பக்கங்கள் செல்ல

Showing posts with label மேரி. Show all posts
Showing posts with label மேரி. Show all posts

Sunday, May 3, 2020

மனித வரலாற்றில் வெற்றிகரமான தொழிலதிபர் மற்றும் குடும்ப வாழ்க்கையிலும் மிகச் சிறந்த ஒரு பெண்ணை பின்பற்ற வேண்டுமா?

மனித வரலாற்றில் வெற்றிகரமான  தொழிலதிபர்  மற்றும் குடும்ப வாழ்க்கையிலும் மிகச் சிறந்த ஒரு பெண்ணை பின்பற்ற வேண்டுமா?
அன்னை கதிஜாவின் வாழ்க்கையைப் பாருங்கள்:




அன்னை கதிஜா:

  • கதீஜாவின் தந்தை மிகச் சிறந்த தொழிலதிபர் மட்டுமில்லாது, அன்றைய குறைஷிகளில் ஒருவர் 
  • 1440 ஆண்டுகளுக்கு முந்தைய, அன்றைய ஆணாதிக்க முதலாளிகளில், மிகச்  சிறந்த பெண் தொழிலதிபராக வியாபாரத்தை சிறந்த முறையில் நிர்வகித்து வந்தார்
  • விமானப்பயணமில்லாத, மிகவும் ஆபத்தான, உயிருக்கு உத்திரவாதமற்ற  நாடு விட்டு நாடு சென்று செய்யும்  அன்றைய வியாபாரத்தில் சாதனைப் படைத்தவர்   
  • அவருடைய வியாபாரம், அனைத்து குறைஷி தொழிலதிபர்களின் மொத்த வருமானத்தை விட பெரியது மட்டுமில்லாமல் மிகவும் தரமிக்க மற்றும் நேர்மையான முறை கொண்டதாகும் 
  • இவரின் நாணயமான வியாபார முறை மற்றும் கண்ணியத்தால் அக்கால மக்கள் "குறைஷிகளின் தலைவி" என்றும் "அல்-தாஹிரா தூய்மையானவர்" என்றும்  அழைத்து  வந்தனர்


  • பல தொழிலதிபர்கள் இவரை திருமணம் செய்ய விரும்பினாலும், இவர் ஏற்காமல்  ஏழ்மையிலும் நேர்மையான, தனது ஊழியர்களில் ஒருவரான நபிகள் பெருமானாரை திருமணம் செய்து கொண்டார்;நபிகளாரை விட 15 வயது மூத்தவர் அன்னை கதிஜா 


  • தன்னுடைய செல்வத்தை ஏழை மற்றும் அனாதைகளுக்காக செலவிட்டு வந்தார்
  • தனது அனைத்து செல்வத்தையும் இறை வழியில் செலவிட்டு, நபிகளாருக்கு சிறந்த அரணாக தன்னுடைய இறுதிக் காலம் வரை வாழ்ந்தார்கள்.
  •  தன்னுடைய கணவர் மேல் அளப்பரிய அன்பு வைத்திருந்தார்; நபிகளாரின் பிரச்சாரத்தால் கோபமடைந்த எதிரிகள், சமூக விலக்கல்  செய்த போது பெரும் செல்வந்தரான அன்னை கதிஜா அனைத்தையும் துறந்து தனது கணவரோடு  சென்று  மூன்று  வருடம் வரை கடும் சோதனைக்குள்ளானார்


மக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம்
அன்னை கதிஜா இறந்து பல வருடங்கள் கழித்தும்  அவர்கள் மீதுள்ள அன்பு ஒரு போதும் குறைந்ததில்லை. ஒரு முறை நபி (ஸல்), அவர்களின் அன்னை கதிஜாவின்  நெக்லஸை கண்டு அழுதார்கள்.

நபியவர்கள்  கதீஜா மீது கொண்டுள்ள அளப்பரிய அன்பின் மீது சிறிது பொறாமை கொண்டவர்களாக  அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், "கதிஜா மட்டும் தான் உங்களின் அன்பிற்கு பொருத்தமானவரா?" என்று கேட்டபோது, நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் :

"யாருமே என்னை ஏற்றுக்கொள்ளாதபோது, என் மீது முழு நம்பிக்கை கொண்டார். மக்கள் எல்லாம்  என்னை நிராகரித்தபோது, அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். யாருமே எனக்கு உதவி செய்ய முன்வராதபோது, அவர் எனக்கு உதவி செய்தார்."

மனித குல வரலாற்றில் சிறந்த நான்கு பெண்மணிகள் என நபிகள் பெருமகனார் இந்த  நால்வரைக் குறிப்பிட்டார்கள்:


  1. அன்னை மேரி  (இயேசுவின் தாய்)
  2. அன்னை ஆசியா  (எகிப்தின் அரசன் பிரவுனின் மனைவி)
  3. அன்னை கதிஜா  (நபியவர்களின் மனைவி)
  4. அன்னை பாத்திமா  (நபி (ஸல்) & கதீஜாவின் மகள்)