பக்கங்கள் செல்ல

Saturday, May 30, 2015

முன்பு தந்தையும் & மகனும், இப்போது தம்பதிகள் - அமெரிக்காவில் ஓர் அதிசிய திருமணம்!



கடந்த ஞாயிறன்று Norman MacArthur, 74, Bill Novak, 76 இருவரும் திருமணம் செய்துகொண்டனர்..  என்னடா இருவரும் ஆண்களாக இருக்கின்றனரே  என்று பார்கிரீர்களா? இது தான் அமெரிக்காவின் நவீன திருமணம். இன்னும் யார் யாருக்கு இடையே எல்லாம் திருமணம் வரும்காலங்களில் நடக்கலாம் என்பதை உங்களின் கற்பனைக்கு விட்டு விடுகின்றேன்.

நியு யார்க் சட்டத்தின் படி, இவர்கள் இருவரும் தன 20 வயதில் இருந்து சேர்ந்தது வாழ்ந்து  வந்தார்கள் (Domestic Partners). இவர்கள் இருவரும் கடந்த 15 வருடங்களாக சட்டப்படி  தந்தை & மகனாக (adapted  son) இருந்தவர்கள்.     பென்சில்வேனிய மாநிலத்தில் வசிப்பதற்காக செல்லும் போது, அங்கே இது போன்ற வேலைகளுக்கு தடை உள்ளதால் தந்தை மகனாக பதிவு செய்துகொண்டு, வீட்டிற்குள்ளே தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.


இப்போது தந்தை & மகன் என்ற உறவை சட்ட ரீதியாக ரத்து செய்துவிட்டு, திருமணம்(!!) செய்து கொண்டுள்ளனர்.முழு விபரத்திற்கு, இந்த கட்டுரையை படிக்கவும்.


இதிலே பல விடயங்கள் உள்ளன.

1. தத்து எடுத்தல்: எவ்வளவு தான் சில மனிதர்கள் வாய் கிழிய கத்தினாலும், தத்து எடுக்கப்படும் மகனோ/மகளோ உண்மையான மகனாகவோ/ மகளாகவோ ஆகா முடியாது. அவர்கள் ஒரு "காகித உறவே"! காகிதம் இல்லையென்றால் சக மனிதர்களே! அதனால் தான் இஸ்லாம் தெளிவாகவே சொல்கின்றது, ஒருபோதும் அவர்கள், உங்களின் இரத்த உறவிற்கு இணையாக முடியாது. இங்கே. இந்த "காகித உறவு" இரத்து செய்யப்பட்டு, திருமணம்(!!!) நடந்துள்ளது. நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் அமெரிக்க, இதை அனுமதித்து உள்ளது.

" உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்.[33:4]"

2. பகுத்தறிவின் உச்சக்கட்டத்தில் இருப்பதாக பெருமை  அடித்துக்கொள்ளும் மனிதன் ஒரு நாட்டின் அனைத்து பகுதியிலும் கூட ஒரே சட்டம் அமுல் படுத்த முடியவில்லை. ஒரு இடத்தில் "ஒழுக்கமானது" என்று கருதப்படும் ஒரு செயல், அதே நாட்டின் மற்றொரு பகுதியில் "ஒழுக்கக்கேடு" என்று கருதப்படுகின்றது. இதில் யார் சொல்வது சரி? இந்த நிலைமை நீடித்தால், எவ்வளவு மோசாமான சம்பவங்களும் நியாயப்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்படாதா?

3. ஒரினச் சேர்க்கை: இறைவனின் வழிகாட்டல் என்ற ஒன்று இல்லை என்றால், மனிதன் எவ்வாரல்லாம் சீரழிந்து விடுவான் என்பதற்கு இது ஒரு உதாரணம். சில மாதங்களுக்கு முன்னால், ஒரு பெண் கழுதையை  திருமணம் செய்ததான தகவலை படித்த நினைவு உண்டு. இன்னும் என்னன்ன வழிகேடுகளின் பக்கம் மனிதன் செல்வான் என்பதை சொல்ல வேண்டியதில்லை.


இதற்கெல்லாம் தீர்வு, இறை வழிகாட்டல் மட்டும் தான். இதனால் மட்டும் தான் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சரியான, மனித குலத்திற்கு நன்மை பயக்கக் கூடிய வழியை கொடுக்க முடியும்.

ஒரு இயந்திரத்தை உருவாகியவன் தான், அதற்கான சரியான கையேடு கொடுக்க முடியும். இயந்திரத்தை பார்ப்பவனோ அல்லது உபயோகப்படுத்துவனோ உருவாக்கும் கையேடு குழப்பத்தை தான் ஏற்படுத்தும்.

"பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை." [6:116]

நன்றி: நாடோடி தமிழன்  

பகவத் கீதை படிக்கும் முஸ்லிம் - 2


By Nadodi Tamilan 

பகவத் கீதையை படிக்க ஆரம்பித்தவுடன் ஏற்படும் முதல் சிக்கல், எந்த மொழியாக்கம் சரியானது,  ஆதாரப்பூர்வமானது  என்பது தான்?

மூல மொழியோடு சில மொழிபெயர்ப்பு  இருந்தாலும், அதிலும் சுய/சொந்த கருத்து திணிக்கப்பட்டுள்ளன.

ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கும் பொது, அதில் எது சிறந்த்தது என்று மொழிபெயர்ப்பாளர் நினைக்கின்றாரோ, அதை போடுவதற்கு அவருக்கு உரிமையுண்டு.  சரி, இதற்காக சம்ஸ்கிருத அகராதி (dictionary) தமிழில் இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் ஒரு தளம் பார்த்தேன் (இன்னும் முழுமையாக இயங்கவில்லை)


உதாரணத்திற்கு, மேல உள்ள வசனம் சொல்கின்றது... "என்னையே வணங்குங்கள்" என்று இறைவன் சொல்வதாக. என்னையே வணங்குங்கள் எனும்போது மற்றவைகளை வணங்குவது தவறு என்று தானே பொருள்.

மற்றொரு வசனத்தில் (9:25), சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மிகத் தெளிவான வசனம்:

" தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்,
  பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார்,
  பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்,
என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்." 
 (9:25)
முன்பு வந்த வேதங்களில் மனித கையாடல் ஏற்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை இருந்த போதிலும், ஏகத்துவத்தின் குரல் இங்கும் அங்கும் ஒழித்துக்கொண்டு தான் இருக்கின்றது.

இதுபோன்ற வசங்களின் கருத்துக்களை நண்பர்களுடன் விவாதிக்கும்போது , அவர்கள் எடுத்த எடுப்பிலே, அது சரியான கருத்து அல்ல என்கிறார்கள்.  இதோ இது தான் சரி என்று அவர்கள் சொல்லும் கருத்து, மற்ற மொழியாக்கங்களுக்கு நேரிடை மாற்றமாகவே உள்ளது.

இது என்னடா குழப்பமாக உள்ளதே, சரி நாமாவது இன்னும் சிறிது தேடலாம் என்று மிகவும்  நடுநிலைமையான,  ஆதாரப்பூர்வமான பகவத் கீதையின் ஆங்கில மொழியாக்கம்  எது, என்ற கேள்வியை நமது அருமை நண்பர் திரு.கூகுளிடம் கேட்டேன்.

அவர் கொடுத்த பதில்: நடுநிலைமையான மொழியாக்கம் ஒரு போதும் கிடைக்காது. அந்தந்தந்த குழுவின் கருத்திற்கு ஏற்ப, அதன் மொழியாக்கம் மாறுபடும்.

மாற்று மதத்தவர்கள், கீதையை ஒரு நடுநிலை கண்ணோட்டத்துடன்  படிக்க ஆரம்பிக்கும் பொது, இந்த குழப்பங்கள் இன்னும் அதிகரிக்கும்.

மற்றொரு சகோதரர், நீங்கள் ஒரு சிறந்த குருவின் துணையோடு மட்டுமே படிக்க வேண்டும் என்றார். நல்ல கருத்து தான், ஆனால் குரு சொல்வது தான் 100% சரி என்று எப்படி முடிவு செய்வது. மனிதன் என்ற முறையில் அவரும் தவறுகள் செய்யலாம் அல்லவா. இதனால், இந்த கருத்தும் சரியானதாக தோன்றவில்லை.


இஸ்லாத்தை பொருத்தவரை, திருக்குர்ஆன் வேதமாக கொடுக்கப்பட்டு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே  பூர்ணமாக்கப்பட்டது.
இறைவனின்  தூதர் என்ற முறையில் அவர்கள் சொல்வது சரி என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இவர்கள் தான் இறை தூதர் என்று உறுதி படுத்த, அவர்கள் கொடுத்த வேதமே சான்று.

நபியை தவிர, வேறு எந்த மனிதரும் 100% சரி என்று சொல்ல முடியாது. இறைவனை அடையும் வழியை சொல்லும்போது, தவறான வழியை குரு சொல்லிவிட்டால், பாதிப்பு குருவோடு மட்டுமில்லாமல் நமக்கும் தான்.

நமக்கு முன்னே உள்ள சிறந்த வழிகள்:

1.  நாமே சமஸ்க்ரிதம் படித்து, அதன் விளக்கத்தை அறிய வேண்டியது

2.   பல மொழியாக்கங்களையும் ஆராய்ந்து, நமக்கு  எது சரி என்று தெரிகின்றதோ , அந்த கருத்தை  எடுத்துகொள்வது

3. எந்த வேதம் கரைபடாமல் ஏகத்துவத்தை மிக எளிமையாக உரைக்கின்றதோ அதன் அடிப்படையில் அணுகுவது
.
என்னை பொருத்தவரை இந்த மூன்றையும் இணைத்து ஆராயும்போது, பல உண்மைகள் வெளி வரும்  என்பது மட்டும் உறுதி.

 நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

நன்றி: நாடோடி தமிழன்

Ref: பகவத் கீதை படிக்கும் முஸ்லிம் - 1

Thursday, May 21, 2015

பகவத் கீதை படிக்கும் முஸ்லிம் - 1


சமீபத்தில் நண்பர் ஒருவரின் கீதை & ரிக் வேதம் பற்றிய பதிவை  பதிவிட்டு  இருந்தேன். பதிவின் வசனம் இது தான்:

"எவர் ஒருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகின்றாரோ, அவர் பொய்யானதையே வணங்குகிறார்" [ கீதை 7:20]

மாற்று மத நண்பர் ஒருவர், இந்த  "விளக்கம் திரித்து சொல்லப்பட்டிருக்கிறது", சரியான விளக்கம் இது தான் என்றார்:

"அவரவர் ஆசைகளுக்கு கட்டுப்படும் அறிவுடையவர்கள், 
இயற்கைக்குள் கட்டுண்டு தங்கள் பிரதான தேவதையை வழிப்பட்டு 
அதன் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு நிற்பார்கள்"

முடிந்தவரை  சொல்லப்பட்ட கருத்துக்கள் தெளிவாக இருக்கும்போது, அந்த கருத்தை அப்படியே எடுப்பது தான் சிறந்தது. ஒரு வசனத்தை ஆராயும்போது, பொதுவாக கீழ்க்கண்ட வழிமுறைகள் உள்ளதை பார்க்கலாம்:

1.  அந்த வசனம் சொல்லப்படும் சூழ்நிலை, முந்தய/பிந்தைய வசங்களின் தொகுப்புகளின் மூலம், அந்த வசனத்தின் கருத்தை அறியலாம்

2. ஏதெனும் ஒரு வார்த்தையின்  பிரயோகத்தில் குழப்பம் ஏற்பட்டால், அந்த வார்த்தை மற்ற இடங்களில் எவ்வாறு கையாளப்பட்டுள்ளது  என்பதும், சரியான கருத்தை அடைய உதவும்

மேலும் ஒரு முஸ்லிமின் கண்ணோட்டம் எப்படிபட்டது என்றால், வேதத்தின் கருத்து தெளிவாக இருக்கும்போது எந்த மனிதருக்கும், வேறு பொருள் கொடுக்க உரிமையில்லை.  தனி மனித கருத்து பின்னுக்கு தள்ளப்பட்டு, வேதத்தின் கருத்து தான் எடுத்துக்கொள்ளப்படும்.

 இந்த வசனத்தின் கருத்து என்ன என்று அறிய, பல மொழியாக்கங்களை அலசினேன். சில இடங்களில், ஆங்கில/தமிழ்  மொழியாக்கத்திற்கு இடையிலும் வேற்பாடுகள் இருப்பதும் தெரிகின்றது.


     

காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்யந்தேந்யதேவதா:தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா
தை: தை: காமை:-அந்த அந்த விருப்பங்களால்,
ஹ்ருதஜ்ஞாநா:-கவரப்பட்ட அறிவினையுடையோர்,
ஸ்வயா ப்ரக்ருத்யா நியதா:-தத்தம் இயற்கையால் கட்டுண்டு,
தம் தம் நியமம் ஆஸ்தாய-வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய்,
அந்ய தேவதா: ப்ரபத்யந்தே-அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர். (தினமலர்:)

மேற்கண்ட வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு:
       
"Those whose minds are distorted by material desires surrender unto demigods and follow the particular rules and regulations of worship according to their own natures." 



இதற்க்கு அடுத்த வசனம் 7:21, 22  இதை கண்டிக்கும் விதமாகவே நான் கருதுகின்றேன்.



21. யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஸ்ரத்தயார்சிதுமிச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்
: : பக்த:-எந்த எந்த பக்தன், யாம் யாம் தநும்-எந்த எந்த வடிவத்தை (தெய்வத்தை), ஸ்ரத்தயா அர்சிதும்-நம்பிக்கையுடன் அர்ச்சிக்க விரும்புகிறானோ, தஸ்ய தஸ்ய ஸ்ரத்தாம்-அந்த அந்த பக்தனுக்கு சிரத்தையை, அஹம் தாம் ஏவ-நான் அந்த தேவதையிடமே, அசலாம் விததாமி-ஸ்திரமாக செய்கிறேன்(தினமலர்:)

I am in everyone's heart as the Super soul. As soon as one desires to worship the demigods, I make his faith steady so that he can devote himself to some particular deity.

எப்போது உண்மையான இறைவனை அல்லாமல், அந்நிய/மாற்று தேவதைகளை எவன் வழிபடுகின்றானோ, அவன் உள்ளத்தை அதன் பக்கமே விழ செய்கின்றேன், என்பது தானே இதன் அர்த்தம்!



22. தயா ஸ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே
லபதே தத: காமாந்மயைவ விஹிதாந்ஹிதாந்
தயா ஸ்ரத்தயா யுக்த:-அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து, தஸ்ய ஆராதநம் ஈஹதே-அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான், தத: காமாந் லபதே-மேலும் அதனின்றும் விரும்பியனவற்றை எய்துகிறான், ஹி தாந் விஹிதாந் மயா ஏவ-எனினும் அவை என்னாலேயே வகுத்துக் கொடுக்கப் பட்டது(தினமலர்:)

Endowed with such a faith, he seeks favors of a particular demigod and obtains his desires. But in actuality these benefits are bestowed by Me alone.
மனிதன் யாரை வழிபட்டாலும், அவனு கிடைக்கும் நன்மை/தீமை இரண்டுமே அந்நிய/மற்று தேவதைகளால் கிடப்பது இல்லை மாறாக அதற்க்கு காரணம் நானே, என்று கடவுள் சொல்வதாகவே தானே தெரிகின்றது.


இதை வைத்து "demigods"  என்ற வார்த்தையை தேடும் போது, கிடைத்த மற்றொரு வசனம்::



23. யேऽப்யந்யதேவதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா:
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்  
கௌந்தேய-குந்தியின் மகனே, யே பக்தா-எந்த பக்தர்கள், ஸ்ரத்தயா அந்விதா: அபி-நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்த போதிலும், அந்ய தேவதா: யஜந்தே-மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ, தே அபி அவிதி பூர்வகம்- அவர்களும் விதிமுறைப்படி அல்லாமல் (அஞ்ஞானத்துடன்), மாம் ஏவ யஜந்தி-என்னையே தொழுகின்றனர்(தினமலர்:)


O Arjuna, even those devotees who worship demigods with faith, they too worship Mebut in an improper way. (9.23)


இந்த வசனத்தை படிக்கும்போது நமக்கு ஏற்பட்ட கேள்விகள்:
தவறான வழிமுறைப்படி வணங்குபவனின் வணக்கம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?  
ஒரு மாணவன், தான் தேர்வில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தேர்வை எழுதுகின்றான். தவறான பதிலை கொடுத்தால் வெற்றி அடைய முடியுமா?
  இது கடவுளின் வார்த்தையாக நீங்கள் நம்பினால், "கடவுளே, என்னையல்லாமல் வேறு யாரையும் வணங்குபவர் தவறான முறையிலே வணங்குகின்றனர்  என்று சொல்லும்போது", 
சரியான வழியை கண்டறிந்து வணங்குவது முறையா அல்லது கடவுளே சொன்னாலும் நான் தவறாகத்தான் வணங்குவேன் என்று சொல்வது  சரியே?

இன்னும் ஓர் தெளிவான வசனம்:



9/25. யாந்தி தேவவ்ரதா தேவாந்பித்ரூந்யாந்தி பித்ருவ்ரதா:
பூதாநி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோபி மாம்  
தேவவ்ரதா: தேவாந் யாந்தி-தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்
பித்ருவ்ரதா: பித்ரூந் யாந்தி-பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார், பூதேஜ்யா பூதாநி யாந்தி-பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார், மத்யாஜிந: அபி மாம் யாந்தி-என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள். (தினமலர்:)

Worshippers of the demigods go to the demigods,

the worshippers of the ancestors go to the ancestors, 

and the worshippers of the ghosts go to the ghosts, 

but My devotees come to Me . (9.25)


தெளிவாக இந்த வசனம் சொல்கின்றது, இறைவனை வழிபடுபவன் மட்டும் தான் இறைவனை அடைவதாக.


நேர்மையாக சிந்திக்கும் மக்களுக்கு, இவைகள் மிக  தெளிவான, சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில்,  உண்மையான இறைவனை அல்லாமல் வேறு யாரையும். எவைகளையும் வணங்குபவன், இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டன் என்று  நிரூபணம் ஆகின்றது, மேலும் இந்த கீழ்க்கண்ட மொழியாக்கமும் சரியாகவே படுகின்றது.

"எவர் ஒருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகின்றாரோ, அவர் பொய்யானதையே வணங்குகிறார்" [7:20]

இதைபற்றி குரான் என்ன சொல்கின்றது, என்று பார்ப்போம்:


"என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!)" [2:186]

"அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!"

"அவனையன்றி கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். தமக்கே தீங்கும், நன்மையும் செய்ய அவர்களுக்கு இயலாது. வாழ்வதற்கோ, மரணிப்பதற்கோ, (பின்னர்) எழுப்புவதற்கோ அவர்கள் அதிகாரம் படைத்தோராக இல்லை." [25:3]

By: Nadodi Tamilan


 Thanks:
1. (தினமலர்:) (temple.dinamalar.com)
2. Bhagavad-gita (www.AsItIs.com)


Wednesday, May 20, 2015

எதிர்தொடர் 14:பூமியின் வடிவத்தில் குழப்பமா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்


எதிர்தொடர் 14: பூமியின் வடிவத்தில் குழப்பமா?
      இந்த கட்டுரையில் கட்டுரையாளர் குர் ஆன் பூமியை தட்டையானது என்று கூறுகிறது என்று நிறுவ படாதபாடு படுகிறார்.[refer:Source]அல்லாஹ் பூமியை எப்படி படைத்திருக்கிறான் என்பதை குர் ஆன் எப்படி விளக்குகிறது என்பதையும் கட்டுரையாளரின்  குற்றச்சாட்டுகள் எவ்வளவு மொன்னைத்தனமானது என்பதையும் பார்ப்போம்.

அல்குர்ஆன் வசனம் 79: 30 கூறுவது என்ன?
      இந்த குறிப்பிட்ட வசனம் முதலில் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம். அதன் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு என்ன கூறுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

 وَالأرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا (٣٠)

வார்த்தை
மூல சொல்
( Root)
பொருள்
வார்த்தை இடம்பெறும் இதர இடங்கள்
أرْضَ
أ ر ض
(பெயர்ச்சொல்) பூமி, தரை, பூமியின் மேற்பரப்பு, நிலம்,1
25 க்கும் மேற்பட்ட இடங்களில் காணப்படுகிறது. உம்: அல் குர் ஆன் 2:71, 5:33, 6:59, 
بَعْدَ
ب ع  د
பின்னர்2

ذَلِكَ
ذ ل ك
இதன்3

دَحَاهَا
د ح ه
(வினைச்சொல்) விரித்தல், உப்ப செய்தல், பரப்புதல், வீசியெரிதல், பன்படுத்துதல், மென்மையாக்குதல் நிறைவாக்குதல் பெரிதாக்குதல், சமமாக்குதல், 4
79:30. மேற்கூறிய ஒரு இடத்தில் மட்டுமே இடம் பெறும் சொல். இந்த சொல்லை வயிறு பெரிதாவதை குறிப்பதற்கும் பயன்படுத்துவர்.4


இந்த வசனத்தில் இடம் பெறும் د ح ه என்ற சொல் மிக விரிந்த பொருளை உடையது. அவற்றை ஒவ்வொன்றையும் இந்த வசனத்தில் பொருத்தி பார்ப்போம்.

மொழியாக்கம் 1;

79:30. இதன் பின்னர் பூமியை விரித்தான்.

   இங்கு விரித்தல் என்பது பெரிதாக்குதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை இந்த இடத்தில் பொருத்தினால் பூமி பெரிதாக்கப்பட்டது என்று பொருள் படும். இது இன்றைய அறிவியலுக்கு எந்த விதத்திலும் முரண்பட வில்லை. இன்று அறிவியல் முதலில் Planet Embryo தோன்றியதாகவும். பிறகு அது பெரிதானது என்றும் அறிவியல் கூறுகிறது. மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் விக்கிபீடியா வலைதளத்தில் பார்க்கவும். (refer A, B)

மொழியாக்கம் 2:

79:30. இதன் பின்னர் மேற்பரப்பை பன்படுத்தினான்.

     இங்கு அர்த என்பதற்கு மேற்பரப்பு என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. دَحَاهَا என்பதற்கு பன்படுத்தினான்( smoothed out) என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு முன் சென்ற பல அறிஞர்களினால் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது பூமியை மனிதன் வாழ்வதற்கு தயார் படுத்துதல் என்று பொருள். எப்படி நெருப்புகோழி தனது முட்டையை இட இடத்தை (أدحية- உத்ஹியத்துன்) ஏற்றதாக மாற்றுமோ அது போல. பின் வரும் அறிவிப்பு இதை உறுதி செய்கிறது.

ஸயீத இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார்:
ஒருவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘எனக்குக் குர்ஆனில் சில வசனங்கள் முரண்படுவதாக தெரிகிறதே!” என்று கேட்டார். அவையாவன:................
3.’உங்களைப் படைப்பது அதிகச் சிரமமான வேலையா? அல்லது வானத்தைப் படைப்பதா? அல்லாஹ் அதனை நிர்மானித்தான். அதன் முகட்டை அவன் உயர்த்தினான். பிறகு அதை ஒழுங்கு படுத்தினான். மேலும் அதன் இரவை மூடி அதன் பகலை வெளிப்படுத்தினான். இதன் பின்னர், பூமியை அவன் விரித்தான்.” எனும் (திருக்குர்ஆன் 79:27-30) வசனங்கள் பூமியை அல்லாஹ் படைப்பதற்கு முன்னால் வானத்தை நிர்மானித்ததாகக் குறிப்பிடுகின்றன்.........................

அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்.......................................
        அல்லாஹ் இந்த பூமியை படைத்தது இரண்டு நாட்களில். பிறகு வானத்தை படைத்து அதனை இரண்டு நாட்களில் சீராக்கினான். பிறகு அவன் பூமியை விரித்தான். மேலும் இங்கு விரித்தல் என்பது பூமியில் இருந்து புல்வெளியையும் நீரையும் வெளிப்படுத்துதல் ஆகும். அதன் பிறகு மலைகளையும், ஒட்டகங்களையும், குன்றுகளையும் மற்றும் இடைபட்ட வற்றையும் இரண்டு நாட்களில் படைத்தான். இதுதான் அல்லாஹ் கூறும் “அவன் பூமியை விரித்தான்” என்பதன் பொருளாகும்.........................
                  நூல்: புஹாரி, அல்ஃபுஸ்ஸிலத் அத்தியாயதின் விளக்கவுரை 
பாடம்: திருக்குர்ஆன் விளக்கவுரை,பாகம் 5  பக்கம் 578-580
     மேலும் இப்னு கஸீர் தனது தஃப்ஸீரில்  பாகம் 1, பக்கம் 116ல் 2:29 வசனத்திற்கான விளக்கத்தில் இதே கருத்தை பதிவு செய்துள்ளார். அர் ராஸி அவர்களும் இதே பொருளில் இந்த வசனத்தை கையாண்டுள்ளார். மேலும் விரித்தல்( spread out) என்பது தட்டையான பரப்பில் மட்டும் செய்ய முடியும் என்பது தவறானது. மிகபெரிய உருண்டை வடிவத்தின் மேலும் விரிக்கலாம்.

       ஆக இவை இரண்டு மொழியாக்கமும் பூமியின் வடிவம் குறித்து பேசவில்லை. அதன் படைப்பு முறை குறித்தும் அதன் படிநிலைகள் குறித்தும் கூறுகிறது. இந்த வசனம் குர்ஆனின் மொழியியல் அற்புதத்தை விளக்குவதாகவும் உள்ளது. பரந்த விளக்கம் அளிக்கும் ஒரு சொல்லை சரியான இடத்தில் பொருத்தி அது இந்த ஆசிரியர் கூறுவது போல் எந்த வடிவமாக இருந்தாலும் அதற்கு பொருந்துவதாய் உள்ளது ஒரு மொழியியல் அற்புதம் அல்லவா! அல்லாஹ் அனைத்திலும் மிகைத்தவன் ஞானமிக்கவன். பூமியின் வடிவம் குறித்த தனது கருத்தை நிலைநாட்ட இன்னும் சில வசனங்களை கட்டுரையாளர் கையாண்டுள்ளார்.  

      அவற்றில் இடம்பெறும் مدد – மதத்,- விரித்தல், பலப்படுத்துதல், அதிகப்படுத்துதல், பெரிதாக்குதல்5 போன்ற பொருளிலும் அல்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது

 كُلا نُمِدُّ هَؤُلاءِ وَهَؤُلاءِ مِنْ عَطَاءِ رَبِّكَ وَمَا كَانَ عَطَاءُ رَبِّكَ مَحْظُورًا (٢٠)

              இவர்களுக்கும், அவர்களுக்கும், அனைவருக்கும் உமது இறைவனாகிய நாம் நமது அருளை அதிகமாகக் கொடுப்போம். உமது இறைவனின் அருள் மறுக்கப்பட்டதாக இல்லை.( அல் குர்ஆன் 17:20). 

         மேற்குறிப்பிட்ட விளக்கம் தான் இந்த சொல்லிற்கும். பெரிதாக்குதல் என்ற பொருளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும், பரப்புதல் என்ற பொருளில் பயன்படுத்தினாலும் இந்த வசனம் அறிவியலுக்கு முரண்படாது. மேலும் விரித்தல் என்ற சொல்லானது பெரிய அளவிலான எந்த வடிவம் உள்ள பொருளின் மீதும் செய்யலாம். நிலம் அல்லது மேற்பரப்பை விரித்தான் என்று பொருள் கொண்டால் அது எந்த அறிவியல் முரணையும் ஏற்படுத்தாது.

            - فرسஃபரஸ- பரப்புதல், பெரிதாக்குதல், விரியச்செய்தல்,6 என்ற பொருளில் பயன்படுத்த பட்டுள்ளது. மேலும் ஃபரஸுன்7 என்ற பெயர்சொல்லுக்கு பரந்து விரிந்த நிலம்/இடம் என்று பொருள். ஆக இந்த கட்டுரையாளர் குறிப்பிடும் அல் குர்ஆன் 51:48 வசனத்தில் இடம் பெரும் ஃபரஸ என்ற சொல்லுக்கு பரந்ததாக ஆக்கினான் என்று பொருள் வரும்.  ஆக இந்த மூன்று சொற்களும் விரித்தல், பரவச்செய்தல், பெரிதாக்குதல், பரந்ததாக ஆக்குதல் போன்ற பொருளில் பூமி தொடர்பான வசனங்களில் பயன்படுத்தினால் எந்த வகையிலும் பூமி தட்டையானது என்று பொருள் படாது.
 وَاللَّهُ جَعَلَ لَكُمُ الأرْضَ بِسَاطًا (١٩)
                      71:19 அல்லாஹ்வே உங்களுக்காக அதை பரந்ததாக அமைத்தான்' (என்றும் கூறினேன்.)
                   இதற்கு பின் உள்ள வசனத்தை படித்தால் இந்த இடத்தில் உள்ள بساطا8 – என்ன கூறுகிறது என்பதை விளங்க முடியும்.
 لِتَسْلُكُوا مِنْهَا سُبُلا فِجَاجًا (٢٠)

                        71: 20. "அதனால் பல வழிகளில் நீங்கள் செல்வதற்காக          

          மேலே அவர் குறிபிட்ட எந்த வசனமும் தட்டை என்பதை நேரடியாக உணர்த்த போதுமானதாக இல்லை. ஒரு இடத்தில் சரியான பொருள் கொள்ளும் வாய்ப்பு இருக்கும் போது அந்த இடத்தில் தவறான பொருளைதான் கொள்வேன் என்று கட்டுரையாளர் ஏனோ அடம்பிடிக்கிறார். நல்ல வேளையாக இந்த சொற்களுக்கு எல்லாம் நீட்டல் என்ற பொருள் உள்ளது ஆக பூமியை கம்பி வடிவிலானது என்று கட்டுரையாளர் வாதிடவில்லை! இப்படி எந்த காலத்திற்கு பொருந்துமாறு வார்த்தை அமைப்பு எவ்வாறு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கு மேலே அவர் குறிப்பிடும் வசனங்களே எடுத்துகாட்டு. இறுதியாக அவர் சில சிந்தனைக்குரிய! சில கேள்விகளை பதிந்துள்ளார் அவற்றை சற்று பார்ப்போம்.




நமது பதில்:
      அல் குர்ஆன் குறித்து இந்த கட்டுரையாளர் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அல் குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல. அதில் படைப்பு குறித்தும் சில விஷயங்கள் மனிதனுக்காக சொல்லப்பட்டுள்ளது. அவை இன்றைய அறிவியலுக்கு ஒன்றி செல்வதாய் உள்ளது. ஆக பூமி உருண்டை என்று அறிவிக்க வேண்டும் என்ற கட்டுரையாளரின் கருத்து தவறானது. அடுத்ததாக பூமி தட்டை இல்லை என்பதை உணர்த்தும் பல வசனங்கள் குர் ஆனில் காட்ட இயலும்.
உதரணமாக பின் வரும் இறைவசனங்களை கவனித்தால் புரியும்.

 خَلَقَ السَّمَاوَاتِ وَالأرْضَ بِالْحَقِّ يُكَوِّرُ اللَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لأجَلٍ مُسَمًّى أَلا هُوَ الْعَزِيزُ الْغَفَّارُ (٥)
      39:5. தக்க காரணத்துடனேயே வானங்களையும், பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலகட்டம் வரை ஓடும். கவனத்தில் கொள்க! அவனே மிகைத்தவன்; மன்னிப்பவன். (அல் குர்ஆன் 39:5)
இந்த வசனத்தில் இடம்பெறும்  يُكَوِّرُ – யுகவ்விரத்9 என்ற சொல்லிற்கு உருண்டையான பொருளின் மீது சுருட்டுதல் அல்லது போர்துதல் என்பதாகும்.

குர் ஆனில் கூறப்பட்ட ஒரு விசயம் , அதை மக்கள் புரிந்து கொண்டனர் என்றாலும் நபி(சல்) அவர்களிடம் அது குறித்து கேட்கமாட்டார்கள். ஆக அவற்றை நம்மால் ஹதீஸ்களில் பெற இயலாது. இது குறித்து ஏன் நபி(சல்) அவர்கள் விளக்க வில்லை என்பதற்கு இதுதான் காரணம். 

 رَبُّ السَّمَاوَاتِ وَالأرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ (٥)
(அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன். (அல் குர்ஆன் 37:5)

மேற்குறிபிட்ட வசனம் பூமி தட்டையானது அல்ல என்பதை விளக்குவதாய் உள்ளது. பூமி தட்டையானதாக இருந்தால் உலகம் முழுவதும் சூரியன் உதிக்கும் திசையும் மறையும் திசையும் ஒன்றாகத்தான் இருக்கும். பூமியின் ஒவ்வொரு புள்ளியிலும் சூரியன் உதிப்பதால் தான் பல கிழக்குகள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நபித்தோழர்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து:

நபித்தொழர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது புரிதல்:
      இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் فلك – ஃபலக்க10 என்ற சொல்லிற்கு உருண்டை சுழல்வது போல சுழல்வது என்று பின் வரும் வசனத்திற்கு
(அல் குர்ஆன் 21:33 ) விளக்கம் அளித்ததாக தஃப்சீர் இப்னு கஸீர் கூறுகிறது.



وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ (٣٣)

       
          ஃபலக்க என்ற இந்த சொல்லைத்தான் பெண்ணின் மார்பு, புட்டம் போன்ற உறுப்புகளின் வடிவத்தை குறிக்க அரபுகள் பயன்படுத்துவர் என்று Lanes Lexicon10 கூறுகிறது. இந்த சொல்லிற்கான இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது மேற்கூறிய விளக்கத்தின் அடிப்படையிலேயே இந்த சொல்லை இவ்வாறு விவரிக்கிறார் W.H.Lane என்பது குறிப்பிடதக்கது.



இப்னு கார்தாத்பாஹ்:

      272- 360 ஹிஜ்ரியில் வாழ்ந்த புவியியலாளர். தனது புத்தகத்தின் அரம்ப பக்கங்களில் பூமி உருண்டை வடிவிலானது என்று தனது புத்தகமான அல் மஸாலிக் வல் மமாலிக் பக்க எண் 4ல்  கூறுகிறார்.



அபி உபைதா முஸ்லிம் பின் அஹமத்:
            மேலும்  அபி உபைதா முஸ்லிம் பின் அஹமத், அல் இத்ரீஸி போன்ற அறிஞர்களும் பூமி உருண்டை வடிவிலானது என்று கூறுகின்றனர். இவர்கள் யாரும் மார்க்க அறிஞர்கள் இல்லை ஆயினும் இவர்கள் எந்தவித தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை. கிறித்தவ உலகம் கலீலியோவை படுத்திய பாட்டை இங்கு சுட்டுவது சரியாக இருக்கும். அத்தகைய எந்த தாக்குதலுக்கும் இவர்கள் உள்ளாக வில்லை என்பது நான் முன் கூறிய கருத்தை உறுதி செய்கிறது. மக்கள் புரிந்து கொண்டதால் நபி(சல்) அவர்களுக்கு விளக்க தேவை ஏற்படவில்லை என்று நான் குறிப்பிட்ட கருத்தை இங்கு நினைவு கூறுகிறேன். 

இப்னு ஹஸம் அவர்களது புரிதல்:
       இவரும் பூமி உருண்டை வடிவில் உள்ளது என்று குர் ஆனை கொண்டு வாதிட்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர். இவர் தனது புத்தகமான அல் ஃபசல ஃபில் மிலால் வல் அஹ்வா வல் நிஹால்(2/78) ல் அல் குர்ஆன்  39:5 வசனத்தின் அடிப்படையில் கூறுகிறார். 

இப்னு தைமிய்யா அவர்களது புரிதல்:
         பூமி எந்த வடிவிலானது என்ற கேள்வி இப்னு தைமிய்யா அவர்களிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில் அபூ ஹுஸைன் அஹ்மத் இப்னு ஜாஃபர், இமாம் இப்னு ஹசம், அல் ஜவ்ஸி போன்ற மார்க்க அறிஞர்கள் பூமி உருண்டை வடிவிலானது என்று கூறியுள்ளனர் என்று குறிப்பிட்டுவிட்டு அது உருண்டை வடிவில் இல்லை என்று கூறும் எந்த அறிஞரையும் நான் கண்டதில்லை என்றும் கூறுகிறார்.  இது அவரது மஜ்முவில் 6/586ல் காணப்படுகிறது. அர்ராஸி அவர்களும் பூமி உருண்டை என்ற கருத்தை தனது தஃப்ஸீரில் (19/131)  ல் கூறுகிறார்.

              மேலும் பூமியின் விட்டத்தை அளவிட்டு கூற குழு அமைத்த அல் மாமுன், பூமியின் விட்டதை அளவிட்ட அல் ஃபர்கானி, பூமியின் சுற்றளவை அளவிட்ட அல் பிருனி போன்ற அறிஞர்கள் பூமி உருண்டை என்றே நம்பினர்.மேலும் இவை அனைத்திற்கு காரணமாக அமைந்தது கிப்லாவை கண்டறிய இஸ்லாமியர்கள் எடுத்து கொண்ட சிரத்தைதான் என்று டேவிட் கிங்க் கூறுகிறார். (REF1)(REF2).




       வாடிகன் இன்றுதான் ஏற்று கொண்டுள்ளது இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டிலேயே ஏற்று கொண்டது என்பதற்கான ஆதாரம் தான் மேலே கூறிய அனைத்தும். எப்போதும் கிறித்தவத்திற்கு ஒத்தூதும் பிழைப்பை விட்டுவிட்டு சிறிது உன்மையை தேடினால் சிறப்பானதாக இருக்கும் என்று கதாசிரியருக்கு அறிவுரை கூறத்தான் தோன்றுகிறது . ஒட்டகத்தை குறிக்கும் சொல் 1000 இருக்க பூமியின் வடிவத்தை கூற சொல் கிடைக்க வில்லையா என்று கேட்டுள்ளார். ஒன்றை இந்த கட்டுரையாளர் மறந்து விட்டார். குர் ஆன் எந்த இடத்திலாவது பூமியின் வடிவத்தை குறிப்பிட தட்டை என்று கூறியுள்ளதா? பூமியின் படைப்பின் பல நிலைகள் குறித்துதான் குர் ஆன் பேசியுள்ளது. எந்த இடத்திலும் குர் ஆன் பூமியின் வடிவம் தட்டையானது என்று நேரடியாக கூறியுள்ளதா? அதை கட்டுரையாளர் கூற முடியுமா.?அடுத்ததாக அரபி குறித்து ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது வார்த்தை கிடைக்க வில்லையா என்று. அரபியில் கூறப்படும் வார்த்தைகள் யாவும் 1 முதல் 3 எழுத்து அடிச்சொற்களால் ஆனவை. 28 எழுத்துகள் மாறி மாறி இடம் பெற்று அடிசொற்களை உருவாக்கியுள்ளன. அப்படி இருக்கையில் எப்படி தனி சொற்கள் அமையும். அதிகப்படியான சொற்கள் அடிசொற்களில் இருந்து மறுவிதான் இருக்கும். இது அரபுக்கும் ஏனைய மொழிக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்........
References
1.Arabic- English lexicon by E.W. Lane page no 1/48
2.Arabic- English lexicon by E.W. Lane page no 1/225
3.Arabic- English lexicon by E.W. Lane page no 3/141
4.Arabic- English lexicon by E.W. Lane page no 3/857
5.Arabic- English lexicon by E.W. Lane page no 7/2696
6.Arabic- English lexicon by E.W. Lane page no 6/2369
7.Arabic- English lexicon by E.W. Lane page no 6/2370
8.Arabic- English lexicon by E.W. Lane page no 1/203 
9.Arabic- English lexicon by E.W. Lane page no 7/2637   
10Arabic-English lexicon by E.W. Lane page no 6/2443-44

External links:
http://www.tyndalearchive.com/tabs/lane/