பக்கங்கள் செல்ல

Wednesday, July 29, 2015

"நீதி" யின் பெயரால் அநீதி!!

By  Nadodi Tamilan
கடந்த  வருடம் மட்டும், சீனாவில்  மரண தண்டனைக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2400. இது உலகிலுள்ள மற்ற நாடுகளை விட மூன்று மடங்கு அதிகம். (உலக மனித உரிமை அமைப்பு)(1)

அமெரிக்காவில், இந்த நூற்றாண்டின் ஒவ்வரு வருடத்திலும், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், இறுதியில் நிரபராதி என்று அறியப்பட்டுள்ளனர். (2)

மற்றொரு ஆய்வின் படி, அமெரிக்காவில் 1973 முதல் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் 343 பேர், நிரபராதியாக விடுவிக்கப்பட்டு இருக்க வேண்டும். (3)

குற்றம் சாட்டப்பட்டவர்களை  அடித்து துன்புறுத்துவது, பொய் குற்றச்சாட்டில் மக்களை கைது செய்வது, மத/இன வெறியின் அடிப்படையில் மக்களை அணுகுவது  இந்தியாவில் அதிகம் நடப்பதால், ஒரு நிரபராதி தூக்கிலடப்படுவதற்கான சாத்தியக்கூறு  மிகவும் அதிகம்.

உதாரணமாக இன்று தூக்கிலிடப்பட்ட, யாகூப் மேனன் விடயத்தை எடுத்துக்கொள்வோம்:

"சரியான ஆதாரம்   இல்லாமல், யாகூப் மேனனை கொன்றுவிட்டார்கள்"

"யாகூப் மேனனை தூக்கிலிட்டது  தவறு"

"வாய்மொழி உத்திரவாதம் மூலம் அவரை சரணடைய செய்து, அவர் உதவியால் பல விடயங்களை அறிந்துகொண்டு, அவருக்கு  நம்பிக்கை   துரோகம் செய்து விட்டார்கள்"

இதுபோல் பல குற்றச்சாட்டுகள் அதிகமான  நடுநிலை  மக்களிடம்   இருந்து பலமாக வருகின்றது... மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இங்கே தொடர்கதையாகி விட்டது.

இதில் உண்மை இருந்தால், ஒரு உயிரை அநியாயமாக கொன்று, அவரின் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியவர்களை, அதற்குரிய தணடனையை பெற்றுக் கொடுப்பது எப்படி?

எதுவுமே செய்ய முடியாத நிலையில் உள்ள அப்பாவி மக்களுக்கு நியாயம் வழங்குவது யார்?

இந்த மக்களின் மன உளைச்சலுக்கு சரியான மருந்து என்ன?

தன்னை கேட்க ஆள் இல்லை என்ற மமதையில் இயங்கும் அதிகார வர்க்கத்தை திருத்துவது எப்படி?

இதற்க்கு சரியான வழி,  ஒரு மனிதனை சாந்தப்படுத்துவது  உண்மையான,  முறையான இறை நம்பிக்கை தான்.

 தவறு செய்தவன், அதற்க்கு எல்லாவகையிலும் துணை நின்றவன், இவர்கள் அனைவரும் அனைத்தையும் அறிந்தவன் முன் ஒரு நாள் நிச்சயம் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். அங்கே, "நீதி" மட்டும் தான் வழங்கப்படும்.இங்கே பாதிக்கப்பட்டவர்கள், அங்கே நிச்சயம் உண்மையான நீதியை பெறுவார்கள். இங்கே அநியாயம் செய்தவர்கள், அங்கே கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.


நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். [5:8]

ஒவ்வொருவரும், தாம் செய்த நன்மையையும், தீமையையும் கண் முன்னே பெற்றுக் கொள்ளும் நாளில் "தமக்கும் தமது (தீய) செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டும்'' என ஆசைப்படுவர்.[3:30]


இந்த நம்பிக்கை மட்டும் தான், ஒரு மனிதனை, அவன் பாதிப்பிலிருந்து
மீட்கும், தவறு செய்பவனுக்கு நேர்வழி காட்டும்.

 இது அல்லாத வேறு எதுவும், மனிதனை தவறான வழிக்கு இட்டுச்செல்லும்.

- Nadodi Tamilan - 

Ref:
1. http://www.newsweek.com/china-executed-2400-prisoners-2013-says-human-rights-group-278733?piano_t=1
2. http://www.nytimes.com/1985/11/14/us/25-wrongfully-executed-in-us-study-finds.html
3.http://www.scientificamerican.com/article/many-prisoners-on-death-row-are-wrongfully-convicted/

No comments:

Post a Comment