- மனித தும்மிலிருந்து வரும் காற்று மணிக்கு 100 மைல் வேகத்தில் பயணிக்க முடியும்
- கடுமையான தும்மலால் விலா எலும்பு உடையக்கூடும்
- தும்மலின் போது மூக்கு மற்றும் வாயை மூடிக்கொண்டு தும்மினால், நுரையீரலிலிருந்து காற்று வெளியாக முடியாமல் மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும். மரணம் கூட ஏற்படலாம்.
- தும்மலின்
போது, இருதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைகின்றது..அந்த
ஒரு நொடியில் இருதயம் நின்று போகலாம்
பக்கங்கள் செல்ல
1.மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்
2.அர்த்தமுள்ள கேள்விகள், அறிவு பூர்வமான பதில்கள்!
3.பறையோசை வேர்ட்பிரஸ்-ஆரம்பத்தை நோக்கி தொடருக்கான எதிர் தொடர்
4.உடைந்த சிலுவை
5.உயிர் ஓர் ஆய்வு
6.பரிணாமம் : உண்மையா ஊகமா
7.பரிணாமம் (பல எழுத்தாளர்கள்)
8.இஸ்லாமும் பால்யவிவாகமும்
9.குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கபட்டுள்ளது
10.புதிய ஏற்பாடும் குறைவில்லா குளறுபடிகளும்
1.உடைந்த சிலுவை-பாகம் 1:அறிமுகம்
2.உடைந்த சிலுவை-பாகம் 2: பழைய ஏற்பாடும் கிரேக்க செப்டகணும்
3.உடைந்த சிலுவை-பாகம் 3: பைபிலின் மூலங்கள் ஒரு பார்வை
4.உடைந்த சிலுவை-பாகம் 4: பழைய ஏற்பாடு ஆகமங்களின் எழுத்தரகள்
5.உடைந்த சிலுவை-பாகம் 5: புதிய ஏற்பாடு: ஒர் அறிமுகம்
6.உடைந்த சிலுவை-பாகம் 6: புதிய ஏற்பாடு ஆகமங்களின் எண்ணிக்கை
7.உடைந்த சிலுவை-பாகம் 7: மாற்கு சுவிஷேசம்
8.உடைந்த சிலுவை-பாகம் 8: மார் ஷபா கடிதம்
9.உடைந்த சிலுவை-பாகம் 9: ஏக இறைவனுக்கு வழிபட்ட முதலாம் நூற்றாண்டு முஸ்லிம்கள்
10.உடைந்த சிலுவை-பாகம் 10: போந்தியு பிலாத்தும் இரண்டு ஏசுவும் !!!!!!!!
11.உடைந்த சிலுவை-பாகம் 11: பழைய ஏடுகளில் ஏசுவின் சிலுவை மரணம் மறுக்கப்பட்டதா?
12.உடைந்த சிலுவை-பாகம் 12: கிறித்தவமும் பேய்வணக்கமும்
13.உடைந்த சிலுவை-பாகம் 13: இஸ்லாம் கூறும் யூத கிறித்தவ வேதம்
14.உடைந்த சிலுவை-பாகம் 14: மெசோரெடிக் ஏடுகளும் பழைய ஏற்பாடும்
15.உடைந்த சிலுவை-பாகம் 15: மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள புதிய ஏற்பாடு மூல கையெழுத்து பிரதிகள்
16.இஸ்லாமிய ஆவணங்கள் கூறும் இன்ஜீல்
17.புதிய ஏற்பாட்டின் மொழி குழப்பமும் அது ஏற்படுத்தும் சிக்கலும்
18.ஒத்தமை நற்செய்தி நூல்களும் அது குறித்த அனுமானக் குழப்பங்களும்
19.நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்
20.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மத்தேயுவின் படியான சுவிஷேசம்
21.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மாற்கின் படியான சுவிஷேசம்
22.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- லூக்காவின் படியான சுவிஷேசம்
23.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யோவானின் படியான சுவிஷேசம்
24.கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்
25.திருச்சபை பிதாக்களின் மேற்கோள்களும் காணாமல் போன தேவ வாக்குகளும்
26.பவுலின் கடிதங்களின் தொகுப்பும் குழப்பமும்
27.பவுலிய கடித தொகுப்பு குறித்த அனுமானமும் அது பலிதீர்த்த பவுலும்
28.பவுலிய கடிதங்களும் இடைச்செருகல்களும்
29.சர்ச்சைக்குரிய பவுலிய கடிதங்கள்
30.கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யாக்கோபின் நிருபம்
31.யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்
32.யாக்கோபின் நிருபமும் சிக்கலை உருவாக்கும் அதன் கிரேக்கமும்
Thursday, August 8, 2019
தும்மலின் போது இறைவனைப் புகழ்வது ஏன்?
Monday, February 27, 2017
"பெண் சிசுக்கொலை" - மதங்கள் என்ன சொல்கின்றன?
ஹிந்துயிசம் - ஹிந்து மத பிரமுகர்கள் கண்டித்த போதிலும், மத/வேதங்கள் இது தொடர்பாக என்ன சொல்கின்றன என்ற விபரம் இல்லை. வேதங்களில் இது தொடர்பான விபரம் அறிந்தவர்கள், ஆதாரத்துடன் பதிவு செய்யுங்கள்.
இந்திய சட்டத்தில் தடை உள்ளது ஆனால் இந்த சட்டம் "ஹிந்து மத" சட்டம் அல்ல.
கிறித்துவத்திலும், யூத மதத்திலும் கண்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான திருக்குர்ஆன் வசனம்:
" என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது" [81:8-9]
"வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்." [17:31]
மனித சட்டங்களால் மட்டும் இவைகளை தடுத்து நிறுத்த முடியாது.
இஸ்லாம் எப்படி இதை அடியோடு ஒழித்தது என்று பார்ப்போம்.
பெண் குழந்தைகளைக் கொல்பவர்களின் முக்கியமான காரணம் பொருளாதார சுமை மட்டுமே.அந்தக் கவலை தீர்க்கப்பட்டால் இவை அடியோடு ஒழிந்துவிடும்.
1. வறுமைக்கு பயந்து அவர்கைளக் கொல்லாதீர்கள் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம் என்ற உறுதிமொழியை இறைவன் அளிக்கின்றான். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவானது. எந்த நிலையிலும் உயிரை எடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.
2. மீறிச் செய்தால், இறைவனின் நீதிமன்றத்தில் நீங்கள் குற்றவாளியாக நிறுத்தப்படுவீர்கள். அப்போது "என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் " என்று உங்களிடம் விசாரிக்கப்படும்.
ஒன்று பொருளாதார உத்திரவாதம் - இரண்டு குற்றத்திற்க்கான தண்டனை. மன நல ரீதியான இந்த போதனை, 100% சதவீத வெற்றியைக் கொடுத்தது.
Ref:http://www.bbc.co.uk/ethics/abortion/medical/infanticide_1.shtml
Tuesday, December 29, 2015
தும்மலில் ஒளிந்துள்ள தத்துவம்!
இஸ்லாம் மதம் அல்ல, ஒரு முழுமையான வாழ்க்கைச் சட்டம் என்று அறிந்து இருப்பீர்கள்... அதே போல் தான் ஒவ்வரு மதத்தைப் பின்பற்றுபவர்களும் சொல்கின்றனர்...இது எந்த அளவிற்கு சரியானது என்பதை ஆராய இந்த பதிவு ஒரு அளவுகோல்.
இஸ்லாத்தைப் பொருத்தவரை, ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்துச் சட்ட திட்டங்களையும் தெளிவாக தந்து விடுகின்றது... வேறு எந்த ஒரு சட்டமும் தேவையில்லாத அளவிற்கு ஒரு முஸ்லிம் எந்தக் காலத்திலும், சூழலிலும் வாழ முடியும், வாழ வேண்டும். இதன் ஒரு பகுதியாக, "தும்மல்" எப்படி மக்களால் எதிர்கொள்ளப்படுகின்றது என்பதை ஆராயுங்கள்.
அமெரிக்காவில் ஒருவன் தும்மினால், தும்மியவன் எதுவும் சொல்லாவிட்டாலும், அதைக் கேட்பவர்கள் "God Bless You" (இறைவன் அருள் புரியட்டும்) என்று சொல்வான்.
தும்மல் ஏற்பாட்டால் உலகில் உள்ள மக்கள் அனைவரும் மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மொழி, கலாச்சாரத்தின் அடிப்படையில் அணுகுகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் தான், உலகம் முழுவதிலும் ஒரே மாதிரியான அணுகுமுறை.
முஸ்லிம் தும்மினால், "எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே" (அல்ஹம்துலில்லாஹ்) என்று சொல்வான்..அதைக் கேட்பவன், "உனக்கு இறைவன் அருள்புரியட்டும்" என்று சொல்வான். இது தான் ஆண்டிப்பட்டியில் உள்ள முஸ்லிமும், அமெரிக்காவில் உள்ள முஸ்லிமும் செய்கின்றான். அதுவும் இன்று நேற்றல்ல...1400 வருடங்களுக்கும் மேல், இன்னும் கடைசி முஸ்லிம் இருக்கும் வரை. இது எப்படி சாத்தியம்?
உலகில் எவ்வளவு மிகப் பெரிய தலைவராக இருந்தாலும் (அ) அரசாக இருந்தாலும் இது போன்ற காலத்தால் அழியாத, உலக மக்கள் அனைவருக்கம் ஏற்ற ஒரு பழக்கத்தை கொண்டு வரவே முடியாது. தும்மல் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே....இஸ்லாத்தின் எந்த சட்டத்தை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்... universal principal..
சமூகத்தில் உயர்ந்த்தவனுக்கு ஒரு கலாச்சாரம், தாழ்ந்தவனுக்கு ஒன்று அல்ல என்று நிரூபிக்கும் நெறி முறைகள்..
இறைவனால் மட்டுமே முடியும்... இஸ்லாம் சான்று பகிகின்றது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
குறிப்பு:"ரிதர்ந்கு" என்ற மொழி பேசும் மக்கள் மட்டும், தும்மியவனைப் பார்த்து, " நீ மூக்குத் தண்ணீரை வெளியாக்கிவிட்டாய்" என்று சொல்வார்களாம்.
மருத்துவ ரீதியாக சரியான முறையில் தும்முவது எப்படி?
Ref:Responses_to_sneezing
Saturday, May 30, 2015
பகவத் கீதை படிக்கும் முஸ்லிம் - 2
பகவத் கீதையை படிக்க ஆரம்பித்தவுடன் ஏற்படும் முதல் சிக்கல், எந்த மொழியாக்கம் சரியானது, ஆதாரப்பூர்வமானது என்பது தான்?
மூல மொழியோடு சில மொழிபெயர்ப்பு இருந்தாலும், அதிலும் சுய/சொந்த கருத்து திணிக்கப்பட்டுள்ளன.
ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கும் பொது, அதில் எது சிறந்த்தது என்று மொழிபெயர்ப்பாளர் நினைக்கின்றாரோ, அதை போடுவதற்கு அவருக்கு உரிமையுண்டு. சரி, இதற்காக சம்ஸ்கிருத அகராதி (dictionary) தமிழில் இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் ஒரு தளம் பார்த்தேன் (இன்னும் முழுமையாக இயங்கவில்லை)
உதாரணத்திற்கு, மேல உள்ள வசனம் சொல்கின்றது... "என்னையே வணங்குங்கள்" என்று இறைவன் சொல்வதாக. என்னையே வணங்குங்கள் எனும்போது மற்றவைகளை வணங்குவது தவறு என்று தானே பொருள்.
மற்றொரு வசனத்தில் (9:25), சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மிகத் தெளிவான வசனம்:
" தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்,
பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார்,
பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்,
என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்." (9:25)
அவர் கொடுத்த பதில்: நடுநிலைமையான மொழியாக்கம் ஒரு போதும் கிடைக்காது. அந்தந்தந்த குழுவின் கருத்திற்கு ஏற்ப, அதன் மொழியாக்கம் மாறுபடும்.
மாற்று மதத்தவர்கள், கீதையை ஒரு நடுநிலை கண்ணோட்டத்துடன் படிக்க ஆரம்பிக்கும் பொது, இந்த குழப்பங்கள் இன்னும் அதிகரிக்கும்.
மற்றொரு சகோதரர், நீங்கள் ஒரு சிறந்த குருவின் துணையோடு மட்டுமே படிக்க வேண்டும் என்றார். நல்ல கருத்து தான், ஆனால் குரு சொல்வது தான் 100% சரி என்று எப்படி முடிவு செய்வது. மனிதன் என்ற முறையில் அவரும் தவறுகள் செய்யலாம் அல்லவா. இதனால், இந்த கருத்தும் சரியானதாக தோன்றவில்லை.
இஸ்லாத்தை பொருத்தவரை, திருக்குர்ஆன் வேதமாக கொடுக்கப்பட்டு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே பூர்ணமாக்கப்பட்டது.
இறைவனின் தூதர் என்ற முறையில் அவர்கள் சொல்வது சரி என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இவர்கள் தான் இறை தூதர் என்று உறுதி படுத்த, அவர்கள் கொடுத்த வேதமே சான்று.
நபியை தவிர, வேறு எந்த மனிதரும் 100% சரி என்று சொல்ல முடியாது. இறைவனை அடையும் வழியை சொல்லும்போது, தவறான வழியை குரு சொல்லிவிட்டால், பாதிப்பு குருவோடு மட்டுமில்லாமல் நமக்கும் தான்.
நமக்கு முன்னே உள்ள சிறந்த வழிகள்:
1. நாமே சமஸ்க்ரிதம் படித்து, அதன் விளக்கத்தை அறிய வேண்டியது
2. பல மொழியாக்கங்களையும் ஆராய்ந்து, நமக்கு எது சரி என்று தெரிகின்றதோ , அந்த கருத்தை எடுத்துகொள்வது
3. எந்த வேதம் கரைபடாமல் ஏகத்துவத்தை மிக எளிமையாக உரைக்கின்றதோ அதன் அடிப்படையில் அணுகுவது
.
என்னை பொருத்தவரை இந்த மூன்றையும் இணைத்து ஆராயும்போது, பல உண்மைகள் வெளி வரும் என்பது மட்டும் உறுதி.
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
நன்றி: நாடோடி தமிழன்
Ref: பகவத் கீதை படிக்கும் முஸ்லிம் - 1