பக்கங்கள் செல்ல
1.மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்
2.அர்த்தமுள்ள கேள்விகள், அறிவு பூர்வமான பதில்கள்!
3.பறையோசை வேர்ட்பிரஸ்-ஆரம்பத்தை நோக்கி தொடருக்கான எதிர் தொடர்
4.உடைந்த சிலுவை
5.உயிர் ஓர் ஆய்வு
6.பரிணாமம் : உண்மையா ஊகமா
7.பரிணாமம் (பல எழுத்தாளர்கள்)
8.இஸ்லாமும் பால்யவிவாகமும்
9.குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கபட்டுள்ளது
10.புதிய ஏற்பாடும் குறைவில்லா குளறுபடிகளும்
1.உடைந்த சிலுவை-பாகம் 1:அறிமுகம்
2.உடைந்த சிலுவை-பாகம் 2: பழைய ஏற்பாடும் கிரேக்க செப்டகணும்
3.உடைந்த சிலுவை-பாகம் 3: பைபிலின் மூலங்கள் ஒரு பார்வை
4.உடைந்த சிலுவை-பாகம் 4: பழைய ஏற்பாடு ஆகமங்களின் எழுத்தரகள்
5.உடைந்த சிலுவை-பாகம் 5: புதிய ஏற்பாடு: ஒர் அறிமுகம்
6.உடைந்த சிலுவை-பாகம் 6: புதிய ஏற்பாடு ஆகமங்களின் எண்ணிக்கை
7.உடைந்த சிலுவை-பாகம் 7: மாற்கு சுவிஷேசம்
8.உடைந்த சிலுவை-பாகம் 8: மார் ஷபா கடிதம்
9.உடைந்த சிலுவை-பாகம் 9: ஏக இறைவனுக்கு வழிபட்ட முதலாம் நூற்றாண்டு முஸ்லிம்கள்
10.உடைந்த சிலுவை-பாகம் 10: போந்தியு பிலாத்தும் இரண்டு ஏசுவும் !!!!!!!!
11.உடைந்த சிலுவை-பாகம் 11: பழைய ஏடுகளில் ஏசுவின் சிலுவை மரணம் மறுக்கப்பட்டதா?
12.உடைந்த சிலுவை-பாகம் 12: கிறித்தவமும் பேய்வணக்கமும்
13.உடைந்த சிலுவை-பாகம் 13: இஸ்லாம் கூறும் யூத கிறித்தவ வேதம்
14.உடைந்த சிலுவை-பாகம் 14: மெசோரெடிக் ஏடுகளும் பழைய ஏற்பாடும்
15.உடைந்த சிலுவை-பாகம் 15: மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள புதிய ஏற்பாடு மூல கையெழுத்து பிரதிகள்
16.இஸ்லாமிய ஆவணங்கள் கூறும் இன்ஜீல்
17.புதிய ஏற்பாட்டின் மொழி குழப்பமும் அது ஏற்படுத்தும் சிக்கலும்
18.ஒத்தமை நற்செய்தி நூல்களும் அது குறித்த அனுமானக் குழப்பங்களும்
19.நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்
20.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மத்தேயுவின் படியான சுவிஷேசம்
21.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மாற்கின் படியான சுவிஷேசம்
22.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- லூக்காவின் படியான சுவிஷேசம்
23.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யோவானின் படியான சுவிஷேசம்
24.கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்
25.திருச்சபை பிதாக்களின் மேற்கோள்களும் காணாமல் போன தேவ வாக்குகளும்
26.பவுலின் கடிதங்களின் தொகுப்பும் குழப்பமும்
27.பவுலிய கடித தொகுப்பு குறித்த அனுமானமும் அது பலிதீர்த்த பவுலும்
28.பவுலிய கடிதங்களும் இடைச்செருகல்களும்
29.சர்ச்சைக்குரிய பவுலிய கடிதங்கள்
30.கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யாக்கோபின் நிருபம்
31.யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்
32.யாக்கோபின் நிருபமும் சிக்கலை உருவாக்கும் அதன் கிரேக்கமும்
cross tab2
1. ஹிஜ்ரி முதலாம் -இரண்டாம் நூற்றாண்டு அல் குர்ஆன் எழுத்துபிரதிகள்
2. உள்ளத்தில் பாதுக்காக்கப்பட்ட அல் குர்ஆன்
3.பெரும்பான்மை மக்களின் ஓதலும் உஸ்மான்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பும்
4.குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத் பின் ஸாபித்(ரலி)
5.ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுக்க தகுதியற்றவரா?
6.உஸ்மான்(ரலி) அரசாணையும் இப்னு மஸ்ஊத்(ரலி) எதிர்ப்பும் ஏற்பும்
7. ஏழு அஹ்ரூஃபும் ஏழு கிராத்தும்
8.நபி(சல்) அவர்களிடமிருந்து வந்த கிராத்கள்
9.அல் பராஅத் சூராவிற்கு நிகரான சூரா குர்ஆனில் காணவில்லையா?
10. அபூதர்தா(ரலி) அல் லைல் சூராவை (அல் குர்ஆன் 92:3) மாற்றி ஓதினார்களா???
11. நபித்தோழர்கள் இன்றைய குர்ஆனிற்கு மாற்றமாக ஓதினார்களா??!!!!!!!!
12. அல் குர்ஆனில் எழுத்தர் பிழைகளா?
13. கல்லெறி தண்டனை குர்ஆனில் காணவில்லையா???
14. பால்குடி வசனம் குர்ஆனில் காணவில்லையா???
15.இப்னு மஸ்வூத்(ரலி)யும் அவர்களது ஓதலும்
16.அல் ஃபாத்திஹா மற்றும் அல் முஅவ்விததைன் சூராக்கள் குர்ஆனின் பகுதிகளா?
17.உபை இப்னு கஅப்(ரலி)யும் அவர்களது ஓதலும்
18. உபை இப்னு கஅப்(ரலி) முஸ்ஹஃப்பில் அல்ஹஃப்த் மற்றும் அல்ஃஹலா ஸுராக்கள்
19.யமாமா யுத்தத்தில் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டதா???
20. இப்னு உமர்(ரலி) குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று கூறினார்களா??
21.அல்குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று ஹதீஸ்கள் கூறுகிறதா??
22. சமர்கண்ட் எழுத்துப்பிரதியும் இஸ்லாமோஃபோபுகளும்
23.ஆர்தர் ஜெஃப்ரி “ Materials for the History of the Text of the Qur'ān” நூல் ஆய்வு - பாகம் 1
24.முரண்பாட்டின் மொத்த உருவம் ஆர்தர் ஜெஃப்ரி
25.அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) மட்டும்தான் சாட்சியா???
Monday, April 13, 2015
நீங்கள் நல்லவரா கெட்டவரா ? குர்ஆன் விடை சொல்கிறது.
இறைவன் மட்டுமே என் எண்ணங்களை தீர்மானிப்பவன் , நான் நல்லவனா கெட்டவனா என்பதை நீ சொல்ல தேவை இல்லை, இறைவன் பார்த்து கொள்வான் என்று நம்மில் பலர் அடிக்கடி இந்த வசனங்களை சொல்ல கேட்டிருப்போம் அல்லது சொல்லி இருப்போம்.
அப்படியானால் ஒருவர் நல்லவரா கெட்டவரா என்று எப்படி தீர்மானிப்பது ? இது நாயகன் என்ற படத்தில் வருவது போல விடை தெரியாத கேள்வியா ?
ஒரு மனிதரின் பெரும்பாலான செயல்கள் நமக்கு வெளிப்படையாக தெரியும்.அவற்றிலிருந்து நாம் அவரை குரான் சொல்லும் 5 வகை மனிதர்களில் ஒருவராக அவரை யூகித்து கொள்ளலாம். முக்கியமாக நாம் எந்த வகை என்பதை தீர்மானித்து அதற்கேற்றவாறு நம்மை தயார் படுத்தி கொள்ளலாம்.
குர்ஆனில் 5 வகை மனிதர்களை குறித்து சொல்லபடுகிறது,
முஸ்லிம் - ஒரு இறைவனை நம்பி அவனுக்கு கீழ்படிபவர்.
இந்த வகை மனிதர்கள் இறைவன் ஒருவனே என்று மொழிந்து அவனது கட்டளைகளை நிறைவேற்ற முயற்சித்து கொண்டிருப்பவர்கள்.
27:44 இம்மாளிகையில் நுழைவாயாக!' என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்ட போது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். 'அது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை' என்று அவள் கூறினாள். 'நான் எனக்கே தீங்கு இழைத்து விட்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு விட்டேன்' என்று அவள் கூறினாள்
49:14 'நம்பிக்கை கொண்டோம்' என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். 'நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக கட்டுப்பட்டோம்' என்று கூறுங்கள்' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக் கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப் பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
46:13-14 எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பின்னர் உறுதியாகவும் நின்றோருக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குக் கூலி.
39:11-12 வணக்கத்தை உளத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை நான் வணங்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டுள் ளேன்; முஸ்லிம்களில் முதலாமவனாக நான் ஆக வேண்டுமெனவும் கட்டளை யிடப்பட்டுள்ளேன்' எனக் கூறுவீராக!
முமீன் - நம்பிக்கையில் ஒரு படி மேலே சென்று முற்றிலுமாக இறைவனுக்ககவே தனது செயல்களை செய்பவர். அதற்காகவே தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்பவர்.
49:15 அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோரே நம்பிக்கை கொண்ட வர்கள். அவர்களே உண்மையாளர்கள்.
23 :1-6 நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்., (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர , தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.
முஸ்லிம் - ஒரு இறைவனை ஏற்றுக்கொள்வது, நல்லமல்களை செய்வது. முமீன் அதற்க்கும் மேலாக தியாகங்களை செய்பவர்.
இதன் பலனாக அவர்கள் உயர்ந்த சொர்க்கத்தில் நபிமார்களுடனும், சஹீதுகளுடனும் இருப்பார்கள்.
56 :7-16 நீங்கள் மூன்று பிரிவினராக ஆவீர்கள்.(முதல் வகையினர்) வலப்புறத்தி லிருப்போர். வலப்புறத்தில் இருப்போர் என்றால் என்ன?(இரண்டாம் வகையினர்) இடது புறத்தில் இருப்பவர்கள். இடது புறத்தில் இருப்போர் என்றால் என்ன?(மூன்றாவது வகையினர்) முந்தியோர். (தகுதியிலும்) முந்தியோரே.அவர்களே (இறைவனுக்கு) நெருக்கமானோர்.இன்பமான சொர்க்கச் சோலை களில் இருப்பார்கள்.முதல் வகையினரில் (வலப் புறத்தார்) ஒரு தொகையினரும், கடைசி வகையினரில் சிறு தொகையினரும் அலங்க ரிக்கப்பட்ட கட்டில்களில் இருப்பார்கள்.
முஷ்ரிக் - இறைவனை நம்புவார்கள் அதே சமயம் இறைவனிடம் நெருங்கலாம் என்று சிபாரிசிர்க்காக நல்லடியார்களை அழைத்து அதில் இறைவனுக்கு இணை வைத்து விடுபவர்.
12:106 அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.
39:3 கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' 213 (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
6 : 21-24 அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.
அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் 'நீங்கள் கற்பனை செய்த உங்கள் தெய்வங்கள் எங்கே?' என்று இணை கற்பித்தோரிடம் கேட்போம்.
'எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் இணை கற்பித்தோராக இருக்கவில்லை' என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களின் பதிலாக இருக்காது.
தமக்கெதிராக அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் கற்பனை செய்த யாவும் அவர்களை விட்டு மறைந்து போகும்.
40:12 அல்லாஹ் மட்டும் பிரார்த்திக்கப் பட்டால் மறுத்தீர்கள்; அவனுக்கு இணை கற்பிக்கப்பட்டால் அதை நம்பினீர்கள்' என்பதே இதற்குக் காரணம். உயர்ந்த வனும், பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே அதிகாரம் உரியது.
4:48 தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
5:72 "மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர்.! 454 "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் கூறினார்.
காபிர் - இறைவனை நம்பாமல் போவது அல்லது நம்ப வேண்டிய விதத்தில் நம்பாமல் மனம் போன போக்கில் நம்புவது.
துரதிஷ்டவசமாக இந்த வகை மனிதர்கள் தான் பெரும்பான்மையினர்.
12:103 நீர் பேராசைப் பட்டாலும் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.
இவர்கள் இறைவனின் வேதம், தூதர்கள் என்று எதனையும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
18:105 அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் 1 அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம்.
5:73 "மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன்'' என்று கூறியோர் (ஏகஇறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர்.! 459 ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாரு மில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏக இறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்.
29:47 இவ்வாறே உமக்கு இவ்வேதத்தை அருளினோம். நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இதை நம்புகின்றனர். (வேதம் கொடுக்கப்படாத) இவர்க ளிலும் இதை நம்புவோர் உள்ளனர். (நம்மை) மறுப்போரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை நிராகரிப்பதில்லை.
அவர்களின் நிலை கவலைகிடமானது. ஏனெனில் அவர்களுக்கு இறைவன் எந்த மாதிரி வாக்குறுதி அளிக்கிறான் என்று பாருங்கள்,
33:64 (ஏக இறைவனை) மறுப்போரை அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களுக்கு நரகத்தையும் தயாரித்துள்ளான்.
முனாபிக் - நம்பிக்கையாளர் போல் வேடமிட்டு நம்பிக்கையாலரிடமும், நம்பாதவர்கள் போல் காபிர்களிடமும் மாறி மாறி இடத்திருக்கு தகுந்தாற் போல் நடிப்பவர்.
4-145 நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காண மாட்டீர்.
4:88- 89 நயவஞ்சகர்கள் பற்றி (முடிவு செய்வதில்) இரண்டு கூட்டத்தினராக ஏன் ஆகி விட்டீர்கள்? அவர்கள் செய்தவற்றின் காரணமாக அல்லாஹ் வீழ்த்தி விட்டான். அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர் வழி காட்ட நாடுகிறீர்களா? அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு எந்த வழியையும் நீர் காண மாட்டீர்!
'அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக 89 ஆக்காதீர் கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! 53 அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!
63:1 ,2 (முஹம்மதே!) நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும் போது 'நீர் அல்லாஹ்வின் தூதரே என்று உறுதி கூறுகிறோம்' என்று கூறுகின்றனர். நீர் அவனுடைய தூதர் என்பதை அல்லாஹ் அறிவான். 'நயவஞ்சகர்கள் பொய்யர்களே' என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான்.
அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர்.64அவர்கள் செய்து கொண்டிருப்பது கெட்டது.
--
Thanks,
Noushath Ali M

No comments:
Post a Comment