பக்கங்கள் செல்ல

cross tab2

Showing posts with label தகுதியானவர். Show all posts
Showing posts with label தகுதியானவர். Show all posts

Wednesday, May 6, 2020

நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை திருமணம் செய்த போது வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை திருமணம் செய்த போது வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள்.

விமர்சனம்: நபி(சல்) அவர்களுக்கும் ஆயிஷா(ரலி) அவர்களுக்கும் வயது வித்தியாசம் அதிகம்: நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை திருமணம் செய்த போது வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள். 


நமது பதில்:

                முதலில் இந்த விமர்சனமே தவறானது. இத்தகைய விமர்சனம் இன்றும் நாம் முழுமையாக ஏற்காத ஒன்று. இன்றும் இந்த வயதுடையவர் இந்த வயதுடையவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற எந்த அளவுகோலும் இல்லை. உள்ளங்கள் ஒத்துப்போனால் எந்த வயது வேறுபாட்டிலும் திருமணம் செய்யலாம் . உடலால், மனத்தால் தகுதியுடன் இருந்தால் போதுமானது. ஆயிஷா(ரலி) அத்தகைய தகுதியுடன் இருந்தார்கள் என்பதற்கு போதிய சான்றுகள் உள்ளன. உதாரணமாக முன் சென்ற அபீசினியர்கள் விளையாட்டுகளை கண்ணுற்ற சம்பவத்தை சற்று பார்ப்போம்.

முஸ்லிம் 1622. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

       என் அருகில் இரு சிறுமியர் "புஆஸ்” போர் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்; படுக்கையில் படுத்து, தமது முகத்தை (வேறு பக்கம்) திருப்பிக்கொண்டார்கள். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து என்னை அதட்டி "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?" என்று கடிந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ரை முன்னோக்கி "அச்சிறுமியரை விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பியபோது அவ்விரு சிறுமியரையும் குறிப்பால் உணர்த்தி (வெளியேறச் சொன்)னேன். உடனே அவர்கள் இரு வரும் வெளியேறிவிட்டனர். அன்று பெருநாள் தினமாக இருந்தது. சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுகள்) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நான் (அந்த விளையாட்டைப் பார்க்க) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம் நீ (இவர்களின் வீரவிளையாட்டுகளைப்) பார்க்க விரும்புகிறாயா?" என்று கேட்க, நான் "ஆம்" என்று கூறியிருக்க வேண்டும் (சரியாக எனக்கு நினைவில்லை). உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் கன்னம் அவர்களுடைய கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்கவைத்துக்கொண்டார்கள். "அர்ஃபிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்" என்று கூறினார்கள். நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது, "போதுமா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க,நான் "ஆம் (போதும்)" என்று சொன்னேன். "அப்படியானால் நீ போகலாம்!" என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

முஸ்லிம் 1624. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

    நான் அந்த விளையாட்டு வீரர்களிடம் "நான் உங்க(ளின் விளையாட்டு)களைப் பார்க்க விரும்புகிறேன்" எனக் கூறி (அனுப்பி)னேன். அவர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் விளையாடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதைப் பார்த்துக்கொண்டு) நிற்க, நான் (எனது அறை) வாசலில் நின்றுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காதுகளுக்கும் தோள்களுக்குமிடையே (எனது முகத்தை வைத்து) அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(அந்த வீரர்கள்,) பாரசீகர்கள் அல்லது அபிசீனியர்கள் ஆவர். "அல்ல; அவர்கள் அபிசீனியர்களே ஆவர்" என என்னிடம் இப்னு அத்தீக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
       ஆக மேற்குறிபிட்ட செய்தியானது ஆயிஷா(ரலி) அவர்களது 15 வயதில் நடைபெற்றதாக முன்பே கண்டோம். சராசரியாக நபி(சல்) அவர்களின் உயரத்திற்கு நிகரான உயரம்தான். எந்த பென்ணும் பூப்பெய்த பிறகு அதிகபட்சமாக மூன்று வருடங்கள் வளருவார்கள். அதிகபட்சமாக ½ அடி.(1) ஆக நபி(சல்)- ஆயிஷா(ரலி) வீடு கூடிய போது அவர்கள் நபி(சல்) அவர்களை விட அதிகபட்சமாக ½ அடிதான் உயரம் குறைவாக இருந்திருப்பார்கள் என்பதை உறுதி பட கூற முடியும்.

          அதுபோல் அவர்களது உடலும் திருமணத்திற்கு பிறகு வீடு கூடுவதற்காக தயார்படுத்தப்பட்டதாக ஆயிஷா(ரலி) அவர்களே கூறுவது கவனிக்கத்தக்கது. 

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا نُوحُ بْنُ يَزِيدَ بْنِ سَيَّارٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ أَرَادَتْ أُمِّي أَنْ تُسَمِّنِّي لِدُخُولِي عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ أَقْبَلْ عَلَيْهَا بِشَىْءٍ مِمَّا تُرِيدُ حَتَّى أَطْعَمَتْنِي الْقِثَّاءَ بِالرُّطَبِ فَسَمِنْتُ عَلَيْهِ كَأَحْسَنِ السِّمَنِ ‏.‏

முஃமீன்களின் அன்னை ஆயிஷா(ரலி) கூறியதாவது:
எனது தாயார் அல்லாஹ்வின் தூதரின் வீட்டுக்கு அனுப்புவதற்காக உடல் பருமனாக்க நினைத்து பலவற்றை முயன்றார்கள். ஆனால் வெள்ளரிக்காயுடன் பேரிச்சை பழங்களே பயனளித்தன. பிறகு நான் பருமனானேன்.( நூல்: அபூதாவுத், ஹதீஸ் எண்: 3904)
ஆக அவர்களது உடலும் வீடு கூடுவதற்கு ஏற்ற வகையில் இருந்ததை அறிய முடிகிறது.
حَدَّثَنَا أَبُو صَالِحٍ الأَنْطَاكِيُّ، مَحْبُوبُ بْنُ مُوسَى أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ، - يَعْنِي الْفَزَارِيَّ - عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، وَعَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ قَالَتْ فَسَابَقْتُهُ فَسَبَقْتُهُ عَلَى رِجْلَىَّ فَلَمَّا حَمَلْتُ اللَّحْمَ سَابَقْتُهُ فَسَبَقَنِي فَقَالَ ‏"‏ هَذِهِ بِتِلْكَ السَّبْقَةِ ‏"‏ ‏.‏
முஃமீன்களின் அன்னை ஆயிஷா(ரலி) கூறியதாவது: ஒருமுறை நான் அல்லாஹ்வின் தூதருடன் ஒரு பயணத்தில் இருந்த போது எனக்கும் அவர்களுக்கும் ஓட்டப்பந்தயம் வைத்துக்கொண்டோம். அதில் நான் நபி(சல்) அவர்களை முந்தியும் விட்டேன். நான் உடல் பருமனான பிறகு மீண்டும் அதே போன்று அவர்களும் நானும் ஓட்டப்பந்தயம் வைத்துக்கொண்டோம் அதில் அவர்கள் முந்திவிட்டார். அவர்கள் கூறினார்கள்; “அதற்கு இது நேராகிவிட்டது என்று கூறினார்கள். (நூல்: அபூதாவுத், ஹதீஸ் எண்: 2579)
            அதே போன்று உஹத் போரில் பங்கேற்றார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இது குறித்து அனஸ் ரலி பின்வருமாறு அறிவிக்கிறார்கள்.

புகாரி 2880. அனஸ்(ரலி) அறிவித்தார்.
உஹுதுப் போரின்போது மக்கள் நபி(ஸல்) அவர்களைவிட்டுவிட்டுத் தோல்வியுற்று (பின்வாங்கிச்) சென்றபோது நான் ஆயிஷா பின்த்து அபீ பக்ர்(ரலி) அவர்களையும் உம்மு சுலைம்(ரலி) அவர்களையும் கண்டேன். அப்போது அவர்கள் இருவரும் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து கொண்டு வேக வேகமாக நடந்து (சென்று காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதும் பிறகு (தண்ணீர் காலியானதும்) திரும்பிச் சென்று அவற்றை நிரப்பிக் கொண்டு, மீண்டும் வந்து மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதுமாக இருந்தார்கள். நான் அவர்களின் கால்களில் அணிந்திருந்த தண்டைகளைப் பார்க்கும் அளவிற்கு வரிந்து கட்டிக் கொண்டு (மும்முரமாகப்) பணிபுரிந்து கொண்டிருந்தார்கள்.
"தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து வேகமாக நடந்து சென்று" என்பதற்கு பதிலாக, 'தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து எடுத்துச் சென்று" என்று மற்றோர் அறிவிப்பாளர் கூறினார்.

உஹத் யுத்ததிற்கும்(ஹிஜ்ரி 3) ஆயிஷா(ரலி) திருமணத்திற்கும் (ஹிஜ்ரி 1) அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். போரில் பங்கேற்று காயம்பட்டோருக்கும் சேவை செய்யும் அளவிற்கு உடல் தகுதியுடன் இருப்பவர்தான் போருக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்பது உலகறிந்த ஒன்று. மேலும் இத்தகைய நீர்பைகளை சுமப்பவர் எத்தகைய உடல் தகுதியுடன் இருப்பார்கள் என்பது போர் தளவாடங்கள் குறித்து அறிந்தவர்களுக்கு தெரியும். ஒருவேளை அவதூறு பரப்பும் கூமுட்டைகளுக்கு அது தெரியாமல் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு விசயத்தையும் நாம் கண்ணுரும் போது அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் வீடு கூடுதலுக்கு தயரானவர் என்பதை நாம் அறிய முடிகிறது. அவதூறு பரப்பும் கூமுட்டைகள் கேலிச்சித்திரங்களை கண்டு ஏமாந்த அறிவிலிகளாகத்தான் நமக்கு தெரிகிறது.