பக்கங்கள் செல்ல

Tuesday, May 12, 2020

கிறித்தவம் கூறும் திருமண வயது:

     

      நாம் சென்ற தொடர்களில் நபி(ஸல்)- ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம் தொடர்பாகவும், அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும், அதன் தெளிவான மறுப்பையும் கண்டோம். வரும் தொடர்களில் பால்ய விவாகம் குறித்து இஸ்லாமின் நிலைபாட்டினை விளக்கவுள்ளோம். நாம் இஸ்லாமின் திருமண வயது குறித்த நிலையினை விளக்கும் முன்னர், ஏனைய சமூகங்கள், மதங்கள், கலாச்சாரங்களில் காணப்படும் திருமண வயது குறித்த விவரங்களை முதலில் பார்ப்போம். இதன் மூலம் இஸ்லாத்தின் திருமண வயது குறித்த நிலைபாடு எவ்வளவு தெளிவாக நேர்த்தியாக அல்லாஹ்வால் வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிய முடியும் இன் ஷா அல்லாஹ்.

கிறித்தவம் கூறும் திருமண வயது:
            ஏனைய மதங்கள் பெண்ணின் திருமண வயது குறித்து என்ன கூறுகிறது என்பதை நாம் கிறித்தவ மதத்தில் இருந்து ஆரம்பிப்போம்.பொதுவாக நபி(சல்) - ஆயிஷா(ரலி) திருமணம் குறித்து அதிகமாக அவதூறு பரப்புவதிலும், இஸ்லாமின் திருமண வயது குறித்து அதிகமாக விமர்சனம் செய்வதிலும் முன்னிலை வகிப்பவர்கள் இவர்கள்தான். ஆக இவர்களது பைபிளில் திருமண வயது குறித்து அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது என்பதையும்,அந்த வரைமுறையை அவர்களே பின்பற்றுகிறார்களா என்பதையும் காண்போம்.

         நாம் பெண்ணின் திருமண வயது குறித்து பைபிளில் ஏதேனும் உள்ளதா என்பதை அறிய பைபிளை புரட்டிய போது ஒரு வசனமும் இது குறித்து நேரடியாக பேசுவதாக இல்லை என்பதை அறிந்தோம். கிட்டத்த்ட்ட 31102 வசனங்களை கொண்ட பைபிளில் ஒரு வசனம் கூட குடும்ப வாழ்வின் அடிப்படையான திருமணத்தின் வயது குறித்து பேசவே இல்லை என்பது நகைப்புக்குரியது. ஏனைய மதங்களையும், கலாச்சாரத்தையும் எள்ளி நகையாடும் இந்த கிறித்தவர்களின் வேதாகமத்தில் இது குறித்து நேரடியாக பேசும் ஒரு வசனமும் இல்லை என்பதை மனதில் ஆழமாக பதிந்து கொள்ளுங்கள்.  இறை வேதம் என்றும் பாராமல் கூட்டல், கழித்தல் செய்த மனித கையாடலைத்தான் இப்படிப்பட்ட நிலை தோழுரித்து காட்டுகிறது.
           
            ஆனால் கிறித்தவர்கள் தங்களது வேதாகமம் பெண்ணின் திருமண வயது குறித்து உவமையாக பேசுகிறது என்று கூறி வருகின்றனர்.அத்தகைய ஒரே ஒரு வசனம் நமக்கு கிடைத்தது. அது அப்படி என்னதான் கூறுகிறது என்று பார்ப்போம்.

(Eze 16:4) எருசலேமே, உன் பிறந்த நாளில் உன் தொப்புள் கொடியை அறுக்க யாருமில்லை, உன் மீது உப்பினைப் போட்டு உன்னைக் கழுவிச் சுத்தப்படுத்திட எவருமில்லை. எவரும் உன்னைத் துணியில் சுற்றவில்லை.

(Eze 16:5) எருசலேமே, நீ தனிமையாக இருந்தாய். உனக்காக எவரும் வருத்தப்படவில்லை. உன்னை ஆதரிக்க எவருமில்லை. எருசலேமே, நீ பிறந்த நாளிலே உன் பெற்றோர் உன்னை வயல்வெளியில் வீசினார்கள். நீ அப்பொழுதும் பிறந்தவுடன் உன்மேலுள்ள இரத்தத்தில் கிடப்பதைப் பார்த்தேன்.

(Eze 16:6) ‘பிறகு நான் (தேவன்) கடந்து போனேன். அங்கே நீ இரத்தத்தில் கிடப்பதைப் பார்த்தேன். நீ இரத்தத்தால் மூடப்பட்டிருந்தாய். நான் ‘நீ பிழைத்திரு!” என்றேன். ஆம் நீ இரத்தத்தால் மூடப்பட்டிருந்தாய். ஆனால் நான் ‘நீ பிழைத்திரு!” என்று சொன்னேன்.
(Eze 16:7) வயலில் வளரும் செடியைப்போன்று நீ வளர நான் உதவினேன். நீ இளம் பெண்ணானாய். நீ மேலும் மேலும் வளர்ந்தாய். உனது மாதவிலக்குத் தொடங்கியது. உனது மார்புகள் வளர்ந்தன. உனது முடி வளரத்தொடங்கியது. ஆனால் நீ அப்பொழுதும் நிர்வாணமாக இருந்தாய்.
(Eze 16:8) நான் உன்னை முழுவதாய் பார்த்தேன். நீ மணம் செய்ய தயாராக இருப்பதைப் பார்த்தேன். எனவே நான் எனது ஆடைகளை உன்மேல் விரித்து உனது நிர்வாணத்தை மறைத்தேன். நான் உன்னை மணந்துகொள்வதாய் வாக்களித்தேன். நான் உன்னோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தேன். நீ என்னுடையவளானாய்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்
           கர்த்தர் உவமையாக எருசலேம் குறித்து இப்படி கூறுகிறார். அதாவது கர்த்தார் எருசலேமை பெண் குழந்தையாக பார்க்கிறார். அந்த குழந்தை பெரிதாகி மார்புகள் வளர்ந்து, முடிகள் வளரத் துவங்கியது.அதை கண்டு கர்த்தர் திருமணம் செய்கிறார். இதில் “உனது மாதவிலக்கு தொடங்கியது" என்பது தமிழ கிறித்தவ மிசனரிகளின் கைச்சரக்கு. ஆக நாம் இது குறித்த வார்த்தை அந்த வசனத்தில் இடம் பெறுகிறதா என்று தேடிய போது அந்த வசனத்தில் அத்தகைய வார்த்தைகள் எதுவும் இல்லை. மாறாக அதில் இடம் עֲדִי ‛ădı̂y ad-ee' பொருளை தேடிய போது Strongs Hebrew and Greek Dictionary பின்வரும் பொருளை தருகிறது

H5716  עֲדִי ‛ădı̂y ad-ee'  From H5710 in the sense of trappings; finery; generally an outfit; specifically a headstall: - X excellent, mouth, ornament.

        இந்த வார்த்தையைத்தான் இவர்கள் மோசடியாக மாதவிலக்கு ஏற்பட்டது என்று மொழியாக்கம் செய்துள்ளனர். ஆக மாதவிலக்கு என்பது பற்றி எந்த குறிப்பும் அந்த வசனத்தில் இல்லை. ஆக இது குறித்து ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம். 

BIBLE TRANSLATION
Ezekiel 16:7
(ABP+)
Be multiplied!G4129 [3asG2531 4theG3588 5risingG395 6of theG3588 7fieldG68 1I have madeG1325 2you].G1473 AndG2532 you were multiplied,G4129 andG2532 magnified,G3170 andG2532 enteredG1525 intoG1519 citiesG4172 of cities.G4172 G3588 Your breastsG3149 G1473 erected,G461 andG2532 G3588 your hairG2359 G1473 rose up;G393 but youG1473 G1161 wereG1510.7.2 nakedG1131 andG2532 indecent.G807
(ASV) 
I caused thee to multiply as that which groweth in the field, and thou didst increase and wax great, and thou attainedst to excellent ornament; thy breasts were fashioned, and thy hair was grown; yet thou wast naked and bare.
(CEV)
I took care of you, like someone caring for a tender, young plant. You grew up to be a beautiful young woman with perfect breasts and long hair, but you were still naked.
(ERV)
I helped you grow like a plant in the field. You grew and grew. You became a young woman: your periods began, your breasts grew, and your hair began to grow. But you were still bare and naked.
ESV)
I made you flourish like a plant of the field. And you grew up and became tall and arrived at full adornment. Your breasts were formed, and your hair had grown; yet you were naked and bare.
(ESV+) 
R9I made you flourish like a plant of the field. And you grew up and became tall R10and arrived at full adornment. Your breasts were formed, and your hair had grown; yet R11you were naked and bare.
(ISV) 
I made you increase like sprouting grain in the field. As a result, you multiplied greatly. Eventually, you reached the age when young women start wearing jewelry. Your breasts were formed, your hair had grown, but you were still bare and naked."'"
(KJV)
I have caused thee to multiply as the bud of the field, and thou hast increased and waxen great, and thou art come to excellent ornaments: thy breasts are fashioned, and thine hair is grown, whereas thou wast naked and bare.
(KJV+)
I have causedH5414 thee to multiplyH7233 as the budH6780 of the field,H7704 and thou hast increasedH7235 and waxen great,H1431 and thou art comeH935 to excellentH5716 ornaments:H5716 thy breastsH7699 are fashioned,H3559 and thine hairH8181 is grown,H6779 whereas thouH859 wast nakedH5903 and bare.H6181
(KJVA) 
I have caused thee to multiply as the bud of the field, and thou hast increased and waxen great, and thou art come to excellent ornaments: thy breasts are fashioned, and thine hair is grown, whereas thou wast naked and bare.
(MKJV)
I have caused you to multiply like the bud of the field, and you are grown, and you are great; and you come in the finest ornaments. Your breasts are formed, and hair is grown, yet you were naked and bare.
(TLV) 
I made you grow as myriads, like a branch of the field. You grew up, got tall and came to full adornment. Your breasts were formed, your hair sprouted. Yet you were naked and bare.

              ஆக மேற்குறிபிட்ட எந்த மொழியாக்கத்திலும் மாதவிலக்கு குறித்து இடம் பெற வில்லை. மார்புகள் வளர்ந்து , முடி வளர துவங்கினால் திருமணம் செய்யலாம் என்பதுதான் பைபிளின் நிலைபாடு. ஆக அவள் பூப்பெய்யாவிட்டாலும் திருமணம் செய்யலாம் என்பதுதான் பைபிளின் நிலைபாடு. இப்படி பட்ட ஒரு நிலையில் இருந்து கொண்டுதான் இஸ்லாமிய திருமண வயது குறித்த நிலைபாட்டை விமர்சித்து வருகின்றனர் இந்த கிறித்தவ மிசனரிகள். 
                இது போக ஒரு தந்தை தனது வயதுக்கு வராத தனது மகளை யாருக்கும் திருமணம் செய்விக்கலாம்(விற்கலாம்) என்று வேதாகம வசனம் குறிப்பிடுகிறது. இது குறித்து பார்ப்பதற்கு முன்பு யூதர்கள் (பழைய ஏற்பாடின் சொந்தக்காரர்கள்) பெண்ணின் வயதை எப்படி பிரிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து JEWISH ENCYCLOPEDIA பின்வருமாறு குறிப்பிடுகிறது.
In the case of females, the rabbinic law recognized several distinct stages: those of the "ketannah," from the age of three to the age of twelve and one day ; na'arah, " the six months following that period and the "'bogeret, "from the expiration of these six months.
                 மேற்குறிபிட்ட இந்த விளக்கத்தை கொஞ்சம் தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது யூத சட்டமானது பெண்ணின் வயதை மூன்று படிநிலைகளாக பிரிக்கிறது

1.கெட்டன்னா( ketannah) – இது மூன்று முதல் 12 வயது முடிந்து ஒருநாள் வரையிலான பருவம்.

2.நாரா(na'arah,)- முன்கூறப்பட்ட பருவத்தில் இருந்து 6 மாதங்கள்.

3.பொகெரெட்(bogeret,) -இது அதன் பின்னான முழுபகுதி.

            The ketannah might be given in marriage by her father, and the marriage was valid, necessitating a formal divorce if separation was desired. Her earnings and her findings, also, belonged Marriage to lier father, and he could annul her of Minors, vows and accept a divorce for her (Nid. 47a; Ket. 46b)........The bogeret was regarded as entirely independent of her father's will and was looked upon as an adult in all respects (Nid. 47a).(Jewish encyclopedia vol 8 P.No.270).
         மேற்குறிபிட்டத்தில் கெட்டன்னா, மற்றும் நாரா இவர்கள் இருவரும் தந்தையின் முழுகட்டுப்பாடில் இருப்பவர்கள். அவர்களுக்கு தந்தை திருமணம் செய்விப்பார். ஆனால் பொகெரெட்(bogeret,) சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர். தந்தையினில் இருந்தும் தனித்தவர்.  இப்போது பின்வரும் வேதாகம வசனம் கூறுவதை பாருங்கள்:
(Exo 21:7) “ஒரு மனிதன் தன் மகளை அடிமையாக விற்க முடிவு செய்தால், அவளை விடுதலை செய்வதற்குரிய விதிகள் ஆண் அடிமையை விடுவிப்பதற்கான விதிமுறைகளில் இருந்து மாறுப்பட்டவை.

(Exo 21:8) எஜமானுக்கு அப்பெண்ணிடம் விருப்பம் இல்லை என்றால், அப்பெண்ணை அவள் தந்தைக்கு மீண்டும் விற்றுவிடலாம். எஜமான் அப்பெண்ணை மணப்பதாக வாக்குறுதி அளித்தால் அப்பெண்ணை வேறு யாருக்கும் விற்கும் உரிமையை இழந்துவிடுவான்.
          என்ன ஒரு கேவலமான சட்டம். ஒரு தந்தை தனது மகளை விற்று ஒருவரோடு அனுப்பியும் விடலாம். அதுவும் எதற்கு???? ஒருவரின் மனைவியாக இருப்பதற்கு. (இது பொகெரெட் - அதாவது 13 வயதான பெண்ணிற்கு பொருந்தாது, ஏன்னென்றால் அவர் குறித்து தந்தைக்கு எந்த சுதந்திரமும் இல்லை.இதை கிறித்தவர்கள் மறுத்தால் பெண்ணுக்கு திருமணம் குறித்த எந்த சுதந்திரமும் இல்லை என்பது நிருபனமாகும்) ஆக இப்படி பூப்பெய்தாத பெண்ணை திருமணத்திற்காக விற்பது எந்த வகையான அறநெறி. இப்படியான ஒரு ஒப்பற்ற அறநெறியை வைத்துக்கொண்டுதான் இவர்கள் நபி(சல்)- ஆயிஷா(ரலி) திருமணத்தை விமர்சித்து வருகின்றனர்.

                 சரி மேலும் ஆய்வு செய்வோம் வேறு மக்கள் குறித்த நேரடி குறிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்று நாம் தேடிய போது ஈஷாக்-ரெபெக்காலின் திருமணம் கண்ணில் பட்டது. 

             அதாவது ரெபெக்கா 3 வயதில் ஈஷாக்கிறகு 40வயதில் திருமணம் முடித்து வைக்கப்பட்டார். இதுவும் நமது சொந்த கருதல்ல. இது பழைய ஏற்பாட்டின் சொந்த காரர்களான யூதர்களின் விளக்கமாகும்.
Our forefather Isaac was 37 years old when he was bound to the altar. (Gen. 21:34) "And Abraham dwelt in the land of the Philistines many days". These days were more than those he dwelt at Hebron, the latter were 25 years and the former 26 years. At that time, Rebecca was born. It follows that Isaac married Rebecca when she was 14 years old. (Seder Olam ,Creation to Jacob P.No:15)
                இது ஸெடர் ஓலாம்(Seder Olam) இல் பதியப்பட்ட செய்தியாகும் . அதாவது ஈஷாக் 37 வயதிருக்கும் போது ரெபக்காள் பிறந்தார். ஆனால் வேதாகமம் (Gen 25:20) ஈசாக்கிற்கு 40 வயதானபோது அவன் ரெபெக்காளை மணந்து கொண்டான். என்று கூறுகிறது. அப்படி இருக்கையில் எப்படி ரெபக்காவிற்கு வயது 14 ஆக் இருக்கும். இதை பற்றிய விளக்கத்தை HEINRICH W. GUGGENHEIMER பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

             In most French manuscripts and sources, the reading is "3 years old"; in few, we find "4 years."
        The reading "3 years" is quoted by Rashi (Gen. 25:20) and Tosafot (Yebamot 61b, s.v. pi)f who write: "Seder 'Olam teaches explicitly that she was three years old when Isaac married her and it is impossible to emend the text since we read there: 'Our forefather Isaac was 37 years of age when he was bound to the altar and at that time, Rebecca was born,' and it is written (Gen. 25:20) 'Isaac was 40 years old when he married Rebecca'." Once one accepts the reading "37 years " in the preceding paragraph, the unlikely conclusion that Rebecca went out alone to fetch water at the age of three seems to be inescapable.
     அதாவது என்ன கூற வருகிறார் என்றால் பல பிரஞ்சு மூலப்பிரதிகளில் மூன்று என்றுதான் உள்ளது. ஆனால் அவர் நீர் எடுக்கப்போனார் என்றிருப்பதால் அவருக்கு வயது மூன்றிருக்காதாம். இப்படி வேதாகம் வசனங்கள் தங்களுக்குள்ளாகவே முரணபட்டு குழப்பங்களை கொண்டிருக்கிறது. இன்னும் இவர்களது திருமணம் குறித்து Jewish Encyclopedia பின் வருமாறு கூறுகிறது.
          The Rabbis dis-agree as to the age of Rebekah at the time of her marriage to Isajic. The statement of the Seder 'Olam Rabbah (i.) and Gen. R. (Ivii. 1) that Abraham was informed of Rebckah's birth when he ascended Mount Moriah for the 'Akedaii, is interpreted by some as meaning that Rebekah was born at that time, and that consequently she was only three years old at the time of her marriage. Other rabbis, however, conclude from calculations that she was fourteen years old, and that therefore she was born eleven years before the Akedah. both numbers being found in different manuscripts of the Seder 'Olam Rabbah (com p. Tos. to Y'eb. 611j). The "Sefer ha-Yashar" (section "Hayye Sarah," p. 38a. Leghorn, 1870) gives Rebekah's age at her marriage as ten years.( Jewish Encyclopedia vol 10 P.No:338)
         இப்படி ரெபெக்காவின் வயதை கணக்கிடுவதில் ஆக குழப்பம் நிழவுகிறது. எப்படி விளக்கம் கொடுத்தாலும் நாம் இவர்களது தற்போதைய காலக்கண்ணாடி அணிந்து தற்போது இருக்கும் வயது வரம்பு அடிப்படையில் பார்த்தால் இது சிறுமி துஷ்பிரயோகம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அப்படி ஒரு மடத்தனமான வாதத்தை நாம் முன்வைக்கப்போவ தில்லை. அன்றைய மனித சமூக நிலை அப்படி இருந்தது. ஒரு பெண் பூப்பெய்ததும் திருமணம் செய்து கொடுத்ததால்தான் மனித இனம் இன்றும் அழியாமல் இருக்கிறது. 

“...Early marriage and procreation of children was the norm in Byzantium...One reason for the promotion of teenage marriage was the emphasis on the virginity of the bride. Another, unstated reason may have been the desire to make the most of the childbearing years; because of the high rate of infant mortality, a woman had to bear many children to insure the survival of a few. Furthermore, since many women died young (if they survived infancy, they had an average life expectancy of about thirty-five years), it behooved them to marry and begin producing children as soon as physically possible.”(1)
         அதாவது எவ்வளவு வேகமாக பெண், பிள்ளைகளை பெற்று எடுக்கிறாளோ மனித சமூகம் அந்த அளவிற்கு நிலைக்கும் என்பதை கருத்தில் கொண்டு மனித சமூகம் முன்வைத்த தீர்வுதான் பூப்பெய்ததும் திருமணம் என்பது. இது குறித்த அறிவு எல்லாம் இந்த அவதூறு பரப்பிகளிடம் இருக்க வாய்ப்பில்லை. 

      மேற்குறிபிட்டவை எல்லாம் பழைய ஏற்பாட்டின் காலம் என்று கிறித்தவர்கள் சமாளிக்கலாம் ஆனால் கிறித்தவம் வந்த பிறகும் 19ம் நூற்றாண்டு வரை இந்த நிலைதான் காணப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்த மிசோரி பல்கலைகழகம் பின்வரும் திருமண வயது அட்டவனையை வெளியிட்டுள்ளது.(2)

Age Limit in Age of Consent Laws in Selected Countries


 Country
1880
1920
2007
Austria
14
14
14
Belgium
-
16
16
Bulgaria
13
13
14
Denmark
12
12
15
England & Wales
13
16
16
Finland
-
12
16
France
13
13
15
Germany
14
14
14
Greece
-
12
15
Italy
-
16
14
Luxembourg
15
15
16
Norway
-
16
16
Portugal
12
12
14
Romania
15
15
15
Russia
10
14
16
Scotland
12
12
16
Spain
12
12
13
Sweden
15
15
15
Switzerland
various
16
16
Turkey
15
15
18
Argentina
-
12
13
Brazil
-
16
14
Chile
20
20
18
Ecuador
-
14
14
Canada
12
14
14
Australia



New South Wales
12
16
16
Queensland
12
17
16
Victoria
12
16
16
Western Australia
12
14
16
United States



Alabama
10
16
16
Alaska
-
16
16
Arizona
12
18
18
Arkansas
10
16
16
California
10
18
18
Colorado
10
18
15
Connecticut
10
16
16
District of Columbia
12
16
16
Delaware
7
16
16
Florida
10
18
18
Georgia
10
14
16
Hawaii
-
-
16
Idaho
10
18
18
Illinois
10
16
17
Indiana
12
16
16
Iowa
10
16
16
Kansas
10
18
16
Kentucky
12
16
16
Louisiana
12
18
17
Maine
10
16
16
Maryland
10
16
16
Massachusetts
10
16
16
Michigan
10
16
16
Minnesota
10
18
16
Mississippi
10
18
16
Missouri
12
18
17
Montana
10
18
16
Nebraska
10
18
17
Nevada
12
18
16
New Hampshire
10
16
16
New Jersey
10
16
16
New Mexico
10
16
17
New York
10
18
17
North Carolina
10
16
16
North Dakota
10
18
18
Ohio
10
16
16
Oklahoma
-
-
16
Oregon
10
16
18
Pennsylvania
10
16
16
Rhode Island
10
16
16
South Carolina
10
16
16
South Dakota
10
18
16
Tennessee
10
18
18
Texas
10
18
17
Utah
10
18
16
Vermont
10
16
16
Virginia
12
16
18
Washington
12
18
16
West Virginia
12
16
16
Wisconsin
10
16
18
Wyoming
10
16
16

Conservative Christians Kill Bill Banning Child Marriage In Kentucky
ஆக கிறித்தவம் ஆண்ட பல ஐரோப்பா, அமெரிக்க நாடுகளிலும் 19ம் நூற்றாண்டுவரை 10 வயதுதான் திருமண வயது எனும் போது, 1400 வருடங்கள் முன்புள்ள நிலையை இன்றைய அளவீடுகளால் அளக்க நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை படிப்பவர் அறிந்து கொள்வார். 

No comments:

Post a Comment