பக்கங்கள் செல்ல

Showing posts with label அல்குர்ஆன். Show all posts
Showing posts with label அல்குர்ஆன். Show all posts

Thursday, July 7, 2016

போர்க்கப்பல் பறவை - இவ்வளவு ஆற்றல் எங்கிருந்து கிடைத்தது?

21ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த, 20 மணிநேரம் கூட  தொடர்ச்சியாக  பறக்க முடியாத விமானத்தின் மதிப்பு 1250 கோடி.

இந்த விமானத்தை தயாரிப்பதற்கு பல மாதங்கள், பல மனிதர்களின் கடின உழைப்புகள் தேவைப்படுகின்றது.

.
 மிகச் சக்தி வாய்ந்த போர்க்கப்பல் Frigate பெயரைக் கொண்டு அழைக்கப்படும் போர்க்கப்பல் பறவையோ(Frigate Birds) ஒரு நாளைக்கு 255 மைல்கள் வீதம் பல மாதங்கள் தொடர்ச்சியாக பறக்கக்கூடியது.
  ஆனால் இந்தப் பறவை யாராலும் படைக்கப்பட வில்லை என்று நாத்திகத் தோழர்கள் சொல்கின்றார்கள்.

பகுத்தறிவு  ஏற்க மறுக்கின்றது.  இவ்வளவு சக்தி வாய்ந்த, பல நூற்றாண்டுகளாக உள்ள  ஒரு பறவை யாராலும் படைக்கப்படவில்லை ஆனால் இதில் நூறில் ஒரு பங்கு கூட இல்லாத விமானத்திற்கு இவ்வளவு செலவும், மனித ஆற்றலும் தேவைப்படுகின்றது.

உண்மையான பகுத்தறிவை உபயோகித்தால் கணக்கு இடிக்குதே..நாத்திகள் தோழர்கள் சிந்திப்பார்களாக!!


"அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை.அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்." [67:49]

"ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன." [16:79]



Sunday, April 17, 2016

ஏன் இனிமேல் புதிதாக உண்மையான இறைதூதர் வர முடியாது?

நபி (ஸல்) அவர்களின் கருத்துக்களை ஏற்காத மக்கள், நபி அவர்களை பலவாறு குற்றம் சாட்டி வந்தனர்.
  •  ஏமாற்றுபவர்
  •  பொய்யர்
  •  பைத்தியம் பிடித்தவர்
  •  சில கிருஸ்துவ அறிஞ்சர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று, "அவர் அன்றைய கிறிஸ்த்துவ கொள்கைக்கு எதிரான கிறிஸ்த்துவ பாதிரியார்...அரபு நாட்டிற்கு தப்பிச் சென்று மறைமுக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்"

உதாரணமாக, "ஒருவர் தற்போது தன்னை இறைவனின் தூதர் என்று சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரை மக்கள் எப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள்.. அனைத்திற்கும் அவர் பதில் சொல்லியாக வேண்டும். சொல்லப்படும் பதிலை வைத்தே, அவரின் ஏமாற்று வேலை தெரிந்துவிடும்."

நபி (ஸல்) அவர்களோ, சொல்லும் பதிலை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இல்லாமல் எழுத்துப் பூர்வமான ஆதாரத்துடன், எல்லா காலத்திலும் பரிசோதித்துக் கொள்ளக் கூடியதாக சொல்லியுள்ளார்கள் என்றால் அது மனிதனால் முடியாது.

இறைவனின் உதவியால் மட்டுமே முடியும்.
Ref Book: The Man in the Red Under Pants
Author: A.R.Green

Thursday, December 31, 2015

"அல்குர்ஆன் உலகத்தையே மாற்றியது" உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் போலோ கொயல்கோ(Paulo Coelho)



"அல்குர்ஆன் உலகத்தையே மாற்றியது" உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்
போலோ கொயல்கோ(Paulo Coelho)
ççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççç
முகநூல் பக்கத்தில் இவர் பதிந்த இப்பதிவு 40,000 ற்கும் அதிகமான லைக்ஸும், (Like) 5000 ற்கு அதிகமான பகிர்வுகளையும் பெற்றுள்ளது.
இது சகல மதங்களையும் பொறுமையுடன் ஆராயக்கூடிய மக்களிடம் இவருக்கிருக்கும் செல்வாக்கை காட்டுகிறது.
இப்பதிவுக்கு ஹிபா என்ற பெண்மணி, "கலவரங்களுக்கும், கொலைகளுக்கும் இப்புத்தகம்தான் காரணம்" என்ற கருத்தை வெளியிட்ட பொழுது, இவ் எழுத்தாளர் கீழ்வருமாறு பதிலடி கொடுத்தார்.
"நீங்கள் கூறுவது உண்மையல்ல, நானும் ஒரு கிறிஸ்தவன்தான்.பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள்
வாழ் முனையில் தங்களுடைய மதத்தை வற்புறுத்தி பரப்பினார்கள்."
"தேவையென்றால் Cruzades என்ற சொல்லின் அர்த்தத்தை அகராதியில் பாருங்கள்." 
"பெண்களை சூனியக்காரர்கள் என்று கொலை செய்தோம். விஞ்ஞான உண்மைகளை மறுதளித்தோம். இதற்கு உதாரணம் கலிலியோவின் மரணமாகும்." (பூமி உருண்டை என்று கூறியதற்காக கொலை செய்யப்பட்டார்)
"ஆகவே மதத்தை குறை கூறாதீர்கள். கிறிஸ்தவத்தை மாற்றிய மக்களை குறை கூறுங்கள்."
இப்பெண்ணிற்கு கூறிய பதிலுக்கு 7277 லைக்ஸ் கிடைத்துள்ளது.

நன்றி : Meezan - தராசு