பக்கங்கள் செல்ல
1.மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்
2.அர்த்தமுள்ள கேள்விகள், அறிவு பூர்வமான பதில்கள்!
3.பறையோசை வேர்ட்பிரஸ்-ஆரம்பத்தை நோக்கி தொடருக்கான எதிர் தொடர்
4.உடைந்த சிலுவை
5.உயிர் ஓர் ஆய்வு
6.பரிணாமம் : உண்மையா ஊகமா
7.பரிணாமம் (பல எழுத்தாளர்கள்)
8.இஸ்லாமும் பால்யவிவாகமும்
9.குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கபட்டுள்ளது
10.புதிய ஏற்பாடும் குறைவில்லா குளறுபடிகளும்
1.உடைந்த சிலுவை-பாகம் 1:அறிமுகம்
2.உடைந்த சிலுவை-பாகம் 2: பழைய ஏற்பாடும் கிரேக்க செப்டகணும்
3.உடைந்த சிலுவை-பாகம் 3: பைபிலின் மூலங்கள் ஒரு பார்வை
4.உடைந்த சிலுவை-பாகம் 4: பழைய ஏற்பாடு ஆகமங்களின் எழுத்தரகள்
5.உடைந்த சிலுவை-பாகம் 5: புதிய ஏற்பாடு: ஒர் அறிமுகம்
6.உடைந்த சிலுவை-பாகம் 6: புதிய ஏற்பாடு ஆகமங்களின் எண்ணிக்கை
7.உடைந்த சிலுவை-பாகம் 7: மாற்கு சுவிஷேசம்
8.உடைந்த சிலுவை-பாகம் 8: மார் ஷபா கடிதம்
9.உடைந்த சிலுவை-பாகம் 9: ஏக இறைவனுக்கு வழிபட்ட முதலாம் நூற்றாண்டு முஸ்லிம்கள்
10.உடைந்த சிலுவை-பாகம் 10: போந்தியு பிலாத்தும் இரண்டு ஏசுவும் !!!!!!!!
11.உடைந்த சிலுவை-பாகம் 11: பழைய ஏடுகளில் ஏசுவின் சிலுவை மரணம் மறுக்கப்பட்டதா?
12.உடைந்த சிலுவை-பாகம் 12: கிறித்தவமும் பேய்வணக்கமும்
13.உடைந்த சிலுவை-பாகம் 13: இஸ்லாம் கூறும் யூத கிறித்தவ வேதம்
14.உடைந்த சிலுவை-பாகம் 14: மெசோரெடிக் ஏடுகளும் பழைய ஏற்பாடும்
15.உடைந்த சிலுவை-பாகம் 15: மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள புதிய ஏற்பாடு மூல கையெழுத்து பிரதிகள்
16.இஸ்லாமிய ஆவணங்கள் கூறும் இன்ஜீல்
17.புதிய ஏற்பாட்டின் மொழி குழப்பமும் அது ஏற்படுத்தும் சிக்கலும்
18.ஒத்தமை நற்செய்தி நூல்களும் அது குறித்த அனுமானக் குழப்பங்களும்
19.நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்
20.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மத்தேயுவின் படியான சுவிஷேசம்
21.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மாற்கின் படியான சுவிஷேசம்
22.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- லூக்காவின் படியான சுவிஷேசம்
23.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யோவானின் படியான சுவிஷேசம்
24.கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்
25.திருச்சபை பிதாக்களின் மேற்கோள்களும் காணாமல் போன தேவ வாக்குகளும்
26.பவுலின் கடிதங்களின் தொகுப்பும் குழப்பமும்
27.பவுலிய கடித தொகுப்பு குறித்த அனுமானமும் அது பலிதீர்த்த பவுலும்
28.பவுலிய கடிதங்களும் இடைச்செருகல்களும்
29.சர்ச்சைக்குரிய பவுலிய கடிதங்கள்
30.கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யாக்கோபின் நிருபம்
31.யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்
32.யாக்கோபின் நிருபமும் சிக்கலை உருவாக்கும் அதன் கிரேக்கமும்
Tuesday, December 29, 2015
புகழ்பெற்ற ஹார்ட்வர்ட் சட்டப் பல்கலைகழகத்தால் சிறந்த நீதிச் சட்டங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட வசனம்!
Saturday, May 30, 2015
முன்பு தந்தையும் & மகனும், இப்போது தம்பதிகள் - அமெரிக்காவில் ஓர் அதிசிய திருமணம்!
கடந்த ஞாயிறன்று Norman MacArthur, 74, Bill Novak, 76 இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.. என்னடா இருவரும் ஆண்களாக இருக்கின்றனரே என்று பார்கிரீர்களா? இது தான் அமெரிக்காவின் நவீன திருமணம். இன்னும் யார் யாருக்கு இடையே எல்லாம் திருமணம் வரும்காலங்களில் நடக்கலாம் என்பதை உங்களின் கற்பனைக்கு விட்டு விடுகின்றேன்.
நியு யார்க் சட்டத்தின் படி, இவர்கள் இருவரும் தன 20 வயதில் இருந்து சேர்ந்தது வாழ்ந்து வந்தார்கள் (Domestic Partners). இவர்கள் இருவரும் கடந்த 15 வருடங்களாக சட்டப்படி தந்தை & மகனாக (adapted son) இருந்தவர்கள். பென்சில்வேனிய மாநிலத்தில் வசிப்பதற்காக செல்லும் போது, அங்கே இது போன்ற வேலைகளுக்கு தடை உள்ளதால் தந்தை மகனாக பதிவு செய்துகொண்டு, வீட்டிற்குள்ளே தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இப்போது தந்தை & மகன் என்ற உறவை சட்ட ரீதியாக ரத்து செய்துவிட்டு, திருமணம்(!!) செய்து கொண்டுள்ளனர்.முழு விபரத்திற்கு, இந்த கட்டுரையை படிக்கவும்.
இதிலே பல விடயங்கள் உள்ளன.
1. தத்து எடுத்தல்: எவ்வளவு தான் சில மனிதர்கள் வாய் கிழிய கத்தினாலும், தத்து எடுக்கப்படும் மகனோ/மகளோ உண்மையான மகனாகவோ/ மகளாகவோ ஆகா முடியாது. அவர்கள் ஒரு "காகித உறவே"! காகிதம் இல்லையென்றால் சக மனிதர்களே! அதனால் தான் இஸ்லாம் தெளிவாகவே சொல்கின்றது, ஒருபோதும் அவர்கள், உங்களின் இரத்த உறவிற்கு இணையாக முடியாது. இங்கே. இந்த "காகித உறவு" இரத்து செய்யப்பட்டு, திருமணம்(!!!) நடந்துள்ளது. நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் அமெரிக்க, இதை அனுமதித்து உள்ளது.
" உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்.[33:4]"
2. பகுத்தறிவின் உச்சக்கட்டத்தில் இருப்பதாக பெருமை அடித்துக்கொள்ளும் மனிதன் ஒரு நாட்டின் அனைத்து பகுதியிலும் கூட ஒரே சட்டம் அமுல் படுத்த முடியவில்லை. ஒரு இடத்தில் "ஒழுக்கமானது" என்று கருதப்படும் ஒரு செயல், அதே நாட்டின் மற்றொரு பகுதியில் "ஒழுக்கக்கேடு" என்று கருதப்படுகின்றது. இதில் யார் சொல்வது சரி? இந்த நிலைமை நீடித்தால், எவ்வளவு மோசாமான சம்பவங்களும் நியாயப்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்படாதா?
3. ஒரினச் சேர்க்கை: இறைவனின் வழிகாட்டல் என்ற ஒன்று இல்லை என்றால், மனிதன் எவ்வாரல்லாம் சீரழிந்து விடுவான் என்பதற்கு இது ஒரு உதாரணம். சில மாதங்களுக்கு முன்னால், ஒரு பெண் கழுதையை திருமணம் செய்ததான தகவலை படித்த நினைவு உண்டு. இன்னும் என்னன்ன வழிகேடுகளின் பக்கம் மனிதன் செல்வான் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இதற்கெல்லாம் தீர்வு, இறை வழிகாட்டல் மட்டும் தான். இதனால் மட்டும் தான் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சரியான, மனித குலத்திற்கு நன்மை பயக்கக் கூடிய வழியை கொடுக்க முடியும்.
ஒரு இயந்திரத்தை உருவாகியவன் தான், அதற்கான சரியான கையேடு கொடுக்க முடியும். இயந்திரத்தை பார்ப்பவனோ அல்லது உபயோகப்படுத்துவனோ உருவாக்கும் கையேடு குழப்பத்தை தான் ஏற்படுத்தும்.
"பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை." [6:116]
நன்றி: நாடோடி தமிழன்
Tuesday, April 7, 2015
செம்மரம் கடத்தியதாக தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திராவில் சுட்டுக் கொலை - நியாயம் தானா?
மிகவும் பரிதாபத்திற்குரிய விடயம். சுட்டுக்கொல்லும் அளவிற்கு உள்ள குற்றமா இது?
- சிறுமி முதல் வயதான பெண்மணி வரை கற்பழித்தவர்கள் ரோட்டிலே நிம்மதியாக திரிகின்றனர்
- கலவரங்களில் கற்பினியின் வயிற்றை கிழித்து, குழந்தையை நெருப்பிலே வீசியவர்கள், "நிரபராதிகள்" என அறிவிக்கப்படுகின்றனர்
- அனுதினமும் லஞ்சம் வாங்குவதையே, அடுத்த மனிதனை ஏமாற்றுவதையே வாழ்கையின் பிரவிபயனாக கொண்டுள்ள கயவர்கள் தங்களின் அடுத்த இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கின்றனர்
- காவலர்களே தங்களின் பொறுப்பில் உள்ள மக்களை அநியாயமாக சுட்டுக்கொன்றுவிட்டு, "என்கௌன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்" என்று பட்டம் சூட்டிக்கொண்டு திரிகின்றார்கள்
ஆனால் , கூலி தொழிலாளிகளான இந்த 20 பேரின் வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தினரின் வாழ்கையும் இன்று முடிந்து விட்டது..
மரங்கள் வெட்டப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. மனிதர்களின் சுய நலத்தால் இயற்கை அழிக்கப்படுகின்றது. தண்டனைகள் கடுமையாக்கபட்டாலே ஒழிய, இதை தடுத்து நிறுத்த முடியாது அனாலும் இதற்காக மனித உயிர் கொல்லப்படுவதை அறிவார்ந்த எவராலும் எற்றுக்கொள்ள முடியாது.
தீர்வு: இஸ்லாம் சொல்லும் குற்றவியல் தண்டனை தான், நியாயமான அதே சமயம் மறுபடியும் குற்றம் செய்ய முடியாமல் தடுக்கும் வழியை கொடுக்கின்றது.
இவர்களின் "கையை" வெட்டியிருந்தால், இன்னும் உயிரோடு இருந்து இருப்பார்கள், மறுபடியும் இந்த தவறை செய்திருக்க மாட்டார்கள், மேலும் மற்றவர்களுக்கும் மிகப்பெரிய படிப்பினையாக இருந்து இருக்கும்.
"அறியாமைக் காலத் தீர்ப்பைத்தான் அவர்கள் தேடுகிறார்களா? உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்? "[திருக்குர்ஆன் 5:50]