பக்கங்கள் செல்ல

cross tab2

Monday, July 9, 2018

எதிர்தொடர்: 30,31 சுவனத்து சுகங்கள்

ஏக இறைவன் அல்லாஹ்வின்  திருப்பெயரால்......

      அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாம் எதிர்தொடரில் தன்னை முன்னாள் முஸ்லீம்?????? என கூறிகொள்ளும் ஒரு அரைவேக்காட்டு கட்டுரையாளரின் தொடர் கட்டுரைகளுக்கு பதில் அளித்து வருகிறோம். இம்முறை கட்டுரையாளர் எப்போதும் போல கிறித்தவ மிசனரிகளின் கட்டுரைகளை சுட்டு மொழியாக்கம் செய்து விட்டுள்ளார். இந்த முறை கட்டுரையாளர் எடுத்துக்கொண்ட பொருள் இஸ்லாம் கூறும் மறுமை வாழ்க்கை(1) என்பதாகும். கட்டுரையாளாரின் ஒவ்வொரு கருத்தியல்களின் மூடத்தனைத்தையும் இந்த கட்டுரையில் தோழுரிப்போம் இன்ஷா அல்லாஹ்

தொடங்கும் போதே உளரல் ???????
     என்றும் இந்த கட்டுரையாளர் இவர் உருவாக்கும் கட்டுரையின் மையப்பொருள் தனதாக காட்டிக்கொள்ள தனது மனதில் தோன்றும் சப்பை வாதங்களை கட்டுரையின் ஆரம்பப் பகுதியிலேயே முன்வைப்பார். அது போன்ற ஒரு உளரல்தான் பின்வருவது.
     //வீட்டுவாடகை, School fees, collage fees, Ration கடை, பருப்பு, பாமாயில், கரண்ட பில் என்ற எந்த கவலையும் சொர்கத்தில் உங்களுக்கு இருக்காது. பஸ்ஸை பிடிக்க வேண்டும், இரயிலைப் பிடிக்க வேண்டும், கல்யாணத்திற்குப் போக வேண்டும், காது குத்திற்குப் போக வேண்டும் Hospital  போக வேண்டும் என்ற பிடுங்கல்களும் இருக்காது.                      அல்லாஹ்வை தொழ வேண்டும், முஹம்மதுவிற்கு பல்லக்கு தூக்க வேண்டும்,  என்ற எந்த வழிபாடுகளும் கிடையாது. பொறாமை, கோபம், விரோதம் போன்ற  தீய எண்ணங்களும் சொர்க்கவாசிகளின் மனதைவிட்டு அகற்றி விடுவதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
பிறகு என்னதான் இருக்கிறது?
    இவ்வளவையும் மனிதனைவிட்டு நீக்கிய அல்லாஹ் மிக முக்கியமான ஒன்றை அதிகரிக்கச்செய்கிறான். அதுதான் Sex.  மனிதனின் உடற்பசியை மட்டும் ஒரு காலத்திலும் அவனை விட்டு விலக விடுவதில்லை. மாறாக மேலும் அதிகரிக்கவே செய்கிறான். சொர்கத்தில்  மனிதனுக்கு இருக்கும் ஒரே பணி  Sex…  Sex…முடிவில்லாத  சல்லாபங்கள்.
     அதற்கு விருந்தாக, கட்டிலில் என்றும் இளமை மாற நீழ்விழி, மான்விழி ஹூர் எனும் பேரழகிகள். மறுமையின் வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச வெகுமதிகளாக 80,000 பணியாட்களும், உலகில் அவர்களுடன் வாழ்ந்து மறுமையிலும் வெற்றி பெற்ற  அவர்களது மனைவியர்களுடன், எழுபதிற்கும் மேற்பட்ட ஹூருலீன்களும்  வழங்கப்படுவார்கள்.//

சுவர்கத்தில் சுகங்கள் எதற்கு?????

நமது பதில்:
     இவரது இந்த குற்றச்சாட்டு இவர் எந்த அளவிற்கு மனித உளவியல் மற்றும் உடற்கூறியல் குறித்து புரிந்துவைத்துள்ளார் என காட்டுகிறது. அதே நேரத்தில் மனிதனை படைத்த இறைவனின் வார்த்தைகள் எப்படி அவனது படைப்பிற்கான சுகங்களை மிகத்துல்லியமாக வரையறுத்து கூறுகிறது  என்பதையும் அதன் இம்மை மறுமை தேவையின் அவசியத்தை எவ்வாறு விளக்குகிறது என்பதையும் காணும் போது நாம் ஆச்சரியபடாமல் இருக்க முடியவில்லை.

     அதாவது மனிதனின் தேவைகள் குறித்த இன்றைய உளவியல் பார்வை என்ன கூறுகிறதோ அதைத்தான் இஸ்லாம் முன்வைக்கிறது. மனிதனின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் இந்த தேவைகள்தான் மனிதனை இயக்குகின்றன. இந்த தேவைகளைத்தான் மறுமையில் அல்லாஹ் நிறைவேற்றுவதாக குறிப்பிடுகிறான். இது குறித்து மாஸ்லாவின் “ the Theory of motivation/ needs” பின்வரும் படத்தால் விளக்கப்படுகிறது. இதில் இடம் பெறும் முதல் நிலையில் இருக்கும் அடிதட்டு பிரிவானது (Physiological Needs) அனைத்து உடல் தேவைகளையும் உள்ளடக்கியது. அதில் உடல் உறவும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடதக்கது.


      அதாவது மனித தேவைகளில் அனைத்தும் சுவர்கத்தில் நிறைவேறுவதை நாம் காணமுடியும். ஆக இத்தகைய ஊக்கிகளை கொண்டுதான் மனித செயல்பாடுகளை தூண்ட முடியும். மனிதனை நன்மை செய்ய தூண்டும் அல்லாஹ் இத்தகைய மனித தேவைகள் அறிந்தே அவனது மறுமை வாழ்க்கைக்கான பரிசுகளை நிர்ணயித்துள்ளான். ஆக மனிதன் பிற மனிதனுக்கு செய்யும் உதவிகள், தனிநபரின் கடமைகள் என பலவற்றை கடமையாக்கிய அல்லாஹ் அத்தகைய செயல்பாட்டை தூண்ட அவனது தேவைகளை நிறைவேற்றுவதாக வாக்களிக்கிறான். எந்த தேவையும் இன்றி மனிதன் இந்த சமுகத்திற்கு எந்த பயனும் அளிக்கமாட்டான் என்பதை அறிந்த படைப்பாளன் அதை தோற்றுவிக்க மனிதனின் முதன்மை தேவைகளை சிரமமின்றி அடைய வழிவகுப்பதாக வாக்களிக்கிறான். அதற்கு இவ்வுலக வாழ்வின் தியாகங்களை பகராகமாக கேட்கிறான் அவ்வளவே.  மனித தேவைகள் குறித்து மேல்குறிபிட்ட உளவியல் ஆய்வின் அடிப்படையில் ஆய்வு செய்தோம் என்றால் குர்ஆனிலும், ஆதாரப்பூர்வ ஹதீஸிலும் ஏராளமாக சான்றுகளை காணலாம் மேலும் சுவர்கத்தில் செக்ஸ் மட்டுமே வழங்கப்படுவதாக கட்டுரையாளர் மிகைபடுத்தி கதை அளந்துள்ளார். அது ஒரு பகுதி மட்டுமே.

    சுவர்க்கத்து உணவு மற்றும் பானம் குறித்து ஏராளமாக இடம் பெறுகிறது குர்ஆனில். சுவர்கத்து மாளிகைகள் பற்றியும் குடியிருப்புகள் பற்றியும் காணமுடியும். உடைகள் குறித்தும் கூறுகிறது. அது ஏனோ கட்டுரையாளரின் கா(ம)மாலை கண்ணுக்கு தென்படவில்லை.

  1. சுவர்கத்தில் உணவு மற்றும் பாணம் குறித்து : 20:118, 13:35, 20:119, 52:22, 56:21, 47:15, 38:51, 43:73, 19:62,37:45-48, 52:23, 56:18,19, 83:25-28, 2:25, 36:57, 37:42, 52:22, 55:68, 78:32, 56:20, 69:23, 76:14, 76:5, 76:17உடைகள் குறித்து: 18:31,22:23,35:33, 44:53, 55:54, 76:12, 76:21 குடியிருப்புகள்: 9:72, 13:29, 39:20, 61:12 உறக்கம் பற்றி: 25:24  
  2. பாதுகாப்பு : 2:25,2:82,3:107,3:136,4:13, 4:122, 5:85, 7:42, இன்னும் ஏராளமான வசனங்கள்.
  3. அன்பு பாசம், நட்பு, காதல்: தோழர்கள்: 4:69, 7:43, 15:47, பெற்றோர்கள் மற்றும் சந்ததிகள்: 13:23,
  4. துணைகள்: 2:25, 3:15,4:57, 37:48,49, 38:52, 44:54, 52:20, 55:56.57, 55:70-84, 56:22,23,56:35, 78:32, 36:56,
  5. இதுவல்லாத ஏனைய தேவைகள் சுவர்க்கவாசிகளுக்கு சுவர்கத்தில் நுழையும் போதே நிறைவேறுகிறது.

       ஆக சுவர்கத்து சுகங்களில் ஒரு சிறு பகுதிதான் செக்ஸ் என்பது மேற்குறிபிட்ட வசன எண்ணிக்கையின் ஒப்பீடே சராசரி மனித புரிதலுக்கு போதுமானது. மேலும் ஹதீஸ்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. மனித உளவியலின் தேவை அமைப்பை அடிப்படையாக கொண்டே இந்த வசனங்கள் அமைந்திருப்பது நிச்சயம் மனிதனின் படைப்பாளனைடம் இருந்து இந்த மார்க்கம் வந்திருக்கும் என்பதற்கும், இன்றைய மனித தேவை உளவியல் குறித்த புரிதலுக்கு அடித்தளமாய் அமைந்திருப்பது குர்ஆனும் ஹதீஸும் என்பது மிகையல்ல. மேலும் மனித மூளையின் கட்டமைப்பை காணும் போது இத்தகைய பரிசு பெறுவதை ஊக்குவிக்கும் pleasure /reward system - இந்த ரிவார்ட் சிஸ்டங்கள் செரடோனின், டோப்பமின் போன்ற மகிழ்ச்சி வேதிகளை சுரக்கவைக்க மனிதனை தூண்டுவதாக உள்ளது. இதற்காக மனிதன் செயலாற்றக்கூடியவனாகவும் இருக்கிறான். இவை அனைத்தும் இந்த மார்க்கம் ஒப்பற்ற படைப்பாளனின் மார்க்கம் என்பதற்கு போதிய சான்று. இத்தகைய உந்துதலே இன்றும் மக்களை இஸ்லாம் நோக்கி ஈர்ப்பதிலும், மக்கள் நிலைத்து இருப்பதிலும் பெரும் பங்காற்றுவதாய் இருக்கிறது. மேலும் கட்டுரையாளர் கூறுவது போல் இவை அனைத்தும் சிற்றின்ப கேலிக்கை என்றால் கட்டுரையாளரை மனித உளவியல் குறித்து எந்த அடிப்படையும் தெரியாத ஒருவராகவே யூகிக்க தோன்றுகிறது. 


தங்கத்தட்டுகளும் கட்டுரையாளரின் மூலாமும்
      சொர்க்கத்தில் இருக்கும் தங்கத்தினால் ஆன தட்டுக்கள் குறித்த தனது விமர்சனத்தை முன்வைதுள்ளார். சுவர்கத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது அங்கு எதற்கு தங்கத்தினால் ஆன தட்டுகள் ,அங்கு செலவுகள் இருக்காது எதற்கு அங்கு தங்கம் தேவை போன்ற அற்புதமான ???? கேள்விகளை முன்வைத்துள்ளார் எதிர் கட்டுரையாளர். ஆனால் இங்கு ஒரு உண்மையும் சேர்த்து கூறியுள்ளார். அதாவது தங்கம் என்பது அரிய உலோகம் என்பதையும் கூறியுள்ளார். முதலில் தங்கம் என்பது அரிய உலகோம் அதை சுவர்க்கத்தில் இருப்பவர்கள் பலர் இவ்வுலகில் இருந்த காலத்தில் தட்டாகவும் குவளையாகவும் பயன்படுத்தி இருக்கமாட்டார்கள். அதாவது சுவர்க்கத்தில் இருப்பவர்கள் பலர் இவ்வுலகில் ஏழையாக இருந்தவர்கள் என நபி மொழி கூறுகிறது. ( அந்த செய்தியை கட்டுரையாளர் தனது கட்டுரையிலேயே மேற்கோள்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது) அவர்கள் அரிய பொருளாக ஏங்கி இருந்தவை சமமாக அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. அடுத்ததாக ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது சுவர்க்கத்தின் ஒரே தரத்தில் இருப்பவர்களிடத்தில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம் ஆனால் மொத்தமாக மறுமைவாழ்க்கையின் நிலை அதுவல்ல. அங்கு நரகிற்குறியவர்கள் இருப்பார்களே....அவர்களை விட சுவர்க்கம் எவ்வளவு உயர்ந்தது என்பதை கட்டுரையாளர் உரைக்கும் வசனங்கள் எடுத்து காட்டுகின்றன. இந்த அடிப்படையான புரிதலே கட்டுரையாளருக்கு இல்லை எனும் போது இவர் குர்ஆனை தேடினேன் படித்தேன் என கூறுவது எல்லாம் சுத்த கட்டுக்கதை.

சுவர்கத்தில் துணைகள்:

    சுவர்கத்தில் ஆண்களுக்கு வழங்கப்படும் ஹூருல்யீன்கள் பற்றி இஸ்லாம் குறிப்பிடும் வசனங்களையும், ஹதீஸ்கள் சிலவற்றையும் பதிந்து அல்லாஹ் சுவர்கத்தில் செக்ஸை மட்டுமே கொடுக்கப்போவதாக தனது கட்டுரையின் பெரும் பகுதியில் கூறியிருக்கிறார் கட்டுரையாளர். சுமார் 6666 வசனங்களில் சுமார் 6 வசனங்கள்தான் கட்டுரையாளரின் கண்ணில் தென்பட்டிக்கிறது. அதாவது 0.1% கூட இந்த வசன்ஙகள் இல்லை என்பது சிறிது சிந்திக்க வேண்டிய விஷயம். நாம் முன்பே விளக்கிவிட்டோம் மனித தேவையின் இயல்பை. ஆக சுவர்கத்தில் வழங்கப்படும் துணைகள் என்பது தர்க்க ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், அறிவியல் மற்றும் பகுத்தறிவின் அடிப்படையிலும் மிகச்சரியானது. இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்ன வென்றால். கட்டுரையாளரின் அறியாமையின் உச்சத்தைதான். அதாவது கட்டுரையாளர் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் தனது சான்றுக்கு பதிந்தவர் விளக்கவுரையின் சில பகுதிகளையும் பதிந்துள்ளார். விளக்கமாக இருப்பதுதான் விளக்கவுரை. அந்த விளக்கவுரையில் ஏனைய வசனங்கள் விளக்கப்பட்டது போல மேற்குறிபிட்ட வசனங்களும் விளக்கப்பட்டுள்ளது. இதில் எந்த தவறும் இல்லை. விளக்கமாக இருந்தால்தான் விளக்கவுரை (தஃப்ஸீர்) என்பதை கட்டுரையாளர் ஏனோ மறந்துவிட்டார். சரி நாம் கட்டுரையாளரின் கேள்விகள்??? ஒவ்வொன்றிற்கும் பதில்களைக் காண்போம்.

கள்ளத்தொடர்பால் பெண்கள் சுவர்கத்தில் குறைவா? கட்டுரையாளரின் கருத்து திரிபு:

     இவரது இத்தகைய வாதங்களைத்தான் நாம் கருத்து திரிபு என கூறுகிறோம். அதாவது நரகத்தில் அதிகமான பெண்களை கண்டதற்கு நபி(சல்) அவர்கள் இவர் கூறும் காரணத்தை கூறவில்லை. இதோ பின் வரும் செய்தி இதை தெளிவாக விளக்குகிறது.

புகாரி 1052. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
              நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்போது தொழுதார்கள். ...........மேலும் நரகத்தையும் கண்டேன். அதை விட மோசமான காட்சியை ஒருபோதும் நான் கண்டதில்லை. மேலும் நரகவாசிகளில் பெண்களையே அதிகமாகக் கண்டேன்' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அது ஏன்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'பெண்கள் நிராகரிப்பதன் காரணத்தினால்' என்று விடையளித்தனர். 'அல்லாஹ்வையோ நிராகரிக்கிறார்கள்' என்று கேட்கப்பட்டதற்குக் 'கணவனை நிராகரிக்கிறார்கள்; காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவிகள் செய்து உன்னிடம் ஏதேனும் ஒரு குறையைக் கண்டால் உன்னிடம் எந்த நன்மையையும் நான் காணவில்லை என்று கூறி விடுவாள்' என்று விடையளித்தார்கள்.

    ஆக இவர் கூறும் காரணம் எல்லாம் இஸ்லாம் பெண்களின் கண்ணியத்தை சீர்குலைக்கிறது அல்லது இழிவுபடுத்துகிறது என்று அவதூறு பரப்பத்தான். மேலும் பெண்களின் கண்ணியத்தை காப்பது குறித்து கம்யூனிசத்தை போற்றும் இவர்களை போன்ற கட்டுரையாளர் கூற எந்த தகுதியும் இல்லை. பெண்களை போகப் பொருள்களாகப் பயன்படுத்தி அதை கொண்டு உளவு பார்க்க தயார் படுத்தியவர்கள் இந்த நாத்தீக கம்யூனிஸ்ட்களும் , கிறித்தவர்களும் என்பதை இவ்வுலகம் என்றும் மறக்காது. அதை வைத்தே தங்களது உளவு நிறுவனங்கள் மிக சக்தி வாய்தவை என தம்பட்டம் அடித்துக்கொள்வதும் உலகம் அறிந்தது.

      அடுத்ததாக விபச்சாரம் செய்யும் ஆண்களையும் நரகில் கண்டதாக நபி(சல்) அவர்கள் கூறினார்கள்

புகாரி 1386. ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
        நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள்.
ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் இது என்ன?என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர். அப்படியே நடந்தபோது அங்கு ஒருவர் மல்லாந்து படுத்திருந்தார். அவரின் தலை மாட்டிலே பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரின் தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே 'இவர் யார்?' என கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்" என்றனர். எனவே நடந்தோம். அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தன. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. நெருப்பின் உஷ்ணம் அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியிலுள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும், பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான் 'இவர்கள் யார்?' எனக் கேட்டேன் அதற்கும் அவர்கள் 'நடங்கள்' எனக் கூறி விடவே ....................அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள். ...............
     ஆக ஆய்வாளர் எந்த விதத்திலும் இந்த இடத்தில் சரியான முழுமையான தேடலை மேற்கொள்ளவில்லை. வெறும் காழ்புணர்ச்சியால் கண் தெரியாத வாதங்களாகத்தான் கட்டுரையாளரின் வாதங்கள் விளங்குகின்றன.

சுவர்கத்தில் திருமணங்கள் இல்லையா:
  சுவர்கத்தில் திருமணங்கள் இல்லை என வாதிட துவங்கிய கட்டுரையாளர் அதே கட்டுரையிலேயே சுவர்க்கவாசிகள் திருமணம் செய்விக்கப்படுவார்கள் என முன்னுக்குப்பின் முரணாக உளருவதே இந்த குற்றச்சாட்டு எந்த அளவிற்கு பலவீனமானது என்பதை அறிய முடியும்.

அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.
كَذَلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ (٥٤)
     இவ்வாறே (அங்கு நடைபெறும்) மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.(al quran 44:54)

   ஆக கட்டுரையாளர் தனது மனதுக்கு பட்டதையெல்லாம் உளறி அதற்கு இஸ்லாமிய முலாம் பூச முனைகிறார் என்பதற்கு மேற்குறிபிட்ட சான்றே போதுமானது.

கட்டுரையாளரின் தப்பு கணக்கு:

// ஒரு நாளைக்கு நூறுமுறை என்றால், மறுமை வெற்றியாளர்கள் சுமார் பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை RECHARGE செய்யப்பட்டு ஹூருலீன்களை ‘வெற்றி கொள்ள களத்திற்கு’ அனுப்பப்படுவார்கள்.//

நமது பதில்:
     கட்டுரையாளர் எவ்வளவு அறியாமையில் உள்ளார் என்பதற்கு மேற்குறிபிட்ட கட்டுரையாளரின் கணக்கு???? போதிய சான்று. அதாவது பூமியின் ஒரு நாளைக்கு 1440 நிமிடங்களாக கணக்கிட்டால் இப்படிதான் இருக்கும். ஆனால் சுவர்கத்தில் நாளின் அளவு 24 மணிநேரம் அல்ல என்பது ஏனோ அடிக்கடி கட்டுரையாளர் மறந்துவிடுகிறார். சுவர்கத்தில் ஒரு நாள் என்பது 1000 வருடங்களுக்கு நிகரானது. அங்கு 1000 பூமி வருடத்திற்கு நிகரான ஒரு நாளைக்கு 100 முறை என்பது மிக குறைந்த அளவு. அதற்கு ஏற்றார் போல் நமது உடல் வலிமை, உணவு உட்கொள்ளும் முறை, ஆசை அனைத்தும் மாற்றியமைக்கப்படுகிறது. அதைத்தான் பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.


 19333 حدثنا عبد الله حدثني أبي ثنا وكيع ثنا الأعمش عن ثمامة بن
عقبة المحلمي قال سمعت زيد بن أرقم يقول قال لي رسول الله صلى الله عليه وسلم : ان الرجل من أهل الجنة يعطى قوة مائة رجل في الأكل والشرب
والشهوة والجماع فقال رجل من اليهود فان الذي يأكل ويشرب تكون له
الحاجة قال فقال له رسول الله صلى الله عليه وسلم حاجة أحدهم عرق يفيض من جلده فإذا بطنه قد ضمر
تعليق شعيب الأرنؤوط : حديث صحيح
ஜைத் பின் அர்காம்(ரலி) அறிவித்ததாவது:
     அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் “சுவர்க்கத்தில் இருக்கும் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உண்பதிலும், பருகுவதிலும், இச்சை கொள்வதிலும், உடலுறவு கொள்வதிலும் நூறு மனிதர்களின் ஆற்றல் வழங்கப்படும்” என்று கூறினார்கள். யூதர் ஒருவர் “உண்பவரும் பருகுபவரும் கழிக்க வேண்டுமே!” என்று கூறினார். அதற்கு நபி(சல்) அவர்கள் “சுவர்க்கவாசிகளில் ஒருவரின் கழிவு என்பது தோலில் இருந்து வெளியேறும் வியர்வைதான், பிறகு மீண்டும் அவரது வயிறு சுருங்கிவிடும்” என்று அவருக்கு பதிலளித்தார்கள் (நூல்: முஸ்னத் அஹ்மது 18509/19333)

       இதில் நூறு பேரின் ஆண்மை பலம் என்பது 1000 வருடங்களில் 100 முறை உறவில் ஈடுபடும் போது நேரத்தை நிடிப்பதற்கான பலம் அவ்வளவே. அதைப்பற்றிதான் விளக்கவுரைகள் கூறுகின்றன. அதாவது சுவர்க்கத்தின் ஒரு நாளின் கால அளவை அடிப்படையாக கொண்டு மனித உடலியல் மாற்றியமைக்கப்படுகிறது. இதில் எங்கிருந்து கட்டுரையாளர் கூறுவது போல் ஆபாசம் வருகிறது. மேலும் சுவர்கத்தில் இன்னும் பல செயல்பாடுகளை சுவர்க்கவாசிகள் செய்வார்கள் என குர்ஆனும் ஹதீஸும் பட்டியலிடுகிறது.

அல் குர்ஆன் 19:62. அங்கே ஸலாம்¹என்பதைத் தவிர எந்த வீணானதையும் அவர்கள் செவியுற மாட்டார்கள். அங்கே காலையிலும், மாலையிலும் அவர்களுக்குரிய உணவுகள் உள்ளன.
அல் குர்ஆன் 25:24. அந்நாளில் சொர்க்கவாசிகள் அழகிய தங்குமிடத்திலும், சிறந்த ஓய்விடத்திலும் இருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
     சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள்; பருகுவார்கள். மலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். சிறுநீர் கழிக்கவுமாட்டார்கள். அவர்கள் உண்ணும் உணவு கஸ்தூரி மணம் கமழும் வியர்வை போன்று, ஏப்பமாக வெளியேறும். மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் போற்றிக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அவற்றில் ஹஜ்ஜாஜ் பின் அஷ்ஷாஇர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் உண்ணும் அந்த உணவு" என்று இடம்பெற்றுள்ளது. (முஸ்லிம் 5454)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
       ஒரு முறை நபி(ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:
சொர்க்கவாசிகளில் ஒருவர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், 'நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிரு,க்கவில்லையா?' என்று கேட்பான். அதற்கு அவர், 'ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்" என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராம் விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், 'எடுத்துக் கொள். ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது" என்று கூறுவான்.
(நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, 'அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்கா வாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்கமுடியும். அவர்கள் தாம் விவசாயிகள், நாங்களோ விவசாயிகள் அல்லர்" என்று கூறினார். இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள். (புகாரி 2348).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.
அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், "எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!" என்று கூறுவர். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்" என்று கூறுவர்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5448).

    ஆக இத்தகைய செயல்களும் இன்னும் அறியாதவற்றையும் சுவர்க்கவாசிகள் செய்யப்போகிறார்கள் என கூறப்படும் போது கட்டுரையாளரின் கருத்து எவ்வளவு மிகைப்படுத்தப்பட்ட விமர்சனம் என்பது தெளிவாக விளங்குகிறது. இவை அனைத்தும் சுவர்க்கத்தின் ஒவ்வொரு நாளிளும் அரங்கேறும் எனும் போது பாலியல் சுகமும் அதில் ஒரு பகுதி அவ்வளவே. மேலும் இந்த கட்டுரையில் இவரது விமர்சனங்கள் இவருக்கு ஆண்மை பலம் குறித்தும் மனித பாலியல் உடற்கூறியல் குறித்தும் எந்த அறிவும் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

ஆண்மை பலத்திற்கு அல்லாஹ்வை அழைக்கக்கூடாதா?

      இந்த கேள்வியே எவ்வளவு முட்டாள்தன்மானது. இவ்வுலகிலும் மறு உலகிலும் அல்லாஹ் கொடுத்ததுதான் அனைத்தும் என்ற நம்பிக்கையுடையவர்கள் முஸ்லீம்கள். ஆண்மை பலத்திற்கு மட்டுமல்ல அனைத்திற்கும் அல்லாஹ்வையே இஸ்லாமியர்கள் சார்ந்திருக்கிறார்கள். எவ்வளவு முயன்ற போதிலும் குழந்தை பெறமுடியாதவர்கள் இந்த பூமியில் இருக்கிறார்கள் என்பதை கட்டுரையாளருக்கு நியாபகப்படுத்துகிறோம்.

     மேலும் இஸ்லாமிய ஆய்வாளர்களாக தங்களை காட்டி கொள்ளும் இந்த கட்டுரையாளர் போன்ற அறிவாளிகள்?????? தொடர்ச்சியாக ஒரு குற்றச்சாட்டை நபி(சல்) அவர்கள் மீது கூறிவருகின்றனர். அதாவது
ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(சல்) அவர்களின் ஆண்மை விருத்திக்கு லேகியம் கொடுத்ததாக தொடர்ந்து உளறி வருகின்றனர். அவர்கள் இது குறித்த எந்த ஆதாரங்களையும் பதியவில்லை. ஆயினும் ஆங்கில வளைத்தளங்களும் இது குறித்து தொடர்ந்து பரப்பி வருவதால் இந்த செய்தியின் நிலை குறித்து முன் சென்ற இந்த ஆய்வில் காணலாம்.
இப்படியாக நபி(சல்) அவர்களுக்கு லேகியம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் செய்திகள் யாவும் பலவீன்மான ஆதாரமற்றவை.

சுவர்கத்தில் 72 கன்னியர்கள் எனும் கட்டுக்கதை

               இந்த கட்டுரையாளர் பொதுவாக சுவர்கத்தில் 72 ஹூருல் ஈன்களை அல்லாஹ் தருவதாக போகிற போக்கில் கூறிச்சென்றாலும் இந்த குற்றச்சாட்டை பல இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் தொடர்ச்சியாக பரப்பித்திரிந்து தங்களது அரிப்பை தீர்த்து வருகின்றனர். ஆகவே இந்த தொடரில் இந்த செய்திகளை பரப்பும் மிசனரி/ நாத்திக வேட்தாரிகளின் தகவல் மூலமான விக்கி இஸ்லாம், ஆன்சரிங்க் இஸ்லாம் போன்ற மிசனரி தளங்களின் ஆங்கில கட்டுரைகளுக்கான பதிலை இந்த தொடரில் காணலாம்


ஆண்களை போல் பெண்களுக்கும் துணை வழங்கப்படுமா??

            அதாவது கட்டுரையாளர் ஆண்களை போல் பெண்களுக்கும் துணைகள் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு இக்கால அறிஞர் சாகிர் நாயக் போன்றோரின் கூற்றை ஆதாரமாக கொண்டு, அதை எவ்வளவு கீழாக சித்தரிக்க முடியுமோ அந்த அளவிற்கு அதை சித்தரித்து தனது கடும் அரிப்பை தீர்த்துள்ளார். ஆனால் இவரது இத்தகைய வாதத்திற்கு எந்த ஒரு அறிவார்ந்த சான்றுகளையும் முன்வைக்கவில்லை என்பதுதான் அறிஞர் ஒருவரின் கருத்தை பிடித்து தொங்குவதற்கான காரணம். கட்டுரையாளர் எத்தனையோ ஹதீஸ்களையும் , விளக்கவுரையின் பகுதிகளையும் பதிந்து ஹூருல் ஈன்களின் மார்பு குறித்த வர்ணனைகளை எல்லாம் தேடி எடுத்த கட்டுரையாளருக்கு சுவர்கத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் ஆண் ஹூர் பற்றி எந்த செய்தியும் கிடைக்கவில்லை என்பதே ஹூர்களில் ஆண்கள் இல்லை என்பதற்கு போதிய சான்று. மேலும் அல்லாஹ் பின் வருமாரு தனது திருமறையில் குறிப்பிடுகிறான்


ادْخُلُوا الْجَنَّةَ أَنْتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ (٧٠)

43:70. நீங்களும் உங்கள் மனைவியர்களும் சொர்க்கத்தில் நுழையுங்கள்!''

     ஆக இந்த வசனமே போதுமானது பெண்களுக்கு சுவர்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் துணை இல்லை என்பதற்கு போதிய சான்று.

            மேலும் பெண்களுக்கு சுவர்கத்தில் ஆண்களுக்கு இணையாக வழங்கப்படும் என்பதற்கு சான்றாக பின்வரும் குர்ஆன் வசனம் கூறப்பட்டாலும் அந்த வசனம் என்ன கூறுகிறது என்பதை சற்று நாம் காண்போம் என்றால் கட்டுரையாளர் கூறுவது போல் ஒவ்வொரு சுவர்கத்து பெண்ணிற்கும் பல ஆண் துணைகள் இருப்பதாக எந்த கருத்தும் இல்லை.

     33:35. முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

      ஆண்களுக்கு வழங்குவது போல் பெண்ணுக்கும் கூலி வழங்கப்படும் அவ்வளவுதான். ஆனால் இங்கு ஒரு கேள்வி பெண்ணியத்திற்காக???? கட்டுரையாளர் கேட்கிறார். அதாவது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமநீதி இல்லையா என்று? 

      இங்கு கவனிக்கப்பட வேண்டியது இதுதான்.  ஆணின் உளவியல் மற்றும் உடற்கூறு தேவைக்கு ஏற்றார் போல் துணைகள் வழங்கப்படுகிறது. பெண்ணின் உடற்கூறிற்கு ஏற்றார் போல் அவர்களது உடற் சார்ந்த விஷயங்கள் மாற்றப்படுகிறது.. உதாரணமாக பெண்களின் கன்னித்தன்மை என்றுமே இருக்கும். மேற்குறிப்பிட்ட கட்டுரையாளர் புரிதல் படி இது ஆண்களுக்கு எப்படி சாத்தியமாகும்..ஆக ஆண்களின் உடற்தேவைக்கு ஏற்றார் போல் உடல் அமைப்பு மாற்றப்படுகிறது. இது பெண்ணின் உடல் தேவையையும் பூர்த்தி செய்துவிடும். இந்த அடிப்படை அறிவே இல்லாமல்தான் இந்த கட்டுரையாளர் இஸ்லாமிய மூல ஆதாரங்களை தேடினாராம். மேலும் இவ்வுலகில் இருக்கும் மனித தேவைகள்தான் சுவர்கத்தின் பரிசுகளாக கூறப்படும் போது பெண்களுக்கு இத்தகைய பல ஆண்களின் தேவை என்றும் உயிரியல் மற்றும் உளவியல் ரீதியாக இவ்வுலகில் இருந்ததில்லை எனும் போது அதை காட்டி பெண்களை நற்கருமங்கள் செய்ய தூண்டவியலாது, அதற்காக அவர்கள் தூண்டப்படவும் மாட்டார்கள்.  அதனால்தான் உளவியலாளர்கள் பின்வருமாறு கூறுவார்கள் “Women are Choosers” . அதாவது பெண்கள் என்றைக்கும் சிறந்த துணையை தேர்தெடுத்து கொள்வார்கள்.

சுவர்க்கத்துக்கு சந்தைகள்:

    அல் ஹதீஸ் என்ற கிரந்தத்தில் இடம் பெறும் ஹதீஸை பதிவு செய்து சுவர்க்க சந்தையில் பெண்களும் ஆண்களும் விற்கப்படுவதாக கூறுகிறார் கட்டுரையாளர். இதை பதிந்த அல் ஹதீஸ் கிரந்தத்தின் ஆசிரியர் இந்த செய்தி இடம் பெறும் திர்மிதி என்ற புத்தகத்தின் பெயரையும் குறிபிட்டு இந்த செய்தி நூதனமானது என்ற கருத்தையும் அதில் பதிந்துள்ளார். ஆக நாம் மூல நூலில் இந்த ஹதீஸ் குறித்து பார்த்தோம் ஆனால், இமாம் திர்மிதி அவர்களும் இந்த ஹதீஸை நூதனமானது என்றே குறிபிட்டுள்ளார். மேலும் இந்த செய்தியில் இடம் பெறும் அப்துர் ரஹ்மான் இப்னு இஸ்ஹாக் மற்றும் அவர் செவியுற்ற நுஃமான் இப்னு சஃத் ஆகிய இரண்டு அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள். ஆக இந்த செய்தியும் ஏற்கத்தக்கது அல்ல. அதன் ஸ்னாப் இணைக்கப்பட்டுள்ளது.


 கட்டுரையாளரின் தீராத அரிப்பு:
     மேலும் கட்டுரையாளர் பெண்கள் தங்களது துணைக்காக காத்திருக்க வேண்டியதுதான் என்றெல்லாம் உளறிக்கொட்டியுள்ளார். இல்லை என்றால் சல்லாபக்காட்சிகளை கண்டு ரசிக்க வேண்டியதுதான் என உளறிக்கொட்டி அரிப்பை தீர்த்துள்ளார். முதலில் இரண்டு பெண் துணைகள் ஆணிற்கு, அதற்கான பலம் வழங்கப்பட்டாலே விஷயம் முடிந்துவிட்டது. பெண்ணின் தேவை ஆணின் பலத்தோடு தொடர்புடையது என்ற அடிப்படை பாலியல் அறிவே இல்லாத இந்த கட்டுரையாளரின் வர்ணிப்பே அர்த்தமற்றதாகி விட்டது. மேலும் நபி(சல்) அவர்கள் பின்வருமாறு குறிபிட்டார்கள்:

புஹாரி : 4879. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (இறைநம்பிக்கையாளருக்கு) துணைவியர் இருப்பார்கள். ஒரு மூலையிலுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர்.

    ஆக சல்லாபகாட்சியை காணலாம் என்பது எல்லாம் கட்டுரையாளரின் கீழ்த்தரமான எண்ண ஒட்டங்கள்தான். மேலும் 72 காளையர்கள் பெண்களுக்கு வழங்கப்படும் என்ற கேவலமான கற்பனை உண்மையில் கட்டுரையாளரின் மூளையில் உதித்த மூன்றாம் தர நீலப்பட குறுந்தகடு ஆக்கம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. மேலும் இவர்களைப் போன்ற தீரா அரிப்பு கொண்டவர்கள் இவ்வுலகில் தேடிச்செல்லும் காம பதுமைகளின் “Sex dolls” தோற்றுவிப்பாளர்கள் எல்லாம் இவர்களை போன்ற நாத்திகர்கள் மற்றும் யூத கிறித்தவ பிம்ப்கள்தான். மேலும் இவர்களை போன்ற நாத்திகர்கள் மற்றும் யூத கிறித்தவ பிம்ப்கள்தான்(Pimp)  கலிஃபோர்னியாவின் “ போர்ன் வேலியின்- Porn valley” ராஜாக்கள் என்பது நிகழ்கால நிதர்சனமாக இருப்பதால்தான் இவர்களின் எண்ண ஓட்டத்தை எல்லாம் இஸ்லாமின் மீது திணித்து இத்தகைய அவதூறுகளை பரப்ப துணிகின்றனர் எனபதில் எள்ளளவும் சந்தேகம் இருக்கமுடியாது.   


Friday, July 6, 2018

ஆண்மை பலத்திற்கு லேகியம் தந்த ஜிப்ரீல்(அலை): ஓர் ஆய்வு

ஏக இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..............

     இஸ்லாமிய ஆய்வாளர்களாக தங்களை காட்டி கொள்ளும் பல மிசனரிகளும் நாத்தீக கோமாளிகளும் தொடர்ச்சியாக ஒரு குற்றச்சாட்டை நபி(சல்) அவர்கள் மீது கூறிவருகின்றனர். அதாவது ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(சல்) அவர்களின் ஆண்மை விருத்திக்கு லேகியம் கொடுத்ததாக தொடர்ந்து உளறி வருகின்றனர். அவர்கள் இது குறித்த எந்த விரிவான ஆதாரங்களையும் பதிவதில்லை. ஆயினும் ஆங்கில வளைத்தளங்களும் இது குறித்து தொடர்ந்து பரப்பி வருவதால் இந்த செய்தியின் நிலையை சற்று விரிவாகவே கண்டு விடுவோம் இன்ஷா அல்லாஹ்.

செய்தி 1: இப்னு சஃத் பாகம் 1 பக்கம் எண்: 321-322

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

               ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒரு ஜாடி கொண்டுவந்தார்கள். அதிலிருந்து நான் உட்கொண்டேன். அதனால் நாற்பது பேரின் ஆண்மை பலம் எனக்கு கொடுக்கப்பட்டது.

அறிவிப்பாளர் தொடர்:

நபி(சல்) ---> சஃப்வான் இப்னு சுலைம்(தாபியி) (மரணம் 132 AH) --->உசாமா இப்னு ஜைத்--> உபைதுல்லாஹ் இப்னு மூஸா (தபா தாபியி) (பிறப்பு 128 AH)---> இப்னு சாஃத்

         முதலில் இந்த செய்தி அறிவிப்பாளர் முறிந்த அறிவிப்பாகும். அதாவது நபி(சல்) அவர்களிடம் இருந்து எந்த நபித்தோழரும் இந்த செய்தியை அறிவிக்கவில்லை. நேரடியாக தாபியி அறிவிக்கிறார். ஆக இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்.

            அடுத்ததாக உபைதுல்லாஹ் இப்னு மூஸா (தபா தாபியி) அவர்களுக்கு அறிவிக்கும் உசாமா பின் ஜைத் அவர்கள் நினைவாற்றல் குறைபாடு உடையவர் என இப்னு ஹஜரால் விமர்சிக்கப்பட்டவர்.

            ஆக இரண்டு குறைபாடுகளுடன் இந்த செய்தி மறுக்கப்படும் பலவீனமான நிலையில் உள்ள செய்தியாகும்.


செய்தி 2: இப்னு சஃத் பாகம் 1: ப.எண் 321-322



             முஜாஹித்(ரஹ்) அவர்கள் குறிபிட்டார்கள்: நபி(சல்) அவர்களுக்கு நாற்பது பேரின் பலம் கொடுக்கப்பட்டிருந்தது. சுவர்க்கவாசிகளுக்கு என்பது பேரின் பலம் கொடுக்கப்படும்.

அறிவிப்பாளர் தொடர்:

 முஜாஹித்(ரஹ்) ---> லைத் பின் அபி ரக்கியா--> இஸ்ராயீல் இப்னு யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் ---> மாலிக் இப்னு இஸ்மாயீல் அபூ கஸ்ஸான் --> இப்னு சாஃத்

             முதலில் இந்த செய்தி அறிவிப்பாளர் முறிந்த அறிவிப்பாகும். அதாவது நபி(சல்) அவர்களிடம் இருந்து எந்த நபித்தோழரும் இந்த செய்தியை அறிவிக்கவில்லை. நேரடியாக தாபியி அறிவிக்கிறார். அதுவும் அவரது கருத்தாக இடம்பெறுகிறது. ஆக இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்.

           அடுத்ததாக முஜாஹித்(ரஹ்) அவர்களிடம் இருந்து செய்தியை பெறும் லைத் பின் அபி ரக்கியா யாரென்று அறியப்படாதவர். இவரது அறிவிப்புகள் சஹீஹான அறிவிப்புகளால் வழுசேர்க்கப்படாதவரை ஏற்கும் நிலையை அடையாது என ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார். ஆக இந்த செய்தியும் பலவீனமான செய்திதான்.


செய்தி 3: இப்னு சஃத் பாகம் 1: பக்கம் 322


தாவஸ்(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
                நபி(சல்) அவர்களுக்கு நாற்பது பேரின் ஆண்மை பலம் கொடுக்கப்பட்டிருந்தது.


                இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் வழுவானவர்களாக இருந்தாலும் இந்த செய்தி அறிவிப்பாளர் முறிந்த அறிவிப்பாகும். அதாவது நபி(சல்) அவர்களிடம் இருந்து எந்த நபித்தோழரும் இந்த செய்தியை அறிவிக்கவில்லை. நேரடியாக தாபியி அறிவிக்கிறார். அதுவும் அவரது கருத்தாக இடம்பெறுகிறது. ஆக இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்.

                        ஆக இப்னு சஃதில் இடம்பெறும் நபி(ஸல்) அவர்களுக்கு லேகியம் கொடுக்கப்பட்டதாக கூறும் செய்திகள் யாவும் அறிவிப்பாளர் முறிந்த செய்திகளாகவே உள்ளன. அதுவல்லாமல் வாஹிதி நேரடியாக அறிவிக்கும் செய்தியும் இதே நிலையில் தான் இப்னு சாஃதில் இடம் பெற்றுள்ளது.


செய்தி 4: 
أتاني جبريل بِهَرِيسةٍ من الجنة، فأكلتها، فأُعْطِيتُ قوة أربعين رجلا في الجماع.

நபி(சல்) அவர்கள் கூறினார்கள்:
                    ஜிப்ரீல்(அலை) அவர்கள் சுவனத்தில் இருந்து எனக்கு ஹாரிஸா எடுத்து வந்தார்கள். அதை நான் உட்கொண்டேன். அதனால் எனக்கு 40 பேரின் ஆண்மை பலம் வழங்கப்பட்டது

                  மேற்குறிப்பிட்ட செய்தி இப்னு அதி அவர்களது அல் காமில்(1/165) , இப்னு ஜவ்சி அவர்களது அல் மவ்துவு(3/17) ஆகிய கிரந்தங்களில் பின்வரும் அறிவிப்பாளர் தொடருடன் அமைந்துள்ளது

அறிவிப்பாளர் தொடர்
நபி(சல்) --> இப்னு அப்பாஸ்(ரலி) --> அல் தஹ்காக் அல் மசாஹம் --> நஃசல் இப்னு சயீத் இப்னு வர்தான் --> சலாம் இப்னு சுலைமான்

                 இந்த செய்தியில் இடம் பெறும் நஃசல் இப்னு சயீத் இப்னு வர்தான் , சலாம் இப்னு சுலைமான் இருவரும் கைவிடப்பட்டவர்கள். ஆக மேற்குறிபிட்ட செய்தியும் பலவீனமானது. ஏற்கத்தகாதது.


செய்தி 5:  

                 மேற்குறிபிட்ட செய்திகள் அல்லாமல் உகைலியின் அல் துஆஃபாவில் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி பின் வருமாறு இடம்பெற்றுள்ளது


حَدَّثَنا أبي رحمه الله، حَدَّثَنا عبد الله بن جعفر الخشاب، حَدَّثَنا أحمد بن مهران، حَدَّثَنا الفضل بن جبير، حَدَّثَنا محمد بن الحجاج، عَن ثور بن يزيد، عَن خالد بن معدان، عَن معاذ بن جبل قال: قيل يا رسول الله هل أوتيت ن طعام الجنة شيء؟ قال: نعم أتاني جبريل بهريسة فأكلتها فزادت في قوتي قوة أربعين رجلا في النكاح.

முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் கூறியதாவது:

               நான் நபி(ஸல்) அவர்களிடம் உங்களுக்கு சுவர்கத்து உணவு எதுவும் வழங்கப்பட்டதா என கேட்டேன். அதற்கு நபி(சல்) அவர்கள் “ஆம்.எனக்கு ஹரீஸா வழங்கப்பட்டது. அதை நான் உட்கொண்டேன். ஆகவே எனது ஆற்றலும், ஆண்மையும் நாற்பது மடங்காக பெருகியது” என்று பதிலளித்தார்கள்.....

             ஆனால் மேற்குறிபிட்ட செய்தியில் முஹம்மது பின் அல் ஹஜ்ஜாஜ் அல் லக்மி என்ற பலவீனமான இட்டுகட்டும் அறிவிப்பாளர் இடம் பெறுகிறார்.இவரை குறித்து ஹாபிழ் அபூ ஹாதிம் கூறும் போது இவர் ஹதீஸ்களை பொய்யாக இட்டுகட்டி புனைபவர் என விமர்சிக்கிறார். அது போல் அல் தஹபி அவர்கள் விமர்சிக்கும் போது இவர் ஒரு ஹாரிஸா வியாபாரி என்று விமர்சிக்கிறார்,. தாரகுத்னீ அவர்கள் குறிபிட்டும் போது பெறும் பொய்யர் என்கிறார். மேலும் இதே செய்தி அபு நுஐம் அவர்களது அல் திப் அல் நபவீயில் (ஹதீஸ் எண்:444) இடம் பெறுகிறது. அதிலும் மேற்குறிபிட்ட முஹம்மது பின் அல் ஹஜ்ஜாஜ் அல் லக்மி என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுகிறார்.

செய்தி 6:

حَدَّثَنا الحسين بن حموية الخثعمي، حَدَّثَنا محمد بن عبد الله الحضرمي، حَدَّثَنا جمهور بن منصور، حَدَّثَنا محمد بن الحجاج، عَن عَبد الملك بن عمير، عَن ربعي، عَن حذيفة، قال: قال رسول الله صَلَّى الله عَليْهِ وَسلَّم: أطعمني جبريل الهريسة أشد بها ظهري لقيام الليل.

              "ஜிப்ரீல் அலை அவர்கள் எனக்கு ஹாரீஸா கொடுத்தார்கள், நான் இரவில் சக்தியோடு சென்றேன்" என்று நபி(சல்) அவர்கள் கூறினார்கள்.

                 அறிவிப்பாளர்: ஹுதைஃபா(ரலி) ,
                 நூல்: அபு நுஐம் அவர்களது அல் திப் அல் நபவீயில் (ஹதீஸ் எண்:444).

               மேற்குறிபிட்ட இந்த செய்தி அறிவிப்பாளர் தொடரிலும் முஹம்மது பின் அல் ஹஜ்ஜாஜ் அல் லக்மி என்பவரே இடம் பெறுகிறார். ஆக இதுவும் பலவீனமான செய்தி.

செய்தி 7:

أخبرنا أحمد بن محمد في كتابه، حَدَّثَنا علي بن الحسن بن قديد، حَدَّثَنا محمد بن إسحاق الصيني، حَدَّثَنا إبراهيم بن محمد الفريابي، حَدَّثَنا عُمَر بن بكر السكسكي حدثني أرطأة بن المنذر، عَن مكحول، عَن أَبِي هُرَيرة قال: شكى رسول الله صَلَّى الله عَليْهِ وَسلَّم إلى جبريل قلة الجماع فقال: يا رسول الله أين أنت، عَن أكل الهريسة؟ فإن فيها قوة أربعين رجلا


  அபு ஹுரைரா(ரலி) கூறியதாவது:

                 நபி(சல்) அவர்கள் ஒரு முறை தன்னால் உடலுறவு கொள்ள இயலவில்லை என்று ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே தங்களுக்கு ஹாரீஸா குறித்து தெரியாதா?” என்று வினவினார்கள். மேலும் அதில் நாற்பது பேரின் ஆண்மைபலம் உள்ளது என்றும் (ஜிப்ரீல் (அலை)) கூறினார்கள்.

நூல்: அபு நுஐம் அவர்களது அல் திப் அல் நபவீயில் (ஹதீஸ் எண்:445)

             மேற்குறிபிட்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மது இப்னு இஸ்ஹாக் அல் சைனி என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். இவர் குறித்து இப்னு அபிஹாத்திம் அல் ராஸி அவர்கள் விமர்சிக்கும் போது இவர் பெரும் பொய்யர், ஹதீஸில் விடப்பட்டவர் என்று விமர்சிக்கிறார். ஆக மேற்குறிபிட்ட செய்தியும் பலவீனமானது.

           மேற்குறிபிட்ட செய்தியை கூறிவிட்டு அலி சினா தனது புத்தகத்தில் இந்த செய்தி தபகத் இப்னு சாஃதில் பாகம் 8 பக்கம் 200 ல் அல் வாகிதி அறிவிப்பதாக இடம் பெறுவதாக பச்சை பொய் வேறு. இதையே விக்கி இஸ்லாம், ஆன்சரிங்க் இஸ்லாம் போன்ற வலைத்தளங்கள் வாந்தி எடுத்துள்ளன என்பது குறிபிடதக்கது. மேலும் அல் வாகிதி பொய்யர்களில் பேர்போனவர் என்று இமாம் சாஃபி(ரஹ்) போன்றோர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். இஸ்லாமிய எதிர்ப்பாள்ர்கள் தங்களது பக்தர்களை எந்த அளவிற்கு எடை போட்டுள்ளார்கள் என்பதற்கு இது ஓர் ஆதாரமாகும்.

செய்தி 8:

حَدَّثَنا أحمد بن محمد بن يوسف، حَدَّثَنا ابن ناجية، حَدَّثَنا سفيان بن وكيع، حَدَّثَنا أبي، حَدَّثَنا أسامة بن زيد، عَن صفوان بن سليم، عَن عَطاء بن يسار، عَن أَبِي هُرَيرة، قال: قال رسول الله صَلَّى الله عَليْهِ وَسلَّم: أتاني جبريل بقدر يقال لها الكفيت فأكلت منها أكلة فأعطيت قوة أربعين رجلا في الجماع

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

               ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒரு ஜாடி கொண்டுவந்தார்கள். அதிலிருந்து நான் உட்கொண்டேன். அதனால் நாற்பது பேரின் ஆண்மை பலம் எனக்கு கொடுக்கப்பட்டது. (அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), நூல்:நூல்: அபு நுஐம் அவர்களது அல் திப் அல் நபவீயில் (ஹதீஸ் எண்:442)

         மேற்குறிபிட்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் أسامة بن زيد  என்பவர் பலவீனமானவர். இவர் குறித்து நஸயீ கூறுகையில் பலவீனமானவர் என்று கூறுகிறார்.இப்னு மயின் குறிப்பிடுகையில் இவரது ஹதீஸ்கள் ஏற்கத்தக்கதல்ல என்று கூறுகிறார்.அஹ்மத் இப்னு ஹம்பல் கூறுகையில் இவர் பலவீனமானவர் என்று கூறுகிறார். அபுஹாத்தம் கூறும் போது இவர் செவியுறாதவற்றை எழுதுபவர் என்று விமர்சிக்கிறார். ஆக இவரை ஹாபிழ் இப்னு ஹஜர் தவறிழைப்பவர் என்று குறிப்பிடுகிறார்கள்.


மேலும் இத்தகைய செய்திகள் குறித்து ஆய்வு செய்த ஷைக் அல்பானி அவர்கள் தனது சில்சிலா அஹாதித் அல் லைஃபா வல் மவ்தூவு -ல் : 
     “இது போல் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவை. அவற்றில் ஏதேனும் ஒரு குறை இருக்கவே செய்திறது “ என்கிறார்
ஆக நபி(சல்) அவர்களுக்கு சுவர்க்கத்தில் இருந்து லேகியம் கொடுக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும். அவை ஏற்கும் தரத்திலானவை அல்ல.