பக்கங்கள் செல்ல

Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Sunday, April 17, 2016

ஏன் இனிமேல் புதிதாக உண்மையான இறைதூதர் வர முடியாது?

நபி (ஸல்) அவர்களின் கருத்துக்களை ஏற்காத மக்கள், நபி அவர்களை பலவாறு குற்றம் சாட்டி வந்தனர்.
  •  ஏமாற்றுபவர்
  •  பொய்யர்
  •  பைத்தியம் பிடித்தவர்
  •  சில கிருஸ்துவ அறிஞ்சர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று, "அவர் அன்றைய கிறிஸ்த்துவ கொள்கைக்கு எதிரான கிறிஸ்த்துவ பாதிரியார்...அரபு நாட்டிற்கு தப்பிச் சென்று மறைமுக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்"

உதாரணமாக, "ஒருவர் தற்போது தன்னை இறைவனின் தூதர் என்று சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரை மக்கள் எப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள்.. அனைத்திற்கும் அவர் பதில் சொல்லியாக வேண்டும். சொல்லப்படும் பதிலை வைத்தே, அவரின் ஏமாற்று வேலை தெரிந்துவிடும்."

நபி (ஸல்) அவர்களோ, சொல்லும் பதிலை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இல்லாமல் எழுத்துப் பூர்வமான ஆதாரத்துடன், எல்லா காலத்திலும் பரிசோதித்துக் கொள்ளக் கூடியதாக சொல்லியுள்ளார்கள் என்றால் அது மனிதனால் முடியாது.

இறைவனின் உதவியால் மட்டுமே முடியும்.
Ref Book: The Man in the Red Under Pants
Author: A.R.Green

Wednesday, August 12, 2015

"குரானை அவமதித்து விட்டதாக" குண்டர்களால் கொல்லப்பட்ட ஆப்கான் சகோதரி. நடந்தது என்ன? சம்பவமும், படிப்பினையும்!


சில   மாதங்களுக்கு முன்னால் , ஆப்கானிஸ்தானில், ஒரு பெண் குரானை அவமதித்ததாக குண்டர்களால் கொல்லப்பட்டாள்.

இந்தியாவில், முஷாபர் நகரில் பொய்யான ஒரு வீடியோவின் காரணத்தால், பல பேர் கொல்லப்பட்டு, பல பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டன.


முட்டாள்தனமும் , சுய சிந்தனையும், உண்மையான இறை நம்பிக்கையும்  இல்லாத மூடர்களால்/வெறியர்களால்  தான் இது போன்ற விளைவுகள்  ஏற்படும் என்பதற்கு இவைகள் சான்று.

முதல் சம்பவத்தில், இஸ்லாமிய சட்டம் பயின்ற அந்த பெண் துணிச்சலாக செய்தது, "தாவீஸ்" என்ற பெயரில் குரான் வசனங்களை எழுதி, அணிந்து வரும் மூட நம்பிக்கையை, அந்த தர்கா வாசலிலே எதிர்த்தது. அங்கு உள்ள தர்கா பொருப்புதாரியான ஜைனுதீன், ஆங்குள்ள  மக்களிடம், "இவள்  அமெரிக்காவின் ஏஜன்ட், குரானை அவமதித்து விட்டாள்",  என்று  திசை திருப்பிவிட்டான். இதை கேட்ட அந்த மூடர்கள் கூட்டம், அந்த சகோதரியை கொன்று விட்டது. (thanks:BBC)

இரண்டாவது சம்பவத்தில், எவனோ ஒரு ஹிந்து மத வெறியன், ஒரு வீடியோவை உண்மைக்கு மாறாக திசை திருப்பி, அபாண்டமாக ஒரு சமுதாயத்தின் மேல் வீண் பழி போட்டதால் ஏற்பட்ட விளைவு.

இதுபோன்று ஆயிரம் சம்பவங்கள் தினமும் நடந்து வருவதை நாம் பார்க்கின்றோம்.எதையும் சிந்திக்காமல், தன் மதம்/இனம்/மொழி/குடும்பம்/கட்சி   என்றவுடன், மூளையை கழற்றி விட்டு வெறிபிடித்து அலையும் கூட்டங்களால் தான் இந்த உலகம் அமைதியை இழந்து தவிக்கின்றது.

இது போன்ற சூழ்நிலையில், ஒரு நேர்மையுள்ள மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மிகத் தெளிவான அணுகுமுறை, திருக்குரானிலே காணலாம். மத வேறுபாடு கடந்து, மனித நேயம் விரும்பும் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய விடயம் இது.

உங்களிடத்தில் ஒரு செய்தி வருகின்றது.. எப்படி வந்தாலும் சரியே...யார் சொன்னாலும் சரியே... அதை முதலில் 100 சதவீதம் உண்மையா என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். அப்படியே ஏற்று அதன் காரணத்தால், மக்கள் பாதிப்புக்கு உள்ளானால், நீங்கள் தான் சட்டத்தின், மேலும் இறைவனின்  முன்பும் குற்றவாளி என்பதை இந்த வசனங்கள் மிகத்தெளிவாக சொல்கின்றன.

நம்பிக்கை கொண்டோரே! ஒருவன்  (பொய்யன்/குற்றம் புரிபவன்) உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். [49:6]

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். [4:135]

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். [5:8]
வாழ்கையின் அன்றாட பிரச்சனைகளில், மற்றவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல, என்று நம்பிக்கையின்மையிலும், உண்மைக்கு புறம்பாக அடுத்தவர்களின் சொத்தை அனுபவிப்பதிலும் "வெற்றி" பெற்றதாக எண்ணி தன் இரு உலக வாழ்க்கையையும் அழித்துக்கொண்டு வரும் "பெயர்தாங்கி" முஸ்லிம்கள் இந்த வசனங்களை தினமும் படித்து தங்களை திருத்திக்கொள்வது நல்லது.

Ref: http://www.bbc.com/news/magazine-33810338

Monday, July 6, 2015

மாற்று மதத்தை சேர்ந்தவர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ரமலான் நோன்பு!


" கடந்த 4 நாட்களாக, ஒரு மாற்று மத கண்ணோட்டத்தில் இதை அறிந்து கொள்ள, நான் நோன்பு வைத்து வருகின்றேன். மிகவும் சிரமமாக உள்ளது. வெளியில் இருந்து பார்ப்பதை விட, அனுபவிக்கும் போது  தான் அதன் கடினம் தெரிகின்றது. நோன்போடு இருக்கும் போது,  ஆவல் அதிகம் ஏற்படுகின்றது. ஆசையை அடக்குவது, இறை கட்டளையினால் நோன்பு வைக்கும் மக்களுக்கு உண்மையிலேயே உதவும்." (Khaleej Times நிருபர்)

"என்னுடைய நோன்பு வெற்றிகரமாக இருந்ததின் கரணம் என்னவென்றால், உணவின் அத்தியாயவசத்தையும், மேலும் சமுதாயத்தில் உணவின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது. உணவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, அது நெருக்கத்தை ஏற்படுத்துவதோடு, விருந்தோம்பலின் அடையாளமாகவும் உள்ளது." (Kevin Childress)

 உலக மக்கள் தொகையில் 4 ல் 1 நபர்  நோன்பு வைக்கின்றனர்  என்பதனால்,   அதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதில் மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
Japan Students Fasting

கடந்த சில வருடங்களாக இதன் விழிப்புணர்வு முஸ்லிம் அல்லாத மக்களிடம் அதிகரித்து வருகின்றது.  தன்னால் இயன்ற அளவிற்கு,  அவர்களும் நோன்பு வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, சில வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் உள்ள University of Tennessee (Knoxville), முஸ்லிம் மற்றும் முஸ்லிம்  அல்லாத 250 மாணவர்கள் , பட்டினி பற்றிய உலக கவனத்தை ஈர்ப்பதற்காகவும், உணவு செமிப்பகத்திர்க்கு நிதி உதவிக்காகவும் நோன்பு வைத்தனர்.

அதேபோல் அமெரிக்காவில் உள்ள வர்ஜினிய பல்கலைகழகம் (Virginia Commonwealth University - Richmond) 1800 மாணவர்கள் நோன்பு வைத்தனர்.
ஜப்பான், இங்கிலாந்து இன்னும் பல நாடுகளில் நோன்பு வைக்கும் ஆர்வம் அதிகரித்து கொண்டு வருகின்றன.

இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், என்னுடைய மாற்று மத நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்: குறைந்தது ஒரு நாலாவது நோன்பு வையுங்கள், நல்லதொரு ஆன்மீக பலனை உணர்வீர்கள்.

"நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது" [2:183]



அமெரிக்காவில் இப்தார்

அமெரிக்காவின் முதல் அரசு  இப்தார் விருந்து டிசம்பர் 9, 1805 ல் தாமஸ் ஜெபர்சன், துனிசியாவின் தூதர் சிதி சொலைமான் அவர்களை இரவு விருந்திற்கு அழைத்தபோது ஆரம்பித்தது.
Obama's Iftar Party

1996ல் கிளிண்டன் ஈத்-அல்-பித்ர்  விருந்து அளித்தனர். 2001ல் புஷ், வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து அளித்தார். ஒபாமா அதை தொடர்ந்தது விருந்து அளித்து வருகின்றார்.




Ref:

http://www.washingtonpost.com/rweb/life/a-month-of-fasting--and-feasting--for-muslims-in-the-nations-captial/2015/07/05/c6b19852-20c7-11e5-bf41-c23f5d3face1_story.html?tid=kindle-app


http://www.startribune.com/more-non-muslims-take-part-in-ramadan-in-minnesota/215010491/

http://www.beliefnet.com/Faiths/Islam/2006/10/Fasting-Friends.aspx#

http://www.khaleejtimes.com/kt-article-display-1.asp?xfile=data/ramadannews/2015/June/ramadannews_June86.xml&section=ramadannews

http://www.parliamentofreligions.org/news/index.php/2014/06/engaging-in-something-marvelous-a-non-muslim-learns-from-his-ramadan-fast/