பக்கங்கள் செல்ல

Thursday, August 4, 2016

சூபியிசமும் யூத சதியே :- பாகம் 2


By Nasrath S Rosi


இஸ்லாத்தோடு தீவிரவாதத்தை தொடர்பு படுத்தும்போது எவ்வாறு நமக்கு அவமானம் தோன்றுமோ அதுபோலவே இஸ்லாத்தோடு சூபியிசத்தை தொடர்புபடுத்தி அதுவும் இஸ்லாமின் அங்கமென கூறும்போது நமக்கு அவமானமும் அதிருப்தியும் தோன்றுகிறது


சூபியிசமும் அதன் கோட்பாடும் சிறிது அறிந்து வைத்திருக்கும் நாம் ஏன் அது எங்கே தோன்றியது , யாரால் தோற்றுவிக்கப்பட்டது, எந்த காலகட்டத்தில் உருவானது என அறிய முற்படவில்லை...சூபியிசத்தை பயிற்றுவிக்கும் சூபிய ஞானிகளின் பெயர்களை, குருமார்களை வரிசையாக ஒப்பிக்கும் நாம் சூபியிச கோட்பாடூகளை யார் யார் எந்தெந்த காலத்தில் ஒழுங்குமுறை செய்தார்கள் என்பதை ஏன் ஆராயவில்லை..குறிப்பாக சூபியிசம் நமது ரசூலுல்லாஹ் அவர்களால் முன்மொழியப்பட்டுள்ளதா? அல்லது அவர்களது காலத்தில் சூபியிசத்தை கடைபிடிப்போர் இருந்தார்களா? அவர்களை நபிகளார் ஆதரித்தார்களா ? ஆராய்வதே இல்லை.


சூபியிசம் அறிவியல் விஞ்ஞானத்தையும் மறைபொருள் ஞானத்தையும் போதிக்கிறது என்றால் அது 10ம் நூற்றாண்டோடு நின்று போனது ஏன் ? எல்லோரும் தியானம் செய்யுங்கள், தபத்தில் காலம் கழியுங்கள் என ரசூலுல்லாஹ் நமக்கு கட்டளையிடாதது ஏன் ? சதாசர்வ காலமும் மஸ்ஜிதுன் நபவியில் இருள் படர்ந்த நேரங்களில் திக்ரிலும் தொழுகையிலும் ஈடுபட்ட சஹாபிகளை நீங்கள் உங்களது வீடுகளுக்கு செல்லுங்கள், உங்களது மனைவியரை பிரிந்து இங்கே இருக்காதீர்கள், உடலிற்கு செய்ய வேண்டிய கடமைகளான ஓய்வு,வேலை பயிற்சி, தாம்பத்தியம் ஆகியவற்றை புறந்தள்ளி வணக்கத்தில் நேரம் கழிக்காதீர்கள் என அறிவுரை கூறியது ஏன் ? இஸ்லாத்தில் திருமணத்தை கட்டாயமாக்கி துறவறத்தை தூர எறிந்தது ஏன் ? இதற்கான விடைகள் கீழே கிடைக்கிறதா பார்ப்போம்..!


சூபியிசத்தின் வேர் :-
******************


சூபித்துவம் என்கிற தத்துவ கொள்கை ஓரிறையையும் நபிகளாரின் வழிமுறைகளையும் குர்ஆன் போதனைகளையும் மனதார ஏற்றுக்கொண்ட ஒரு ஆன்மீக ரீதியான தியான முறை என்பதனை நாம் ஓரளவு அறிந்து வைத்திருக்கிறோம்.


  •  தியானம் என்பது அல்லாஹுவின் பெயர்களை உச்சரிப்பு செய்துகொண்டே திக்ரில் இருப்பது. சூபியாக்கள் இதைத்தான் செய்கிறார்கள், இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களது ஆன்மா பலப்படுகிறது, மெய்ஞானம் வளருகிறது,இறைவனுக்கு மிக நெருக்கமாக நாம் கொண்டுசெல்லப்படுகிறோம் என்ற ஆத்ம திருப்தியோடு அதனை நம்புகிறார்கள்.


  •  அறிவியல் சம்பந்தமாக சூபியிசம் அதிகம் பேசுகிறது ( இந்திய - பாகிஸ்தான்சூபியாக்கள் எந்த அறிவியல் கண்டூபிடிப்பை நிகழ்த்தினார்கள் என கேட்கக்கூடாது ), இஸ்லாமிய வழியில் வந்த அனைத்து விஞ்ஞானிகளும் அறிவியல் மேதைகளும் சூபி வழி வந்தவர்களே என வாதாடுகிறார்கள். மேலதிகமாக சூபியாக்களிடம் இருக்கும் அறிவியல் அறிவு என்பது ரசவாதம் மட்டுமே..!அது என்ன ரசவாதம் என்கிறீர்களா ? ஆங்கிலத்தில் அல்-கெமி என்பார்கள். இஸ்லாம் தான் அல்-கெமியின் ஊற்று... அல்-கெமிஸ்ட் எனப்படும் ரசவாத தந்திரிகள் அனைவரும் போதித்த அக்கால ரசாயண முறைகளே மருத்துவத்துறையில் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.


சூபியாக்களின் ரசவாதம் :-
*************************


ரசவாதம் என்பது, உலகமனைத்தும் இருக்கும் ஒரு தேடுதல். செம்பைத் தங்கமாக மாற்றும் வித்தை. வேதியியலின் வேர்களை இதில் காணலாம். ஆனால் இது அறியாமையினால் எழுந்த ஒரு தேடல் என்பதே அறிவியலாளர்களின் கணிப்பு. இருக்கலாம். பௌதீகமாக தங்கத்தை செம்பிலிருந்து உருவாக்க எண்ணியவர்கள் சர்வ நிச்சயமாகத் தவறான பாதையில்தான் பயணித்தார்கள் என்பதை நவீன அணுக்கொள்கை சுட்டும்.


ஆனால் இந்த ரசவாதத் தேடல் ஒரு அடிப்படை அகப்படிமமாக உலக மறை-ஞான மரபுகளில் விளங்கியது என்பது மற்றொரு பரிமாணத்தை அளிக்கிறது. ஏறக்குறைய ஒவ்வொரு முக்கிய மானுடப் பண்பாடும் தனக்கென ஒரு ரசவாதக் கோட்பாட்டையும் அதன் அடிப்படையிலான மறைஞான மரபையும் உருவாக்கியுள்ளன. சீனா, எகிப்து, ஐரோப்பிய பாகனீய மதங்கள், பின்னாட்களில் கிறிஸ்தவ-யூத மறைஞான அமைப்புகள் (குறிப்பாக கபலா), அரேபிய-இஸ்லாமிய பண்பாடு ஆகிய அனைத்தும் தமக்கென ஒரு ரசவாத முறையை உருவாக்கியுள்ளன. வெளிப்பார்வைக்கு செம்பைத் தங்கமாக்கும் முயற்சியாகக் காட்சியளிக்கும் அவை அனைத்துமே ஞான அனுபவத் தேடல்களாகவும் அதற்குப் பொருண்மை உலகைப் பல தளங்களில் தங்கு தடையின்றி பயன்படுத்துபவையாகவும் அமைந்தன.


நவீன வேதியியல் ரசவாதத்தைப் போலி அறிவியல் என்றும், மூட நம்பிக்கை என்றும் மறுத்தாலும் அறிவியல் நிறுவன ரீதியாக உருவாகும் முன்னால் ரசவாதம் மருத்துவம் வானியல் தாவரவியல் வேதியியல் ஆகிய அனைத்தையும் குழந்தைத்தன்மையுடன் இணைக்கும் ஒரு மறை-இயக்கமாக அமைந்தது. ஆனால் அக-ரீதியாக ரசவாதம் எப்படிச் செயல்பட்டதுஅக-அறிவியலைஅதை ஆன்மிகம் என்றோ நியூரோ-தியாலஜி என்றோ எப்பெயரிட்டும் அழையுங்கள்- என்பதை ஆராயும் போதே அது சுவாரசியமான வாயில்களைத் திறக்கிறது. மிர்சியா எலியட் ரசவாதத்தை அறிவியலின் முன்னோடி என்று கூறுவதைக் காட்டிலும் பண்டைய மனிதனின் பிரபஞ்ச உணர்தலின் வெளிப்பாடு என கருதுகிறார். இந்தியச் சூழலில் சித்தர்கள் மரபின் பொதுப் பரிபாஷையாகவும் ரசவாதம் வளர்த்தெடுக்கப்பட்டது.


ஒன்றை மற்றொன்றாக உருமாற்றம் செய்யப் பயன்படும் ஒரு சாற்றினைப் பிழிந்தெடுக்கும் சடங்கு என்பதாக நாம் பொதுமைப்படுத்திக் கொண்டால் சோமபானச் சடங்கே உலகின் மிகத் தொன்மையான ரசவாதச் சடங்கு என டேவிட் ஸ்பெஸ் குறிப்பிடுகிறார். அல் இந்திய ரசவாதத்தை உடல் ஆரோக்கியத்துடன் இணைக்கிறார்.–குறைந்தது ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர்- அது உலோகங்களை இயற்கை மாற்றம் செய்யும் முயற்சிகளுடன் இணைக்கப்பட்டது எனக் கருத இடம் இருக்கிறது. ஆனால் இந்திய மரபில் ரசவாதம் சித்தர்களால் அக மாற்றத்தின் குறியீடாகவே மாற்றப்பட்டது.


ரசவாதம் செய்வது, மர்ம வழிபாடு, அமானுஷ்யங்களை அறிய நினைப்பது இவை யாவும் மனிதனின் மதியை மழுங்கடிக்கக்கூடியது ஏனென்றால் அப்படி எதுவுமே இல்லை...இல்லாத ஒன்றை இருக்கு என்பதாக நம்பி அதனை அடைய தேடித்திரிவது ஷைத்தானின் செயல் என்பது நபிகளாரின் பொன்மொழி.


3. சூபியசத்தின் தோற்றுவிப்பாளர் யார் ?
***********************************


சூபியிசம் என்பது எங்கு யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்ற தகவல்கள் பெரிய பெரிய சூபி ஞானிகளால் கூட கூற இயலவில்லை...குறைந்தபட்சம் இதையாவது அறிந்துகொள்ள சூபிகள் தங்களது தவ வலிமையினால் முயற்சித்திருக்கலாம்.


ஆனால் சூபியச கோட்பாடுகளைப்பற்றி தகவல்கள் பகிர்ந்த ---அல் ரவ்சான் அலி சூபி கூறுகிறார்... சூபியிசம் என்பது நபி ரசூலுல்லாஹ் அவர்களுக்கு முன்பாகவே அராபிய தேசத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்ததாம், நபியின் பிறப்பிற்கு பன்னெடுங்காலத்திற்கு முன்பிருந்தே அரபு தேசத்தில் சிலை வணக்கத்தில் ஈடுபடாத ஓரிறையையும் முந்தைய கொண்ட ஒரு மதக்கோட்பாடு இருந்ததாம், அது பின்னாளில் ரசூலுல்லாஹ் அவர்களது போதனைகளுக்கு ஒப்பாக இருந்தமையால் அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை தழுவினார்களாம்...! சரி இது இப்படியே இருக்கட்டும்... இவர்களுடைய முந்தைய மதம் இஸ்லாத்தை மெய்ப்பிக்கிறது, ( இதற்கான எழுத்துப்பூர்வ சான்றுகள் என எதுவும் இல்லை ) யூத- கிறிஸ்தவர்களுக்கும் இது பொருந்தும், அரபு தேசத்து சிலை வணங்கிகளான பேகன் மதம் சார்ந்தவர்களை தவிர்த்து...பின்னாளில் ஜாஹிலியா காலத்து பேகன்களும் இஸ்லாத்தை தழுவி சிலை வணக்கத்தை கைவிட்டனர். நபியை ஏற்ற சூபிக்கள் நபியவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் இணைந்த பிறகு அவர்களது முற்காலத்திய பழக்கங்களை கைவிடுவது தானே முறை , சூபிக்கள் ஏன் கைவிடவில்லை. அல்லது நபிகளாரின் இறுதி ஹஜ்ஜிற்கு பிறகு மார்க்கம் முழுமையடைந்துவிட்டதை அளிவித்த பிறகும் மார்க்கம் என்ற பெயரால் ஒன்றை செய்யவும் பிறருக்கு கற்றுத்தரவும் இவர்கள் யார் ?


4. சூபியிசம் என்கிற வார்த்தை கூட அரபு அகராதியில் 9-10 ம் நூற்றாண்டு வரை காணப்படவில்லை... அதற்கு பிறகே சூபியிசம் தோன்றியிருக்க வேண்டும் ஏனெனில் நபிகளாரின் காலத்தில் இஸ்லாத்தின் பெயரால் சூபியிசம் தோன்றியிருக்குமானால் அதனை அவர்களே அழித்து ஒழித்திருப்பார்கள்... நபி ஈசா இறப்பிற்கு பின் இருநூறு ஆண்டுகளுக்கு பின் தான் கிறிஸ்தவம் உருவெடுக்கிறது...அதுபோலவே இறைத்தூதர் இறந்து இரண்டு நூற்றாண்டூகளுக்குப் பின்னரே சூபியிசம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.


5. இஸ்லாமிய அறிஞர்கள் குர்ஆனை கற்றுணர்ந்து அதிலுள்ள மறைவசனங்களை ஆய்வு செய்து விண்ணியல் சாஸ்திரம், எண்ணியல் சாஸ்திரம், பொருளாதார கோட்பாடுகள், வரலாற்றில் அதற்கு முன் காணாத நபிமார்களின் வாழ்விடங்கள், அறிவியல் சம்பந்தமான கண்டுபிடிப்புகள் , ரசாயன தனிமங்கள் , தாவரவியல், குடும்பவியல்,மனோதத்துவியல்,மருத்துவ சாதனையான எலும்பு அறுவை சிகிச்சை முறை ஆகியவற்றை தேடித்தேடி கண்டுபிடித்து குறிப்பெழுதி வைத்திருந்தனர், அவை பின்னாளில் ஐரோப்பாவிற்கு கடத்தப்பட்டது, அதுவரை இருண்ட கண்டமாய் கிடந்த ஐரோப்பா விழித்தெழுந்தது, இன்றுவரை ஜெர்மன் பல்கலைக்கழகங்களிலும் மியூசியங்களிலும் இஸ்லாமிய அறிஞர்கள் அரபு மொழியில் இயற்றி வைத்த குறிப்புகளையே பாதுகாத்து மொழிப்பெயர்த்து பயன்படுத்தி வருகிறார்கள்.


இஸ்லாமிய அறிஞர்கள் , ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் அனைவருமே ஒட்டுமொத்தமாக சூபியிசத்தை கடைபிடித்து மறைஞானம் பெற்றவர்கள் என சூபியாக்கள் பொத்தாம்பொதுவாக சொல்லித்திரிவது குழந்தையின் பிதற்றல்.


கபலா மதத்தின் தழுவல் :-
*************************


கபலா மதம் என்கிற ஒன்றை நாம் இதுவரை அதிகம் கேள்விப்பட்டிருக்கமாட்டோம், காரணம் அது பண்டைய யூதர்களால் கடைபிடிக்கப்பட்ட ஒரு மர்ம மதமாகும், கபலா யாரால் தோற்றுவிக்கப்பட்டது என யூதரால் கூட அனுமானித்து கூற முடியாது ஏனென்றால் அது நபி இபுராகிம் காலந்தொட்டு வழிவழியாய் அமானுஷ்ய சக்திகளை அடைய சில யூதர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது...இதற்கான சான்றுகளை தேடி எடுப்பது கடினம் காரணம் வரலாறு எழுதப்பட்ட காலம் என்பது கி.மு.2-3 காலத்திற்கான நிகழ்வுகள் தான், கபலா கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக அவர்களால் கருதப்படுகிறது.


நபி இபுராஹிமின் வேதமாக கபலாக்கள் கூறுவது ' சுஹுஃப் ' என்கிற வேதச்சுருள்களைத் தான், அதனை அவர்கள் பாதுகாப்பதாக கூறுகிறார்கள், இதை வைத்தே கபலாக்களின் காலம் கணிக்கப்படுகிறது. பிறகு நபி தாவூதின் ஜபூரையும் அவர்கள் பாதுகாப்பதாகவும் ஜபூரிலிருந்து ஸஹூர் என்கிற ஆன்மீகச்சட்டங்கள் தங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் வேதம் கொடூக்கப்பட்டோரில் கபலாக்கள் தனித்துவம் பெற்று விளங்குவதாக நம்புகிறார்கள்.


கபாலாக்கள் பற்றிய மேலதிக தகவல்களை ஆல்பத்தில் காண்க:


சூபிய ஞானிகள் செய்யும் சக்திவாய்ந்த தபஸ்களால் அவர்களுக்கு கிடக்கும் பலன்கள்:-
*********************************************


1. Sairulillalah - விண்வெளியின் பயணம் செய்து அண்ட ரகசியங்களை அறிவது


2. Fanafillah - தேகத்தோடு இருந்த இடத்திலிருந்து மறந்து போவது, கூடுவிட்டு கூடு பாய்வது


3. Sairminnallah - மீண்டும் தம் சரீரத்திற்கே திரும்புவது


4. Baqabillah - இது செய்வதன் மூலம் இறைவன் இவர்களை மக்களின் வழிகாட்டியாக தேர்ந்தெடுக்கிறானாம்..


நபிபெருமானாரோடு நுபுத்துவம் பூரணமடைந்துவிட்டது எனும் போது சூபி ஞானிகளை மக்கள் வழிகாட்டியாக தேர்ந்தெடுப்பானா...?


சூபியாக்களின் தியான முறைகளில் வலிமையானவைகளாக


1. Tasawwur e sheik - ஷேய்காகிய குருவிடமிருந்து கல்வி ஞானம் மாணவருக்கு டிரான்ஸ்பார்ம் ஆவது


2. Tasawwur e rasool - ரசூலுல்லாஹ் பெற்ற ஞானத்தில் சிறிது பெருவது


3. Tasawwur ezat ellahi - இறைவனிடமிருந்தே ஞானத்தை நேரடியாக பெறுவது


4. Martabe e ehsan - இறுதியாக பூரணத்துவம் பெற்ற மகா மேதையாக, பேரரறிவாளனாக மாறுவது ( Enlightened Man )


அதாவது அல்லாஹ் ரசூலுக்கு அடுத்து சூபி குருவிற்கு அடிபணியுங்கள் என்பதே இதன் தத்துவம்.


உண்மையில் தவம் செய்வதால் மேற்கூறிய விட்டாலாச்சாரிய பட எபக்டுகளை பெற முடியுமா...என்பது எனக்கு தெரியாது ? ஆனால் அறிவியல் மற்றும் மனோத்தத்துவ ரீதியாகவும் எனது சுயபரிசோதனை முயற்சியாலும் சில அனுகூலங்களை அடையமுடியும் என்பதனை என்னால் உறுதியாக கூற இயலும்


1. தியானம் செய்வதால் மனோபலம் கூடும், மன அமைதி பெருகும் அதுவும் தற்காலிகமாக


2. ஞாபசக்தி பெருகும் , கண்ணைத்திறந்துகொண்டு ஒன்றை மனப்பாடம் செய்வதை விட கண்களை மூடிய நிலையில் கருத்தை ஓரிடத்தில் நிறுத்தி மனப்பாடம் செய்தால் அதி சீக்கிரத்திலும் அதே சமயம் எளிதில் மறக்காத வகையிலும் நம் மனதில் விஷயங்கள் பதியும். கண்களால் காட்சிகளை கண்டுகொண்டே ஒரு விஷயத்தை நம் மனதில் ஆழ பதிய வைக்க இயலாது காரணம் அந்த காட்சி நம் மனனத்தை தடங்கல் செய்யும் ஆனால் நபிகளார் , தொழும்போது கண்களை மூடக்கூடாது என கட்டளையிட்டுள்ளார்கள் என்பதனை கவனத்தில் கொண்டு, திக்ரு வேறு வணக்கம் வேறு என உணருக.


நமது உடலிலும் உடலைச்சுற்றியும் அணுக்களும் எலக்ட்ரோ மேக்னடிக் பார்டிகிள்ஸ் எனப்படும் மின்காந்த துகள்களும் சுற்றிக்கொண்டே இருக்கும் , ( முழு வளர்ச்சி பெற்ற ஒரு மனித உடல் என்பது 700,000,000,000,000,000 கோடி அணுக்களால் ஆனது ) அந்த அணுக்களும் துகள்களும் நாம் ஓரிடத்தில் இருந்து சுவாசிக்கும் பொழுது ஒன்று திரட்டப்பட்டு உடலிற்கு உத்வேக சக்தியை காந்தசுழற்சி மூலம் வழங்கிக்கொண்டிருக்கும், இது உடலில் இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்குவதால் புது தெம்பு கிடைக்கும்


அதுபோல காற்று நிதானமாக உள்ளிழுத்து வெளியிடப்படும் போது மூளையிலும் நுரையீரலிலும் புதிய காற்றைகள் உருவாகும், மூளையில் தேவையற்ற ஞாபகங்கள் அழிக்கப்பட்டு புதிய தகவல்களை சேகரிக்க அறைகள் உருவாகும் இதனால் ஞாபக சக்தி மேம்படும், ஆனால் இதுவும் தற்காலிகமே


3. நம்மை விட மனம் பலஹீனமானவர்களை நமது அறிவுரையை கேட்கச்செய்ய இயலும் , மனோவசியம் எனப்படூம் ஹிப்னாடிசம் இம்முறையில் தான் செயல்முறைப்படுத்தப்படூகிறது. இதையே யூதர்கள் நபி தாவூது காலத்தில் ஹாலூத் மாருத் ஆகிய இரு வானவர்கள் தங்களூக்கு கற்பித்த சூனியக்கலையாக நம்புகின்றனர், ஹாலூத் மாருத் வானவர்களும் அல்ல அவர்கள் சூனியத்தை மக்களுக்கு கற்பிக்கவும் அல்ல, அங்கு இருந்த இரு மனித ஷைத்தான்கள் மக்களை ஏமாற்ற இந்த வகை வசியத்தை கையாண்டனர் என்றே குர்ஆன் வசனமும் அதனை தழுவிய நபிகளாரின் ஹதீசும் நமக்கு போதிக்கிறது..மனவசியத்தால் அதிகபட்சமாக கணவன்- மனைவி இருவரின் உறவில் பிரிவை ஏற்படுத்த முடியும் அவ்வளவே... மனவசியத்தில் சுயநிலை இழப்போர் யாரெனில் அதிக பயம் உள்றவர்களும், அடுத்தவர் மீது அபநம்பிக்கை கொண்டவர்களும், தன்னம்பிக்கை இல்லாதவர்களுமே ஆவர். சிஹ்ர் என்பது இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டதும் இணைவைப்பிற்குறிய தண்டனை பெற்றதுமாகும்.


பெரும்பாலும் தரீக்கா குருமார்களிடம் அடிமைகளாய் கிடக்கும் மாணவர்கள் தன்னம்பிக்கை அற்றவர்களாகவே இருப்பார்கள், இஸ்லாம் கற்றுத்தரும் சுயசிந்தனை, தன்மானம் ஆகியவற்றை கடைபிடிப்போர் ஷெய்குகளை தேடி போவதில்லை.


4. தியானம் செய்வோரிடம் ஒரு தீர்க்கமான சிந்தனை தெளிவு இருக்கும் அதனை கொண்டு அடுத்து வரும் சூழலை ஓரளவிற்கு தோராயமாக எடைபோட்டு சொல்ல முடியும், அதுபோல face reading, mind reading என எதிர் உள்ளவர் எண்ண ஓட்டத்தையும் அவர்களது முகபாவணையை வைத்து தோராயமாக கணிக்க முடியும். ஜோசியர்கள், குறுசொல்பவர்கள் தியானம் செய்யாமலேயே இதை சொல்வார்கள் காரணம் இதே வேலையாக இருந்து பிறரின் முகத்தை பார்த்து அறிந்து பழகி விடுவார்கள். இதை தான் அவர்கள் நாங்கள் கூடுவிட்டு கூடு பாய்ந்து உங்கள் மனதை அறிகிறோம் என்பார்கள்.


இது தவிர தியானத்தால் விண்ணில் நடப்பது, கூடு பாய்வது, இதல்லாம் யாராலும் எந்த காலத்திலும் முடியாத காரியம்.


இதனை யூத சதி என கூறக்காரணம் ?
*********************************


நபி ஈசா இறந்து இருநூறு ஆண்டுகளுக்கு பின்னும் அவரை தீவிரமாக பின்பற்றியவர்களை தங்கள் இனத்திலிருந்து கழற்றிவிட யூதன் செய்த சதியே கிறிஸ்தவம், அதுபோலவே நபிபெருமானார் இறந்து இருநூறு ஆண்டுகளுக்கு பின்னும் இஸ்லாத்தின் கட்டுக்கோப்பும் இஸ்லாமியர்களின் கட்டுப்பாடும் யூதனை உறுத்தியது...நம்மிலிருந்து பிரிந்து சென்றவர்களை நாம் வழிகெடுக்க வேண்டும் என்பதே அவர்களது குறிகோள்.


( நபிகளார் பிறப்பிற்கு முன்னரே அரபு தேசத்தில் சிலை வணங்குவோர் மத்தியில் ஓரிறையை ஏற்ற யூதர்களும் வாழ்ந்தார்கள், இஸ்லாம் என்பது புதிய மதமல்ல, அது இதற்கு முன்னரே இருந்த மதத்தில் தோன்றிய அனாச்சாரங்களை ஒழித்து முன்னரே கடைபிடித்த சட்டங்களை புதுப்பிக்க வந்த மார்க்கம் என்றே நபிபெருமானார் கூறினார்கள், இஸ்லாம் என்றால் வழிதவறி பிறமத கோட்பாடுகளை தழுவி மக்களை வழிகெடுத்த பழைய மதத்தில் இருந்து உண்டான ஒரு அமைதி வழி. அது மக்களை ஓரிறையை நோக்கி அழைக்கும் வழி அதுவே தவ்ஹீது எனப்படும் . , )


யூதர்கள் ஏகத்துவத்தை உடைக்க செய்த சதிகள் :-
**************************************


1. சிலுவைப்போர்கள் மூலம் மதத்தின் பெயரால் நாடு பிடிக்க முயற்சி செய்து, இஸ்லாமிய கிலாபத்தை ஒழித்தது.


2. உலகப்போர்கள் மூலம் மக்களை அச்சுறுத்தி கூட்டமைப்பு நாடுகளை உடைத்து , நாடுகளுக்கு பாதுகாப்புக் கொள்கைகள் என்ற பெயரில் தனித்தனி பாஸ்போர்ட், விசா முறையை அறிமுகப்படுத்தி நாடுகளின் நட்பை முறித்து தனிமைப்படுத்தியது.


3. எல்லா மதங்களுக்கும் தலைமையிடமாக அமைந்த ஒரு இடம் இருக்கும் ஆனால் ஏகத்துவம் தோன்றி 1400 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை ஒரு தலைமையிடம் உருவாகாதவாறு மிகக்கவனமாக பார்த்துக்கொண்டுள்ளனர்.


4. புனித ஹரம்சரீப் அமைந்திருக்கும் மக்கா மாநகரை ஏன் நாம முஸ்லிம்கள் தலைமையிடமாக ஏற்கவில்லை? காரணம் சவூதி அரசு மதினாவில் ரசூலுல்லாஹ் அவர்களின் கல்லறையை அமைத்து பாதுகாத்து வருவதால்... பல நாடுகளைச் சேர்ந்த வஹாபிகளில் பலருக்கும் இதில் விருப்பமில்லை... கல்லறைக்கு ஜியாரத் செய்யலாமேயொழிய அடையாளமாக நடுகல் கூட நடக்கூடாது,மேல்பூச்சும் பூசக்கூடாது. இருந்தும் அவர்கள் கட்டிவைத்திருக்கிறார்கள்...


5. அதுபோல சுற்றி உள்ள நாடுகளின் இஸ்லாமிய மக்கள் போர்களால் அழித்தொழிக்கப்படும் போதும் கூட சவூதி அரசு தமது கண்களை இறுக மூடிக்கொள்கிறது, கேட்டால் அடுத்த நாடுகளின் இறையாண்மையில் தலையிடக்கூடாதென்பது .நா பாதுகாப்பு கவுன்சிலின் ஆர்டர் என்பார்கள்..! உடன் வாழும் மூஹ்மினின் உயிரும், மானமும் முக்கியமல்ல உங்களது இறையாண்மை மீறல் தடைச்சட்டம் தான் முக்கியம்..? இந்த மாதிரியான சட்டம் இந்திய , இலங்கை போன்ற பன்முக மதங்களும் கலாச்சாரங்களுக்கும் வேண்டுமாயின் செல்லும், ஆனால் இஸ்லாத்தை தமது நாட்டின் மதமாக சரீயத்தை கொள்கைகளாக கொண்ட நாடுகளுக்கு இதே எதற்கு? ஆக யூதனின் வலையில் எலிகளாக சவூதியும் மற்ற வளம்கொழிக்கும் நாடுகளும்.


6. இந்த கேள்விகளை இன்று பலர் கேட்க ஆரம்பித்த பின்னர் இதோ உங்கள் இஸ்லாமிய தலைமை என சிரியாவில் IS என்கிற போலி கிலாபத்தை உருவாக்கி தேடித்தேடி முஸ்லிம் நாடுகளாக கண்டுபிடித்து தாக்குதல் நடத்தி முடிந்தவரை முஸ்லிம் இனப்பெருக்கத்தை ஒழித்துவரும் அந்த பயங்கரவாத யூத பின்புலம் கொண்ட இயக்கத்தை இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து .இதுவரை IS மீது போர் தொடுத்து அவர்களது அட்டூழியத்தை ஒழிக்காதது ஏன்?


இது அனைத்துமே நமது மனங்களிலிருந்து மழுங்கடிக்கப்படுவதற்காகவே மதம் என்கிற போதையில் நம்மை அமிழ்த்து வைத்திருக்கிறார்கள் யூதர்கள், அதற்கு பெரிதும் துணைபுரிவதே இந்த சூபியிசம் தான்.. மதம் என்பது ஒழுக்கமாக வாழும் நெறி என்பதனை மறந்து , மாற்றுக்கருத்துடையவனை கொல்லும் வெறியாக நம்மிடம் பரப்பிவிடவே சூபியிசம் உதவுகிறது.


ஒவ்வொரு தரீக்காவிற்கும் ஒவ்வொரு தலைவர், ஒவ்வொரு தலைவருக்கும் ஒவ்வொரு புராணம் , குர்ஆன் ஆயத்துக்கள் ஓதப்படவேண்டிய சபைகளில் மதுஹபு குப்பைகளை ஓதுவது அதனை மதிக்காமல் போவோரை கொலைவெறி தாக்குதல் செய்வது... நமக்கு தெரிந்து காதிரியா தரீக்காவாதிகள் தர்பூசணிப்பழம் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? நமது ரசூலுல்லாஹ் தர்பூசணிப்பழம் சாப்பிட்டதே இல்லை...இது ஒரு ஆதாரமாங்க...!?


7. இது எல்லாம் போக இறுதியாக இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறும் சூபியிச ஆட்டங்களையும் அட்டூழியங்களையும் எதிர்த்து பத்வா கொடுக்க இன்றுவரை முன்வராதது- இதிலிருந்தே தெரிகிறது சூபித்துவம் திட்டமிட்ட அரங்கேற்றம் என.


இந்திய- பாகிஸ்தான் சூபியிசமும் துருக்கி-இரானிய சூபியிசமும் வேறு வேறு :-


இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் அரங்கேறும் சூபியிச கேவலங்கள் துருக்கி , இரான் நாடுகளில் அரங்கேறுவதில்லை...இங்கே இவர்கள் மாணவர்களுக்கு ஏழு வருடம் படிப்பிப்பதெல்லாம் குர்ஆனோடு மதுஹபு சட்டங்களும், சூபிய ஞானிகளின் வாழ்க்கை முறைகளும் சூபி குருவிற்கு அடிமையாக இருப்பதற்கும் தான், தவ்ஹீது இல்லாத தஷஹுத், தன்மானமில்லாத தப்லீக், ஒழுக்கம் கற்பிக்காத சுன்னத், தொழுகைக்கு நிகராக ஷிர்க் ஆகியவை தான்


ஆனால் அங்கு வளரும் சூபிக்கள் உலக கல்வியும் மார்க்க கல்வியும் இணைந்தே கற்பிக்கப்படுகிறது... விபச்சார சம்பந்தமான சினிமாத்துறை ஆடல் பாடல் அல்லாது இஸ்லாமிய இசை கற்பிக்கப்படுகிறது,இதில் அவர்களது தத்துவம் இசை , கவிதை ஆகியவை திக்ரை மனதில் பதியவைக்கும் என்பதே...


ஆனால் ஜலாலுதீன் ரூமி அவர்களின் பாரசீக கவிதைகளும் பாடல்களும் இந்திய சினிமாத்துறையினருக்கு பெரிதும் உதவுகிறது என்றால் மிகையாகாது காரணம் அக்பர் அரசவைக்கவிஞனான தான்சேன் தொட்டு இன்றைய நமது தமிழ் சினிமா பாடலாசிரியர்கள் வரை உருதுவில் அமீர்குஸ்ருவும் , உமர் கய்யாமும் மொழிப்பெயர்த்த ரூமியின் காதல் கவிதைகளை பயின்றுவந்தவர்களே..! ரூமியின் கவிதைகள் கல்லையும் கவி பாட வைக்கும் மந்திரம் பெற்றது, அது அல்லாஹ் அவருக்கு கொடுத்த அருட்கொடையாய் இருக்கலாம், ஆனால் மேலதிக கற்பனையும் கவிதையும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது.


ஆகவே சூபியிசம் கலாச்சாரத்திற்கும் பழக்கவழக்கங்களுக்கும் ஏற்ப நாட்டிற்கு நாடு தனித்தனியாக தன்னை தகவமைத்துக்கொண்டுள்ளது... வணக்க வழிபாடுகளில் ஊடுறுவாத வரை சூபியிசத்தை நாமும் எதிர்க்கவில்லை ஆனால் எப்போது நாங்களும் அல்லாஹ்வை வணங்கி ரசூலுக்கு வழிபடுகிறோம் என்கிற கான்சப்ட்டில் புதிய முறையிலான வணங்க முறைகளையும் இஸ்லாம் ஹராமாக்கி வைத்தவற்றின் புனர் பரிணாமங்களோடு மார்க்கத்தை கெடுக்க வருமோ அப்போது அது இஸ்லாத்திலிருந்து வெளியேறிய செயலாகவே கருதப்படும். முனாபிக்குகள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள்இத்துடன் சூபியிச கட்டுரை முடிவடைகிறது....

No comments:

Post a Comment