பக்கங்கள் செல்ல

cross tab2

Friday, November 7, 2025

கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- 1 பேதுரு

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- 1 பேதுரு

        நாம் புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மை குறித்தும் அதில் இருக்கும் வரலாற்று குளறுபடிகள் குறித்தும் தொடராக கண்டுவருகிறோம். அந்த வரிசையில் அடுத்ததாக இடம்பெறும் நூல் 1பேதுரு. இந்த தொடரில் ஒவ்வொரு கட்டுரையிலும் புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு நூலின் நம்பகத்தன்மை எப்படி அவர்களது கிறித்தவ அறிஞர்களாலேயே கேள்விக்குள்ளாகி கேலிகூத்தாக்கியுள்ளது என்பதை வரிசையாக ஆதாரப்பூர்வமாக விளக்கிவந்துள்ளோம். இந்த கட்டுரையிலும், இந்த புதிய ஏற்பாட்டின் நூலாகிய 1பேதுரு என்ற கத்தோலிக்க நிருபத்தையும் அதே பாணியில் தோழுரிக்க உள்ளோம் இன் ஷா அல்லாஹ்….

1பேதுரு நிருபம்: எழுத்தர் யார்? கோட்பாடுகளும் குழப்பங்களும்

          நாம் முன்சென்ற பல கட்டுரைகளில் இந்த கருத்தை முன்வைத்துள்ளோம். அதாவது என்றும் உறுதிபடுத்தப்பட்ட உண்மையை விளக்க நமக்கு அனுமானங்களும் கோட்பாடுகளும் தேவை இல்லை. ஒரு நூலின் ஆசிரியர் இவர்தான் என்று அந்த நூலே கோரும்போது, அந்த நூல்களின் உள்ளே இருக்கும் செய்திகள் அதற்கே முரணாக அமையும் போதுதான், அந்த நூலின் ஆசிரியர் யார் என்று உறுதிபடுத்த அனுமானங்களும், கோட்பாடுகளும் தேவை படுகிறது. புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு நூலிற்கும் இருக்கும் இந்த அவல நிலை, ஏனைய புதிய ஏற்பாட்டின் நூலை காட்டிலும் ஒரு படி மேலாக இருப்பதை இந்த நிருபத்தின் எழுத்தர் குறித்த கோட்பாடுகளை முன்வைக்கும் அறிஞர்களுக்கு ஏற்பட்டுள்ளதை நாம் வரும் சில கட்டுரைகளில் காண்யிருக்கிறோம். இப்படியாக 1 பேதுருவின் எழுத்தர் குறித்தும் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மத்தியில் உலாவும் பல கோட்பாடுகளில் சிலவற்றை அலசவுள்ளோம்.

1 பேதுரு , பேதுருவின் பெயரில் புனையப்பட்டது

    கிறித்தவ புதிய ஏற்பாட்டு அறிஞர்களில் பெரும்பகுதியினர் இந்த நிருபம் பேதுருவின் பெயரில் புனையப்பட்ட ஒரு நிருபம் என்று கூறுகிறார்கள். 1 பேதுரு நிருபம் பேதுருவினால் இயற்றப்பட்டது என்று கூறிக்கொண்டிருக்கையில், ஏன் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மத்தியில் இப்படி ஒரு அவல நிலை இருக்கிறது என்பதை முதலில் பார்ப்போம்.

    இந்த வாதத்தை முன்வைப்பவர்கள், தங்களது விமர்சனத்திற்கு ஆதாரங்களை புதிய ஏற்பாட்டில் இருந்தே முன்வைக்கின்றனர். பின்வரும் விமர்சனத் தொகுப்பை புதிய ஏற்பாட்டு ஆய்வுகள் சங்கத்தின் Studiorum Novi Testamenti Societas  (SNTS- Society for New Testament Studies. ), 2019- ஆசிய பசிபிக் தொடர்புக் குழுவின் மாநாட்டில்,  இறையியல் முனைவர் Manabu Tsuji, Hiroshima University, Japan  அவர்களால் வழங்கப்பட்ட கட்டுரையில் இருந்து தருகிறோம்.(P.No. 208-209, Matthew, Paul, and Others: Asian Perspectives on New Testament Themes, by William Loader, Boris Repschinski, Eric Wong (Eds.), © innsbruck university press, 2019)
        The majority of exegetes regard the name “Peter” as a pseudonym. The main reasons for this view, asserted since the 19th century, are as follows:

1) Why did Peter need to write to churches that he was not familiar with? Peter devoted himself to missionary work mainly with the Jews of Palestine, as the agreement of the Apostolic Council shows (see Gal 2:9). In addition, the contents of 1 Peter were too general to be an answer to the specific questions sent from these churches to Peter.

2) The letter is addressed not to Jewish Christians but to Christians in pagan lands, and the recipients are those who converted from paganism (1:8, 12; 2:10, 12; 4:3). But Peter understands himself as the apostle for the circumcised, sc. Jews (cf. Gal 2:8).

3) The letter reflects the circumstances under which Christianity has already spread not only in Asia Minor but throughout the Roman Empire by the missionaries (1:12; cf. also Eph 4:11; 2 Tim 4:5), who were exposed to objections and persecution (5:9). This indicates that it was written (or at least set) after Peter’s lifetime.

4) The author does not argue about the relationship between Christianity and Judaism, which was quite important to Peter (Gal 2:12, 13; Acts 10:9ff.).

5) The author is familiar with the text of the Old Testament—such literacy cannot be expected from Peter, a Galilean fisher. Besides, its interpretation and comments are very similar to those of Paul; also typical Pauline expressions and terms appear in the letter…..

6) the fact that the author calls himself “fellow elder” (συμπρεσβύτερος) in 5:12 

7) the fact that the author refers to Rome (5:13) as “Babylon.”

        பெரும்பாலான உரையாசிரியர்கள் "பேதுரு" என்ற பெயரை ஒரு புனைப்பெயராகக் கருதுகின்றனர். 19 ஆம் நூற்றாண்டிலிருந்து வலியுறுத்தப்படும் இந்த பார்வைக்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

1) பேதுரு தனக்குப் பரிச்சயமில்லாத தேவாலயங்களுக்கு ஏன் எழுத வேண்டியிருந்தது? அப்போஸ்தலிக்க கவுன்சிலின் உடன்பாடுகள் காட்டுவது போல், பேதுரு முக்கியமாக பாலஸ்தீன யூதர்களின் மிஷனரி பணிக்காக தன்னை அர்ப்பணித்தார் (கலா 2:9 ஐப் பார்க்கவும்). கூடுதலாக, 1 பேதுருவின் உள்ளடக்கங்கள் இந்த தேவாலயங்களில் இருந்து பீட்டருக்கு அனுப்பப்பட்ட குறிப்பிட்ட கேள்விகளுக்கு மிகவும் பொதுவான பதில்களாக உள்ளது.

2) இந்தக் கடிதம் யூத கிறிஸ்தவர்களுக்கு அல்ல, மாறாக புறமத நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டுள்ளது, மேலும் பெறுநர்கள் புறமதத்திலிருந்து மதம் மாறியவர்கள் (1:8, 12; 2:10, 12; 4:3). ஆனால் பேதுரு தன்னை விருத்தசேதனம் செய்யப்பட்ட யூதர்களுக்கான அப்போஸ்தலனாகப் புரிந்துகொள்கிறார் (கலா 2:8 ஐப் பார்க்கவும்).

3) இந்தக் கடிதம், மிஷனரிகளால் ஆசியா மைனரில் மட்டுமல்ல, ரோமானியப் பேரரசு முழுவதும் கிறிஸ்தவம் ஏற்கனவே பரவியுள்ள சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கிறது (1:12; cf. எபே 4:11; 2 தீமோத்தேயு 4:5), ஆட்சேபனைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் (5:9). இது பேதுருவின் வாழ்நாளுக்குப் பிறகு எழுதப்பட்டது (அல்லது குறைந்தபட்சம் அமைக்கப்பட்டது) என்பதைக் குறிக்கிறது.

4) கிறிஸ்தவத்திற்கும் யூத மதத்திற்கும் இடையிலான உறவைப் பற்றி ஆசிரியர் வாதிடவில்லை, இது பேதுருவுக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது (கலா 2:12, 13; அப்போஸ்தலர் 10:9 தொடர்ச்சி).

5) பழைய ஏற்பாட்டின் உரையை ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார் - கலிலிய மீனவரான பேதுருவிடமிருந்து அத்தகைய எழுத்தறிவை எதிர்பார்க்க முடியாது. மேலும், அதன் விளக்கமும் கருத்துகளும் பவுலின் விளக்கங்களுடன் மிகவும் ஒத்தவை; மேலும் வழக்கமான பவுலிய சொல்திறம் மற்றும் சொற்கள் கடிதத்தில் காணப்படுகின்றன…

6) 5:12 இல் ஆசிரியர் தன்னை "இணை மூப்பர்" (συμπρεσβύτερος) என்று அழைத்துக் கொள்வது..

7) ஆசிரியர் ரோமை (5:13) "பாபிலோன்" என்று குறிப்பிடுவது.

    இந்த நிருபம் பேதுருவின் பெயரில் இட்டுகட்டி புனையப்பட்டது என்று விமர்சிக்கும் புதிய ஏற்பாட்டின் வல்லுனர்களில் Raymond E. Brown, Paul Achtemeier , John E. C. O’Neill , Ernest Best ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மேற்குறிபிட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்க புறப்பட்ட புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் ஒருசாராரின் ஆதாரமற்ற அனுமானங்களின் சிறுதொகுப்பு இதோ.

 1) 1 பேதுருவை பேதுருவே தனது கைப்பட எழுதினார்:

இந்த கருத்துதான் கி.பி.19ம் நூற்றாண்டு வரை கிறித்தவ உலகில் நிலவிவந்தது. இந்த கருத்தை முன்வைக்கும் அறிஞர்களை பொறுத்தவரையில் 1 பேதுருவை இயற்றியது பேதுரு என்று அந்த நிருபம் கூறுவது பிரதான ஆதாரமாகும். 

    இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில், பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது. (1 பேதுரு 1:1-2) 

அடுத்ததாக ஏசுவின் பாடுகளுக்கு தன்னை சாட்சியாக கூறுகிறார் இந்த நிருபத்தின் ஆசிரியர் என்று கூறப்படும் பேதுரு.

    உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறது என்னவென்றால் (1 பேதுரு 5:1).

மேற்குறிபிட்ட இருவசனங்களையும் முன்னிறுத்தி புதிய ஏற்பாட்டின் அறிஞர்களில் ஒரு சாரார் இந்த நிருபத்தை இயற்றியவர் இயேசுவின் அப்போஸ்தலர் பேதுருதான் என்று வாதிக்கிறார்கள். இந்த கருத்தை முன்னிறுத்தும் புதிய ஏற்பாட்டின் அறிஞர்களில் Myers, I. Howard Marshall Marshall, Wayne Grudem, D.A.Carson and Douglas J.Moo, F. F. Bruce, ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் இவர்களினால், இந்த நிருபம் பேதுருவின் பெயரில் புனையப்பட்டது என்று கூறுவோரின் குற்றச்சாட்டை முழுமையாக எதிர்கொள்ள முடியவில்லை. பேதுருவின் வேறு எழுத்தாக்கங்கள் எதுவும் நமக்கு ஆதாரப்பூர்வமானதாக கிடைக்காததால், இந்த நிருபம் பேதுரு எழுதியதுதான் என்பதை உரையின் நடையை ஒப்பிட்டு உறுதி படுத்த இயல வில்லை. இத்தகைய அவல நிலை இருப்பதால் பின்வரும் அனுமானங்களை சேர்த்து இருக்கும் ஓட்டைகளை அடைக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அதுவும் குழப்பத்திலேயே முடிந்துள்ளது.

1. அ) 1 பேதுரு, பேதுருவின் எழுத்தரினால் எழுதப்பட்டது:

புதிய ஏற்பாட்டின் அறிஞர்களில் ஒரு பிரிவினர் 1 பேதுரு,  பேதுருவின் எழுத்தரால் எழுதப்பட்டது என்று கூறுகிறார்கள். அதற்கு மூல காரணமாய் அமைந்திருப்பது 1 பேதுருவின் மெருகூட்டப்பட்ட கிரேக்கம். பேதுருவின் கல்விப்புலமை குறித்து புதிய ஏற்பாடு பின்வருமாறு சாட்சி பகர்கிறது.

    பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.(அப்போஸ்தல நடபடிகள் 4:13)

எனவே மேற்குறிபிட்ட ஆதாரத்தை எதிர்கொள்ள கிறித்தவ புதிய ஏற்பாட்டு அறிஞர்களில் ஒரு சாரார் 1 பேதுருவை இயற்றியது பேதுருவின் எழுத்தர்தான். அந்த கூட்டத்திலும் ஒரு பிரிவினர் 1 பேதுருவை இயற்றியது சில்வானு என்று கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாய் பின்வரும் வசனத்தை முன்வைக்கின்றனர்.

உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன். (1 பேதுரு 5:12)

1 பேதுருவை இயற்றியது பேதுருவின் எழுத்தர் என்று வாதிப்பவர்களில் இருக்கும் மற்றொரு பிரிவினர் 1 பேதுருவை இயற்றியது மாற்க் என்று வாதிக்கிறார்கள். மேற்குறிபிட்ட வசனத்தில் சில்வானு வெறும் கடிதத்தை கொண்டு சென்றவர்தான், பேதுருவின் உண்மையான எழுத்தர் மாற்க்தான் என்று வாதிக்கிறார்கள். அதற்கு இவர்கள் முன்வைக்கும் ஆதார வசனம்

உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். (1 பேதுரு 5:13)

இங்கு மாற்க்-ஐ, பேதுரு குமாரன் என்று அழைப்பது அவருடனான நெருக்கத்தை காட்டுவதால் 1 பேதுருவை இயற்றியது மாற்குதான் என்று அனுமானிக்கிறார்கள். இப்படி 1 பேதுருவை இயற்றியது பேதுருவும் அவரது எழுத்தரும்தான் என்று வாதிக்கும் அறிஞர்கள் மற்றும் அவர்களது கருத்துக்களின் பட்டியலை காண்போம்.

1 பேதுருவின் ஆசிரியர் பேதுரு / பேதுருவின் உதவியாளர்
 
வ.
 எண்
அறிஞர் கருத்து / வாதம் எழுதப்பட்டதாக கருதும் காலம் நூல்
1. F. F. Bruce  1 பேதுரு இயல்பாகவே பேதுருவின் வாழ்க்கை மற்றும் இறையியலுடன் பொருந்துகிறது; பேதுருவின் ஆக்கம் என்பதை மறுக்க எந்த வலுவான காரணத்தையும் காணவில்லை. பேதுருவின் உதவியாளர் சில்வானு நிருபத்தின் மொழிநடையின் காரணம். 63 - 64 AD1)The New Testament Documents: Are They Reliable?

2)The Canon of Scripture 

2. I. Howard Marshall பேதுரு எழுதியது நம்பத்தகுந்தது.  பேதுரு  சில்வானுவை எழுத்தராக பயன்படுத்தியிருக்கலாம்.  Early 60s AD 1)1 Peter  (IVP Commentary)

2)New Testament Theology 

3. Donald Guthrie  பாரம்பரியமாக கூறப்படும் பேதுருவே ஆசிரியர் ; எழுத்தர்  சில்வானு மற்றும் கிரேக்க சூழலைப் முன்வைப்பதன் மூலம் மொழியியல் வேறுபாடுகளை விளக்குகிறார். ஆனால் பண்டைய மரபுகள் மாற்கை பேதுருவின் விரிவுரையாளராக கூறுகிறது என்று கூறுகிறார். Early 60s AD New Testament Introduction (rev. ed., 1990) 
4. John R. W. Stott  பேதுருவை உண்மையான ஆசிரியராக எடுத்துக்கொள்கிறார்; கடிதத்தின் தனிப்பட்ட தொனியையும் அப்போஸ்தலிக்க அதிகாரத்தையும் ஏற்கிறார். பேதுருவின் அதிகாரம், கெடாமல் சில்வானு இந்த நிருபத்தை இயற்றி இருக்கலாம் Early 60s AD The Message of 1 Peter (BST Series) 
5. Thomas R. Schreiner  பேதுருவின் எழுத்துத்துவத்தை ஏற்கிறார்; சில்வானுவின் உதவி மற்றும் பேதுருவின் இருமொழிப் புலமை ஆகியவற்றால் மொழிநடையின் சிக்கல்கள் இருப்பதாக வாதிடுகிறார். Early 60s AD 1, 2 Peter, Jude (NAC, 2003) 
6. Karen H. Jobes  உள் மற்றும் வரலாற்று சான்றுகள் பேதுருவின் எழுத்தாக்கத்தை உறுதிபடுத்துகின்றன.; அதிநவீன கிரேக்கம் அதனை மறுக்க போதுமான வாதம் அல்ல.  அதிநவீன கிரேக்கத்திற்கு பேதுருவின் உதவியாளர் சில்வானுவே காரணம் Early 60s AD 1 Peter (Baker Exegetical Commentary, 2005)
7. Craig S. Keener சில்வானுவின் உதவியுடன் பேதுரு இதை எழுதியிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறார்; சூழலுக்கு ஏற்ப கி.பி 60களின் ரோம் நகருக்குப் பொருந்துகிறது. Early 60s AD The IVP Bible Background Commentary: New Testament 
8.Ben Witherington III பேதுரு எழுத்தாக்க சார்புநிலையை நோக்கிய  மத்தியஸ்த நிலைப்பாட்டை முன்வைக்கிறார். பேதுருவின் செய்திகளை சில்வானு வடிவமைத்து வழங்கியவராக கருதுகிறார். Early 60s AD Letters and Homilies for Hellenized Christians, Vol. II 
9. D. A. Carson & Douglas J. Moo  அனைவராலும் ஏற்கப்படாத போதும், பேதுருவின் எழுத்தாக்கத்தை சரிகாண்கிறார்.  சில்வானுவை பலர் எழுத்தராக முன்வைப்பதை சரிகாண்கிறார்.  Early 60s AD An Introduction to the New Testament (2nd ed., 2005)
10. Leonhard Goppelt  பேதுருவின் மரணத்திற்கு முந்தைய ஆரம்பகால கிறிஸ்தவ சூழ்நிலையுடன் ஒத்திசைவைப் கருத்தில் கொண்டு பேதுருவின் எழுத்தாக்கத்தை சரிகாண்கிறார். எழுத்தர் சில்வானுவே பேதுருவின் எண்ணங்களுக்கு கிரேக்க வடிவம் தந்தவர் Early - Mid 60s ADA Commentary on 1 Peter (Eerdmans, 1993 [German orig.]) 
11. William Barclay  பேதுருவை ஆசிரியராகக் கருதுகிறார்; கிரேக்க பாணி பேதுருவின் உதவியாளரான சில்வானுவினால் ஏற்பட்டதாக கூறுகிறார். 63 or 64 AD The Letters of James and Peter 
12.J. N. D. Kelly  பேதுருவின் எழுத்துத்துவத்தை ஏற்கிறார். சில்வானு எழுத்தராக இருந்தமையே மெருகூட்டப்பட்ட கிரேக்கத்திற்கு காரண்மாக இருக்கலாம்  63 - 64 AD A Commentary on the Epistles of Peter and Jude (1969) 
13. A. T. Robertson  பேதுருவின் எழுத்துத்துவத்தை ஏற்கிறார். 63 or 64 AD Word Pictures in the New Testament (1933).
14. Myers, Elizabeth A. பேதுருவின் எழுத்துத்துவத்தை ஏற்கிறார். 1 பேதுருவில் இடம்பெறும் பேதுருவின் சுயசாட்சியே போதுமானது என்று கூறுகிறார். Early 60s AD Authorship of 1 Peter and Hebrews: New Evidence in Light of Probable Intertextual Borrowing. (2020)
15. Wayne Grudem பேதுருவின் எழுத்துத்துவத்தை ஏற்கிறார். பேதுரு மெருகூட்டப்பட்ட கிரேக்க அறிவு உடையவராக கருதுகிறார். 63 or 64 AD 1 Peter: An Introduction and Commentary (Volume 17) (TNTC) (2009)
16. Peter H. Davids சில்வானுவிற்கு 1 பேதுருவின் வடிவம் மற்றும் நடையில் பெரும்பங்குள்ளது என்று கருதுகிறார். Early 60s AD The First Epistle of Peter (NICNT, 1990)
17. C. E. B. Cranfield சில்வானுவின் எழுத்துருவாக்கத்தினால்தான் மொழியியல் மெருகு இருப்பதாக  கருதுகிறார் Early 60s AD The First Epistle of Peter (1960ன் கட்டுரைகள்)
18. E. Earle Ellis பவுலிய கடித நடைமுறைகளை போன்று, சில்வானு இந்த கடித்தத்தை வடிவமைத்தவர், மாற்கு தொகுத்தலுக்கும், திருத்தத்திற்கும் காரணமானவர் என்று கூறுகிறார். Early 60s AD The Making of the New Testament Documents (1999)
19. E. G. Selwyn கிரேக்க பாணி மற்றும் இறுதி அமைப்புக்கு மாற்கு காரணமாக இருக்கலாம் என்றும், அவர் ரோமில் பேதுருவின் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார். 64 AD The First Epistle of St. Peter: The Greek Text with Introduction, Notes, and Essays (2nd ed., 1946)
20. William L. Lane 1 பேதுருவை இயற்ற பேதுருவிற்கு மாற்க் தனது இலக்கிய பங்களிப்பை செய்திருப்பதற்கு சாத்தியம் உள்ளது என்று கூறுகிறார் 63 or 64 AD The Gospel According to Mark (NICNT, 1974) 
21. C. F. D. Moule பேதுருவின் மரணத்திற்கு முன்பு / பிறகு 1 பேதுருவை இயற்ற மாற்க் விரிவுரையாளராகவோ, இலக்கிய துனைவராகவோ செயல்பட்டிருக்கலாம் Early 60s AD or

80s AD

The Birth of the New Testament (3rd ed., 1982)
22. Oscar Cullmann பேதுருவுடன் மாற்கிற்கு இருந்த தொடர்பு, பேதுருவின் மரணத்திற்கு பிறகு,  மெருகூட்டப்பட்ட கிரேக்கத்தில், இந்த நிருபம் இயற்றப்படுவதை சாத்தியமாக்கி இருக்கலாம் என்று வாதிக்கிறார். 63 - 64 AD Peter: Disciple, Apostle, Martyr (1952 [Eng. 1953])
23. Bo Reicke பேதுருவின் ரோம சமூகத்தில், 1 பேதுருவின் வடிவமைப்பு அல்லது திருத்தத்தில் மாற்க் உதவியிருக்கலாம் என்று அவர் கருதுகிறார். just prior to 64 CE  The Epistles of James, Peter, and Jude (AB 37, 1964)
24. Martin Hengel 1 பேதுரு மற்றும் மாற்குவின் நற்செய்தி பேதுருவின் ஒரே ரோமானிய சூழலில் இருந்து தோன்றியிருக்கலாம். இது மாற்குவின் இலக்கியப் பங்களிப்பை காட்டுவதாக இருக்கலாம். 70 – 80 AD Studies in the Gospel of Mark (1985)
25. R. Alan Cole பேதுருவின் மகனான மாற்கு பேதுருவின் உதவியாளராகவும், இந்த நிருபத்தின் ஆசிரியராகவும் இருப்பதை ஏற்கிறார்.  63 - 64 AD The First Epistle of Peter (Tyndale NT Commentary, 1989)

அனுமானங்கள் அடிப்படை ஆதரமல்ல: 

    உதவியாளர்கள் பேதுரு உயிருடன் இருக்கும் போதே இந்த நிருபத்தை இயற்றினார்களா? பேதுரு உள்ளிட்ட அப்போஸ்தலர்களின் மரண குறிப்புக்கள் மறைந்த வருடத்தை கூட அனுமானிக்க முடியாத படிக்கு சிக்கலாக இருக்கிறது. 
        These sources suggest dates as late as 67/69 CE, and as early as 55 CE.This cluster of accounts resists efforts to place them in a logical progression showing development of different dating schemes over time. Instead, we see here again that even basic questions about the deaths of Peter and Paul, in this case the date(s), have never had a single, clear answer. The sources are characterized by their variety every bit as much as their continuity. (P.No.102, The Many Deaths of Peter and Paul By DAVID L. EASTMAN) 
    இந்த ஆதாரங்கள் கி.பி 67/69 ஆம் ஆண்டு போல் பிந்தைய தேதிகளையும், கி.பி 55 ஆம் ஆண்டு போல் முந்தைய தேதிகளையும் பரிந்துரைக்கின்றன. இந்தக் தகவல்களின் தொகுப்பு, அவற்றை தர்க்கரீதியான முன்னெற்ற இடத்தில் வைப்பதற்கான  முயற்சிகளை தடுக்கிறது, காலப்போக்கில் வெவ்வேறு கால வரைவுகளின் வளர்ச்சியைக் காட்டுகிறது. மாறாக, பேதுரு மற்றும் பவுலின் மரணம் பற்றிய அடிப்படை கேள்விகளுக்கு கூட, இந்த விஷயத்தில், தேதி(கள்) ஒருபோதும் ஒரு தெளிவான பதிலைக் கொண்டிருக்கவில்லை என்பதை இங்கே மீண்டும் காண்கிறோம். மூலங்கள் அவற்றின் தொடர்ச்சியைப் போலவே அவற்றின் பன்முகத்தன்மையாலும் வகைப்படுத்தப்படுகின்றன. (P.No.102, The Many Deaths of Peter and Paul By DAVID L. EASTMAN)
அதாவது ஆதாரங்கள், ஒருகிணைந்து ஒற்றை திசையை காட்ட இயலாமல் இருப்பதால் அப்போஸ்தலர்களின் மரண வருடம் இதுவேன கணிப்பதிலேயே பெரும் சிக்கல் இருக்கும் போது,  புதிய ஏற்பாட்டு அறிஞர்களான C. F. D. Moule, Martin Hengel போன்றவர்கள் இந்த நிருபம் பேதுருவின் மரணத்திற்கு பிறகும் இயற்றப்பட்டிருக்கலாம் என்று  கருதுகிறார்கள். C. F. D. Moule, Martin Hengel போன்றவர்கள் பகிரங்கமாகவே 1 பேதுரு, பேதுருவின் மரணத்திற்கு பிறகு இயற்றப்பட்டிருக்கலாம் என்று கூறுவது, 1 பேதுரு, எழுத்தாளரை கொண்டு  பேதுருவால் எழுதப்பட்டது என்ற கருத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை காட்டுகிறது. "1 பேதுரு , பேதுருவின் பெயரில் இட்டுக்கட்டி புனையப்பட்டது" , என்று வாதிக்கும் அணியினரின் வாதத்தை எதிர் கொள்ள இயலாத நிலை இருப்பதையும், அதனை சரிகெட்ட “எழுத்தாளர் உதவி” என்ற கற்பனை மட்டுமே உள்ளது. 
அந்த கற்பனையும் யார் அந்த எழுத்தாளர்? அந்த எழுத்தாளர் பேதுரு உயிருடன் இருக்கும் போது பேதுரு சொல்ல சொல்ல இயற்றினாரா? அல்லது பேதுரு மரணித்த பிறகு அந்த எழுதரால் எழுதப்பட்டதா? என்பதில் குழப்பத்தை தோற்றுவித்து கிறித்தவ அறிஞர்களை அலறவிட்டுள்ளது என்பதை நமது கட்டுரை தெளிவாக காட்டுகிறது.  கற்பனைகள் என்றும் அடிப்படை ஆதாரமாகாது என்பதற்கும் அது எத்தகைய அவலத்தை தோற்றுவிக்கும் என்பதற்கும் சரியான உதாரணமாக இது இருக்கிறது….அல்லாஹு அஃலம்.