பக்கங்கள் செல்ல

Monday, October 10, 2016

உலக அழிவு?

உலக அழிவு எப்போது என்று அறிந்துகொள்வதை விட நாம் கட்டாயமாக அறிந்து கொள்ளவேண்டிய சில அடிப்படை உண்மைகள் உள்ளன.
அழிவு என்பது இருவகைகளில் நம்மை அடைய வாய்ப்புள்ளது
1.. நம் உடல் அழிதல் - அதாவது உலக அழிவுக்கு முன்னரே நமக்கு மரணம் ஏற்படுதல்.
2. உலக அழிவின்போது அதன் பயங்கரங்களில் சிக்கி அதன் மூலம் நமக்கு மரணம் ஏற்படுதல்.
இவற்றில் எது நமக்கு முதலில் வாய்த்தாலும் மரணம் என்ற ஒன்றை நாம் அனைவருமே அடையவிருக்கிறோம் என்பது மட்டும் சந்தேகத்துக்கு இடமில்லாத ஒன்று. எனவே உரிய முறையில் அந்த அழிவை எதிர்கொள்ள நம்மை நாமே தயார்ப்படுத்திக் கொள்வதுதான் நமது பகுத்தறிவினால் நாம் பெறும் பயன்!
அந்த மரணத்துக்குப் பின் நம் நிலை என்ன? மக்களிடையே மூன்று கருத்துக்களை நாம் பரவலாகப் பார்க்கமுடிகிறது.
1. நாம் இருக்கமாட்டோம். மண்ணோடு மண்ணாகப் போய்விடுவோம்.
2. ஆத்மாவிற்கு அழிவில்லை. எனவே மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுப்போம்.
3. இறைவேதங்கள் கூறுவது போல் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுதல்: நம் செயல்களுக்குக் கூலி கொடுக்கப் படுவோம். நமது பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு நமக்கு நிரந்தர நரகமோ அல்லது சொர்க்கமோ கிடைக்கும்
மேற்படி கருத்துக்களில் நமது கருத்து எந்த ஒன்றாகவும் இருக்கலாம் .ஆனால்...
• மேற்கண்ட மூன்று கருத்துக்களில் ஏதோ ஒன்றுதான் சாத்தியம் மூன்றுமே ஒரே நேரத்தில் சாத்தியப்படுவது முடியாத ஒன்று.
• நமது கருத்துக்காக அல்லது ஊகங்களுக்காக உண்மை அல்லது வாஸ்தவம் வளைந்து கொடுக்கப் போவது இல்லை.
• முதல் இரண்டில் எது நடந்தாலும் நாம் தப்பிக்க வாய்ப்புண்டு.
• மூன்றாவது விஷயம் நடக்குமானால் நாம் தப்பிக்க வழியில்லை.
எனவே பகுத்தறிவு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்னவென்றால் அந்த மூன்றாவது நிலையை எதிர்கொள்ள நம்மை நாமே தயார் செய்து கொள்வதுதான் பாதுகாப்பான வழிமுறை என்பதுதான். மனித இயற்கையும் அதுவே. உதாரணமாக ஜெர்மனி அல்லது சுவீடன் நாட்டிலிருந்து உங்களுக்கு ஒரு இன்டர்வ்யூ அல்லது ஒரு வேலைவாய்ப்பு உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? உடனே அந்நாட்டைப் பற்றி ஆராய ஆரம்பிப்பீர்கள் அல்லவா? ஆராய்ந்து அந்நாட்டின் பொருளாதார சீதோஷ்ண மற்றும் அரசியல் சூழ்நிலைகளை தீரவிசாரித்து அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள்தானே! நாளை நாம் நிரந்தரமாகத் தங்கவுள்ள இடத்தைக் குறித்து நாம் அலட்சியம் காண்பிக்க முடியுமா? அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதில் நாம் தாமதம் செய்யலாகுமா? http://quranmalar.blogspot.in/?m=1

posted from Bloggeroid

No comments:

Post a Comment