பக்கங்கள் செல்ல

Showing posts with label இறைவன். Show all posts
Showing posts with label இறைவன். Show all posts

Sunday, April 17, 2016

ஏன் இனிமேல் புதிதாக உண்மையான இறைதூதர் வர முடியாது?

நபி (ஸல்) அவர்களின் கருத்துக்களை ஏற்காத மக்கள், நபி அவர்களை பலவாறு குற்றம் சாட்டி வந்தனர்.
  •  ஏமாற்றுபவர்
  •  பொய்யர்
  •  பைத்தியம் பிடித்தவர்
  •  சில கிருஸ்துவ அறிஞ்சர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று, "அவர் அன்றைய கிறிஸ்த்துவ கொள்கைக்கு எதிரான கிறிஸ்த்துவ பாதிரியார்...அரபு நாட்டிற்கு தப்பிச் சென்று மறைமுக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்"

உதாரணமாக, "ஒருவர் தற்போது தன்னை இறைவனின் தூதர் என்று சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரை மக்கள் எப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள்.. அனைத்திற்கும் அவர் பதில் சொல்லியாக வேண்டும். சொல்லப்படும் பதிலை வைத்தே, அவரின் ஏமாற்று வேலை தெரிந்துவிடும்."

நபி (ஸல்) அவர்களோ, சொல்லும் பதிலை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இல்லாமல் எழுத்துப் பூர்வமான ஆதாரத்துடன், எல்லா காலத்திலும் பரிசோதித்துக் கொள்ளக் கூடியதாக சொல்லியுள்ளார்கள் என்றால் அது மனிதனால் முடியாது.

இறைவனின் உதவியால் மட்டுமே முடியும்.
Ref Book: The Man in the Red Under Pants
Author: A.R.Green

Saturday, May 30, 2015

பகவத் கீதை படிக்கும் முஸ்லிம் - 2


By Nadodi Tamilan 

பகவத் கீதையை படிக்க ஆரம்பித்தவுடன் ஏற்படும் முதல் சிக்கல், எந்த மொழியாக்கம் சரியானது,  ஆதாரப்பூர்வமானது  என்பது தான்?

மூல மொழியோடு சில மொழிபெயர்ப்பு  இருந்தாலும், அதிலும் சுய/சொந்த கருத்து திணிக்கப்பட்டுள்ளன.

ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கும் பொது, அதில் எது சிறந்த்தது என்று மொழிபெயர்ப்பாளர் நினைக்கின்றாரோ, அதை போடுவதற்கு அவருக்கு உரிமையுண்டு.  சரி, இதற்காக சம்ஸ்கிருத அகராதி (dictionary) தமிழில் இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் ஒரு தளம் பார்த்தேன் (இன்னும் முழுமையாக இயங்கவில்லை)


உதாரணத்திற்கு, மேல உள்ள வசனம் சொல்கின்றது... "என்னையே வணங்குங்கள்" என்று இறைவன் சொல்வதாக. என்னையே வணங்குங்கள் எனும்போது மற்றவைகளை வணங்குவது தவறு என்று தானே பொருள்.

மற்றொரு வசனத்தில் (9:25), சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மிகத் தெளிவான வசனம்:

" தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்,
  பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார்,
  பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்,
என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்." 
 (9:25)
முன்பு வந்த வேதங்களில் மனித கையாடல் ஏற்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை இருந்த போதிலும், ஏகத்துவத்தின் குரல் இங்கும் அங்கும் ஒழித்துக்கொண்டு தான் இருக்கின்றது.

இதுபோன்ற வசங்களின் கருத்துக்களை நண்பர்களுடன் விவாதிக்கும்போது , அவர்கள் எடுத்த எடுப்பிலே, அது சரியான கருத்து அல்ல என்கிறார்கள்.  இதோ இது தான் சரி என்று அவர்கள் சொல்லும் கருத்து, மற்ற மொழியாக்கங்களுக்கு நேரிடை மாற்றமாகவே உள்ளது.

இது என்னடா குழப்பமாக உள்ளதே, சரி நாமாவது இன்னும் சிறிது தேடலாம் என்று மிகவும்  நடுநிலைமையான,  ஆதாரப்பூர்வமான பகவத் கீதையின் ஆங்கில மொழியாக்கம்  எது, என்ற கேள்வியை நமது அருமை நண்பர் திரு.கூகுளிடம் கேட்டேன்.

அவர் கொடுத்த பதில்: நடுநிலைமையான மொழியாக்கம் ஒரு போதும் கிடைக்காது. அந்தந்தந்த குழுவின் கருத்திற்கு ஏற்ப, அதன் மொழியாக்கம் மாறுபடும்.

மாற்று மதத்தவர்கள், கீதையை ஒரு நடுநிலை கண்ணோட்டத்துடன்  படிக்க ஆரம்பிக்கும் பொது, இந்த குழப்பங்கள் இன்னும் அதிகரிக்கும்.

மற்றொரு சகோதரர், நீங்கள் ஒரு சிறந்த குருவின் துணையோடு மட்டுமே படிக்க வேண்டும் என்றார். நல்ல கருத்து தான், ஆனால் குரு சொல்வது தான் 100% சரி என்று எப்படி முடிவு செய்வது. மனிதன் என்ற முறையில் அவரும் தவறுகள் செய்யலாம் அல்லவா. இதனால், இந்த கருத்தும் சரியானதாக தோன்றவில்லை.


இஸ்லாத்தை பொருத்தவரை, திருக்குர்ஆன் வேதமாக கொடுக்கப்பட்டு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே  பூர்ணமாக்கப்பட்டது.
இறைவனின்  தூதர் என்ற முறையில் அவர்கள் சொல்வது சரி என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இவர்கள் தான் இறை தூதர் என்று உறுதி படுத்த, அவர்கள் கொடுத்த வேதமே சான்று.

நபியை தவிர, வேறு எந்த மனிதரும் 100% சரி என்று சொல்ல முடியாது. இறைவனை அடையும் வழியை சொல்லும்போது, தவறான வழியை குரு சொல்லிவிட்டால், பாதிப்பு குருவோடு மட்டுமில்லாமல் நமக்கும் தான்.

நமக்கு முன்னே உள்ள சிறந்த வழிகள்:

1.  நாமே சமஸ்க்ரிதம் படித்து, அதன் விளக்கத்தை அறிய வேண்டியது

2.   பல மொழியாக்கங்களையும் ஆராய்ந்து, நமக்கு  எது சரி என்று தெரிகின்றதோ , அந்த கருத்தை  எடுத்துகொள்வது

3. எந்த வேதம் கரைபடாமல் ஏகத்துவத்தை மிக எளிமையாக உரைக்கின்றதோ அதன் அடிப்படையில் அணுகுவது
.
என்னை பொருத்தவரை இந்த மூன்றையும் இணைத்து ஆராயும்போது, பல உண்மைகள் வெளி வரும்  என்பது மட்டும் உறுதி.

 நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

நன்றி: நாடோடி தமிழன்

Ref: பகவத் கீதை படிக்கும் முஸ்லிம் - 1