் ஐம்பது ஆண்டு கால வளர்ச்சி விகிதம் மிகமிக அதிகம் தான்.

சொந்தக் காலில் தான் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்து தமிழகத்தில் முஸ்லிம் வள்ளல்கள் பல கல்வி நிறுவனங்கைள உருவாக்கி சாதனை பைடத்துள்ளனர்

இவை யாவும் ஐம்பது வருடங்களில் வெளியார் உதவியின்றி முஸ்லிம்கள் செய்த சாதனைகள்.

இன்னும் 50 ஆண்டுகளில் கிறிஸ்தவர்களின் 250 ஆண்டு கால சாதனைக்கு நிகராக அல்லது அதை மிஞ்சும் அளவுக்குச் சாதனை படைப்பார்கள். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

முஸ்லிம் வள்ளல்கள் உருவாக்கிய கல்வி நிலையங்கள்! தமிழகத்தில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளித்துவரும் உயர்நிலைக் கல்விக் கூடங்கள்.

1) இஸ்லாமியா கல்லூரி, வாணியம்பாடி
2) புதுக்கல்லூரி, சென்னை
3) ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி
4) சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை
5) சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல்விஷாரம்
6) ஜாஹிர் ஹுசைன் கல்லூரி, இளையான்குடி
7) ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம்
8) காதிர் முஹைதீன் கல்லூரி, அதிராம்பட்டிணம்
9) ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மது பெண்கள் கல்லூரி, சென்னை
10) காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம்
11) முஸ்லிம் கைலக் கல்லூரி, திருவிதாங்கோடு
12) மழ்ஹருல் உலும் கல்லூரி, ஆம்பூர்
13) எம்.என்.எஸ். வக்ஃப் கல்லூரி, மதுரை
14) கிரஸ்கேன்ட் பொறியியல் கல்லூரி, வண்டலுர் (தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் இடத்தை பல ஆண்டுகளாக இக்கல்லூரி பெற்று வந்துள்ளது.)
15) சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை

உட்பட 18 கலைக்கல்லூரிகள், 5 பெண்கள் கலைக் கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 8 பாலிடெக்னிக் கல்லூரிகள் மருந்தியல் கல்லூரிகள் எனப் பலதரப் பட்ட கல்லூரிகைளயும், மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்களையும் முஸ்லிம்கள் தமிழகத்தில் நடத்தி வருகிறார்கள்.
இக்கல்ல்லூரிகளில் அதிகம் பயின்று பயன் பெற்றவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்தத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்திந்திய அளவில் அலிகார் முஸ்லிம் பல்கைலக் கழகமும் பன்நெடுங்காலமாக கல்விச் சேவையை ஆற்றி வருகின்றது.
கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தமிழகத்தை விட பன்மடங்கு அதிகமான அளவில் முஸ்லிம்கள் கல்வி நிலையங்கள் நடாத்தி வருகிறார்கள்.

முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அந்த நண்பர் கூறுவது மீடியாக்களின் மூளைச் சலவையால் ஏற்பட்ட பாதிப்பு. உண்மை நிலை  என்னவென்றால் மற்ற சமுதாயத்தில் தீவிரவாதிகள் சிலர் இருப்பது போல் முஸ்லிம்களிலும் இருக்கிறார்கள். ஆனால், மற்றவர்கள் வெறும் தீவிரவாதிகள் என்றோ, போராளிகள் என்றோ மீடியாக்களில் தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றனர்.

ஆனால், ஒரு சில முஸ்லிம்கள் இத்தகைய காரியங்களில் ஈடுபட்டால் மட்டும் அவர்களது நடவடிக்கையுடன் இஸ்லாம் சேர்க்கப்படுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்று தவறாமல் மீடியாக்கள் குறிப்பிடுகின்றன. இஸ்ரேல் பயங்கரவாதிகள் கூட யூதத் தீவிரவாதிகள் எனக் கூறப்படுவதில்லை. இந்தப் பாதிப்பின் காரணமாகவே அவர் இவ்வாறு கருதுகிறார். தக்க சான்றுகளை முன் வைத்து அவரது தவறை  உணரச் செய்யுங்கள்.

சகோதரர் P. ஜெயினுலாப்பதீனால் எழுதப்பட்ட அர்த்தமுள்ள கேள்விகள் அறிவு பூர்வமான பதில்கள் என்னும் புத்தகத்தில் இருந்து........




நோன்பும் துறவறமும் ஒன்றா?

 துறவறம் இயற்கைக்கு மாறானது என்றால் நோன்பும் இயற்கைக்கு மாறானது தானே? என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். இதற்கு எப்படி பதில் சொல்வது?
இஸ்லாம் துறவறத்தை ஆதரிக்கவில்லை. ஏனென்றால் துறவறம் என்பது மனிதர்கள் யாரும் கடைபிடிக்க முடியாத பொய்யான கொள்கையாகும். இதனால் மனித சமுதாயத்துக்கு பாதிப்புகளைத் தவிர நன்மைகள் ஏற்படுவதில்லை.
ஒரு மனிதன் தனக்கு வாழ்க்கைத் துணையில்லாமல் ஒழுக்கமாக வாழ முடியாது. ஒருவன் திருமணம் செய்யாமல் வாழ்கிறான் என்றால் ஒன்று அவன் ஆண்மையற்றவனாக இருப்பான். அல்லது தவறான வழியில் தன் ஆசையை தீர்த்துக் கொள்ளக்கூடியவனாக இருப்பான்.
திருமணம் முடிக்காமல் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்வதாக யார் கூறினாலும் அது பொய்யே. ஏனென்றால் இல்லறம் என்பது மனித உடலுக்கு அவசியமான தேவையான ஒன்று. இந்தத் தேவை ஒரு மனிதனுக்கு சரியாகக் கிடைத்தால் தான் அவனால் மன நிம்மதியாக வாழ முடியும்.
இல்லையென்றால் தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவான். இந்தப் பேருண்மையை செய்தித் தாள்களின் வாயிலாக தொடர்ச்சியாக நாம் அறிந்து வருகின்றோம்.
துறவறம் மேற்கொள்வதாகக் கூறிக் கொள்ளும் சாமியார்களும் பாதரிமார்களும் தான் அதிகமாக பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகின்றனர். சாதாரண மனிதர்களை விட இவர்களை இவ்விஷயத்தில் வரம்பு மீறி நடக்கின்றனர்.
தங்களால் கடைப்பிடிக்க இயலாத கொள்கையை கையில் எடுத்த காரணத்தால் தீமையின் உச்ச நிலைக்குச் சென்று விடுகின்றனர். மேலும் உலகத்தில் எல்லோரும் நான் துறவறம் மேற்கொள்ளப் போகின்றேன் என்று முடிவெடுத்தால் அதனால் உலகில் தீமைகள் தான் ஏற்படும்.
வாழ்க்கைதத் துணைத் தேவைப்படுபவர்கள் வழிகெடுவதற்கும் மனித வர்க்கம் பெருகாமல் குறிப்பிட்ட காலத்தில் அழிந்து போவதற்குமே இது வழிவகுக்கும்.
ஆனால் நோன்பு என்பது துறவத்தைப் போன்று கடைப்பிடிக்க இயலாத மனித சக்திக்கு அப்பாற்பட்டதல்ல.
பகல் நேரத்தில் மட்டுமே உடலுறவு கொள்கக் கூடாது உண்ணக் கூடாது பருகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது. இது இயற்கைக்கு மாற்றமானதல்ல.
நோன்பு வைத்திருக்கும் போதும் நோன்பு வைக்காத போதும் முஸ்லிம்கள் தேவையான உணவை உட்கொள்கின்றனர்.
காலை உணவு பகல் உணவு, இரவு உணவு என மூன்று வேளை நோன்பு இல்லாத போது சாப்பிடுகிறோம்.
நோன்பு காலத்தில் நோன்பு துறக்கும் போதும் இரவில் படுக்கைக்குச் செல்லும் போதும் வைகறைக்கு முன்னரும் ஆக மூன்று வேளை தான் சாப்பிடுகிறோம். ஆக நமக்குத் தேவையான உணவை நோன்பு காலத்திலும் நாம் உண்ணத்தான் செய்கிறோம். இன்னும் சொல்லப் போனால் நோன்பு காலத்தில் தான் அதிக சுவையான உணவுகளை சாப்பிடுகிறோம். ரமலான் மாதத்தில் தான் முஸ்லிமக்ளூக்கு உணவுச் செலவு மற்ற மாதங்களை விட அதிகமாகிறது.
வழக்கமாக நாம் இரவில் எட்டு மணிக்கு சாப்பிட்டு விட்டு உறங்கி காலையில் எட்டு மணிக்கு சாப்பிடுகிறோம். அதாவது 12 மணி நேரம் எதையும் சாப்பிடாமல் இருப்பது தான் நமது இயற்கை வழக்கமாக உள்ளது. நோன்பு காலத்திலும் சுமார் 12 மணி நேரம் தான் நாம் சாப்பிடாமல் இருக்கிறோம்.
வித்தியாசம என்னவென்றால் மற்ற நாட்களில் 12 மணி நேரம் ஊஅர்க்கத்தில் செல்வதால் பசியை உணர முடிவதில்லை. நோன்பு நேரத்தில் பகலில் விழித்துக் கொண்டு பசியுடன் இருப்பதால் அதை நாம் உணர்கிறோம். அவ்வளவு தான் வித்தியாசம். இதில் மனக்கட்டுப்பாடு என்ற நன்மை நமக்குக் கிடைக்கிறது. உடலுக்கு இதனால் எள்ளளவும் பாதிப்பு இல்லை
   
நன்றி: OnlinePJ.com