பக்கங்கள் செல்ல

Thursday, April 23, 2015

அர்த்தமுள்ள கேள்வி -10 - நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா? - மார்க்ஸ் வழி வந்த ரஷ்யாவே, மார்க்ஸை ஏன் ஓரம் கட்டியது?கேள்வி : மனிதனின் அறிவு நல்லதை மட்டும் ஏவுமாதீயதையும் ஏவுமாகாரல்மார்க்ஸ் வாதிகள் 'மனிதனின் அறிவாற்றல் தான் எல்லாமேமற்ற எந்த நம்பிக்கையும் வீண்என்கிறார்கள்கல்லூரி மாணவிகள் இதைப் பற்றி அறிய பெரிதும் ஆவல்கொள்கிறார்கள்விளக்கவும்!

பதில் : மனிதனின் அறிவு மகத்தானது என்பதில் ஐயமில்லைபல விஷயங்களை அறிவுசரியாகவே கண்டு பிடித்து விடும்ஆயினும் சில விஷயங்களில் அறிவு தவறிழைத்துவிடுவதும் உண்டு.
பல விஷயங்களை அறிவு சரியாகக் கண்டு பிடித்து விட்டாலும் அறிவின் கண்டுபிடிப்பைக் காலில் போட்டு மிதித்து விட்டு வேறு வழியில் மனிதனை இழுத்துச் செல்லும்இன்னொரு ஆற்றல் மனிதனிடம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பது நன்மையாஎனக் கேட்டால் அதில் உள்ளகேடுகளை நம்மை விட விரிவாக அவர் விளக்குவார்அவரது அறிவு புகை பிடிப்பதைத்தவறு என்று தீர்ப்பளித்த பிறகும் ஏன் புகை பிடிக்கிறார்தவறு எனக் கண்டு பிடித்தவுடன்அதை அந்த மனிதனால் ஏன் விட முடியவில்லைஎனச் சிந்தித்தால் அறிவுக்குப் பெரியஆதிக்கம் ஏதுமில்லை என அறியலாம்.
திருடுபவன்மது அருந்துபவன்கொலை செய்பவன் என பல்வேறு தீமைகளில்மூழ்கியிருப்போர்க்கு அவை தீமைகள் என்று அவர்களின் அறிவுகள் உணர்த்துகின்றன.உணர்த்துவதைத் தவிர அவர்களது அறிவால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.செவிடன் காதில் ஊதிய சங்காக இதை மனிதன் 

எடுத்துக் கொள்கிறான்.

சர்வாதிகார நாட்டின் அதிபருக்கும்ஒரு பள்ளிக் கூட வாத்தியாருக்கும்  எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ அதை விட அதிக வித்தியாசம்  மனிதனின்
அறிவுக்கும் அவனை இயக்கும் மற்றொரு சக்திக்கும் இருக்கிறது.
பள்ளிக்கூட வாத்தியார் நல்லது கெட்டது இது எனச் சொல்லித் தருவார்அந்த வழியில்மாணவனை நடத்திச் செல்ல அவருக்கு ஆற்றல் இல்லைஒரு  
 சர்வாதிகாரி ஒருஉத்தரவின் மூலம் மனிதனை வழி நடத்திச் செல்வான்.

இந்த வகையில் அறிவு என்பது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாத 
பள்ளிக் கூடவாத்தியார் போன்ற பரிதாப நிலையில் உள்ளது.
எத்தனையோ விஷயங்கள் நன்மையானவை என்று மனிதனின் அறிவு 
கூறுகிறது.ஆயினும் அவற்றை அவன் செய்வதில்லைஅறிவு மூலம் நன்மையைக் கண்டு பிடிக்கமுடிந்ததே தவிர அவ்வழியில் மனிதனை வழி நடத்த 
முடியவில்லை.
காரல் மார்க்ஸுக்கு இது தெரியா விட்டாலும் நம் அனைவருக்கும் இது கண் 
கூடாகத்தெரிகிறதுநாமே கூட நமது அறிவை இப்படித் தான் நடத்துகிறோம்.


அறிவு சொல்லும் பாதையில் மனிதனை நடத்திச் செல்ல அவனை விட வலிமையானஒரு சக்தியை நம்ப வேண்டும்தவறுதீமை எனத் தெரிந்தவற்றை நாம் செய்தால்நம்மை ஒருவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை மட்டுமே அறிவுக்கு மரியாதையைப்பெற்றுத் தரும்.
இது முதல் விஷயம்எல்லா விஷயத்திலும் நன்மையையும்தீமையையும் அறிவுகண்டு பிடித்து விடுகிறதா என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.
இரண்டு அறிவாளிகள் ஒரு விஷயத்தை தீமை என்று முடிவு செய்வதில் மாறுபட்டகருத்துக் கொள்கின்றனர்இவர்களில் ஏதோ ஒருவரது அறிவு தவறான முடிவை அவருக்குக் காட்டியுள்ளதுபுதிய பொருளாதாரக் கொள்கை நன்மை பயப்பது எனவாதிடுவோரும்தீமை பயப்பது என வாதிடுவோரும் முட்டாள்கள் அல்லர்மாபெரும்மேதைகள் தான் முரண் பட்ட இவ்விரண்டு வாதங்களையும் முன் வைக்கின்றனர்.

இவ்விரண்டும் ஒரு சேர உண்மையாக இருக்க முடியாதுஏதோ ஒன்று தான் 
இதில்உண்மையாக இருக்க முடியும்அப்படியானால் ஒரு தரப்புடைய  
அத்தனைஅறிவாளிகளின் அறிவும் அவர்களுக்குச் சரியான முடிவைக் காட்ட வில்லை என்பது தெளிவு.
வட்டி ஒரு வன்கொடுமை என வாதிடும் காரல் மார்க்ஸும்வட்டி  ஒரு வணிகமே எனக்கூறுவோரும் அறிவாளிகள் தாம்முரண்பட்ட இவ்விரண்டில் எது சரியானது எனவைத்துக் கொண்டாலும் ஒரு சாரரின் அறிவு சரியானதைக் கண்டு பிடிக்கவில்லைஎன்பது உறுதி.

அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உடைய விஷயங்கள் ஆயிரமாயி 
ரம் உள்ளனஇதிலிருந்து மனித அறிவின் லட்சணத்தை அறிந்து கொள்ளலாம்
அறிவாற்றல் தான் எல்லாமே என்பது ஒரு மாயைமார்க்ஸ் வழி   வந்த ரஷ்யாவே மார்க்ஸை ஏன் ஓரம் ட்டியதுமார்க்ஸுக்குச் சரி   எனப்பட்டது அவர் வழிவந்தவர்களுக்கே தவறு எனப்பட்டது ஏன்

என்றெல்லாம் சிந்தித்தால் அறிவுமமதையிருந்து விடுபட்டுஆன்மீக  நெறியின் மூலம் மனிதன் தன்னைபக்குவப்படுத்துவதன் அவசியத்தை 
உணரலாம்.


பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து

No comments:

Post a Comment