பக்கங்கள் செல்ல

Tuesday, May 12, 2015

வள்ளலாரின் ஜீவக் காருண்யம் - முரண்பாடுகள் நிறைந்ததா?

பனங்காட்டு நரி 

இன்றைக்கு மாமிச உணவுப் பழக்கத்திற்கு எதிராகப் பேசும் பலரில் அனேகம்பேர் திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களின் ஜீவக் காருண்ய விளக்கத்தைமுன்வைத்தே தங்கள் தரப்பு வாதங்களை வைக்கிறார்கள்வள்ளலார் அடிகள் ஜீவக் காருண்யம் குறித்து அப்படி என்னத்தான் சொல்லியிருக்கிறார்?


அடிகள் தம்முடைய ஜீவக் காருண்ய ஒழுக்கம்’ என்கிற விளக்கத்தின் முதற்பிரிவில் ஜீவக் காருண்யத்தை இரண்டாகப் பிரிக்கிறார்முதலாவது அபர ஜீவக்காருண்யம் இரண்டாவது பர ஜீவக் காருண்யம்அபர ஜீவக் காருண்யம் என்பதுபசி மற்றும் கொலை தவிர்த்த தாகத்தால்பிணியால்இச்சையால்பயத்தால்,எளிமையால் மற்ற மனிதர்களுக்கு ஏற்ப்படும் துன்பத்தை போக்குவது.

பர ஜீவக் காருண்யம் என்பது பசி மற்றும் கொலையால் மற்ற மனிதர்களுக்குஏற்ப்படும் துன்பத்தைப் போக்குவதுசக மனிதர்களின் துன்பங்களைபோக்குவதே ஜீவக் காருண்யம் என்கிறார் அடிகள்அதிலும் சக மனிதனின்பசியைப் போக்கும் பர ஜீவக் காருண்யமே மிக மிகச் சிறந்ததும்முக்கியமானதும் என்கிறார்தாகம்பிணி(நோய்), பயம்எளிமைஇச்சைஇதையெல்லாம் எப்படிப்பட்ட ஏழ்மை நிலையில் இருப்பவரும் கூட குறைந்தபட்சம் தானே முயன்று போக்கிக்கொள்ளலாம் ஆனால் பசியை மாத்திரம்என்ன செய்தாலும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களால் தாமே முயன்றுபோக்கிக்கொள்ள முடியாது.

அதனால் ஏழ்மையில் இருக்கும் சக மனிதனுக்கு பசி துன்பத்தை போக்குவதேஜீவக் காருண்யத்தில் மிகச் மிகச் சிறந்து என்கிறார் அடிகள்நிச்சயமாக சகமனிதனின் துன்பங்களை கண்டு கலங்குகம் அனைவரும் இதில்உடன்படத்தான் செய்வார்கள்அடுத்து அடிகள் உயிர் கொல்லாமைப் பற்றிப்பேசுகிறார்இதில் பூலால் உணவுப் பற்றி விளக்குகிறார்ஒரு உயிரைக்கொன்றுத் தின்பது கடவுள் தன்மை அற்றது என்கிறார்.

ஜீவக் காருண்யம் குறித்த விளக்கங்கள் அனைத்தும் அடிகளே கேள்விகளைஎழுப்பி அதற்கு பதில் சொல்லும் வகையில் எழுதப்பட்டிருக்கிறதுஅதில்பூலால் உணவு மற்றும் சைவ உணவுக் குறித்த கேள்விகளையும் எழுப்பி பதிலும்தருகிறார்இங்குதான் முறன்பாடுகள் தோன்றுகின்றன
மனிதர்கள் தங்களின்தேவைக்காக விலங்குகளை உணவாகக் கொள்வது தெய்வத் தன்மை அற்றதுஎன்கிறார்அதேப் போல் புலிசிங்கம் போன்ற மிருகங்களும் தங்களின்உணவிற்காக விலங்குகளை சாப்பிடுவது தெய்வத் தன்மை அற்றச் செயல்என்கிறார்.
அதாவது இறைவனின் படைப்பான புலிசிங்கம் போன்ற மிருகங்கள் மற்றவிலங்குகளை கொல்வதற்காகப் படைக்கப்படவில்லை என்றும் அவைகள்இடையிலேயே மற்ற விலங்குகளை கொன்று சாப்பிடும் பழக்கத்தைஏற்படுத்திக்கொண்டதாகவும் சொல்கிறார்பிறகு அவரே இப்படி கேள்வியும்எழுப்புகிறார்அதாவது மற்ற விலங்குகளை கொன்றுத் திண்றாலும் புலி,சிங்கம் போன்ற மிருகங்கள் மகிழ்ச்சியாகத்தானே இருக்கின்றன அது எப்படிஎன்று.

இதற்கு அடிகள் சொல்லும் பதில் திருப்திகரமானதாக இல்லைஅதாவதுஅப்படித் தோன்றினாலும் அது இயற்க்கைக்கு மாறானது என்கிறார்.எவ்வகையில் புலி மற்றும் சிங்கம் போன்ற விலங்குகள் மற்ற விலங்குகளைக்கொன்று சாப்பிடுவது இயற்க்கை மாறானது என்று விளக்காமல் இருளால் ஒளிவிளங்காது என்று மொட்டையாக முடித்துவிடுகிறார்அடுத்து தாவரங்களும்உயிர்கள்தானே என்று கேள்வி எழுப்பி பதில் தருகிறார்.

மரம்புல்நெல் முதலானத் தாவரங்களும் உயிர்கள்தான் என்றுஒப்புக்கொள்ளும் அடிகள்அவைகளைக் கொன்று சாப்பிடுவதும் தவறுதான்என்கிறார்

அப்படி தாவரங்களை கொன்றுத் தின்னும் வரும் மகிழ்ச்சியும்கடவுள் தன்மைக் கொண்டதல்ல என்றுவிட்டு உடனடியாக அப்படியல்ல என்றுமறுத்தும் விடுகிறார்தாவரங்களுக்கும் உயிர் உண்டு ஆனால் அவைகளைசாப்பிடுவது கடவுள் தன்மைக்கு எதிரானது அல்ல என்பதற்கு அவர் சொல்லும்விளக்கங்கள் ஒவ்வொன்றும் மிக மிக தட்டையாக இருக்கிறது.

மரம்புல்நெல் போன்ற தாவரங்கள் ஒரு சீவன் கொண்ட உயிர்கள் என்கிறார்.இந்த ஒரு சீவ உயிர்கள் தோன்றும் வித்துக்கள் அதாவது விதைகள் சடப்பொருள் என்கிறார்அந்த சடப் பொருளான விதைகளை நாம் பயிர்செய்தால்தான் அவற்றிர்கு உயிர் வருவதாக சொல்கிறார்விதைகள் தாமேமண்ணில் விழுந்து முலைப்பதுப் பற்றி ஏனோ அடிகள் வாய்த் திறக்கவில்லை.

மேலும் விதை முலைத்து அதில் வரும் காய்கனிகிழங்கு இவைகளைமாத்திரமே உண்டு அந்த விதையை அப்படியே இருக்கவிடுவதால் அது உயிர்கொலையாகாது என்கிறார்ஒரு தாவரத்தின் காய்கனிகிழங்கு ஆகியவைகள்மனிதனின் முடிநகம் மற்றும் சுக்கிலம் போன்றவைகளுக்கு நிகரானதுஎன்கிறார்மனிதர்களின் முடிநகம் போன்றவைகளை வாங்கும்போதுதுன்பம் உண்டாகாததுப் போல ஒரு விதையிலிருந்து தோன்றும் தாவரத்தின்காய் கனிகளைப் பறிப்பதும் அந்த தாவரத்திற்கு துன்பம் தராது என்கிறார்.

அடிகளின் விளக்கப்படி ஒரு மனிதனின் முடிநகம் ஆகியவற்றை வாங்குவதுஎன்றால் முடி வெட்டிக்கொள்வதும்நகம் வெட்டிக்கொள்வதுமாகும்சரிஅப்படியே வைத்துக்கொண்டாலும் முடியையும் நகத்தையும் பாதியாகவெட்டினால்தான் மனிதனுக்கு வலியெற்படாது தாவரத்திலிருந்து காய்கனிகளைப் பறிப்பதுப்போல மனிதனின் முடியையும் நகத்தையும் உடலில்இருந்து மொத்தமாகப் பறித்தால் என்னாவதுமனிதன் வலித் துன்பத்தால்துடித்தேப் போகமாட்டான்?

அப்படியானால் முடியையும் நகத்தையும் மனித உடலில் இருந்து மொத்தமாகஅப்படியேப் பறித்தால் மனிதன் துடித்துப்போவதுப்போல்தானே தாவரங்களும்தங்களுடைய முடி நகம்போன்ற காய் கனிகளை அப்படியேப் பறித்தால்வலியால் துடி துடித்துப்போகும். 
 அடிகளின் விளக்கப்படி தாவரங்களுக்குவலியுண்டாக்காமல் காய் கனிகளைப் பறிக்கவேண்டுமானால் - முடியையும்நகத்தையும் பாதியாக வெட்டி எடுப்பதைப்போல - அவைகளை பாதிப்பாதியாகத்தான் வெட்டி எடுக்கவேண்டும்.

ஆனால் மனிதர்கள் காய் கனிகளை பாதி பாதியாகவா செடிகளில் இருந்துவெட்டியெடுக்கிறார்கள்முழுதாக அல்லவா பறித்து பிடுங்குகிறார்கள்........

No comments:

Post a Comment