நாம் சென்ற தொடரில் இஸ்லாம் வாலிப வயதைத்தான் திருமண வயதாக கொள்கிறது என்பதை தக்க தரவுகளுடன் விளக்கிவுள்ளோம். இஸ்லாமின் இந்த நிலைப்பாட்டை முன்வைக்கும் போது அவதூறு பரப்பிகள் சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அவர்களது இந்த வாதத்திற்கு ஆதாரமாக அல் குர்ஆன் அத்தலாக் சூராவின் 4 வது வசனம் குறித்த சில தஃப்ஸீர்களையும், விளக்கவுரைகளையும் முன்வைக்கின்றனர். உண்மையில் அந்த வசனம் என்ன கூறுகிறது என்பதையும் அதன் விளக்கத்தையும் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.
அல் குர் ஆன் 65:4
முதலில் அத்தலாக் சூராவின் 4 வது வசனம் என்ன கூறுகிறது என்பதை முதலில் காண்போம். அதன் கருத்து என்ன என்பதையும் அதில் அவர்கள் வைக்கும் விமர்சனத்தையும் பார்ப்போம்.
மேற்குறிப்பிட்ட வசனம் மூன்று சாரார் குறித்து பேசுகிறது:وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِن نِّسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًاமேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாய் ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.
1.வயதாகி மாதவிடாய் ஏற்பாடாத பெண்கள்
2.மாதவிடாய் ஏற்படாத பெண்கள்
3.கர்பிணி பெண்கள்
இதில் இரண்டு சாரார் குறித்து எந்த சிக்கலும் இல்லை. ஆனால் இதில் இடம் பெறும் இரண்டாம் சாரார்களான மாதவிடாய் ஏற்படாதப் பெண்கள் என்பதைத்தான் தூக்கி கொண்டு இது சிறுமிகள் குறித்துதான் பேசுகிறது என்று அவதூறு பரப்புகின்றனர்.
அவதூறு பரப்பிகளின் வாதமும் நமது பதிலும்:
" சிறுமிகளுடன் உறவு கொள்வதை இந்த வசனம் கூறுகிறது. ஏன்னென்றால் உறவு கொள்ளப்பட வில்லை என்றால் அந்த பெண்களின் இத்தா காலம் குறித்து குர்ஆன் தனியாக பேசுகிறது. (33:49 ). அத்தகைய உறவு கொள்ளப்படாத பெண்ணிற்கு இத்தா ஏதும் இல்லை. ஆக மேற்குறிபிட்ட வசனம் 65:4 என்பது உறவு கொள்ளப்பட்ட பெண்கள் குறித்துதான் பேசுகிறது என்பது தெளிவாகிறது. ஆக மாதவிடாய் ஏற்படாத சிறுமிகளுடன் உறவு கொள்ளலாம் என்று பொருள்" என்பதுதான் இவர்களது வாதம்.
இதற்கான பதில் நமக்கு இந்த வசனத்தை மொழியறிவுடன் வாசிக்கும் யாருக்கும் விளங்கும் என்பதுதான் நிதர்சனம். மாதவிடாய் ஏற்படாத பெண்கள் என்பதற்கு குர்ஆன் கூறும் வாக்கியம் இதுதான்:
وَاللَّائِي لَمْ يَحِضْنَ
மேற்குறிபிட்ட வாக்கியத்தில் இடம் பெறும் لَمْ இறந்த காலத்தின் எதிர்வினைச்சொல் ஆகும். இது இறந்த காலத்தில் நிகழவில்லை என்பதைத்தான் குறிக்குமே ஒழிய வருங்காலத்தில் ஏற்பட சாத்தியமுள்ளதா என்று விளக்காது. மாறாக சில இடங்களில் இந்த சொல் என்றுமே நிகழாது என்றும் கூறும். இதே போன்ற வாக்கியங்கள் குர்ஆனில் பல இடங்களில் காண முடியும். உதாரணமாக சூராத் அல் இக்லாஸ்
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
இந்த இடத்தில் இடம்பெறும் لَمْ என்பது என்றுமே இது நிகழப்போவதில்லை என்பதையும் உணர்த்துவதாக இருக்கிறது. வருங்காலத்தில் ஏற்பட சாத்தியம் இருக்கும் இடங்களில் குர்ஆனிய பண்டைய அரபு لَمّا என்ற சொல்லை பயன்படுத்துகிறது (http://arabic.tripod.com/Negation4.htm ). அதனால் لَمْ என்பதின் முதன்மை பொருள் நிகழவில்லை என்ற எதிர்மறையை குறிப்பதுதான். இனி நிகழும் என்ற பொருள் கொள்வதாக இருந்தால் அதற்கு தக்க துணை சான்று வேண்டும்.
ஆக மேற்குறிபிட்ட 65:4 இல் இடம் பெறும் وَاللَّائِي لَمْ يَحِضْنَ என்பது மாதவிடாய் ஏற்படாதவர்கள் என்ற பொருளில்தான் கையாளப்பட்டுள்ளது என்பது விளங்குகிறது. ஆக இது பூப்பெய்தாத சிறுமிகள் குறித்துதான் பேசுகிறது என்பதை அறுதியிட்டு கூறவியலாது. மாறாக لَمّا என்ற சொல் இடம் பெற்று இருந்தால் பூப்பெய்தாத சிறுமிகள் குறித்துதான் பேசுகிறது என்று அறுதியிட்டு கூறலாம். ஏனென்றால் சிறுமிகளுக்கு வருங்காலத்தில் மாதவிடாய் ஏற்பட சாத்தியம் உண்டு. ஆனால் இங்கு لَمْ என்ற சொல்தான் இடம் பெறுகிறது. சில நேரத்தில் உடல் கோளாறுகளினால் பெண்கள் மூப்பு அடையாமலே மாதவிடாய் அற்றுப்போன்வர்களாக ஆவார்கள். ஆக இது தனித்த மருத்தவ நிலை(Amenorrhea) குறித்துதான் பேசுகிறது என்பது தெளிவாகிறது. அதாவது மாதவிடாய் அற்றுப்போகும் இளம் பெண்கள் குறித்துதான் பேசுகிறது. இதை நாமாக கூறவில்லை மாறாக இந்த வசனம் இறங்கிய சூழல் குறித்த ஹதீஸ் இந்த இடத்தில் இடம் பெறும் لَمْ ஏற்படாத என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெளிவாக கூறுகிறது.
أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا يَحْيَى بْنُ مُحَمَّدٍ الْعَنْبَرِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ السَّلَامِ، ثنا إِسْحَاقُ، أَنْبَأَ جَرِيرٌ، عَنْ مُطَرِّفِ بْنِ طَرِيفٍ، عَنْ عَمْرِو بْنِ سَالِمٍ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: " لَمَّا نَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي سُورَةِ الْبَقَرَةِ فِي عَدَدٍ مِنْ عَدَدِ النِّسَاءِ قَالُوا: قَدْ بَقِيَ عَدَدٌ مِنَ النِّسَاءِ لَمْ يُذْكَرْنَ الصِّغَارُ وَالْكُبَّارُ، وَلَا مَنِ انْقَطَعَتْ عَنْهُنَّ الْحَيْضُ، وَذَوَاتُ الْأَحْمَالِ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْآيَةَ الَّتِي فِي سُورَةِ النِّسَاءِ {وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ} [الطلاق: 4] «صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ»
[التعليق - من تلخيص الذهبي]
உபை இப்னு கஃப் (ரலி) கூறியதாவது " பெண்களின் இத்தா குறித்து அல் பகராவின் இத்தா குறித்த ஆயத் இறங்கிய போது சிலர் கேட்டார்கள்: " பெண்களின் இத்தா குறித்து கூறப்பட்டதில் சிலர் விடுபட்டுள்ளனர். (மாதவிடாய்) அற்றுப்போனதால் மாதவிடாய் ஏற்படாத குமரியும், கிழவியும், மேலும் கற்பிணிப் பெண்களும் இருக்கிறார்களே??”. அப்போது அல்லாஹ் அந்த பெண்கள் குறித்து இந்த ஆயத்தை இறக்கினான் மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.(65:4) (முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் ஹதீஸ் என் 3821),
மேற்குறிபிட்ட ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது இந்த வசனம் இடையிலேயே மூப்பு அடைவதற்கு முன்பே மாதவிடாய் அற்றுப்போன பெண்கள் குறித்துதான் பேசுகிறது என்பததையும் சிறுமிகள் குறித்து பேசவில்லை என்பதையும். மேற்குறிபிட்ட நபி மொழி மேற்குறிபிட்ட வசனத்தை தெளிவாக விளக்கும் பட்சத்தில் "இன்னும் மாதவிடாய் ஏற்படாதவர்கள்" “சிறுமிகள்" என்று பொருள் தரும் விதமாக இயற்றப்பட்ட அனைத்து நவீன மற்றும் பழங்கால மொழியாக்கமும் விளக்கமும் தவறு என்பது நிரூபனாமாகிறது. ஆக இதன் அடிப்படையிலான இவர்களது வாதங்கள் தள்ளப்படுகிறது.
இது போக இமாம்களில் ஒரு சாராரின் ஒரு பகுதி கருத்தையும் ,சில பழங்கால தஃப்ஸீர் மொழியாக்கங்களில் பிழையாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதையும் இவர்கள் தங்களது ஆதாரமாக முன்வைத்துள்ளனர். நாம் தஃப்ஸீர்களை விளக்கும்முன் இமாம்களின் ஒரு சாராரின் கருத்தில் இவர்கள் செய்யும் இருட்டடிப்பை சற்று விளக்கினாலே போதும் தற்கால தஃப்ஸீர் வரை இருக்கும் கருத்தினை புரிந்து கொள்ள பொதுமானதாக அமையும். இத்தகைய அனைத்தையும் உல்ளடக்கிய கருத்தினை ஃப்த்ஹுல் பாரியில் 5132 ஹதீஸின் விளக்கத்தில் காணலாம்.
لِقَوْلِ الله تَعَالَى واللائي لم يحضن فَجَعَلَ عِدَّتَهَا ثَلَاثَةَ أَشْهُرٍ قَبْلَ الْبُلُوغِ أَيْ فَدَلَّ عَلَى أَنَّ نِكَاحِهَا قَبْلَ الْبُلُوغِ جَائِزٌ وَهُوَ اسْتِنْبَاطٌ حَسَنٌ لَكِنْ لَيْسَ فِي الْآيَةِ تَخْصِيصُ ذَلِكَ بِالْوَالِدِ وَلَا بِالْبِكْرِ وَيُمْكِنُ أَنْ يُقَالَ الْأَصْلُ فِي الْأَبْضَاعِ التَّحْرِيمُ إِلَّا مَا دَلَّ عَلَيْهِ الدَّلِيلُ وَقَدْ وَرَدَ حَدِيثُ عَائِشَةَ فِي تَزْوِيجِ أَبِي بَكْرٍ لَهَا وَهِيَ دُونَ الْبُلُوغِ فَبَقِيَ مَا عَدَاهُ عَلَى الْأَصْلِ وَلِهَذَا السِّرِّ أَوْرَدَ حَدِيثَ عَائِشَةَ قَالَ الْمُهَلَّبُ أَجْمَعُوا أَنَّهُ يَجُوزُ لِلْأَبِ تَزْوِيجُ ابْنَتِهِ الصَّغِيرَةِ الْبِكْرِ وَلَوْ كَانَتْ لَا يُوطَأُ مِثْلُهَا إِلَّا أَنَّ الطَّحَاوِيّ حكى عَن بن شبْرمَة مَنعه فِيمَن لَا تُوطأ وَحكى بن حزم عَن بن شُبْرُمَةَ مُطْلَقًا أَنَّ الْأَبَ لَا يُزَوِّجُ بِنْتَهُ الْبِكْرَ الصَّغِيرَةَ حَتَّى تَبْلُغَ وَتَأْذَنَ وَزَعَمَ أَنَّ تَزْوِيجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَائِشَةَ وَهِيَ بِنْتُ سِتِّ سِنِينَ كَانَ مِنْ خَصَائِصِهِ وَمُقَابِله تجوير الْحَسَنِ وَالنَّخَعِيِّ لِلْأَبِ إِجْبَارِ بِنْتِهِ كَبِيرَةً كَانَتْ أَوْ صَغِيرَةً بِكْرًا كَانَتْ أَوْ ثَيِّبًا
அல்லாஹ் கூறுவதான "واللائي لم يحضن” - மாதவிடாய் ஏற்படாதவர்கள்" என்பது வயதுக்கு வராதவர்களையே குறிக்கும். மற்றொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் இது பருவ வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்யலாம் என்பதை குறிப்பதாக உள்ளது. இது சிறந்த முடிவுதான். ஆயினும் இதில் அதிகாரம் யாருக்கானது என்பது குறித்து இந்த ஆயத் நிறுவவில்லை தந்தைக்கானதா அல்லது இளம் பெண்ணுக்கானதா என்று இல்லை. இன்னும் கூறுவதாக இருந்தால் இதன் அடிப்படை சட்டம் என்னவென்றால், ஆதாரம் எவற்றை கூறுகிறதோ அவற்றை தவிர்த்த மற்றவை தடுக்கப்பட்டவை என்பதே ஆகும். ஆயிஷா(ரலி) அவர்களை பருவமடைவதற்கு முன்பே அபூபக்ர்(ரலி) திருமணம் செய்வித்தார்கள் என்ற ஆயிஷா(ரலி) அறிவிக்கும் ஆதாரத்தை தவிர வேறு ஏதும் இல்லாதாதால் அந்த சட்டம் அனைத்திலும் பொருந்தும்.(அதாவது வயதுக்கு வருவதற்கு முன்பு திருமணம் செய்விக்கலாம் ஆனால் உறவு கொள்ளக்கூடாது). இதை ஏற்று இதில் நிலைத்திருப்பதால்தான் ஆயிஷா(ரலி) அவர்களது ஹதீஸை அதில் குறிப்பிடுகிறார். அல் முஹல்லப் கூறுவதாவது: மகள் குழந்தையாக இருக்கும் போதே தந்தை திருமணம் செய்விக்கலாம் ஆனால் மேற்குறிபிட்ட உதாரணத்தின் படியே அமையாவிட்டால் அது ஏற்கப்படாது என்பது அனைவரும் ஏற்ற ஒன்று,இதற்கு மாறாக "இப்னு சுப்ருமா, வயதுக்கு வராதவரை திருமணம் செய்விப்பதை தடுத்தார்கள்" என்று தகவி குறிப்பிடுகிறார், இப்னு ஹஸம் குறிப்பிடுவதாவது இப்னு சுப்ருமா, "மகள் பருவவயதை அடைந்து அனுமதி வழங்கும் வரை தந்தை திருமணம் செய்விக்ககூடாது. ஆயிஷா(ரலி) 6 வயதாக இருந்த போது நபி(சல்) அவர்கள் திருமணம் செய்தது என்பது அவர்களுக்கு மட்டுமே உரிய சலுகையாகும்" என்று கூறுகிறார். அல் ஹஸன் மற்றும் அன் நகயீ ஆகியோர் கொண்டிருக்கும் மகள் சிறுமியாகவோ பெரியவளாகவோ இருந்தாலும் சரி, கண்ணியாகவோ விதவையாகவோ இருந்தாலும் சரி (திருமணம் செய்விக்க) வற்புறுத்தலாம் என்ற கருத்திற்கு மாற்றமாக (இப்னு சுப்ருமா) கூறுகிறார்கள்.(பாடம்: قَوْلُهُ بَابُ إِنْكَاحِ الرَّجُلِ وَلَدَهُ الصِّغَارَ ; ஃபத்ஹுல் பாரி 9/19 ஹதீஸ் எண் 5132)
மேற்குறிபிட்ட செய்தியை முழுமையாக நாம் ஆய்வுக்குட்படுத்தினால் இது இமாம் புகாரி அவர்கள் புகாரி கிதாபின் பாடமான بَابُ إِنْكَاحِ الرَّجُلِ وَلَدَهُ الصِّغَارَ -ல் ஏன் 65:4 என்ற வசனத்தை முன்வைத்து ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம் குறித்த ஹதீஸை ஏன் பதிந்துள்ளார்கள் என்பதை விளக்குவதுதான் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களது நோக்கம் என்பதை விளங்கலாம். மேலும் இந்த வசனம் குறித்து தொடர்புடைய ஹாக்கிமில் இடம் பெறும் ஹதீஸை நாம் பதிவிட்டுள்ளோம். இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக குர்ஆனிற்கு விளக்கமாக சரியான ஹதீஸ் வரும் போது, அந்த வசனம் இறங்கிய சம்பவம் குறித்த ஹதீஸ் தெளிவாக கிடைக்கும் போது அதுவே அந்த வசனத்திற்கு சரியான ஏற்புடைய விளக்கமாக அமையும். அதன் அடிப்படையில் அந்த வசனத்தை நாம் மேலே விளக்கியுள்ளோம்.
மேலும் இவர்கள் மேற்குறிபிட்ட ஃபத்ஹுல் பாரியின் செய்தியை முழுவதுமாக பதிய மாட்டர்கள். இவர்கள் முன்னமே நபி(சல்) அவர்கள் மீது வைக்கும் சிறுமி வன்புணர்ச்சி குறித்த அவதூறுக்கு மேற்குறிபிட்ட செய்தி மறுப்பாய் அமைவதால் இந்த செய்தியை முழுவதுமாக பதிய மாட்டார்கள். முதல் வரியை மட்டுமே பதிவார்கள். ஏனைய பகுதிகளை இருட்டடிப்பு செய்துவிடுவார்கள்.
மேலும் சிறுமியை திருமணம் செய்விக்கலாம் என்ற கருத்தை கொண்டிருக்கும் அறிஞர்களின் கருத்தை கவனித்தோம் என்றால் இவர்கள் இஸ்லாம் மீது வைக்கும் அவதூறுக்கு மறுப்பாய் அமைவதையே நாம் காண முடிகிறது.
عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَليه وسلَّم، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَليه وسلَّم كَانَ يُبَاشِرُ المَرْأَةَ مِنْ نِسَائِهِ وَهِيَ حَائِضٌ إذَا كَانَ عَلَيْهَا إزَارٌ يَبْلُغُ أَنْصَافَ الفَخِذَيْنِ أَوْ الرُّكْبَتَيْنِ مُحْتَجِرَةً بِهِ. حَدَّثَنَا وَكِيعٌ عَنْ الرَّبِيعِ عَنْ الحَسَنِ قَالَ: لاَ بَأْسَ إنْ بَلَغَتْ عَلَى بَطْنِهَا وَبَيْنَ فَخِذَيْهَا.
'நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்" என 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்கள். ஹசன் அல் பஸரி(ரஹ்) “ அவள் பூப்பெய்தியிருந்தால் அவளது வயிற்றிலோ, தொடையின் மீதோ கட்டியணைப்பது தவறல்ல" என்று கூறுகிறார்கள்.(முஸன்னஃப் இப்னு அபி ஷைபா 16832.16833)
அதாவது ஹசன் அல் பஸ்ரி அவர்களது கருத்தின் படி பூப்பெய்தாத பெண்ணை திருமணம் செய்திருந்தால் கட்டியணைப்பது கூட தவறாகும் என்பது ஹஸன் அல் பஸ்ரி அவர்களது கருத்தாகும்.
وَاعْلَمْ أَنَّ الشَّافِعِيَّ وَأَصْحَابَهُ قَالُوا وَيُسْتَحَبُّ أنْ لَا يُزَوِّجَ الْأَبُ وَالْجَدُّ الْبِكْرَ حَتَّى تَبْلُغَ وَيَسْتَأْذِنُهَا لِئَلَّا يُوقِعَهَا فِي أَسْرِ الزَّوْجِ وَهِيَ كَارِهَةٌ
இமாம் ஷாஃபி மற்றும் அவரது சஹாக்கள் பருவமடையாத பெண்ணை, அவளது உடன்பாடில்லாமல் தந்தையோ பாட்டனாரோ திருமணம் செய்விப்பதை ஊக்குவிப்பதில்லை, அதனால் அந்த பெண் விரும்பாத கணவனிடம் சிக்கிக்கொள்வாள் என்கின்றனர்.(அந்நவவீயின் சரஹ் சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்:1422)
أجمع العلماء على أنه يجوز للآباء تزويج الصغار من بناتهم، وإن كن فى المهد، إلا أنه لا يجوز لأزواجهن البناء بهن إلا إذا صلحن للوطء
அறிஞர்கள் தந்தை தனது இளம் பெண்ணை தொட்டிலில் இருக்கும் போதே திருமணம் செய்விக்க முடியும். ஆனால் அவர்கள் உறவுக்கான பாதுகாப்பான தகுதியை அடையும் வரை அவர்களது கணவர்கள் அவர்களுடன் உறவு கொள்ள இயலாது என்பதில் ஒத்த கருத்தில் உள்ளனர். (அந்நவவீயின் சரஹ் சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்:1422)
ஆக குழந்தை திருமணம் குறித்து ஆதாரங்கள் அடிப்படையில் இரண்டு கருத்து நிழவுகிறது:
1.பெண்கள் பூப்பெய்ததும்தான் திருமணம் செய்விக்க வேண்டும். இந்த கருத்தைத்தான் நாமும் வலியுறுத்துகிறோம். அதை சென்ற தொடரில் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் மூலம் நிறுவியுள்ளோம். இந்த கருத்தை இமாம் ஷாஃபியீ, இப்னு ஹஸம், அத்தகவீ, இப்னு சுப்ருமா போன்றவர்கள் கொண்டிருக்கின்றனர்.2.மேற்குறிபிட்ட 65:4 இறைவசனத்தின் அடிப்படையில் சிறுமியை பூப்பெய்துவதற்கு முன்பே திருமணம் செய்விக்கலாம் என்று வாதிப்பவர்கள் பின்வரும் கருத்தை முன்வைக்கின்றனர். அதாவது சிறுமியை பூப்பெய்துவதற்கு முன்பே திருமணம் செய்விக்கலாம் . ஆனால் கணவன் அவர்களோடு உறவு கொள்ள இயலாது. இதற்கு ஆதாரமாக நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை 6 வயதில் திருமணம் செய்து பூப்பெய்ததும் வீடு கூடினார்கள் என்ற ஹதீஸை முன்வைக்கின்றனர். இந்த கருத்தை அந்நக்கயீ, அல் ஹஸன் அல் பஸ்ரீ, அல் முஹல்லப் போன்றவர்கள் கொண்டிருக்கின்றனர்.
ஆக மேற்குறிபிட்ட கருத்தில் இரண்டுமே சிறுமி வன்புணர்ச்சியை ஏற்கவில்லை என்பது தெளிவாகிறது. இஸ்லாம் குழந்தை வன்புணர்வை திருமணம் என்ற பெயரில் ஆதாரிக்கிறது என்ற கருத்து அவதூறு என்பது மேற்குறிபிட்ட இரு சாராரின் கருத்துகளின் மூலம் நிருபனமாகிறது.
மேற்குறிபிட்ட அடிப்படையில்லாமல் எந்த ஆதாரமும் இல்லாமல் கொடுக்கப்படும் எந்த விளக்கம்மும் ஆதாரப்பூர்வமானது அல்ல. அதற்கு தக்க நபி மொழிகளோ விளக்கங்களோ இல்லாத காரணத்தினால் மேற்குறிபிட்ட இரு சாராரின் கருத்திற்கு மாற்றமாக யார் விளக்கவுரை கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. இரண்டாவது சாராரின் கருத்தின் அடிப்படையில் தான் தற்காலத்தில் வரும் சில மொழியாக்கங்கள் அது வயது வராத சிறுமிகள் குறித்துதான் பேசுகிறது என்று கூறுகின்றனர்.
அது போக இவர்கள் சில தஃப்ஸீர்களின் மொழியாக்கத்தில் இருக்கும் தவறுகளையும் அதை தங்களது மனதுக்கு ஏற்றார் போல் வளைத்து தூக்கிக்கொண்டு வருகிறார்கள். அவற்றுள் சில.
فَلَمَّا بَين الله عدَّة النِّسَاء اللَّاتِي يحضن قَامَ معَاذ فَقَالَ أَرَأَيْت يَا رَسُول الله مَا عدَّة النِّسَاء اللَّاتِي يئسن من الْمَحِيض فَنزل {واللائي يَئِسْنَ مِنَ الْمَحِيض} من الْكبر {مِن نِّسَآئِكُمْ إِنِ ارتبتم} شَكَكْتُمْ فِي عدتهن {فَعِدَّتُهُنَّ} فِي الطَّلَاق {ثَلاَثَةُ أَشْهُرٍ} فَقَامَ رجل آخر فَقَالَ أَرَأَيْت يَا رَسُول الله فِي اللائي لم يحضن للصغر مَا عدتهن فَنزل {واللائي لَمْ يَحِضْنَ} من الصغر فعدتهن أَيْضا ثَلَاثَة أشهر فَقَامَ رجل آخر فَقَالَ أَرَأَيْت يَا رَسُول الله مَا عدَّة الْحَوَامِل فَنزل {وَأُوْلاَتُ الْأَحْمَال} يَعْنِي الحبالى {أَجَلُهُنَّ} عدتهن {أَن يَضَعْنَ حَمْلَهُنَّ} ولدهن {وَمَن يَتَّقِ الله} فِيمَا أمره {يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْراً} يهون عَلَيْهِ أمره وَيُقَال يرزقه عبَادَة حَسَنَة فِي سريرة حَسَنَةமேற்குறிபிட்ட மொழியாக்கம் தவறாக உள்ளது. அதாவது
(And for such of your women as despair of menstruation) because of old age, (if ye doubt) about their waiting period, (their period (of waiting) shall be three months) upon which another man asked: “O Messenger of Allah! What about the waiting period of those who do not have menstruation because they are too young?” (along with those who have it not) because of young age, their waiting period is three months. Another man asked: “what is the waiting period for those women who are pregnant?” (And for those with child) i.e. those who are pregnant, (their period) their waiting period (shall be till they bring forth their burden) their child. (And whosoever keepeth his duty to Allah) and whoever fears Allah regarding what he commands him, (He maketh his course easy for him) He makes his matter easy; and it is also said this means: He will help him to worship Him well.
فَقَامَ
رجل آخر فَقَالَ أَرَأَيْت يَا رَسُول
الله فِي اللائي لم يحضن للصغر مَا عدتهن
فَنزل
ஒரு மனிதர் " அல்லாஹ்வின் தூதரே! மாதவிடாய் ஏற்படாத இளம் பெண்ணின் இத்தா எதுவரை? என்று கேட்கிறார்
என்பதை ஆசிரியர் பதிகிறார். இதன்
பிறகு தஃப்ஸீர் ஆசிரியர்
குர் ஆன் வசனத்தை பிராக்கட்
குள் கொண்டுவருகிறார்.
அதன்
பிறகு
من الصغر فعدتهن أَيْضا ثَلَاثَة أشه
என்ற வாசகத்தை இளம் பருவத்தினால் அவர்களுக்கு இத்தா மூன்று மாதங்கள் என்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்கிறார். ஆனால் இங்கு இடம் பெறும் من என்ற சொல் "காரணமாக" என்ற பொருளில் இடம் பெறவில்லை. மாறாக "ஆன" என்ற பொருள்தான் தரும், அதாவது மாதவிடாய் ஏற்படாத இளம் பெண்ணுக்கான என்று பொருள் வரும். காரணமாக – “because of” என்று அந்த இடத்தில் பொருள் கொண்டால் அவர்கள் இளம் பெண்கள் என்பதால் மூன்று மாதம் இத்தா என்று பொருள் ஏற்படும். ஆக இதில் தில்லு முள்ளு செய்ய சில அவதூறு வலைத்தளங்கள் "மாதவிடாய் ஏற்படாதவர்கள்" என்று பிராக்கட்டில் காட்டப்பட்ட குர்ஆன் வசனத்தையும் இணைத்து "இளமையினால் மாதவிடாய் ஏற்படாதவர்கள்" என்று இவர்களது மனோ இச்சைக்கு ஏற்றவாறு பொருள் தருகின்றனர். அதாவது
{واللائي
لَمْ يَحِضْنَ}
من
الصغر فعدتهن أَيْضا ثَلَاثَة أشه
இதில் குறிப்பிடப்படும் பிராக்கட்டில் இருக்கும் வசனத்தின் விளக்கம் தான் வெளியே இருப்பது. அதை அந்த விளக்கத்தின் ஆரம்ப வாக்கியமாக மாற்றி தில்லு முள்ளு செய்துள்ளனர். இதே வழிமுறையைத்தான் தஃப்ஸீர் ஜாலலைனிலும் மேற்கொண்டுள்ளனர். இது ஒரு உதாரணம் தான் இவர்களது விமர்சனத்தின் லட்சணத்தை புரிந்து கொள்ள. ஆக பொய்யும் தவறான மொழியாக்கமும் தான் இவர்களது மூலதனமாக இருக்கிறது இந்த வசனம் குறித்த விமர்சனத்தில்.
No comments:
Post a Comment