பக்கங்கள் செல்ல

Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Sunday, May 2, 2021

ஆதரவற்ற குழந்தைகளின் பராமரிப்பில் மிகுந்த கவனம் தேவை!!

இஸ்ளாம்-  ஆதரவற்ற குழந்தைகள்-  பராமரிப்பு- மிகுந்த கவனம் தேவை!!

யுனிசெப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 10,000 குழந்தைகள் அனாதைகளாகிறார்கள். சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, உலகில் குறைந்தது 140 மில்லியன் அனாதைகள் உள்ளனர்.

ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பதில் இஸ்லாம் சொல்லும் வழிமுறையை விட வேறு சிறந்த ஒன்றை இன்று வரை கூட எந்த சட்டமும் சொல்வதில்லை.


"நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்" [4:2]


"நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்." [4:10]


"அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; " [6:152]


"(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்; ஆடையும் அளியுங்கள்; இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்." [4:5]


"அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்." [4:6]

Sunday, June 21, 2020

இஸ்லாம் கூறும் திருமண வயது

இஸ்லாம் கூறும் திருமண வயது

                
    நாம் சென்ற மூன்று தொடர்களாக ஏணைய மதங்கள் கூறும் திருமண வயது குறித்து கண்டோம். கிறித்தவ யூத மதங்கள் திருமண வயது குறித்து எந்த தெளிவான அறநெறிகளியும் வகுக்கவில்லை, அதனால் யூத கிறித்தவ வரலாற்றில் மூன்று வயதில் இருந்து திருமணம் செய்வித்தற்கான போதிய ஆதாரங்கள் சென்ற தொடர்களில் பதிந்துள்ளோம். மனித வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வான திருமணம் அதன் வயது குறித்த வழிகாட்டல்களே ஒரு இறை வேதத்தில் இல்லை என்பதை விளக்கியுள்ளோம். அடுத்ததாக இந்து மதத்தில் திருமண வயதிற்கான நெறிகள் காணப்பட்டாலும் பாலுறவுக்கான வயதாக சிறு வயதை கூறுவதை தெளிவு படுத்தியுள்ளோம். இன் ஷா அல்லாஹ் இந்த தொடரில் இஸ்லாம் கூறும் திருமண வயதும் அதன் குறிகாட்டிகள் எவை என்பதையும் விளக்குவோம்.

இஸ்லாம் கூறும் திருமண வயது:

            இஸ்லாம் திருமண குறித்து பேசும் போது இந்த வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணிட்டு குறிப்பிட வில்லை. மாறாக உயிரியல் குறிகாட்டிகளை(Biological Indicators) முன்வைக்கிறது. இது குறித்து முதலில் குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை காண்போம்.
وَابْتَلُوا الْيَتَامَى حَتَّى إِذَا بَلَغُوا النِّكَاحَ فَإِنْ آنَسْتُم مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَلَا تَأْكُلُوهَا إِسْرَافًا وَبِدَارًا أَن يَكْبَرُوا وَمَن كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ وَمَن كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ فَأَشْهِدُوا عَلَيْهِمْ وَكَفَى بِاللَّهِ حَسِيبًا
அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;. அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்;. மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.(அல் குர்ஆன் 4:6) 
       மேற்குறிபிட்ட வசனம்தான் குர்ஆனில் மனிதனின் திருமண வயது குறித்து பேசும் வசனமாகும். அதாவது அனாதைகள் திருமண வயதை அடையும் வரை அவர்களது சொத்துக்களை பாதுகாத்து வைத்திருந்து அவர்களிடம் ஒப்படைத்தல் குறித்து பேசுகிறது. ஆக இஸ்லாம் பொறுத்தவரை திருமண வயது என்று ஒன்று உள்ளது என்பது தெளிவாகிறது. ஆக திருமண வயது என்று இஸ்லாம் வரையறுக்கும் வயது எது என்பதுதான் அடுத்த கேள்வி. நாம் குர்ஆனில் அநாதைகளின் சொத்துக்களை ஒப்புவிப்பது குறித்து இடம் பெறும் ஏனைய வசனங்களை காண்போம். 

وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ أَشُدَّهُ وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا 
அனாதையின் சொத்தை அவர் பருவ வயதை அடையும் வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும்.(அல் குர்ஆன் 17:34) 
وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ أَشُدَّهُ وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا ذَلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ 
அநாதையின் பொருளின் பக்கம் அவன் பருவ வயதை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை. நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து) கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.(6:152) 
          மேற்குறிபிட்ட இரண்டு தரப்பான வசனங்களையும் ஆய்வு செய்தோம் என்றால் அல் குர்ஆன் குறிப்பிடும் திருமண வயது வாலிப வயது என்பது புலப்படும்.

                                    بْلُغَ أَشُدَّهُ (1) = بَلَغُوا النِّكَاح
திருமண வயது = வாலிப வயது

      بْلُغَ أَشُدَّهُ என்பதின் அகராதியை பார்த்தோம் என்றால் முழுவயதை அல்லது பருவ வயதை அடைவதை குறிப்பிடுகிறது(1) மேலும் இந்த بْلُغَ أَشُدَّهُ குறித்து ஏனைய குர் ஆன் வசனங்களை காண்போம்  யூஸுஃப்(அலை) அவர்களது வரலாற்றில் ஒரு சிறு பகுதி…
وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَن نَّفْسِهِ وَغَلَّقَتِ الْأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ قَالَ مَعَاذَ اللَّهِ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ 
அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம். அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) "வாரும்" என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) "அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக் நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார்.(12:22-23) 
அதாவது வாலிபத்தை அடைதல் (بْلُغَ أَشُدَّهُ ) என்பது பாலுறவுக்கு தகுதியான வயது என்பதை தெளிவாக உணர்த்துகிறது மேலே உள்ள வசனம். அதுபோல் மனித வாழ்வின் பகுதிகள் குறித்து அல் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது. 

يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي رَيْبٍ مِّنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِّنُبَيِّنَ لَكُمْ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ وَمِنكُم مَّن يُتَوَفَّى وَمِنكُم مَّن يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِن بَعْدِ عِلْمٍ شَيْئًا وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنبَتَتْ مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ 
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்); மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக் கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.(22:5)

மேலும் அல் குர்ஆன் 4:6 இல் இடம்பெறும்  بَلَغُوا النِّكَاح  என்பதை பின்வருமாறு முஜாஹித்(ரஹ்) அவர்கள் தனது தஃப்ஸீரில் விளக்குகிறார்கள் 

{حَتَّى إِذَا بَلَغُوا النِّكَاحَ} [النساء: 6] يَقُولُ: «إِذَا بَلَغُوا الْحُلُمَ»
بَلَغُوا النِّكَاح என்பது பருவ வயது (بَلَغُوا الْحُلُمَ) என்று விளக்குகிறார்.

         மேற்குறிபிட்ட வசனங்களையும் தஃப்ஸீர் விளக்கத்தையும் வாசிக்கும் யாரும் திருமண வயது بَلَغُوا النِّكَاح என்பது வாலிப வயதைத்தான் குறிக்கும் என்று புரிந்து கொள்ளலாம். ஆக இஸ்லாம் குழந்தை திருமணத்தை ஏற்கவில்லை என்பதற்கு மேற்குறிபிட்ட வசனங்களே போதிய சான்று. 

குழந்தைப்பருவம் மற்றும் வாலிப வயது என்பதின் வரைவிலக்கணம்:


               நாம் குர்ஆன் கூறிப்பிடும் போது மனித வாழ்வை மூன்று பகுதியாக பிரித்து இருப்பதை கண்டோம். அந்த பகுப்பு குறித்த இஸ்லாமிய நிலைபாடு என்ன என்று காண்போம்.
وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِن قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ 
இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம்மிக்கவன். (24:59)
மேலும் பருமடையாதவரின் நிலை குறித்து பின்வருமாறு நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்.
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ عَلِيٍّ، عَلَيْهِ السَّلاَمُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلاَثَةٍ عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ ابْنُ جُرَيْجٍ عَنِ الْقَاسِمِ بْنِ يَزِيدَ عَنْ عَلِيٍّ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم زَادَ فِيهِ ‏"‏ وَالْخَرِفِ ‏"‏ ‏.‏ 
நபி(சல்) அவர்கள் கூறியதாவது மூவரை விட்டும் எழுது கொள் உயர்த்தப்பட்டுள்ளது "தூங்குபவர் விழிக்கும் வரை, சிறுவன் பருவமடையும் வரை மற்றும் பைத்தியத்திற்கு பைத்தியம் தெளியும் வரை (அறிவிப்பாளர்: அலி(ரலி), அபூதாவூத் 4403)
      பருவமடையாதவர்களுக்கு இஸ்லாமின் கடமைகள் கட்டாயம் அல்ல. அவர்கள் செயல்கள் குறித்து எந்த பதிவும் செய்யப்படாது அவர்களுக்கு கடமைகள் குறித்த கேள்விகள் இல்லை என்பதைத்தான் மேற்குறிபிட்ட செய்தி குறிப்பிடுகிறது. 

பருவ வயது என்றால் எது: 

    பருவ வயது என்பது இஸ்லாமிய நெறிகளில் எது என்பதை அது தொடர்பான வார்த்தைகளை விளக்குவதில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். யூதர்களைப்போல் 3 வயதில் இருந்தே என்றெல்லாம் இஸ்லாமிய அறிஞர்கள் உளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பினவரும் குறிப்பு அதனை உறுதி செய்கிறது.

قَالَ الْمَاوَرْدِيُّ: ثُمَّ بَدَأَ الشَّافِعِيُّ بِذِكْرِ الصِّغَرِ وَحَدِّ الصِّغَرِ إِلَى زَمَانِ الْبُلُوغِ وَالْبُلُوغُ يَكُونُ بِخَمْسَةِ أَشْيَاءَ، ثَلَاثَةٌ مِنْهَا يَشْتَرِكُ فِيهَا الرِّجَالُ والنساء وهي: الاحتلام، والإنبات، وَالسِّنُّ، وَشَيْئَانِ مِنْهَا يَخْتَصُّ بِهِمَا النِّسَاءُ دُونَ الرِّجَالِ وَهُمَا الْحَيْضُ وَالْحَمْلُ.
فَأَمَّا الِاحْتِلَامُ فَإِنَّمَا كَانَ بُلُوغًا لِقَوْلِ اللَّهِ تَعَالَى:{وَإِذَا بَلَغَ الأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا} [النور: 59]
وَلِمَا رُوِيَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ - أَنَّهُ قَالَ: " رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ " وَذَكَرَ مِنْهَا الصَّبِيَّ حَتَّى يَحْتَلِمَ.
وَالِاحْتِلَامُ هُوَ إِنْزَالُ الْمَنِيِّ الدَّافِقِ مِنْ رَجُلٍ أَوِ امْرَأَةٍ مِنْ نَوْمٍ أَوْ جِمَاعٍ أَوْ غَيْرِهِمَا.
وَأَقَلُّ زَمَانِ الِاحْتِلَامِ فِي الْغِلْمَانِ عَشْرُ سِنِينَ، تِسْعُ سِنِينَ وَاللَّهُ أَعْلَمُ.

மாவர்தீ கூறியதாவது : பிறகு ஷாஃபீ அவர்கள் குழந்தைப்பருவம் குறித்து கூறும்போது, “குழந்தைப்பருவம் என்பதின் வரம்பு பருவம் எய்தும்வரை என்பதாகும். பருவமடைதல் என்பது ஐந்து குறிகாட்டிகளை கொண்டது. அவற்றில் மூன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவை. அவை: தூக்கத்தில் ஸ்கலிதமாதல், முடிமுளைத்தல் மற்றும் குறித்த வயதை அடைதல். ஆண்களில் இருந்து வேறுபட்டு பெண்களுக்கு மட்டுமே உரிய இரண்டு குறிகாட்டிகள்: மாதவிடாய் ஏற்படுவதும், குழந்தைப் பேறுக்கு தகுதியான நிலையில் இருத்தலும் ஆகும். இஹ்திலாம் (பருவவயதை) அடைவதை பொருத்தவரை , இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான், “இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்;(அந்நூர்: 59).
மேலும் நபி(சல்) அவர்களது அறிவிப்பில் “ மூன்று பேரை விட்டும் எழுதுகோள் உயர்த்தப்பட்டுள்ளது: 1. சிறுவன் பருவமடையும் வரை , என்று இடம் பெறுகிறது. இஹ்திலாம் என்பது ஆணோ பெண்ணோ தூக்கத்திலோ, விளிப்பிலோ, உறவின் போதோ ஸ்கலிதமாதலை குறிப்பதாகும். இவவாறு ஸ்கலிதமாகும் குறைந்த பட்ச வயது, எங்களது பகுதியில்  10 வயது மற்றும் 9 வயதாகும். அல்லாஹ்வே அறிந்தவன்.(அல் மாவர்தீயின் அல் ஹாவி 6ம் பாகம், 343ம் பக்கம்) 
மேலும் சென்ற தொடரில்(2) ஷாஃபீ(ரஹ்) அவர்களது கருத்தான ஒன்பது வயதில் பூப்பெய்துவது குறித்த விளக்கத்தை கண்டோம். அதை மேற் குறிபிட்ட மாவர்தீ அவர்களும் உறுதி செய்கிறார். ஆக மேற்குறிபிட்ட இந்த விளக்கம் எது பருவ வயது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. மேலும் இஸ்லாம் திருமணம் குறித்த என்னவெல்லாம் கூறுகிறது என்பதை சுருக்கமாக கண்டால் இஸ்லாம் திருமண வயதாக எதை கூறுகிறது என்பதை நம்மால் விளங்க முடியும்.

கடமைகள் எந்த வயதில் கட்டாயம் ஆகும்


           நாம் சென்ற பகுதியில் கடமைகள் எப்போது கட்டாயம் ஆகும் என்பது குறித்த நபிமொழியை கண்டிருந்தோம். அல்லாஹ் பெண்களுக்கும் திருமணத்தில் கடமைகளும், பொறுப்புகளும்  இருப்பதாக குறிப்பிடுகிறான். 
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும்¹ அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இதற்குள் (இந்தக் காலகட்டத்துக்குள்) அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.(2:228)
    அய்லாவின் அதிகாரியாக இருந்த ருஸைக் இப்னு ஹகீம், வாதில்குரா கிராமத்தில், தாம் ஜும்ஆ நடத்தலாமா என இப்னு ஷீஹாபுக்கு எழுதிக் கேட்டார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அக்கிரமாத்தில் சூடான் நாட்டவரும் பிறரும் இருந்தனர். இப்னு ஷீஹாப், ஜும்ஆ நடத்துமாறு ருஸைக் இப்னு ஹகீமுக்குக் கட்டளையிட்டார்கள். இப்னு உமர்(ரலி) வழியாக ஸாலிம் அறிவிக்கும் பின்வரும் நபிமொழியை அதற்கு ஆதாரமாக காட்டினார்கள்.
"உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்."
"ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்" என்றும் கூறினார்கள் எனக் கருதுகிறேன். (புகாரி 893. )
  மேற்குறிபிட்ட அல் குர்ஆன் வசனமும், ஹதீஸும் திருமணத்தில் பெண்ணுக்கு கடமைகளும் பொறுப்புகளும் இருப்பதாக கூறுகின்றன. மேலும் அது குறித்து அவர்கள் விசாரிக்கவும் படுவார்கள் என்பது திருமணத்தில் பெண்கள் பூப்பெய்தி, அதன் அறிவை பெற்றிருக்க வேண்டும் என்பதற்கு போதிய சான்றாய் இருக்கிறது. 

நன்மை தீமையை தேர்வு செய்யும்  பெண்களை திருமணம் முடித்தல்

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ عَلِيٍّ، عَلَيْهِ السَّلاَمُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلاَثَةٍ عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ ابْنُ جُرَيْجٍ عَنِ الْقَاسِمِ بْنِ يَزِيدَ عَنْ عَلِيٍّ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم زَادَ فِيهِ ‏"‏ وَالْخَرِفِ ‏"‏ ‏.‏ 
நபி(சல்) அவர்கள் கூறியதாவது மூவரை விட்டும் எழுது கொள் உயர்த்தப்பட்டுள்ளது "தூங்குபவர் விழிக்கும் வரை, சிறுவன் பருவமடையும் வரை மற்றும் பைத்தியத்திற்கு பைத்தியம் தெளியும் வரை (அறிவிப்பாளர்: அலி(ரலி), அபூதாவூத் 4403) 
நாம் மீண்டும் மீண்டும் இந்தசெய்தியை முன்வைக்கக்காரணம் இந்த செய்தி இஸ்லாமின் கடமைகள், பொறுப்புகள் எப்போது கட்டாயம் ஆகும் என்பதை புரியவே. 
وَلَا تَنكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ 
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.(2:221) 
وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.(4:4) 

وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَ الَّذِي بِيَدِهِ عُقْدَةُ النِّكَاحِ وَأَن تَعْفُوا أَقْرَبُ لِلتَّقْوَى وَلَا تَنسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
2:237. அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (2:237) 

திருமணம் என்ற வழுவான ஒப்பந்தம்:

         இஸ்லாம் ஒரு ஒப்பந்தம் நிறைவேற சில நியபந்தனைகளை முன்வைக்கிறது அவை ஒப்பந்தத்தில் ஈடுபடும் இருவரும் பருவமடைந்திருக்க வேண்டும், இருவரும் அந்த ஒப்பந்ததை கையாளும் அறிவு பெற்றிருக்க வேண்டும் பின்பு அதற்கான சாட்சிகள் வேண்டும். இது அல் குர்ஆன்(4:6) அதாவது அநாதைகளிடம் சொத்தை ஒப்புவிக்க கூறப்படும் நிபந்தனைகளில் இருப்பது ஆகும். இதை அடிப்படையாக் கொண்டே ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் முன்வைக்கப்படுகிறது. இஸ்லாமை பொறுத்த வரை திருமணம் என்பதும் ஒப்பந்தமே. அதை பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. 
அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (2:237)
وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنكُم مِّيثَاقًا غَلِيظًا 
உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்து விட்ட நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்? (4:21) 
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.(2:228)
         மேற்குறிபிட்ட வசனங்கள் திருமணம் என்பது ஒப்பந்தம் என்றும் அதன் அடிப்படையில் பெண்களுக்கு கடமைகளும் உரிமைகளும் இருப்பதை உணர்த்துகிறது. மேலும் ஒரு ஒப்பந்தத்தில் எப்படி இருதரப்பாரும் ஏற்கும் நிபந்தனைகள் இருக்குமோ அது போன்று திருமண ஒப்பந்ததிலும் உண்டு. மேலும் இது குறித்த முடிவை பெண்ணிடம் கேட்பது கடமையாக்கப்பட்டுள்ளது.  அதாவது திருமணத்திற்கான அறிவு முதிர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என்பதைத்தான அது காட்டுகிறது அதனை பின்வரும் நபி மொழி உறுதி படுத்துகிறது. 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கன்னி கழிந்த பெண், தன் காப்பாளரைவிடத் தனது விஷயத்தில் (முடிவு செய்ய) மிகவும் தகுதி வாய்ந்தவள். கன்னிப் பெண்ணிடம் அனுமதி பெறப்பட வேண்டும். அவளது மௌனம் அவளது அனுமதி ஆகும். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம் 2776)
      ஆக திருமணம் என்ற ஒப்பந்தத்தின் உரிமைகளையும் கடமைகளையும் பொறுப்பேற்க பருவ வயது அவசியமான ஒன்று என்பதைத்தான் மேற்குறிபிட்ட குர்ஆன் வசனங்களும், ஹதீஸும் உறுதிபடுத்துகின்றன. இது போக் பெண்ணிற்கான விவாகரத்து தொடர்பான சட்டங்கள், உறவு கொள்ளும் சட்டங்கள் அனைத்தும் பூப்பெய்த பெண்ணிற்கானதாகத்தான் இருப்பது பெண் பூப்பெய்த பிறகுதான் திருமணத்திற்குரியவள் என்பதை உறுதிபடுத்துகிறது. 
      மேற்குறிபிட்ட விஷயங்கள் போக பெண் குழந்தைகளை பருவ வயது அடையும் வரை பராமரிப்பதை ஆர்வமூட்டவும் செய்கிறது இஸ்லாம் என்பது குறிபிடத்தக்கது. 
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்" என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். (முஸ்லிம் 5127.)
           பெண்ணின் திருமணத்திற்கான தகுதி பருவ வயதும் ,பொறுப்புக்களை சுமப்பதற்கான அறிவு முதிர்ச்சியுமே என்பதற்கு மேற்குறிபிட்ட செய்திகளும் விளக்கமுமே போதுமானது. மேலும் பருவ வயதிர்கு இஸ்லாம் உயிரியல் குறிகாட்டிகளையே முன்னிலை படுத்துகிறது. இன்றும் பருவ வயது குறித்த விதிகளில் ஏற்படும் சிக்கல்தான் கற்பழிப்பு வழக்கில் கூட சிறார் நீதிமன்றங்களில் குற்றவாளிகள் விசாரிக்கப்படுகின்றனர் என்பதே உயிரியல் குறிகாட்டிகளை அளவீடாக கொள்வதின் நுட்பத்தை விளக்க போதிய சான்றாய் உள்ளது. மேலும் பருவம் அடைதல் மற்றும் அறிவு முதிர்ச்சி என்பது ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொர் வயதாக இருந்துள்ளதைத்தான் வரலாறுகள் நமக்கு காட்டுகின்றன. இஸ்லாம் ஒரே வயதை அதில் வரையறுக்காமல் அதற்கு உயிரியல் குறிகாட்டிகளை முன்னிலைபடுத்தியுள்ளது இது படைத்தவனின் மார்க்கம் என்பதற்கு போதிய சான்று. இன் ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் இஸ்லாம் கூறும் திருமண வயது குறித்த விஷயத்தில் அவதூறு பரப்பிகளால் வைக்கப்படும் விமர்சனத்திற்கான பதிலை காண்போம்…...


Sunday, May 3, 2020

மனித வரலாற்றில் வெற்றிகரமான தொழிலதிபர் மற்றும் குடும்ப வாழ்க்கையிலும் மிகச் சிறந்த ஒரு பெண்ணை பின்பற்ற வேண்டுமா?

மனித வரலாற்றில் வெற்றிகரமான  தொழிலதிபர்  மற்றும் குடும்ப வாழ்க்கையிலும் மிகச் சிறந்த ஒரு பெண்ணை பின்பற்ற வேண்டுமா?
அன்னை கதிஜாவின் வாழ்க்கையைப் பாருங்கள்:




அன்னை கதிஜா:

  • கதீஜாவின் தந்தை மிகச் சிறந்த தொழிலதிபர் மட்டுமில்லாது, அன்றைய குறைஷிகளில் ஒருவர் 
  • 1440 ஆண்டுகளுக்கு முந்தைய, அன்றைய ஆணாதிக்க முதலாளிகளில், மிகச்  சிறந்த பெண் தொழிலதிபராக வியாபாரத்தை சிறந்த முறையில் நிர்வகித்து வந்தார்
  • விமானப்பயணமில்லாத, மிகவும் ஆபத்தான, உயிருக்கு உத்திரவாதமற்ற  நாடு விட்டு நாடு சென்று செய்யும்  அன்றைய வியாபாரத்தில் சாதனைப் படைத்தவர்   
  • அவருடைய வியாபாரம், அனைத்து குறைஷி தொழிலதிபர்களின் மொத்த வருமானத்தை விட பெரியது மட்டுமில்லாமல் மிகவும் தரமிக்க மற்றும் நேர்மையான முறை கொண்டதாகும் 
  • இவரின் நாணயமான வியாபார முறை மற்றும் கண்ணியத்தால் அக்கால மக்கள் "குறைஷிகளின் தலைவி" என்றும் "அல்-தாஹிரா தூய்மையானவர்" என்றும்  அழைத்து  வந்தனர்


  • பல தொழிலதிபர்கள் இவரை திருமணம் செய்ய விரும்பினாலும், இவர் ஏற்காமல்  ஏழ்மையிலும் நேர்மையான, தனது ஊழியர்களில் ஒருவரான நபிகள் பெருமானாரை திருமணம் செய்து கொண்டார்;நபிகளாரை விட 15 வயது மூத்தவர் அன்னை கதிஜா 


  • தன்னுடைய செல்வத்தை ஏழை மற்றும் அனாதைகளுக்காக செலவிட்டு வந்தார்
  • தனது அனைத்து செல்வத்தையும் இறை வழியில் செலவிட்டு, நபிகளாருக்கு சிறந்த அரணாக தன்னுடைய இறுதிக் காலம் வரை வாழ்ந்தார்கள்.
  •  தன்னுடைய கணவர் மேல் அளப்பரிய அன்பு வைத்திருந்தார்; நபிகளாரின் பிரச்சாரத்தால் கோபமடைந்த எதிரிகள், சமூக விலக்கல்  செய்த போது பெரும் செல்வந்தரான அன்னை கதிஜா அனைத்தையும் துறந்து தனது கணவரோடு  சென்று  மூன்று  வருடம் வரை கடும் சோதனைக்குள்ளானார்


மக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம்
அன்னை கதிஜா இறந்து பல வருடங்கள் கழித்தும்  அவர்கள் மீதுள்ள அன்பு ஒரு போதும் குறைந்ததில்லை. ஒரு முறை நபி (ஸல்), அவர்களின் அன்னை கதிஜாவின்  நெக்லஸை கண்டு அழுதார்கள்.

நபியவர்கள்  கதீஜா மீது கொண்டுள்ள அளப்பரிய அன்பின் மீது சிறிது பொறாமை கொண்டவர்களாக  அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், "கதிஜா மட்டும் தான் உங்களின் அன்பிற்கு பொருத்தமானவரா?" என்று கேட்டபோது, நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் :

"யாருமே என்னை ஏற்றுக்கொள்ளாதபோது, என் மீது முழு நம்பிக்கை கொண்டார். மக்கள் எல்லாம்  என்னை நிராகரித்தபோது, அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். யாருமே எனக்கு உதவி செய்ய முன்வராதபோது, அவர் எனக்கு உதவி செய்தார்."

மனித குல வரலாற்றில் சிறந்த நான்கு பெண்மணிகள் என நபிகள் பெருமகனார் இந்த  நால்வரைக் குறிப்பிட்டார்கள்:


  1. அன்னை மேரி  (இயேசுவின் தாய்)
  2. அன்னை ஆசியா  (எகிப்தின் அரசன் பிரவுனின் மனைவி)
  3. அன்னை கதிஜா  (நபியவர்களின் மனைவி)
  4. அன்னை பாத்திமா  (நபி (ஸல்) & கதீஜாவின் மகள்)

Sunday, August 11, 2019

இஸ்லாம் கூறும் பலதார மணத்தில் பெண்ணின் உரிமை

ஏக இறைவன் அல்லாஹ்வின்  திருப்பெயரால்

             இந்த பதிவானது பலதார மணம் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன என்பதை தெளிவாக இஸ்லாமிய சகோதர்ரகளுக்கும் இஸ்லாமிய எதிர்பாளர்களுக்கும் விளக்கவே. பொதுவாக இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் பலதார மணம் குறித்து பேசும் போது பெண்ணின் உரிமை பாதிப்பதாகவே வாதிடுவார்கள். மேலும் இதனால் முதல்தாரத்தின் உரிமை பறிக்கப்படுவதாகும் வாதிடுவார்கள். உண்மையில் இஸ்லாமின் பலதார மணம் குறித்த பார்வையை தெளிவு படுத்தினாலே பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எப்படி இஸ்லாம் வரையறுக்கப்பட்ட உரிமைகளையும் கடமைகளையும் வழங்கியுள்ளது என்பது தெளிவாக விளங்கும் இன் ஷா அல்லாஹ்.

இஸ்லாம் கூறும் பலதாரமணம்:

وَإِنْ خِفْتُمْ أَلا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلا تَعُولُوا (٣)

   அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.(அல் குர்ஆன் 4:3)
        இந்த வசனம்தான் ஆண்களுக்கு பலதார மணம் செய்யும் உரிமையை தருகிறது. ஆனால் இந்த வசனம் பலதார திருமணத்தை கட்டாயம் ஆக்கவில்லை. மேலும் பெண்களை திருமணம் செய்ததோடு அவர்களை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற கட்டளையும் சேர்த்து சொல்கிறது.

              இஸ்லாத்தின் அடிப்படை சட்டவாக்கம், சில உரிமைகளை வழங்கும் முன்னர் அதன் தொடர்பாக சில கடமைகளையும் விதிக்கும். அந்த அடிப்படையில் பலதாரமண உரிமையும் அத்தகையதே என்பதை இஸ்லாம் குறித்து தெளிவாகவும், தொடர்ச்சியாகவும் கற்கும் யாரும் புரிந்து கொள்வார்கள்.

    இது தொடர்பாக இஸ்லாமிய எதிர்பாளர்கள் எடுத்து வைக்கும் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது " இதனால் முதல் திருமணம் செய்த பெண்ணின் உரிமை பாதிக்கப்படுகிறது" என்பதேயாகும்.

    ஆம் இதனால் முதல் திருமணம் செய்த பெண்ணின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது. ஒரு பெண் பொருளாதார ரீதியாகவும் கணவனோடு பகிர்துகொள்வதையும் இழக்கிறாள். ஆனால் இஸ்லாம் இது குறித்த தெளிவான பார்வை கொண்டுள்ளது. பலதார திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்கள் தொடர்புடையது. 

    இதுதொடர்பாக இரண்டாவதாக மணம் முடிக்க தயராக இருப்பவளும் பெண்தான் என்பதை நாம் சிந்திக்க கடமை பட்டுள்ளோம். வரதட்சனை, விதவை மறுதிருமண மறுப்பு போன்ற சமுக அவலம் காரணமாகவும், ஆண் விகிதாசார சரிவு போன்ற நிலையினாலும் இரண்டாம் தாரமாகவாவது வாழ ஒரு  பெண் தள்ளப்படுகிறாள் என்பது நிதர்சனம். ஆக இத்தகைய சுழலில் பலதாரமணம் அனுமதிக்கப்படாமல் போகும் போது விபச்சாரம்,ஓரினச் சேர்க்கை போன்ற சமுக கேடுகள் தலைதூக்கும், ஆக இதை எதிர் கொள்ள பலதாரமணம் ஒன்றுதான் தீர்வாக அமையும். ஒரு பெண்ணின் உரிமையை காட்டிலும் சமூக நன்மை முன்னிறுத்தப்படுகிறது.

இந்த விஷயங்களை இஸ்லாம் கருத்தில் கொண்டும் பெண்களின் மனநிலையை கருத்தில் கொண்டும் இஸ்லாம் சில நிபந்தனைகளை கூறுகிறது. இது தொடர்பாக இஸ்லாமியர்கள் மத்தியிலும் கூட தவறான புரிதல் உள்ளது என்பது உண்மைதான்.   இஸ்லாம் கூறும் நிபந்தனைகள் இவ்விஷயத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் முதல் மற்றும் மற்ற மனைவியின் உரிமைகள் பாதுக்காக்கப்படும். அதனால்தான் நபி(சல்) அவர்கள் திருமண ஒப்பந்தம் குறித்து கூறுகையில் பின்வருமாரு கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனையே ஆகும்.இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்: முஸ்லிம் 2772)
   ஆக திருமண நிபந்தனைகளில் பேசப்பட வேண்டிய முக்கியமான சரத்துகளில் இதுவும் ஒன்று. 

மறுதிருமணம் குறித்த நிலைபாடை திருமணத்திற்கு முன்பே இருவரும் முடிவு செய்வது.

        இஸ்லாம் ஒரு ஆண் மறுதிருமணம் செய்வது குறித்த நிபந்தனை பற்றி திருமண ஒப்பந்ததில் முன்பே பேசி தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆண் மற்றும் பெண்ணில் முழு உரிமையும், சமூக நன்மையும் இதனால் காக்கப்படுகிறது. இதை பின் வரும் சம்பவம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

இதற்கான் செயல் வடிவத்தை நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இருந்து பெறலாம்.
அலீ பின் அல்ஹுசைன் (ஸைனுல் ஆபிதீன் - ரஹ்) அவர்கள் கூறியதாவது:
          நாங்கள் (எங்கள் தந்தை) ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட காலத்தில் யஸீத் பின் முஆவியாவைச் சந்தித்துவிட்டு, மதீனாவுக்கு வந்தோம். அங்கு என்னை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் சந்தித்தார்கள்.
        அப்போது அவர்கள், "என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித்தர ஆயத்தமாயிருக்கிறேன்)" என்று கேட்டார்கள். நான் அவர்களிடம், "அப்படி ஏதுமில்லை" என்று பதிலளித்தேன்.
மிஸ்வர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாளை என்னிடம் கொடுக்கிறீர்களா? ஏனெனில்,அந்த (பனூ உமய்யா) கூட்டத்தார் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடமிருந்து அந்த வாளைப் பறித்துக்கொள்வார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை என்னிடம் கொடுத்தால் என் உயிர் போகும்வரை ஒருபோதும் அது அவர்களிடம் போய்ச் சேராது" என்று கூறினார்கள். (பிறகு பின்வரும் சம்பவத்தை விவரிக்கலானார்கள்:)
     ஃபாத்திமா (ரலி) அவர்கள் (தம் துணைவியாக) இருக்கும்போதே, அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அபூஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காதுக்கு எட்டிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது குறித்து மக்களிடம் தமது இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை நான் செவியுற்றேன். -அப்போது நான் பருவவயதை அடைந்து விட்டிருந்தேன்.-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(என் மகள்) ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தனது மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம்முடைய மருமகன் ஒருவரை ("அபுல்ஆஸ் பின் ரபீஆ") பற்றிக் குறிப்பிட்டார்கள்; அவர் (அவருடைய மாமனாரான) தம்முடன் நல்ல மருமகனாக நடந்துகொண்டதைப் பாராட்டினார்கள்: அப்போது அவர்கள், "அவர் என்னிடம் பேசினார். (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார்; அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்.
   மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றை தடை செய்யக்கூடியவன் அல்லன்; தடை செய்யப் பட்ட ஒன்றை அனுமதிக்கக்கூடியவனும் அல்லன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதரின் மகளும் இறை விரோதியின் (அபூ ஜஹ்லின்) மகளும் ஒரே இடத்தில் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒருபோதும் ஒன்றுசேர முடியாது" என்று கூறினார்கள். (நூல்: புஹாரி 4841.)
மேலும் ஒரு நபிமொழி பின்வருமாறு கூறுகிறது
மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்
                இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படி, 'ஹிஷாம் இப்னு முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூ ஜஹ்லுடைய) மகளை அலீ இப்னு அபீ தாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்கமாட்டேன். அலீ இப்னு தாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்குச் செய்துவிட்டு, அவர்களின் மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை  வேதனைப்படுவது என்னை மன வேதனைப்படுத்துவதாகும்'' என்று கூறினார்கள்.
நூல்: புஹாரி 5230
        ஆம் ஃபாத்திமா(ரலி) அவர்களின் திருமணத்தின் போது அலி(ரலி) அவர்கள் வழங்கிய வாக்குறுதியை நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய மற்றொரு மகளின் கணவரை சுட்டிகாட்டி நினைவுகூறுகிறார்கள். திருமணத்திற்கு முன்பே நிபந்தனைகள் பேசப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதிஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன. மேலும் பலதார மணம் புரிய நிபந்தனை அற்ற அனுமதி இருக்குமானால், நபி(சல்) அவர்களிடமோ, அல்லது பாத்திமா(ரலி) அவர்களிடமோ அனுமதி பெற வேண்டிய அவசியம் அலி(ரலி) அவர்களுக்கு இல்லை. அவர்களது அனுமதி கோரல் என்பது திருமணம் ஒப்பந்தத்தில் போடப்பட்ட நிபந்தனையின் அடிப்படையில்தான் என்பதை புரிய முடிகிறது.

        இந்த கருத்தை நாம் கூறியதும் “தற்கால் அறிஞர்கள் யாரும் இதை கூறவில்லை என்று கூறி இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் தைய தக்கா என குதிக்கலாம். ஆனால் இதே கருத்தில் முன்சென்ற அறிஞர்கள் இருந்துள்ளனர்.

   ஒரு மனிதன் மறுதிருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்ற நிபந்தனையை ஏற்று இருந்தால் அதை நிறைவேற்றுவது ஆணின் மீது கடமையாகும். அந்த நிபந்தனயை அவர் மீறும் போது அந்த பெண் திருமண ஒப்பதத்தை முறிக்கலாம்.( இப்னு கைய்யிம் ஜாத் அல் மாத்(5/117-118))

      “அப்போது அவர்கள், "அவர் என்னிடம் பேசினார். (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார்; அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்” என்பது அவர் ஜைனப்(ரலி) (நபி(ஸல்) அவர்களின் மகள்) அவர்களை தவிர வேறு பெண் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று அவர் உறுதி மொழி அளித்து இருப்பார். அதையே அலி(ரலி) அவர்களும் செய்திருப்பார். ..(-இப்னு ஹஜரின் ஃபத்ஹுல் பாரி(7/86))

இந்த நிபந்தனையை ஒரு பெண் ஏற்றுகொள்வாளா?

        இது ஒவ்வொரு பெண்ணின் மனநிலை பொறுத்தது. இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனிக்கவேண்டியுள்ளது. அதாவது இரண்டாம் திருமணத்தை ஏற்று கொள்பவளும் பெண்தான். வரலாற்றில் பெண்களின் மனநிலை சர்வாதிகாரி போன்றது அல்ல. அதிக கருணையுடையவர்கள்தான் பெண்கள் என்பது வரலாறு நெடுக காணக்கிடக்கிறது. இன்றைய பெண்ணியவாதிகளில் சிலர் கூறுவது போல் தன் சகோதரியின் தேவை புரியாத கல்லாலான இதயம் படைத்தவர்கள் அல்ல பெண்கள். வரலாறில் ஆண்களின் விகிதத்தில் சரிவு ஏற்படும் காலங்களில் சமுக கேடுகளை தடுக்கும் எண்ணத்தில் பெண்களே முன்வந்து பலதார மணத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள். உதரணமாக ஹம்ப்ரீ என்ற மானுடவியல் வல்லுனர் இது குறித்து ரஸ்யாவில் இஸ்லாமியர் அல்லாத பகுதியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவை கூறுகிறார். அங்கு இருக்கும் படித்த பெண்களும் கிராம்ப்புறங்களில் இருக்கும் பெண்களும் ஆண்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவினால் ஏற்படும் சிக்கலை சரி செய்ய பலதாரமணத்தை அனுமத்திக்க வேண்டும் எங்கின்றனர். என்று ஹம்ப்ரீ ஆச்சரியம் கொள்கிறார்.[1] 

    அரேபியா போன்ற நாடுகளிலும் மேற்குரிய நிலையே காணப்படுகிறது.மேலும் கென்யா போன்ற நாடுகளில் பால்வினை நோயின் பரவலைத் தடுக்க இது ஒரு வழிமுறையாக அங்கிருக்கும் பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர். எலிசபெத் ஜோசப் போன்ற பெண்ணியலாளர்களும் பலதார மணத்தால் தங்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைப்பதால் ஆதரிக்கின்றனர். இப்படி பல வகையான சமுக சுழலை எதிர் கொள்ள பெண்கள் இத்தகைய பலதாரமணத்தை ஆதரிக்கின்றனர். இரண்டாம் தாரமாக வரும் பெண்ணை வேசியாக்கும் சில முதல் மனைவியின் காழ்புணர்ச்சிதான் பெண்ணியவாதிகள் சிலரின் எண்ணமாகவும் இருக்கிறது. ஆனால் பெண்களை சமுக சிந்தனையற்ற சுயநலமிகள் என்ற பெண்ணியவாதிகளின் எண்ணத்தை பெண்கள் தவிடு பொடியாக்கியுள்ளனர் வரலாறு நெடுகிலும் என்பதுதான் உண்மை.

இயற்கையில் பலதாரமணம் சரியானதா:
                   மனித பால் ஈருருமை (Sexual dimorphism =XM/XF) குறியீடு 1.15. அதாவது ஆண் மற்றும் பெண்ணின் உடலில் இருக்கும் வேறுபாடு. எடுத்துக்காட்டாக ஒத்த வயதுடைய ஆண் மற்றும் பெண்ணின் உடல் எடை வளர்ச்சி போன்றவற்றின் விகிதாச்சார குறியீட்டு எண். இந்த எண் அதிகரிக்கும் போது அந்த உயிரினத்தின் ஆண் பாலினம் பலதார தன்மை உடையதாய் இருக்கும்(2)(3). மேலும் ஒரு உயிரினத்தில் சந்ததியின் உருவாக்கத்தில் அதிகம் செலவு செய்பவை ஒருதார குணமுடையதாய் இருக்கும் என்று “EVOLUTIONARY PSYCHOLOGY” கூறுகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும் போது ஆண்கள் பலதார மணம் புரிவதற்கு தகுதி உடையவராகதான் இருப்பார்கள்.(4) 

                மேலும் கத்தொலிக்க மதம் இவ்வுலகில் பரவிய பிறகே பலதார மணம் குற்றமாக கருதும் நிலை ஏற்பட்டது. ஆனால் மனித பால் ஈருருமை குறியீடு 1.15 என்பதால் SLIGHTLY POLYGAMOUS என்று அறிவியல் கூறுகிறது. இதை அடிப்படையாக கொண்டு சிந்திக்கும் போது ஆண்களின் பலதார மணத்தை 4 என்ற அளவிற்கு இஸ்லாம் சுருக்கி இருப்பது அர்த்தமுடையதுதான். சொல்லப்போனால் பலதார மணத்தை இயற்கையாளர் அல்லது நாத்திகர்கள்தான் அதிகம் ஆதரிக்க வேண்டும். ஆனால் இங்கு நிலை தலைகீழாக உள்ளது. பலதாரமணத்திற்கு தடை என்றும் குற்றம் என்றும் அறிவித்த பல நாடுகளில் இது கள்ளத்தொடர்புகளாகவும் விபச்சாரமாகவும் நடைபெறுகிறது. இதில் பில் கிளின்டன் போன்ற அதிபர்களும் அடக்கம். 

ஏன் பெண்களுக்கு பலதார அனுமதியில்லை:

               மனித வரலாற்றில் அதற்கான் தேவை என்றுமே இருந்ததில்லை. என்றும் அதற்கான் தேவை வரப்போவதும் இல்லை.மனித பால் ஈருருமை (Sexual dimorphism =XM/XF) குறியீடு அதைத்தான் உணர்த்துகிறது. மேலும் ஆண் மற்றும் பெண்ணின் விந்து மற்றும் கரு உற்பத்தியின் எண்ணிக்கை வேறுபாடு இந்த கருத்தை வலுவூட்டுவதாய் உள்ளது. (கரு உற்பத்தியில் இருந்தே சந்ததி உருவாக்கத்தின் செலவு பெண்ணுக்கு தொடங்குகிறது. சராசரியாக ஒரு பெண் தனது வாழ்நாளில் 30 சந்ததிகளைத்தான் உருவாக்க முடியும். ஆனால் ஒரு ஆண் 3000 மேற்பட்ட சந்த்திகளை ஏற்படுத்த முடியும். வேறுபாடு இதில் இருந்தே ஆரம்பம் ஆகிறது. இதனால்தான் ஆண்கள் வரலாறு நெடுக பலதார மணம் உடையவராய் இருந்துள்ளனர் என்று அறிவிலாளர்கள் விவரிக்கின்றனர்.

Citations:
1.http://www.theguardian.com/education/2009/oct/27/polygamy-study-russia-central-asia
2.http://web.missouri.edu/~flinnm/courses/mah/lectures/sexdim.htm
3.https://www.irishtimes.com/news/science/are-humans-naturally-monogamous-or-polygamous-1.3643373
4.https://en.wikipedia.org/wiki/Parental_investment
5.https://carta.anthropogeny.org/moca/topics/sexual-body-size-dimorphism?fbclid=IwAR1B2ncomsdLQeOhSU-es-EXV3__nwr_nlVElkyuxZUkHB_VuHDsjHHvpCw
6.https://academic.oup.com/beheco/article/14/6/818/269169?fbclid=IwAR3AiBG7iTuZy6cRzxALqQplEk10POIyh7yaGbNm56U60_v1IkYo6ZDNo6s
7.https://www.nature.com/scitable/knowledge/library/mating-systems-in-sexual-animals-83033427/

Sunday, July 16, 2017

உயிர்: 3.உயிர் என்றால் என்ன: இஸ்லாமிய பார்வை:

ஏக இறைவனின் திருப்பெயரால்


உயிர் என்றால் என்ன: இஸ்லாமிய பார்வை:
சென்ற தொடரில் கூறியவாறு நபி(சல்) அவர்கள் இஸ்லாமை முன்வைப்பதற்கு முன்பும் பின்பும் பல தத்துவவியலாளர்கள் உயிர் குறித்து பல கருத்துகளை முன்வைத்துள்ளனர். இஸ்லாம் உயிர் குறித்து என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். 

உயிர் குறித்து குர் ஆன் கூறுவது என்ன?

    உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(அல் குர்ஆன் 39:42)

மேற்கூறிய வசனம் அல்லாஹ் உயிர்களை இரண்டு தருவாயில் கைப்பற்றுவதாக கூறுகிறான். அதாவது தூங்கும் போதும், மரணத்தின் போதும் என்றும் கூறுகிறான். நாம் தூங்கும் போது நமது உயிர் கைப்பற்றப்படுகிறது ஆயினும் நம் உடலை சோதிக்கும் போது நமது உடல் உறுப்புக்களின் இயக்கமான மூச்சு, இதயதுடிப்பு போன்றவற்றை உணரவியலும். நமது உடலில் இருந்த உணர்வுநிலை இல்லாமல் போய்விடுகிறது. இந்த உணர்வுநிலைக்கும் பகுத்தறிவிற்கும் ஆதாரமாக அமைந்த ஆன்மாவான அந்த உயிர்தான் கைப்பற்றப்படுகிறது. மனித உடலில் இருக்கும் இதயதுடிப்பு உள்ளிட்டவை மற்றுமொரு ஆன்மாவால் கட்டுபடுத்தப்படுகிறது. இதை நாம் உடல் என்றே புரிந்து கொள்கிறோம். அதாவது ஒவ்வொரு மனித உடலிலும் இரண்டு ஆன்மாக்கள் இருக்கின்றன. ஒன்று நன்மை தீமையை பகுத்தறிந்து உடலிற்கு கட்டளையிடும் உயிர். இதை காலம் தோறும் உயிர், ஆன்மா,(SOUL, CONCIOUS MIND என்று தத்துவவியலாளர்களால் அழைக்கப்படுகிறது) மற்றொன்று உடல் உறுப்புகளின் செயல்பாட்டை உறுதி செய்யும் உயிர். அதாவது ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் செயல்பாட்டை உறுதி செய்யும் உயிர். இந்த உடலும் அதன் இயக்கத்தை உறுதி செய்யும் உயிர் என்ற இந்த மொத்த அமைப்பையும் உடல் (BODY) என்று தத்துவவியலாளர்கள் அழைப்பார்கள். இந்த இணைப்பு குறித்த விவாதத்தை MIND-BODY PROBLEM என்று தத்துவவியலாளர்கள் அழைப்பார்கள். இந்த இரண்டு உயிர்களும் மொத்தமாக கைப்பற்றப்படுவது மரணமாகும் .

மேலும் மேற்கூறிய இருமைத்துவத்தைதான் இஸ்லாம் முன்வைக்கிறது என்பதற்கு பின்வரும் வசனங்களை கவனிப்போம்.  
  
அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள்? உயிரற்று இருந்த உங்களுக்கு அவன் உயிரூட்டினான். பின்னர் உங்களை மரணமடையச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்!(அல் குர்ஆன் 2:28)

    பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
                                                                                                                               (அல்குர்ஆன் 32:9)

      "எங்கள் இறைவா! எங்களை இரண்டு தடவை மரணிக்கச் செய்தாய். இரண்டு தடவை உயிர்ப்பித்தாய். எங்கள் குற்றங்களை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். தப்பிக்க வழி ஏதும் உள்ளதா?'' என்று அவர்கள் கேட்பார்கள்.
                                                                                                                            (அல்குர் ஆன் 40:11)

மேற்குறிய வசனம் நாம் உயிரற்று இருந்தோம் என்பது கருவின் ஆரம்ப நிலையை கூறுவதாகும். கருவின் ஆரம்ப நிலையில் செல்லின் உயிர் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவற்றிற்கு ஆன்மாவை பின்னாளில்தான் அல்லாஹ் வழங்குவதாக கூறுகிறான். அதை பின்வரும் நபிமொழி உறுதிசெய்கிறது.

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அவர் அதில் உயிரை ஊதுகிறார். (அதற்கு முன்பே) அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா ஆகிய நான்கு விஷயங்களை எழுதுமாறு அவர் பணிக்கப்படுகிறார்.
(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) நூல்: முஸ்லிம் 5145.)

ஆனால் எவ்வளவுதான் குர்ஆனும் நம்பகமான ஹதீஸ்களும் உடல் உயிர் குறித்து இருமைத்துவ வாதத்தை (DUALISM) முன்வைத்தாலும் உடல் மற்றும் உயிரின் இணைப்பு குறித்து (MIND BODY PROBLEM) நமக்கு எந்த விளக்கமும் இல்லை. இது குறித்து மனிதன் பல ஆயிரம் ஆண்டுகளாக விவாதித்து வந்தாலும் போதிய முடிவுகளை தற்போதுவரை எட்டவில்லை , என்றும் எட்டப்போவதுமில்லை என்பதுதான் நிதர்சன் உண்மையாகும் அதைத்தான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் பதிவிட்ட செய்தியானது பின்வரும் குர் ஆன் வசனத்தினால் எடுத்துரைக்கிறது.

   (முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக! (அல் குர் ஆன் 17:85)

வில்டர் பென்ஃபீல்டின் ஆய்வுகள்: ஒரு பொருள்முதல்வாதியின் சவக்குழி


வில்டர் பென்ஃபீல்ட் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுனர். வலிப்பு நோய் அறுவை சிகிச்சையின் தந்தை. மாண்ட் ரியல் நரம்பியல் கல்வி நிறுவனத்தின் முதல் தலைவர். புகழ் பெற்ற நரம்பியல் நிபுனர் நோபல் பரிசு பெற்ற செர்ரிங்க்டன் அவர்களது மாணவர். இன்று இருக்கும் நவீன நரம்பியலின் முன்னோடி. மூளை வரைபடத்தினை திரம்பட செய்வித்தவர் என்று பல புகழுக்கு சொந்தகாரர். 
ஒரு பொருள்முதல்வாதியாக தனது ஆய்வுகளை ஆரம்பம் செய்து முடிவுகளால் பொருள் இருமைத்துவத்தை முன்வைத்தவர். பொருள்முதல் வாதியான வில்டர் பென்ஃபீல்ட் எப்படி தனது ஆய்வுகளால் வீழ்த்தப்பட்டு இருமைத்துவத்தை ஏற்று கொண்டார் என்பதைதான் பின்வரும் பகுதியில் காணவிருக்கிறோம்.   

பென்ஃபீல்ட் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை வழங்குவதில் வள்ளவர். அவ்வாறு சிகிச்சை அளிக்கும் போது அவர்களை விழிப்பு நிலையிலேயே அவர்களது மூளையின் பகுதிகளை ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாட்டோடு எவ்வாறு தொடர்புடையது என்பதை ஆய்வு செய்தபின் சேதம் அடைந்த பகுதியில் மட்டுமே திரம்பட அறுவை சிகிச்சையை மேற்கொள்வார். அதாவது 60Hz கொண்ட குறைந்த மின்னோட்டத்தை கொண்டு மூளையின் பகுதிகளை தூண்டும் போது குறிப்பிட்ட மூளையின் பகுதியுடன் தொடர்புடைய உடல் உறுப்பில் அசைவை காண்வியலும். இவ்வாறு ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை பின்வரும் படத்தினால் விளக்கினார்.

Add caption


      இவ்வாறு தொடர் ஆய்வில் ஈடுபட்ட பென்ஃபீல்ட் மனிதனின் உயிர் அல்லது உள்ளம்* என்பது குறித்து பின்வரும் ஆய்வு முடிவுகளை முன்வைக்கிறார். அதாவது உள்ளம் என்று நாம் இன்று கூறிவரும் ஒன்றிற்கும் மூளையின் நரம்பியல் செயல்பாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. உள்ளம் என்பது தனித்த ஒன்று என்று குறிப்பிடுகிறார். மேலும் உள்ளத்தின் செயல்பாடான விழிப்பானது எந்த நரம்பியல் செய்ல்பாட்டையும் சார்ந்தில்லை எங்கிறார் பென்ஃபீல்ட். தனது ஆய்வுமுடிவுகளை தனது எண்ண மாற்றங்களையும் வில்டர் பென்ஃபீல்ட்  “The mystery of Mind: A critical study of Consciousness and Human Brain” என்ற புத்தகத்தின் வாயிலாக வெளியிட்டார்.

   *உயிரும் உள்ளமும் ஒன்றாய்தான் அல்லது உயிரின் பகுதியாய்தான் வரலாறு நெடுக காணவியலும்.[1] نفس -- நஃப்ஸ் என்ற அரபுச்சொல் உள்ளம் ஆன்மா இரண்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கிரேக்க சொல்லான Psyche[2] என்ற சொல் உள்ளம் ஆன்மா இரண்டையும் குறிக்கும்.


சிந்தனையும் முடிவுகளும் மூளையிலா பிறக்கிறது:

பல காலமாய் மனித சமுகத்தின் கூற்று ஒன்றையே கேள்விக்கு உடப்டுத்துகிறார் பென்ஃபீல்ட். அதாவது சிந்தனையும் முடிவெடுத்தலும் மூளையில் உதிக்கிறது என்று நாம் கூறிவரும் நெடுநாள் நம்பிக்கையையே மறுக்கப்பட்டுவிட்ட்து என்பதுதான் வில்டரின் ஆய்வு முடிவுகள் நமக்கு தரும் அதிர்ச்சியே என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது பென்ஃபீல்ட் உள்ளம் எவற்றை எல்லாம் செய்கிறது என்று நாம் நம்புவதை பட்டியலிடுகிறார்.


மேலும் நாம் அறியப்படும் உள்ளம் என்பதற்கும் மூளைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார். அதாவது உள்ளமானது மூளையின் எந்த பகுதியிலும் இல்லை. அது தனித்து இயங்குவதாய் உள்ளது. மேலும் அந்த உள்ளம்தான் தான் இருக்கும் சூழலை அறிந்து அதை உணர்த்துவதாய் இருக்கிறது. அவர் நினைவில் இருக்கும் நோயாளியின் மூளையை மின்முனையினால் இயக்கி அதன் விளைவை விளக்குகிறார்.


         மேற்குறிப்பிடும்  முடிவு என்ன காட்டுகிறது. மூளையின் இயக்கத்திற்கும் “நான்” என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. “நான்” என்று அறியப்படும் உள்ளமானது மூளை என்ற உறுப்பில் இல்லை. மூளையில் தான் “நான்” என்பது இருக்குமானால் ஏன் அந்த நோயாளி “தான்” செய்யவில்லை என்று கூறவேண்டும். மூளைதான் உள்ளத்தின் இருப்பிடமாக இருந்தால் எப்படி அந்த நோயாளியினால் தனது செயலை தானே தடுக்கவியலும். மின்முனையால் ஏற்படும் செயலை எதிர்க்கும் முடிவானது மூளையில் எட்டப்படவில்லை. மூளை என்பது வெறும் கருவிதான். அதைதான் பின்வரும் பகுதியில் பென்ஃபீல்ட் விளக்குகிறார்


     அதாவது இந்த இடத்தில்தான் ஒரு பொருள்முதல்வாதியின் நம்பிக்கை தகர்ந்ததை உணரமுடிகிறது. வில்டரின் ஆய்வுகள் எதுவும் உள்ளத்தின் செயல்பாடுகளை தோற்றுவிக்கவில்லை. மூளை என்பது ஒரு உறுப்பாக பதிவு செய்வதையும், ஆன்மாவுடன் உடலின் ஏனைய பாகத்தை இணைக்கும் ஒரு பாலமாகவும்தான் உள்ளதே தவிர, சிந்தனை முடிவெடுத்தல் சூழல் குறித்த விழிப்பு போன்ற எதையும் மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் வாசிப்பை தொடர்வோம்.


     அதாவது உள்ளமும் மூளையும் தனித்தவை. ஆனால் ஒன்றை கொண்டு மற்றொன்று இயங்குவதாய் இருக்கிறது. இந்த இணைப்பைதான் உயர்ந்த மூளை இயக்கம் என்று வில்டர் கூறுகிறார். மேலும் தனது இறுதி கருத்தை, பல வருட உழைப்பின் முடிவுகளை பின்வருமாறு கூறுகிறார்.


            ஆக மனித இருப்பு என்பது இரண்டு மூல கூறுகளால் ஆனது. ஒன்று நமது உடல் உறுப்புகளிலும் செல்களிலும் காணப்படும் ஆற்றல் அல்லது உயிர்.  மற்றோன்று அறியமுடியாத உள்ளத்தை இயக்கும் உயிர். இந்த உயிர்தான் முடிவெடுத்தல் போன்ற செயல்களை செய்கிறது. இந்த உயிர்தான் நமது உறக்கத்தில் காணாமல் போகிறது. இந்த உயிர்தான் நம்மை விழிப்பில் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் புரிந்துகொள்ளவும் வைக்கிறது. அதனால்தான் மூளையை கணிணி போன்றது என்றும் அதை நிரலாக்கம் செய்து இயக்கும் தனித்த சுதந்திரமான  புரிதலுடைய செய்லாண்மைதான் நமது ஆன்மா அல்லது உள்ளம் என்று கூறுகிறார் வில்டர். பொருள்முதல் வாதத்தை அடிப்படையாக கொண்டு நாத்திகர்கள் ஆன்மா குறித்து எடுத்துவைத்த அத்துனை வாதங்களுக்கும் வில்டரின் அறிவியல் ஆய்வுகள் சம்மட்டி அடி கொடுத்தது என்பதை மூஸ்லிம்களாகிய நாம் சொல்லி புரியவைக்கத்தேவை இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
  மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். (அல் குர்ஆன் 50:16. )

உயிர் :1.உயிர் என்றால் என்ன?.......... மக்காவில் ஒருநாள்

ஏக இறைவனின் திருப்பெயரால்


உயிர் என்றால் என்ன?.......... மக்காவில் ஒருநாள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது,

       “குரைஷியர்கள் அல் நள்ர் பின் அல் ஹாரிஸ் மற்றும் உக்பா பின் அபூ முயீத் ஆகியோரை “ முஹம்மது குறித்தும், அவர் கூறுவது குறித்தும் கேட்டுவாருங்கள். அவர்கள்தான் முதல் வேதத்திற்கு உரியவர்கள். நாம் அறியாதவற்றை அவர்கள் அறிவார்கள்” என கூறி அவர்கள் இருவரையும் மதீனாவில் இருந்த யூத ரப்பீக்களிடத்தில் அனுப்பிவைத்தனர். ஆகவே அல் நள்ர் மற்றும் உக்பா இருவரும் மதீனா சென்று யூத ரப்பீக்களிடத்தில் இறைத்தூதர் குறித்தும், அவர் கூறுவது குறித்தும் கூறினர். அவ்விருவரும் “நீங்கள் தாம் தவ்ராத்தையுடைய மக்கள், எங்கள் இந்த மனிதர் குறித்து அறிந்து கொள்ளவே உங்களிடம் வந்தோம்” என்றும் கூறினர்.

          அதற்கு அந்த ரப்பீக்கள் அவர்களிடத்தில் “ நாங்கள் கூறும் இந்த மூன்று விஷயம் குறித்து அவரிடம் கேளுங்கள். இந்த மூன்றும் குறித்து அவர் பதிலளித்தால் அவர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தாம். அவ்வாறில்லாமல் அவர் பதிலளிக்கவில்லை என்றால் அவர் பொய்யர். அவரை நீங்கள் விரும்பியவாரு செய்து கொள்ளுங்கள்.

      1.“முன்னொரு காலத்தில் வாழ்ந்த குறிபிட்ட வாலிபர்களைப் பற்றி ஏதாவது செய்தி தெரியுமா? ஏனெனில் அவர்களைப் பற்றி ஓர் ஆச்சரியமான செய்தி இருக்கிறது. அவர்கள் என்னவானார்கள்?

               2.பூமியின் கிழக்கு மேற்கு பகுதிகளையெல்லாம் சுற்றி வந்த பயணி ஒருத்தரைப் பற்றிய செய்தி தெரியுமா?

               3.ரூஹ்(உயிர்) என்றால் என்ன?

               இந்த மூன்று கேள்விகளை கேளுங்கள். அவர் இவற்றுக்கு சரியான பதிலளித்தால் அவர் இறைத்தூதர்தான், அவரை பின்பற்றுங்கள். அவர் பதிலளிக்கவில்லை என்றால் அவர் பொய்யர். அவரை நீங்கள் விரும்பியவாரு செய்து கொள்ளுங்கள். அவர்கள் நள்ர் மற்றும் உக்பா குரைஷியரிடம் திரும்பி வந்தனர்.

      “குரைஷியரே! உங்களுக்கும் முஹம்மதிற்கும் இடையில் முடிவு செய்வதற்கு தேவையான தீர்வை கொண்டுவந்துள்ளோம். ரப்பீக்கள் சிலவற்றை குறித்து கேள்வி எழுப்புமாறு கூறியுள்ளனர்.” என்று கூறினர். அவை என்ன என்பதையும் குறைஷியரிடம் விவரித்தனர்.

            ஆகவே குறைஷியர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போல கேள்விகளை தூதரிடம் முன்வைத்தனர். அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் “நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாளை விடையளிக்கிறேன்” என்று கூறிவிட்டார்கள். நபி(சல்) அவர்கள் இன்ஷா அல்லாஹ் –இறைவன் நாடினால் என்று குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள்.

                 குரைஷியர்களும் சென்று விட்டனர். ஆனால் நபி(சல்) அவர்கள் எந்த வஹி அறிவிப்பும் இன்றி, ஜிப்ரில்(அலை) அவர்களது வருகைக்காக 15 நாட்கள் காத்திருந்தார்கள். அதனால் மக்காவாசிகள் வதந்திகளை பரப்ப துவங்கினர். “முஹம்மது நாளை பதிலளிக்கிறேன் என்று வாக்களித்தார் ஆனால் 15 நாட்கள் ஆகியும் நாம் கேட்ட எதற்கும் பதிலளிக்கவிலை” என்று பரப்ப துவங்கினர். வஹியின் தாமதம் இறைத்தூதருக்கு மிகப்பெரிய சிக்கலையும், மக்காவாசிகளின் சொற்கள் மிகப்பெரிய மனவேதனையையும் அளித்தது.

                அதன் பிறகு ஜிப்ரில்(அலை) அவர்கள் எல்லா புகழும் உடைய ஏக இறைவனிடம் இருந்து காஃப் அத்தியாயத்தை கொண்டுவந்தார்கள். அதில் அவர்களது வேதனைக்கான காரணம் குறித்தும், அந்த வாலிபர்கள் குறித்தும், அந்த பயணி குறித்தும் செய்திகள் இடம் பெற்றிருந்தன. மேலும் ஏக இறைவன் குறிபிட்டான், “ (முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக! (17:85.) (இப்னு கஸீரின் அல் சீரா அல் நபவிய்யா ப.எண்:351, பாகம் 1)

             மேற்குறிபிட்ட சம்பவமானது நபி(ஸல்) அவர்களின் மக்காவின் ஏகத்துவ பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் நடை பெற்றதாகும். அங்கிருந்த குறைஷியர்கள் யூத ரப்பீகளிடம் ஆலோசனை செய்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட கேள்விதான இவை மூன்றும். உயிர் குறித்த இஸ்லாமிய பார்வையானது இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. நாத்திகர்களும் கிறித்தவ மிசனரிகளும் உயிர் குறித்த இஸ்லாமின் பார்வையை விமர்சனம் செய்து வருகின்றனர். இஸ்லாம் உயிர் குறித்து அப்படி என்னதான் கூறுகிறது. அது அறிவியலுடன் எவ்வளவு பொறுந்துகிறது என்பதை ஒத்து நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்

Monday, February 27, 2017

"பெண் சிசுக்கொலை" - மதங்கள் என்ன சொல்கின்றன?

"பெண் சிசுக்கொலை" - மதங்கள் என்ன சொல்கின்றன?




 ஹிந்துயிசம் - ஹிந்து மத பிரமுகர்கள்  கண்டித்த போதிலும், மத/வேதங்கள் இது தொடர்பாக என்ன சொல்கின்றன என்ற விபரம் இல்லை. வேதங்களில் இது தொடர்பான விபரம் அறிந்தவர்கள்,  ஆதாரத்துடன் பதிவு செய்யுங்கள்.

இந்திய சட்டத்தில் தடை உள்ளது ஆனால் இந்த சட்டம் "ஹிந்து மத" சட்டம் அல்ல.


கிறித்துவத்திலும், யூத  மதத்திலும்  கண்டிக்கப்பட்டுள்ளது.


இஸ்லாத்திற்கு முன் அரேபியர்களிடத்தில் இந்த பழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. அதை இஸ்லாம் அடியோடு ஒழித்து, அதைக் கொலைக்குற்றமாக அறிவித்தது.


இது தொடர்பான திருக்குர்ஆன் வசனம்:

" என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது" [81:8-9]


"வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்." [17:31]

மனித சட்டங்களால் மட்டும்  இவைகளை தடுத்து நிறுத்த முடியாது.

இஸ்லாம் எப்படி இதை அடியோடு ஒழித்தது என்று பார்ப்போம்.


பெண் குழந்தைகளைக் கொல்பவர்களின் முக்கியமான  காரணம் பொருளாதார சுமை மட்டுமே.அந்தக் கவலை தீர்க்கப்பட்டால் இவை அடியோடு ஒழிந்துவிடும்.



1. வறுமைக்கு பயந்து அவர்கைளக் கொல்லாதீர்கள் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம் என்ற உறுதிமொழியை இறைவன் அளிக்கின்றான். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவானது. எந்த நிலையிலும் உயிரை எடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.


2. மீறிச் செய்தால், இறைவனின் நீதிமன்றத்தில் நீங்கள் குற்றவாளியாக நிறுத்தப்படுவீர்கள். அப்போது "என்ன குற்றத்திற்காக  அவள் கொல்லப்பட்டாள் " என்று உங்களிடம் விசாரிக்கப்படும்.


ஒன்று பொருளாதார உத்திரவாதம் - இரண்டு குற்றத்திற்க்கான தண்டனை.  மன நல ரீதியான இந்த போதனை, 100%  சதவீத வெற்றியைக் கொடுத்தது.


Ref:http://www.bbc.co.uk/ethics/abortion/medical/infanticide_1.shtml

Thursday, August 4, 2016

சூபியிசம் ஒரு யூத சதியே :- Part- 1

By Nasrath S Rosi

சூபியிசம் என்றால் என்ன ? என்கிற கேள்விக்கு , அது இஸ்லாத்தின் ஆன்மீக பிரிவு என எளிமையாக பதில் சொல்வார்கள் தரீக்காவாதிகள்..! இஸ்லாம் என்பதே ஒட்டுமொத்த ஆன்மீக மார்க்கம் தானே இதில் தனியாக என்ன கிளை நிலை ஆன்மீகம் என கேட்போரிடம்...' தியான நிலையும் தபஸ்நிலையுமல்லாத வணக்கம் நம்மையும் நம் மனதையும் இறைவனிடம் கொண்டு சேர்க்காது ' என்பார்கள்...

முன்னுரை
************
தொழுகையின் போது நம் மனம் ஒன்றி ஆழ்ந்த நிலையில் பிரார்த்திக்க வேண்டுமானால் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும், அதுவல்லாது மனதை அலைபாய விட்டு தொழும் தொழுகை ஒரு மதச்சடங்காக இருக்குமேயொழிய அது ஒரு வணக்கமாக ஓரிறையத்தேடிய நம் இறைஞ்சலாக அது இருக்காது, ஆகவே நம் மனதை ஒருநிலைப்படுத்தி அலைபாயும் நப்ஸை அடக்கி, நமது கட்டுப்பாட்டில்
உதவுவதே திக்ரும் என்னும் தியானம் அதை கற்பிப்பதே சூபியிசம் என்கிறார்கள் சூபியாக்கள்.


மனிதன் இப்படித் தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என செயல்முறை செய்து காட்டிய ரசூலுல்லாஹ் அவர்கள் நமக்கு திக்ரு என்னும் தியானநிலையை கற்பிக்க மறந்துவிட்டார்களா...? நீங்கள் தொழுகையின் போது மனதை அலைபாய விடாமல் கட்டுக்குள் வைக்கும் வித்தையை சொல்லிக்கொடுக்காமல் ரசூலுல்லாஹ் ஒளித்து வைத்தார்களா...?

தமது ஹஜ்ஜத்த்-அல்-விதா வின் போது இறுதிப்பேருரையில் " இந்தநாள் நான் உங்களுக்கு இந்த மார்க்கத்தை இறுதியாக்கி பூர்த்தி செய்துவிட்டேன், அல்லாஹ் எனக்கருளிய இந்த புனித மார்க்கத்தை நான் முழுமையாக உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன், எனக்கு பிறகு மார்க்கத்தின் பெயரால் எதை புகுத்தினாலும் அவர் நபிகளின் மீது பொய்யுரைத்த குற்றத்திற்கு ஆளாவார் " என்று தெளிவாக கூறிவிட்டு தானே சென்றுள்ளார்கள்...? அவர் அறைகுறைநாக விட்டுச்சென்றதை பூர்த்தி செய்ய முளைத்தவர்களா சூபிக்கள்...?

இஸ்லாத்தை களங்கப்படுத்துவதற்காகவே யூதர்களால் பழக்கத்திற்குள்ளாக்கப்பட்டு இதுவும் இஸ்லாம் தான் பரப்பிக்கொண்டு திரியும் சூபியாக்கள் தாங்களும் யூதருக்கு உடன்பட்டிருப்பதை உணராமலே அதனை செய்துகொண்டிருக்கிறார்கள்.. நபி ஈசா மரணித்த பிறகு சுமார் நூறு வருடம் கழித்தே கிறிஸ்தவத்தை புகுத்தினான் யூதன்...அதுபோலவே இஸ்லாத்தை களங்கப்படுத்த திட்டமிட்டு இருநூறு ஆண்டுகள் கழித்து சூபித்துவம் இஸ்லாத்தில் நுழைக்கப்படுகிறது.

திட்டமிட்ட இந்த சதி கிபி.8 ம் நூற்றாண்டின் இறுதியில் தான் துவங்குகிறது...மார்க்கத்தை கடினமாக நினைத்து தப்பிக்க நினைத்தவர்களால் உருவாக்கப்பட்டது சூபியிசம். இவர்களுக்காகவே அரபியில் முனாஃபிக் என்கிற சொல் உள்ளது..ஆம்..! சூபியாக்கள் முனாஃபிக்குகள்...நாங்களும் அல்லாஹ் என்கிற ஓரிறையை வணங்குகிறோம், நபி முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வசல்லத்தை பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொண்டே இஸ்லாத்தை மீறிவிட்டனர்.

( இந்த பாகத்தில் சூபியசம் என்பது என்ன என்பதனை சூபியாக்கள் கூறும் கோட்பாட்டோடு விளக்கியுள்ளோம், இதற்கு அடுத்த பாகத்தில் சூபியசம் எதிலிருந்து தோன்றியது எதற்காக தோன்றியது, சூபியிசத்தின் இருட்டு பக்கங்கள் என்ன , அவர்கள் மார்க்கத்தின் பெயரால் செய்யும் வழிகேடு என்ன என்பதனை அடுத்த பாகத்தில் காணலாம். )

------------------------------------------------------

Al-Qushayri எழுதிய Principles of Sufism என்கிற நூலிலிருந்து.....

சூபிக் கோட்பாடு
****************

சூபி அரபுச் சொல் தூய்மை என்ற பொருள் கொண்ட ஸாப்(saaf) மூலச் சொல்லிலிருந்து பிறந்தது என்றும், ஸஃபா, ஸிஃப என்னும் அரபுச் சொல்லில் பிறந்த சிகிச்சை என அர்த்தம் கொள்ளக்கூடிய Healing என உட்பொருள் கொண்ட அதாவது இதயத்தின் நோய்களை அகற்றி குணமளிக்கும் தத்துவமே சூபித்துவம் எனவும் , அணி வரிசை என்னும் பொருள் கொண்ட ஸூப்(suf) மூல வார்த்தையிலிருந்து உருவானது என்றும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.

சூபி என்ற சொல்லை சோபோஸ் (sophos) என்ற கிரேக்கச் சொல்லுடன் இணைத்து அறிஞன் என்றும் பொருள் கொள்வதுண்டு. இது உண்மை (wisdom) அறிவு (enlightment) என்பதான அர்த்தங்களையும் கொண்டுள்ளது.

அரபு மொழியில் ஸூ (suf) என்றால் முரட்டு கம்பளி என்றும் அர்த்தம். ஆடம்பர வாழ்வை துறந்து மனோ இச்சைகளை அடக்கி எளிய வாழ்வின் சின்னமாக கம்பளியை விரும்பி அணிந்து கொண்டவர்கள் சூபிகள் என்பதாக இக்கருத்தோட்டம் அமைகிறது. நபிகள்நாயகம்(ஸல்)அவர்களின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடைய அஸ்ஹாபுஸ் ஸூபா என்பவர்கள் திண்ணைத்தோழர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். குர்ஆனில் சூபியானி என்றோ சூபிக்கள் என்றோ ஒரு வார்த்தை கூட வரவில்லை...ரசூலுல்லாஹ் அவர்களும் சூபியாக்கள் என்கிற பிரிவினர் இஸ்லாத்தில் இருந்ததாக கூறவுமில்லை.

சூபியிசம் - அறிதல் கோட்பாடு
******************************

Khwaja Shamshudin Azeemi அவர்கள் எழுதிய Muraqaba என்கிற நூலிலிருந்து....

சூபிசம் அறிதல் கோட்பாடு குறித்த சில பார்வைகளை நெகிழ்ச்சியாக முன்வைக்கிறது. மனிதனுக்கு புறத்தே இயங்கிக் கொண்டிருக்கிற உலகை, நிகழ்வுகளின் தொகுப்பை அறிந்து கொள்ள சில நடைமுறைகளை கவனத்திற் கொள்ளச் சொல்கிறது. தர்க்கமும், பகுத்தறிவும் இணைந்த கூறுகளை பரிந்துரை செய்கிறது. மனித உணர்விற்கும், பொருளின் இருப்பிற்குமான உறவுநிலையைப் ஒருங்கிணைந்ததாகவும் இது அமைகிறது.

இல்முல்யகீன் (அனுமான ஞானம்), ஐனுல் யகீன் (தரிசனஞானம்) ஹக்குல் யகீன் (அனுபவஞானம்) என்பதாக அறிதலின் வகையினங்களை சூபிசம் பகுத்துக் காட்டுகிறது.

தூரத்தில் புகைவந்து கொண்டிருக்கிறது. ஆனால் கண்ணுக்கு நெருப்பு புலப்படுவதில்லை. புகையை வைத்துக் கொண்டு நெருப்பு இருப்பதாக அனுமானம் கொள்வது இல்முல்யகீன். இது இறைவனுக்கும் சாதாரண மனிதனுக்கும் இடையிலான உறவுநிலைக் குறியீடாகும்

ஐனுல் யகீன் எரியும் நெருப்பை நேரடியாக கண்ணால் தரிசிப்பதாகும். இது இறைவனுக்கும் மெய்ஞானிகளான வலிமார்களுக்கும் இடையிலான உறவின் வகையைக் குறிப்பதாகும்.

எரியும் நெருப்பை தொட்டுப்பார்த்து அல்லது அதனுள் சென்று நெருப்பு சுடும் என்பதை நடைமுறை ரீதியாக உணரும் அனுபவ ஞானத்திற்கு பெயர் ஹக்குல்யகீன். இது இறைவனுக்கும் நபிமார்களுக்குமான பிணைப்பு பற்றி பேசப்படுகிற சொல்லாடலாகும்.

உலகம் -உயிர் -மனம் பற்றியகருத்தாக்கம்
************************************

உலகம் பற்றிய சிந்தனைமுறையிலும் சூபியசம் நான்கு வித உலகங்களை அடையாளப்படுத்திக் காட்டுகிறது.

1. சமகால மனித உலகம் நாசூத், ( நாஸ் என்பது மனிதக்கூட்டத்தை குறிக்கும் அரபுச்சொல் )

2.மனித ஜீவராசிகள் இல்லாத ஒளியால் படைக்கப்பட்ட இனமான மலக்குகள் என்னும் வானவர்களின் உலகம் மலக்கூத்,

சக்தியின் உலகம் ஐபரூத் இறைவனில் தோயும் உலகம் லாகூத் என்கிற வகையிலே விரிவான தனித்த அடையாளங்கொண்ட உலகங்கள் படைத்துக் காட்டப்படுகிறது.

உயிர் பற்றிய கோட்பாட்டுச் சிந்தனையையும் சூபியசம் முன்மொழிகிறது. உலகின் உயிர்கள் பற்றி பகுப்பாய்வு செய்து அதன் தனித்தன்மைகளை கண்டறிந்து விளக்க முற்படுகிறது.

1. ஜடப் பொருட்களின் உயிர் ரூஹுல்ஜிமாத்து என்று அழைக்கப்படுகிறது. ஜடப் பொருட்களுக்கு உயிர் உண்டு. ஆனால் வளர்ச்சி கிடையாது. இடப்பெயர்ச்சித் தன்மையும் இல்லை. இங்கே பூமியின் ஈர்ப்பு விசை உயிர்த்தன்மை சார்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

2. தாவர இனங்களின் உயிர் ரூஹுல் நபாத்து என்பதாகும். விதையிலிருந்து, முளைகள், கிளைகள், செடிகள், கொடிகள், மரங்களாக வளர்கிறது. உயிர்த்தன்மை இருப்பதாலேயே செடி கொடிகள் வளர்கிறது. ஆனால் இவ்வுயிருக்கு ஓரிடத்தைவிட்டு இடம்பெயர்ந்து இன்னொரு இடத்தில் நிலைகொள்ளும் நகரும் தன்மை கிடையாது. மாறாக இவற்றின் வேர்கள் மட்டுமே பூமிக்குள்ளே நகர்ந்து செல்கிறது.

3. ரூஹுல் ஹைவானி என்பது விலங்-கினங்களின் உயிர்குறித்த சொல்லாக்கமாகும். இதற்கென சில தனித்த பண்புத்தன்மைகள் உண்டு. இவ்வுயிர்களுக்கு வளர்ச்சி உண்டு. ஓரிடம் விட்டு வேறொரிடம் நகர்வதற்கான ஆற்றல் உண்டு. ஆனால் உழைப்பின் மூலமாக பொருளுற்பத்தி செய்யும் படைப்புத்திறன் கிடையாது.

4. மனித உயிரை குறிப்பதற்கு ரூஹுல் இன்சானி சொல்லாக்கம் பயன்படுத்தப்படுகிறது. இடம்பெயர்தல், வளர்ச்சி, சிந்தனை, உழைப்பு, உற்பத்தி உள்ளிட்ட அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கிய கருத்தாக்கமாக இது விளங்குகிறது.

மனம் என்னும் கருத்துருவாக்கம்
*****************************

மனம் என்னும் கருத்துருவாக்கம் பற்றியும், அது பல்வேறு உணர்வு நிலைகளால் பின்னிப் பிணையப்பட்ட விதம் குறித்தும் சூபி ஞானக் கோட்பாடு அதிகம் பேசியது. ஏனெனில் அகமியஞான உணர்வுநிலை முற்றிலும் நப்ஸ் எனப்படும் ஆன்மா சம்பந்தப்பட்ட கருத்து நிலையிலிருந்தே உருவாகி வளர்கிறது.

எல்லாமும் கடந்த இறைநிலை மெய்மையோடு மனிதமனம் இரண்டறக் கலத்தலே இஸ்லாமிய அனுபூதி சிந்தனையின் வழிமுறை. எல்லைக்குட்பட்ட ஒன்று எல்லை கடந்த ஒன்றோடு சேர்ந்து ஒன்றாவது என்பதாக இதற்கு அர்த்தங்கள் உண்டு. அதீத உலகியல் நுகர்ச்சிக்கு மாற்றாக உலக இன்பங்களிலிருந்து விடுபட்ட ஆன்மா பிழைபொறுக்க (தவ்பா) வேண்டி இறையிடம் பூரண நம்பிக்கை (தவக்கல்) கொள்கிறது.

சூபிக் கோட்பாடு மனித ஆன்மாவின் இயல்புகளை ஏழு வகைகளாக பாகுபடுத்திச் சொல்கிறது.

1. தீயகெடுதியைத் தூண்டுகிற ஆன்மா நப்ஸ் அம்மாரா,

2. மிருககுணம் நீங்கி நற்குணம் திரும்பும் ஆன்மா நப்ஸ் லவ்வாமா,

3. நன்மையான காரியங்களை செய்யும் ஆன்மா நப்ஸ் முல்ஹிமா

4. அமைதி நிலையில் இருக்கும் ஆன்மா நப்ஸ் முத்மஇன்னா.

5. இறைச் சோதனையை தாங்கி நம்பிக்கை தளராது உறுதியோடு இருக்கும் ஆன்மா நப்ஸ் ராளிய்யா,

6. தன்னைத்தானே நிறைவு பெற்ற ஆன்மா நப்ஸ் மரளிய்யா,

7.இறைஞானம் முழுமையாக ஒளிர்ந்த ஆன்மா நப்ஸ் காமிலா என்பதாக இந்த படித்தரங்கள் விவாதிக்கப்படுகின்றன.
( Sufism the mystic of Islam - என்கிற புத்தகத்தில் இருந்து )

சூபியிசத்தில் கூறப்படும் தியான நிலைகள் - stages of muraqaba
*************************************

அரபிக் மற்றும் பாரசீக மொழியில் முராஃகபா என்பது தியானம் என்கிற அர்த்தத்தை உடையது... சூபி ஞானிகள் தங்களது சீடர்களுக்கு முதலில் கற்றுத்தருவது இதுவே. ஆனால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் புழங்கும் சூபியிசத்திற்கும் அயல்நாடுகளான இரான்,இராக்,துருக்கி,சீனா,அப்கான் மற்றும் இஸ்லாமை அனுமதித்த மற்ற நாடுகளில் புழங்கும் சூபியிசத்திற்கும் ஏணியில் எட்டாத அளவு வேறுபாடு உண்டு..இந்திய சூபியிசத்தை அடுத்த பாகத்தில் காணலாம்.

1. Ghanood - தியானத்தின் முதல்நிலை, கண்களை மூடியவாறு அமர்ந்திருந்து அல்லாஹுவின் பெயரை திக்ரு செய்வது, தூக்கத்தை குறைத்துக்கொண்டு தியானத்தை தொடங்கும் ஆதி நிலை

2.Adraak - இது தூக்கத்தை முற்றிலுமாக ஒழித்து subconscious mind என்னும் ஆத்மார்த்த எண்ணங்களை உணருவது, இந்நிலை அடைய நாம் இரண்டு வருட கனூத் தியானநிலையை அடைந்தவராக இருக்க வேண்டும்.

3. Warood - விழித்திருக்கும் நிலையிலேயே தியானித்திருப்பது..அதாவது நாம் எந்த நிலையில் இருந்தாலும், உறக்கத்திலோ- உணவு உண்ணும் போதோ- மலஜலம் கழிக்கும் நிலையிலோ நாம் தியான சிந்தனையிலிருந்து விலகாமல் இருப்பது.. ( ஜடம் மாதிரி கிடக்கிறது ) இந்த இறுதிகட்ட தியானநிலையில் இருப்போர் கண்களால் காணாமலேயே உலகில் நடப்பனவற்றை அறிந்துகொள்வது , நடக்கவிருக்கும் செயல்களை முன்கூட்டியே அறியிப்பு செய்வது.. ( இது மனிதனால் முடியுமா முடியாதா என நீங்களே தீர்மானியுங்கள் ).

J.Nicholson எழுதிய The mystic of Islam புத்தகத்திலிருந்து....

Gnosis of Universe- விண்ணுலக மறைஞானம் பெறுதல்
**************************************

Kashaf or ilhaam - சாதாரண மனிதராய் இருந்து பிறரால் உணர முடியாதவற்றை தாமாக உணர்ந்துகொள்வது.

Shahood - தமக்கு உண்டாகும் உள்ளுணர்வுகளின் மூலம் உலகை சுற்றி நடப்பவற்றை காணாமலே தெரிந்துகொள்வது, கேட்காமலே அறிந்துகொள்வது, நுகராமலே உணர்வது, தொடாமலேயே அந்த பொருளின் தன்மையை அறிந்துகொள்வது.... ( இறைவன் தன்னுடைய 100% பேரறிவிலிருந்து மனிதனுக்கு அளித்திருப்பது வெறும் 10% அறிவு தான், அதில் புலணறிவு என்பது மனிதனுக்கு 7% மட்டுமே இதில் காணாமலே,கேட்காமலே,நுகராமலே,தொடாமலே பொருட்களின் தகவினை அறிவது எப்படி...?? மனிதனை கடவுள்தன்மைக்கு நிகராக இந்த தியானம் அழைத்துச்செல்லுமா...தீர்மானியுங்கள். )

Fatah - நேரத்திலிருந்தும் மண்ணுலக வாழ்விலிருந்தும் விடுபட்டவராக மாற்றும் ஃபத்தா நிலை..! இருந்த இடத்தில் இருந்தபடியே விண்ணுலகில் சஞ்சாரிக்க முடியுமாம்.

Fana - இந்த நிலையை அடைந்த ஒருவர் அல்- இன்ஸானுல் கமீல் ஆகிறார், அதாவது ஆங்கிலத்தில் திருமதி . க்ரீன் கூறுகையில் He becomes a perfect man, யாவற்றையும் தியாகம் செய்த , முற்றும் துறந்த மோனநிலை அடைந்த முழு மனிதராகிறார்...
அப்போ சூபியிசத்தை கடைபிடிக்காதவன் முழு மனிதனில்லையா...?

எந்த ஒன்றையும் சொந்தமாக்காமலும், எந்த ஒன்றிற்கு சொந்தமாகாமலும் இருத்தல் என்பதும் நீ உன்னில் இறந்துவிடும்படி இறைவன் உன்னைச் செய்து அவனில் உன்னை வாழும்படி செய்தல் என்பதும் சூபியிசத்தின் அடிப்படை.

ஆன்மாவின் தூய்மை, நன்மை தீமைகளை பகுத்துணரும் வல்லமை அன்பினால் அதனை சுடர்விடச் செய்தல் என்பதான நுண்ணிய கருத்தாக்கங்கள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.

இந்தியாவில் சூபியிசம்
***********************

இந்திய பண்பாட்டுச் சூழலில் சூபிமார்க்கம் ஒருபுறம் இறைநேசத்தையும் மறுபுறம் மனிதகுலநேசத்தையும் அடிப்படையாகக் கொண்டே வெளிப்பட்டுள்ளது. எளிமை, சுயஅடக்கம், பரந்தநோக்கு, சமயஒற்றுமை உணர்வு உட்பட்ட லட்சியங்களின் வடிவமாக இது செயல்பட்டுள்ளது.

நீங்கள் விளக்கைப் போலவும்ஊசியைப் போலவும் ஆகிவிடுங்கள்

சூபிகள் இஸ்லாமிய மெய்ஞானிகளாக, சித்தர்களாக, அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

உலகியல் சார்ந்த அறவியல் கோட்பாடுகளையும், ஆன்மீகம் சார் வாழ்வியல் நெறிகளையும் ஒருங்கிணைத்து மனிதகுலத்திற்கு வழிகாட்டும் மார்க்கமாக இஸ்லாம் தன்னைஅர்த்தப்படுத்தியுள்ளது.தொழுகை, நோன்பு, புனித ஹஜ்பயணம் என எல்லாவித கடமைநிறைவேற்றுதல்களிலும் ஒருவித கூட்டு வழிபாட்டுமுறையை முன்வைக்கிறது.

மேல் - கீழ், உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்கிற இறுக்கமான சமுதாய அடுக்கு முறைகளின் அடிப்படையை தகர்த்து எல்லோரும் சமம் என்னும் பேருணர்வை பூமியெங்கும் பரப்பி, மனிதநேயத்தையும், மனித நீதிக்கான அடித்தளங்களையும் வலுவாக்கிக் கொண்டது.

இஸ்லாமியத்தை நபிமுகமது பிரச்சாரம் செய்து நடைமுறைப்படுத்திய மக்கா. மதினா அரேபிய பிரதேசங்களில் இது துவக்கம் கொண்டுள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நபிகளின் உற்ற ஸகாபாக்கள் அஸ்ஹாபுஸ் ஸூபா திண்ணைத் தோழர்களின் அறிமுகத்-திலிருந்தே இதற்கான துவக்கக் கூறுகள் தென்படுகின்றன.

நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பின் இமாம்கள் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி கலீபாக்களின் ஆட்சிக்குப் பிறகு இஸ்லாம் பேசிய ஒற்றுமை உணர்வு, சமதான சகவாழ்வு, வறியவருக்கு உதவுதல் உள்ளிட்ட மனிதப் பண்புகளின் சிதைவாக்கம் நிகழ்வுத்துவங்கியது. உமய்யாக்கள், அபாசித்துகள் ஆட்சிக்காலத்தில் இதன் கோரம் விரிவானபோது இஸ்லாம் முன்வைத்த எளிமைசார்ந்த மனிதநேய வாழ்வை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் சிந்திக்கவும், செயல்படவும் துவங்கினர்.

சூபியசம் பல்வேறு நாடுகளின், சூழல்களின் தன்மைகளைக் கொண்டு முகிழ்த்தது.

துன்னுன் மிஸ்ரி (கி.பி. 796-862)

ரபியத்துல் அதானியா ( கி.பி. 801 ல் இறந்துவிட்டார் )

பயாஸித் பஸ்தமி ( கி.பி 804 ல் இறந்துவிட்டார் )

ஜுனைத் ஆப் பக்தாத் ( கி.பி. 830 - 910 )

மன்சூர் ஹல்லாஜ் (கி.பி. 858 --- 922)

கஸ்ஸஅலி (கி.பி. 1058--1111)

முஹயத்தீன் இப்னு அல் அரபி (கி.பி. 1165)

அப்துல் காதிர்ஜலானி (1078--1166)

இப்னு அராபி ( கி.பி. 1165 - 1240 )

காஜா முகீனுதீன் சிஷ்தி- கரீப் நவாஜ், (1141-1236)

அபுல் ஹசன் அஷ்-ஷாதிலி ( கி.பி. 1258 ல் இறந்துவிட்டார் )

மெள்லவி ஜலாலுத்தீன் ரூமி (1207--1273)

அஹமது மொஹ் மைஸ்பந்திரி (1826-1906 )

என உலக அளவில் சூபி ஞானிகள் முக்கியத்துவம் பெறத் துவங்கினர்.

இந்திய மண்ணில் அலிய்யுனுல் ஹஜ்வீரி, பரீதுத்தீன் கஞ்சேஷகா (1175-1265), அலாவுத்தெள்லா சிம்னானி (1261--1336), ஷெய்கு நிஜாமுதீன் அவுலியா (1325) ஷாஒலியுல்லா,
அகமது மனோ
கபீர் தாசர்
சூர் தாசர்
ஷிரடி சாய்பாபா
உட்பட்ட முக்கியமான மெய்ஞானிகளின் பங்களிப்பு முக்கியமானதாக அமைந்தது.

சூபியிச சிந்தனைகளின் பல்வேறு தத்துவப்போக்குகள் பின்பற்றுதல்கள் நிகழ்ந்ததன் விளைவாக
பக்தாஷி,
குப்ராவியா,
மெவ்லவியா,
முரீதியா,
காலிதியா,
சுலைமானியா,
ஹக்கானியா,
நியமத்துல்லாஹி,
நூர்பக்‌ஷி,
ஒவைசி,
முயிஸ்பந்தாரி,
செஹ்னூசி,
சர்வார்காதிரியா,
டிஜ்ஜானியா,
சிஸ்தியா,
காதிரிய்யா,
சுக்ரவர்த்தியா,
நக் ஷபந்தியா,
ஷாதிலிய்யா, உள்ளிட்ட ஞானவழி மார்க்க பிரிவுகள் (தரீகாக்கள்) உருவாகின. இஸ்லாமிய சூபியிச சிந்தனைப் போக்கு பல்வேறு கருத்துப்போக்குகளை முன்நிறுத்திய தத்துவ இயலாகவும் பரிணமித்தது. ( இந்த தரீக்காக்களின் பெயரை படிக்கவே மூச்சு வாங்கும் நமக்கு, இவர்கள் தலைக்கு ஒவ்வொரு கொள்கையும் கோட்பாடுகளும் அவரவர் வசதிக்கேற்ற வணக்கமுறைகளும் வைத்திருக்கிறார்கள், இவர்கள் செய்த முதல் வேலை தொழுகையில் ரக்ஆத்துகளை கூட்டி குறைத்தது மார்க்கத்தை சாமானிய மனிதன் பின்பற்ற இயலாத வகையில் கடினமாக்கியது இதனாலேயே சூபிக்களுக்கு வஹாபிகளை பிடிப்பதில்லை காரணம் வஹாபிகள் இஸ்லாத்தில் குர்ஆன் ஹதீதை தவிர மற்ற சூபி கித்தாபுகளை மதிப்பதுமில்லை சூபி ஞானிகளை இஸ்லாத்தை சேர்ந்தவர்களாக அங்கீகரிப்பதுமில்லை...)

இறைவனை ஒருவன் என்பதை ஏற்றுக் கொண்ட சூபிகள் இறைவனை அறிதல் குறித்த பாதையைப் பற்றி வித்தியாசமான கருது-கோள்களைக் கொண்டிருந்தனர். இஸ்லாத்தின் அகம்சார் மறைஞான, ஆன்மீக உளவியலின் பரிமாணமாக சூபியசம் முக்கியத்துவம் பெறுகிறது. மனித மனங்களின் உள் ஆழங்களில் நிகழும் இறைத்தேட்ட பயணங்களினூடே இறைவனை அடியான் நெருங்கிச் செல்வதற்கான தடயங்களை சொல்லிச் செல்கிறது.

சூபிகள் ஆடம்பரத்திற்கு எதிராக எளிமை, பொய்மைக்கு எதிராக தூய்மை, சண்டைச் சச்சரவுகளுக்கு எதிராக சமாதானம், ஏற்ற தாழ்வுகளுக்கு எதிராக சமத்துவம் என்கிற அடிப்படை உணர்வுகளுடன் இஸ்லாமிய ஆத்மஞான சிந்தனையை செலவிட ஆரம்பித்தனர்.

இஸ்லாமியத்தை முரண்பாடுகளுள்ள நடைமுறைத் தத்துவமாக ஆக்கபட்டதை சகிக்காமல் ஞானத்தை இந்த நடைமுறை இருப்பியல் வாழ்விற்கு அப்பால் தேடினர். முரணற்ற, நிரந்தரதன்மை கொண்ட உண்மையை எதிர்நோக்கினர். புலன் உணர்வுகளாலும் அறிவாலும் உணரமுடியாத அந்த உண்மையைத் தேடி தியானம் செய்ய முயன்றனர்.

இத்தகைய அனுபூதவியல் தன்மைகொண்ட இறைவனை அறிதலுக்கு, மனதை தூய்மைப்படுத்துதல் என்கிற உபாயத்தை முன்வைத்தனர். வஞ்சகம், ஏமாற்று, பொறாமை, கோபம், ஆணவம், மனோஇச்சை உள்ளிட்ட உணர்வுகளுக்கு அப்பால் பரிபக்குவ நல்லுணர்வுகளால் சூழப்பட்ட தூய பேருண்மையை தரிசிப்பது என்பதான நடவடிக்கையை கோட்பாட்டுருவமாக்கினர்.

இதற்கென உடல்பற்றிய ஞானத்தை அறியமுற்பட்டனர். உயிரைகாக்க உடலை வலுப்படுத்துதல், பாதுகாத்தல், மரணமில்லா பெருவாழ்வை பற்றி சிந்தித்தல் என்பதாகவும் இது நிகழ்ந்தது.சூபிகளின் இறையியல் கருத்து தனிமைப்பட்ட, வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்ட ஒன்றானதுபோல் தெரிந்தாலும் அவற்றின் அடிப்படை புறவாழ்வில் மனிதனை சிறுமைப்படுத்தும் குணங்களை விட்டொழித்து அகவய உயர்பண்புகளின் உணர்வுகளால் மனத்தை தூய்மையுறச் செய்வதே ஆகும். இதன் இன்னொரு பரிமாணமாகவே மனிதகுலத்திற்கு பணியாற்றும் பண்பினை சூபிகள் முதன்மைப்படுத்தினர். எனவே சூபிகளின் சமூக செயல்பாட்டு இயக்கம் குறித்தும் இவற்றினூடே நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

குணங்குடி மஸ்தான் சாகிபு,
தக்கலை பீர்முகம்மது சாகிபு,
கோடை நகர மெய்ஞானி ஷெய்கு முகியத்தீன் மலுக்கு முதலியார்,
காலங்குடி இருப்பு மச்சரேகைசித்தர், அய்யம்பேட்டை அப்துல்கனி சாகிபு, காயல்பட்டணம் செய்யது முஹம்மது காதிர்,
கணியாபுரம் ஷெய்கு அப்துல்காதர் , வாலைமஸ்தான் யாகோபுசித்தர், தென்காசி இறசூல்பீவி,
கீழக்கரை ஆசியாவும்மா
இளையான்குடி கச்சிப்பிள்ளையம்மாள் போன்றோரின் வாழ்க்கை, பாடல் மரபு வழியாக இந்த உண்மைகளை நாம் உணர முற்படலாம்.

பாரசிக பெண் சூபியான ராபியத்துல் பசரியா மனிதகுலத்திற்கு தொண்டாற்றும் நற்செயலை கீழ்கண்டவாறு விளக்குகிறார்.

நீங்கள் விளக்கைப் போலவும் ஊசியைப் போலவும் ஆகிவிடுங்கள் என்று தனக்காக அன்றி பிறருக்காகவே எரிந்து எரிந்து ஒளிதருகின்ற விளக்கு போலவும், நிர்வாணியாக இருந்து கொண்டே கிழிந்த ஆடைகளைத் தைக்கும் ஊசியைப் போலவும் தன்னலமற்று மனிதகுல மேன்மைக்காக பணியாற்ற வேண்டும் என்பதாகவும் இது அமைகிறது.

இந்திய மண்ணில் வர்ணாசிரம மேலாதிக்கத்தாலும் சாதிப்படிநிலை வரிசை முறையினாலும், மனித உடம்பையே தீட்டென சொல்லி ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் சூபிகளின் சகோதரத்துவ உணர்வு ததும்பிய சமயப்பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு சாதீயக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றனர்.

இந்திய சூபிஞானி ஷெய்கு நிஜாமுத்தீன் அவுலியா எல்லாமக்களுக்கும் சாந்திவேண்டும் எனவும் மனித குல நலனுக்காக இறைவனை நேசிப்பவரும், இறைவனுக்காக மனிதகுலத்தை நேசிப்பவரும் இறைவனின் நெருக்கத்துக்கு உரியவர்கள் எனவும் பேசினார்.

வட இந்திய பக்திமார்க்கத்தின் முக்கிய மூலவரான கபீர் (1838 - 1440) இந்து முஸ்லிம் சிந்தனை இணைப்பின் முக்கிய சரடாகத் திகழ்ந்தார். சமயங்களின் பெயரால் புறமத அடையாளங்கள், குறியீடுகளை முன்வைத்து நடைபெறும் சண்டைகளுக்கும் அநியாயங்-களுக்கும் முடிவுகட்ட ஒரு சமரச வழித்தடத்தை உருவாக்கினார்.

அன்புத்ததும்பும் ஞானநெறியின் உயர்நிலை அடைந்தவர்கள் புறசமய அடையாளங்களை களைந்து, வேற்றுமை பாராட்டும் பண்பினை மறுப்பவர்களாக, இருந்துள்ளனர். பரந்த பண்பட்ட நோக்கில் எல்லாமும் அவர்களுக்கு ஒன்றாகவே தெரிந்துள்ளது. எனினும், சைவ, வைணவ சித்தரீய குறியீடுகளின் தாக்கம் பெற்ற சூபிகளின் பாடல்களை இஸ்லாமிய சிந்தனை வட்டாரத்திற்குள் பிறசமயக் குறியீடுகளையும் உள்வாங்க முயற்சித்த சமய நோக்கின் விளைவாகவும் கருதலாம்

ஒவ்வொரு வகுப்பினருக்கு்ம் நாம் ஒரு திருத்தூதரை அனுப்பினோம் (16:36)

என்ற திருமறை வசனத்தின் அடிப்படையில் இந்துமக்களையும் அஹ்லேகிதாப் என்னும் வேதம் பெற்ற மக்கள்தான் என்று சூபிஞானிகளில் ஒரு பிரிவினர் கூறியுள்ளதை இங்கு நாம் கவனத்திற் கொள்ளலாம்

**அடுத்த பாகத்தில் சூபியிசம் ஒரு மாயை என்பதனை விளக்கும் பதிவு வெளியாகும் இன்ஷா அல்லாஹ்.