பக்கங்கள் செல்ல

Showing posts with label வேதம். Show all posts
Showing posts with label வேதம். Show all posts

Saturday, May 30, 2015

பகவத் கீதை படிக்கும் முஸ்லிம் - 2


By Nadodi Tamilan 

பகவத் கீதையை படிக்க ஆரம்பித்தவுடன் ஏற்படும் முதல் சிக்கல், எந்த மொழியாக்கம் சரியானது,  ஆதாரப்பூர்வமானது  என்பது தான்?

மூல மொழியோடு சில மொழிபெயர்ப்பு  இருந்தாலும், அதிலும் சுய/சொந்த கருத்து திணிக்கப்பட்டுள்ளன.

ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கும் பொது, அதில் எது சிறந்த்தது என்று மொழிபெயர்ப்பாளர் நினைக்கின்றாரோ, அதை போடுவதற்கு அவருக்கு உரிமையுண்டு.  சரி, இதற்காக சம்ஸ்கிருத அகராதி (dictionary) தமிழில் இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் ஒரு தளம் பார்த்தேன் (இன்னும் முழுமையாக இயங்கவில்லை)


உதாரணத்திற்கு, மேல உள்ள வசனம் சொல்கின்றது... "என்னையே வணங்குங்கள்" என்று இறைவன் சொல்வதாக. என்னையே வணங்குங்கள் எனும்போது மற்றவைகளை வணங்குவது தவறு என்று தானே பொருள்.

மற்றொரு வசனத்தில் (9:25), சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மிகத் தெளிவான வசனம்:

" தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்,
  பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார்,
  பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்,
என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்." 
 (9:25)
முன்பு வந்த வேதங்களில் மனித கையாடல் ஏற்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை இருந்த போதிலும், ஏகத்துவத்தின் குரல் இங்கும் அங்கும் ஒழித்துக்கொண்டு தான் இருக்கின்றது.

இதுபோன்ற வசங்களின் கருத்துக்களை நண்பர்களுடன் விவாதிக்கும்போது , அவர்கள் எடுத்த எடுப்பிலே, அது சரியான கருத்து அல்ல என்கிறார்கள்.  இதோ இது தான் சரி என்று அவர்கள் சொல்லும் கருத்து, மற்ற மொழியாக்கங்களுக்கு நேரிடை மாற்றமாகவே உள்ளது.

இது என்னடா குழப்பமாக உள்ளதே, சரி நாமாவது இன்னும் சிறிது தேடலாம் என்று மிகவும்  நடுநிலைமையான,  ஆதாரப்பூர்வமான பகவத் கீதையின் ஆங்கில மொழியாக்கம்  எது, என்ற கேள்வியை நமது அருமை நண்பர் திரு.கூகுளிடம் கேட்டேன்.

அவர் கொடுத்த பதில்: நடுநிலைமையான மொழியாக்கம் ஒரு போதும் கிடைக்காது. அந்தந்தந்த குழுவின் கருத்திற்கு ஏற்ப, அதன் மொழியாக்கம் மாறுபடும்.

மாற்று மதத்தவர்கள், கீதையை ஒரு நடுநிலை கண்ணோட்டத்துடன்  படிக்க ஆரம்பிக்கும் பொது, இந்த குழப்பங்கள் இன்னும் அதிகரிக்கும்.

மற்றொரு சகோதரர், நீங்கள் ஒரு சிறந்த குருவின் துணையோடு மட்டுமே படிக்க வேண்டும் என்றார். நல்ல கருத்து தான், ஆனால் குரு சொல்வது தான் 100% சரி என்று எப்படி முடிவு செய்வது. மனிதன் என்ற முறையில் அவரும் தவறுகள் செய்யலாம் அல்லவா. இதனால், இந்த கருத்தும் சரியானதாக தோன்றவில்லை.


இஸ்லாத்தை பொருத்தவரை, திருக்குர்ஆன் வேதமாக கொடுக்கப்பட்டு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே  பூர்ணமாக்கப்பட்டது.
இறைவனின்  தூதர் என்ற முறையில் அவர்கள் சொல்வது சரி என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இவர்கள் தான் இறை தூதர் என்று உறுதி படுத்த, அவர்கள் கொடுத்த வேதமே சான்று.

நபியை தவிர, வேறு எந்த மனிதரும் 100% சரி என்று சொல்ல முடியாது. இறைவனை அடையும் வழியை சொல்லும்போது, தவறான வழியை குரு சொல்லிவிட்டால், பாதிப்பு குருவோடு மட்டுமில்லாமல் நமக்கும் தான்.

நமக்கு முன்னே உள்ள சிறந்த வழிகள்:

1.  நாமே சமஸ்க்ரிதம் படித்து, அதன் விளக்கத்தை அறிய வேண்டியது

2.   பல மொழியாக்கங்களையும் ஆராய்ந்து, நமக்கு  எது சரி என்று தெரிகின்றதோ , அந்த கருத்தை  எடுத்துகொள்வது

3. எந்த வேதம் கரைபடாமல் ஏகத்துவத்தை மிக எளிமையாக உரைக்கின்றதோ அதன் அடிப்படையில் அணுகுவது
.
என்னை பொருத்தவரை இந்த மூன்றையும் இணைத்து ஆராயும்போது, பல உண்மைகள் வெளி வரும்  என்பது மட்டும் உறுதி.

 நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

நன்றி: நாடோடி தமிழன்

Ref: பகவத் கீதை படிக்கும் முஸ்லிம் - 1

Friday, April 3, 2015

எதிர் தொடர் 4: வேத வெளிப்பாடு

எதிர் தொடர் 4: வேத வெளிப்பாடு

உங்களின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

இஸ்லாத்தின் மீது ஆதார பூர்வமற்ற வகையில்   சிலர்  இணையதளத்தில் குற்றச்சாட்டுகளை  பதிந்து வருவதற்கு மறுப்பு சொல்லும் விதமாக குரான் & ஹதீத் ஆதாரம் கொண்டு இங்கே விளக்கப்படுகின்றது. [refer]




குற்றச்சாட்டுகள் முதலில் கொடுக்கப்பட்டு, கீழே நமது பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

     குற்றச்சாட்டு 1: வஹீயா அருள்வாக்கா?





நமது பதில்:

      இந்த தொடரில் நமது அருமை கட்டுரையாசிரியர் நபி(ஸல்) அவர்களுக்கு வந்த வேத வெளிப்பாடு குறித்து விளக்கியுள்ளார். ஆனால் தான் ஒரு மிசனரியல்ல என்பதை மிகவும் பாடுபட்டு நிறுவ மிசனரிகளின் கருத்தில் இருந்து மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார். ஆம் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வேத வெளிப்பாடானது இது வரை வந்த தூதர்களின் வேத அறிவிப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அது சைத்தானால் தான் ஏற்ப்பட்டது என்று நிறுவ முயர்சிப்பர். இவர் அதே ஆதாரங்களை எடுத்து கொண்டு அருள்வாக்கு சாமியார் என்று கூறுகிறார். ஆனால் இவரது கூற்று அவர்களின் கூற்றைவிட மிக பலவீனமானது. மேலும் இந்த கட்டுரை ஆசிரியர் நபி(ஸல்) அவர்களின் வேதவெளிப்பாட்டிற்கு வேறு எந்த சாட்சியும் இல்லை என்று வேறு கூறுகிறார்.

இது அனைத்திற்கும்  ஹதிஸை பதிவு செய்து முழுமையாக விளக்கி விடலாம்.

ஸஹ்ல் இப்னு அஸ்ஸா இதீ(ரலி) அவர்கள் அறிவித்தார்
நான் மர்வான் இப்னு ஹசுமைப் பள்ளி வாசலில் பார்த்தேன். அவரை நோக்கிச் சென்று அவருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர், ஸைத் இப்ன் ஸாபித் (ரலி) (பின்வருமாறு) தமக்குத் தெரிவித்ததாக எங்களிடம் கூறினார்:
“இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்.(4:95) எனும் வசனத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் ஓதிக்காட்டி கொண்டிருந்தார்கள். அவர்கள் ஓதிக்காட்டி கொண்டிருக்கும் போது, இப்னு உம்மி மக்த்தும்(ரலி) வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னால் அறப்போர் புரிய முடிந்திருந்தால் அறப்போர்’ புரிந்திருப்பேன் என்று கூறினார். அவர் கண்பார்வையற்றவராக இருந்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொடை என் தொடை மீதிருக்க, அவர்களின் மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். எனவே, என் தொடை நசுங்கிப்போய் விடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு நபி(ஸல்) அவர்களின் தொடை என் மீது கனத்து விட்டது. பிறகு அந்நிலை அகன்றது..........
                              நூல்: புஹாரி 4592

ஹாரிஸ் பின் ஹிஸாம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் தங்களுக்கு வஹீ எப்படி வருகின்றது என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், அவையெல்லாம் (இப்படித்தான்) சில வேளைகளில் வானவர் (ஜிப்ரீல்) என்னிடம் மணியோசையைப் போன்று வருவார். அவர் கூறியதை நான் நினைவில் வைத்துக் கொண்ட நிலையில் அவர் என்னை விட்டுப் பிரிந்து விடுவார். இவ்வாறு வருவது எனக்கு மிகக் கடுமையான் சிரமம் தரக்கூடியதாக இருக்கும். சில வேளைகளில் அந்த வானவர் ஒரு மனிதரைப் போன்று காட்சியளித்து என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக் கொள்வேன் என்று பதிலளித்தார்கள்.
                                    நூல்: புஹாரி 3216

      ஆக இப்படி பட்ட சிரமான நிலையை எந்த அருள்வாக்கு சாமியாரும் அடைவதை பார்த்த்தில்லை. அருள் வாக்கு கூறும் சாமியார்கள் தங்களது உடலை முறுக்கி வித்தை காட்டலாமே தவிர உடலின் எடையை அதிகரிக்க முடியுமா. நபி(ஸல்) அவர்களுக்கு மனியோசை போன்று வஹீ வரும போது அவர்களது எடை அதிகரிக்கும் என்பதை பல ஹதிஸ்கள் கூறுகின்றன. இதோ ஒர் எடுத்துக்காட்டு

அஸ்மா பின்த் யசீத்(ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி(ஸல்) அவர்களின் ஒட்டகமான அல் அத்பாவின் கயிற்றை பற்றி கொண்டிருந்த போதுதான் நபி(ஸல்) அவர்களுக்கு சூரத் அல் மாயிதா வசனங்கள் அருளப்பட்டது. அப்போது அந்த ஒட்டகம் எடை தாங்க முடியாமல் கீழே அமர்ந்து விட்டது.
            அறிவிப்பாளர்: சஹர் பின் ஹுஸாப்(ரஹ்)
            நூல்: அஹ்மத், இப்னு கஸீரின் ஸீரத் அல் நபவிய்யா 1/308

அறிவிப்பாளர் தொடர்:

Asma' bint Yazid bin al-Sakan (rali)-->Shar bin Hushab al-Asha'ri(tabi) --> al-Lyth bin Abi Sulaym(tabi) -->     Abd al-jabbar bin S'aid Abu [Abu Mua'wiya](taba tabi)-->Amr bin Nadr Abu al-Nadr(taba tabi) --->Ahmad bin Hanbal [Abu 'Abdullah](3rd century earlier scholar)


     இதன் மூலம் தெரிவது நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிப்பானது வெளியில் இருந்துதான் வந்தது. அதை சஹாபக்கள் கண்டுள்ளனர் என்பது தெளிவு. ஆகவே அவர்கள் அதை ஏற்று கொண்டனர் என்பதுதான் நிதர்சனமான உன்மை.


குற்றச்சாட்டு 2: வஹீ என்பதை ஆறிய ஹதீஜா(ரலி)யின் சோதனை:



நமது பதில்:

      கட்டுரை ஆசிரியர் கதிஜா(ரலி) எவ்வாறு சோதனை செய்து முஹம்மது(சல்) அவர்களுக்கு வஹீ வந்ததை உண்மை படுத்தினார்கள் என்பதை நிறுவ இரண்டு பலவீனமான செய்திகளை குறிப்பிட்டுள்ளார். இப்னு இஸாகின் நூலில் இருந்து:

அல் ஜுபைர் குடும்பத்தாரால் விடுதலை செய்யப்பட்ட இஸ்மாயில் பின் அபு ஹக்கிம் கூறியதாவது,
      கதிஜா(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் கூறினார்கள்: என் மாமனின் மகனே! உங்களிடம் வருபவர் அடுத்த முறை உங்களிடம் வரும் போது என்னிடம் கூறுவிரா? அவர்கள்சரிஎன்று பதில்ளித்தார்கள். ஆகவே அடுத்த முறை ஜிப்ரில் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்த போது கதிஜா(ரலி) அவர்களிடம் : ‘இதுதான் என்னிடம் வரும் ஜிப்ரில் ஆவார்’. என்று கூறினார்கள். அதற்கு கதிஜா(ரலி) அவர்கள்எழுந்து எனது இடது தொடையின் பக்கம் அமர்வீராகஎன்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். “இப்பொழுது அவரை காண்கிறீர்களா?” என்று நபி(ஸல்) அவர்களிடம் கதிஜா(ரலி) அவர்கள் கேட்டார்கள். ‘ஆம்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “இப்பொழுது எழுந்து எனது வலது தொடையில் அமர்வீராகஎன்று கதிஜா(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். “இப்பொழுது அவரை காண்கிறீர்களா?” என்று நபி(ஸல்) அவர்களிடம் கதிஜா(ரலி) அவர்கள் கேட்டார்கள். ‘ஆம்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு அமர்ந்து இருக்கும் போது தனது திரையை விலக்கி தன்னை வெளிப்படுத்திவிட்டுஇப்பொழுது அவரை காண்கிறீர்களா?” என்று நபி(ஸல்) அவர்களிடம் கதிஜா(ரலி) அவர்கள் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்இல்லைஎன்று கூறினார்கள். “மகிழ்ச்சி கொள்ளுங்கள் நீங்கள் கண்டது ஜிப்ரிலைதான். ஷைத்தானை அல்லஎன்று கதிஜா(ரலி) அவர்கள் உறுதி செய்தார்கள்.
                              நூல் : இப்னு இஸாக் ப. எண்:107

இந்த செய்தியை பதிவு செய்தவர் ஏன் இப்னு இஷாக் வழங்கிய அறிவிப்பாளர் தொடரை குறிப்பிடவில்லை என்ற சிந்தனையோடு அதன் அறிவிப்பாளர் தொடரை அணுகினால் அது பின் வருமாறு உள்ளது.

      கதிஜா(ரலி)(மரணம் ஹிமு 3 )---> இஸ்மாயில் பின் அபு ஹக்கிம் (பிறப்பு ஹிபி 90 ) -->இப்னு இஷாக்

      ஆக இந்த அறிவிப்பு ஒரு அறிவிப்பாளர் முறிந்த ஹதிஷாகும். கதிஜா(ரலி) அவர்களுக்கும் அடுத்த அறிவிப்பாளருக்கும் இடையில் 93 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. மேலும் இதை அறிவிக்கும் அபு ஹக்கிம் ஹதிஜா(ரலி) கூறியதாக கூறினாலும் ஹதிஜா(ரலி) அவர்கள் தன்னிலையில் (first person) எந்த வார்த்தையையும் பயன்படுத்தவில்லை. எல்லாம் படர்க்கையாக( third person) உள்ளது என்பது குறிப்பிடதக்கது.



நமது பதில்:
      அவர் தன்னுடைய இரண்டாவது ஆதாரமாக பதிவு செய்திருக்கும் செய்தி:
     
நான் (இப்னு இஸாக்) இந்த நிகழ்வை அப்துல்லாஹ் பின் ஹசன் அவர்களிடம் கூறினேன். அவர் கூறினார் “எனது தாயார் ஃபாத்திமா பின்த் ஹூசைன் ஹதீஜா(ரலி)யின் (இந்த) ஹதீஸை கூறும்போது கதிஜா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களை உறவு கொள்ள அழைத்தாகவும், அதை காண விரும்பாத ஜிப்ரில் உடனே விலகிச் சென்றதாகவும் அதை கேட்ட  கதிஜா(ரலி) “இது உண்மையில் ஜிப்ரில்தான். சைத்தான் அல்லஎன்று கூறியதாகவும் தெரிவித்தார்கள்                                             நூல் : இப்னு இஸாக் ப. எண் 107

அறிவிப்பாளர் தொடர்:
கதிஜா(ரலி)(மரணம் ஹிமு 3 ) -->ஃபாத்திமா பின்த் அல் ஹுசைன் (பிறப்பு ஹிபி 50ம் ஆண்டு) -->அப்துல்லாஹ் பின் அல் ஹசன் பின் அல் ஹசன் (மரணம் ஹிபி 145) --> இப்னு இஸாக்.

இதுவும் அறிவிப்பாளர் முறிந்த செய்திதான். இப்படி வழுவற்ற செய்திகளை கொண்டு இஸ்லாத்தின் ஒரு துரும்பைகூட அசைக்க முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------  
ஹிமு - ஹிஜ்ரிக்கு முன்