பக்கங்கள் செல்ல
1.மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்
2.அர்த்தமுள்ள கேள்விகள், அறிவு பூர்வமான பதில்கள்!
3.பறையோசை வேர்ட்பிரஸ்-ஆரம்பத்தை நோக்கி தொடருக்கான எதிர் தொடர்
4.உடைந்த சிலுவை
5.உயிர் ஓர் ஆய்வு
6.பரிணாமம் : உண்மையா ஊகமா
7.பரிணாமம் (பல எழுத்தாளர்கள்)
8.இஸ்லாமும் பால்யவிவாகமும்
9.குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கபட்டுள்ளது
10.புதிய ஏற்பாடும் குறைவில்லா குளறுபடிகளும்
1.உடைந்த சிலுவை-பாகம் 1:அறிமுகம்
2.உடைந்த சிலுவை-பாகம் 2: பழைய ஏற்பாடும் கிரேக்க செப்டகணும்
3.உடைந்த சிலுவை-பாகம் 3: பைபிலின் மூலங்கள் ஒரு பார்வை
4.உடைந்த சிலுவை-பாகம் 4: பழைய ஏற்பாடு ஆகமங்களின் எழுத்தரகள்
5.உடைந்த சிலுவை-பாகம் 5: புதிய ஏற்பாடு: ஒர் அறிமுகம்
6.உடைந்த சிலுவை-பாகம் 6: புதிய ஏற்பாடு ஆகமங்களின் எண்ணிக்கை
7.உடைந்த சிலுவை-பாகம் 7: மாற்கு சுவிஷேசம்
8.உடைந்த சிலுவை-பாகம் 8: மார் ஷபா கடிதம்
9.உடைந்த சிலுவை-பாகம் 9: ஏக இறைவனுக்கு வழிபட்ட முதலாம் நூற்றாண்டு முஸ்லிம்கள்
10.உடைந்த சிலுவை-பாகம் 10: போந்தியு பிலாத்தும் இரண்டு ஏசுவும் !!!!!!!!
11.உடைந்த சிலுவை-பாகம் 11: பழைய ஏடுகளில் ஏசுவின் சிலுவை மரணம் மறுக்கப்பட்டதா?
12.உடைந்த சிலுவை-பாகம் 12: கிறித்தவமும் பேய்வணக்கமும்
13.உடைந்த சிலுவை-பாகம் 13: இஸ்லாம் கூறும் யூத கிறித்தவ வேதம்
14.உடைந்த சிலுவை-பாகம் 14: மெசோரெடிக் ஏடுகளும் பழைய ஏற்பாடும்
15.உடைந்த சிலுவை-பாகம் 15: மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள புதிய ஏற்பாடு மூல கையெழுத்து பிரதிகள்
16.இஸ்லாமிய ஆவணங்கள் கூறும் இன்ஜீல்
17.புதிய ஏற்பாட்டின் மொழி குழப்பமும் அது ஏற்படுத்தும் சிக்கலும்
18.ஒத்தமை நற்செய்தி நூல்களும் அது குறித்த அனுமானக் குழப்பங்களும்
19.நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்
20.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மத்தேயுவின் படியான சுவிஷேசம்
21.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மாற்கின் படியான சுவிஷேசம்
22.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- லூக்காவின் படியான சுவிஷேசம்
23.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யோவானின் படியான சுவிஷேசம்
24.கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்
25.திருச்சபை பிதாக்களின் மேற்கோள்களும் காணாமல் போன தேவ வாக்குகளும்
26.பவுலின் கடிதங்களின் தொகுப்பும் குழப்பமும்
27.பவுலிய கடித தொகுப்பு குறித்த அனுமானமும் அது பலிதீர்த்த பவுலும்
28.பவுலிய கடிதங்களும் இடைச்செருகல்களும்
29.சர்ச்சைக்குரிய பவுலிய கடிதங்கள்
30.கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யாக்கோபின் நிருபம்
31.யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்
32.யாக்கோபின் நிருபமும் சிக்கலை உருவாக்கும் அதன் கிரேக்கமும்
Tuesday, December 29, 2015
புகழ்பெற்ற ஹார்ட்வர்ட் சட்டப் பல்கலைகழகத்தால் சிறந்த நீதிச் சட்டங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட வசனம்!
Monday, July 6, 2015
மாற்று மதத்தை சேர்ந்தவர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ரமலான் நோன்பு!
" கடந்த 4 நாட்களாக, ஒரு மாற்று மத கண்ணோட்டத்தில் இதை அறிந்து கொள்ள, நான் நோன்பு வைத்து வருகின்றேன். மிகவும் சிரமமாக உள்ளது. வெளியில் இருந்து பார்ப்பதை விட, அனுபவிக்கும் போது தான் அதன் கடினம் தெரிகின்றது. நோன்போடு இருக்கும் போது, ஆவல் அதிகம் ஏற்படுகின்றது. ஆசையை அடக்குவது, இறை கட்டளையினால் நோன்பு வைக்கும் மக்களுக்கு உண்மையிலேயே உதவும்." (Khaleej Times நிருபர்)
"என்னுடைய நோன்பு வெற்றிகரமாக இருந்ததின் கரணம் என்னவென்றால், உணவின் அத்தியாயவசத்தையும், மேலும் சமுதாயத்தில் உணவின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது. உணவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, அது நெருக்கத்தை ஏற்படுத்துவதோடு, விருந்தோம்பலின் அடையாளமாகவும் உள்ளது." (Kevin Childress)
உலக மக்கள் தொகையில் 4 ல் 1 நபர் நோன்பு வைக்கின்றனர் என்பதனால், அதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதில் மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
![]() |
Japan Students Fasting |
கடந்த சில வருடங்களாக இதன் விழிப்புணர்வு முஸ்லிம் அல்லாத மக்களிடம் அதிகரித்து வருகின்றது. தன்னால் இயன்ற அளவிற்கு, அவர்களும் நோன்பு வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, சில வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் உள்ள University of Tennessee (Knoxville), முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத 250 மாணவர்கள் , பட்டினி பற்றிய உலக கவனத்தை ஈர்ப்பதற்காகவும், உணவு செமிப்பகத்திர்க்கு நிதி உதவிக்காகவும் நோன்பு வைத்தனர்.
அதேபோல் அமெரிக்காவில் உள்ள வர்ஜினிய பல்கலைகழகம் (Virginia Commonwealth University - Richmond) 1800 மாணவர்கள் நோன்பு வைத்தனர்.
ஜப்பான், இங்கிலாந்து இன்னும் பல நாடுகளில் நோன்பு வைக்கும் ஆர்வம் அதிகரித்து கொண்டு வருகின்றன.
இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், என்னுடைய மாற்று மத நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்: குறைந்தது ஒரு நாலாவது நோன்பு வையுங்கள், நல்லதொரு ஆன்மீக பலனை உணர்வீர்கள்.
"நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது" [2:183]
அமெரிக்காவில் இப்தார்
அமெரிக்காவின் முதல் அரசு இப்தார் விருந்து டிசம்பர் 9, 1805 ல் தாமஸ் ஜெபர்சன், துனிசியாவின் தூதர் சிதி சொலைமான் அவர்களை இரவு விருந்திற்கு அழைத்தபோது ஆரம்பித்தது.
![]() |
Obama's Iftar Party |
1996ல் கிளிண்டன் ஈத்-அல்-பித்ர் விருந்து அளித்தனர். 2001ல் புஷ், வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து அளித்தார். ஒபாமா அதை தொடர்ந்தது விருந்து அளித்து வருகின்றார்.
Ref:
http://www.washingtonpost.com/rweb/life/a-month-of-fasting--and-feasting--for-muslims-in-the-nations-captial/2015/07/05/c6b19852-20c7-11e5-bf41-c23f5d3face1_story.html?tid=kindle-app
http://www.startribune.com/more-non-muslims-take-part-in-ramadan-in-minnesota/215010491/
http://www.beliefnet.com/Faiths/Islam/2006/10/Fasting-Friends.aspx#
http://www.khaleejtimes.com/kt-article-display-1.asp?xfile=data/ramadannews/2015/June/ramadannews_June86.xml§ion=ramadannews
http://www.parliamentofreligions.org/news/index.php/2014/06/engaging-in-something-marvelous-a-non-muslim-learns-from-his-ramadan-fast/
Friday, May 8, 2015
எதிர்தொடர் 13: குர்ஆனும் ஹதீஸும்
அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
நூல் : அலி இப்னு அஹமத் அல் வாஹிதியின் அஸ்பாப் அல் நுசூல்
அறிவிப்பாளர் தொடர்:
Muhammad ibn ‘Abd Allah ibn Nu‘aym Muhammad ibn ‘Ali al-Saghani> Ishaq ibn Ibrahim al-Dabari> ‘Abd al-Razzaq> Ma‘mar> Ayyub al-Sikhtiyyani> ‘Ikrimah> Ibn ‘Abbas
ஆக மேற்கூறிய நபிமொழி குர் ஆன கவிதை யல்ல என்பதையும். வலீத் பின் அல் முகீரா அது எந்த வகையான கவிதை நடையிலும் சேரவில்லை என்பதையும் தெளிவாக கூறுகிறார். ஆம் அவரது வாசகங்கள் உன்மையானவை. அரபு கவிதையை சொல்லின் ஓசையை அடிப்படையாக கொண்டு பின் வரும 16 வகைகளாக பிரிக்கலாம். இந்த இலக்கணத்தின் அடிப்படையிலேயே அனைத்து அரபு கவிதைகளும் அடங்கி விடும். அவை தாவில் (طويل) . பாஸித்(بسيط) . வாஃபிர்(وافر) . காமில்(كامل) . ரஜ்ஸ்(رجز) .ஃகாஃபிஃப்(خفيف) . ஹசஜ்(هزج) . முதகாரிப்(متقارب) . முன்சரிஹ்(منسرح) . முக்ததப்(مقتضب) . முதாரிய்(مضارع) .மதீத்(مديد) .முஜ்தத்(مجتثّ) .ரமால்(رمل) .முதாரிக் (متدارك) . சரீஹ்(سريع) [REFER]
இதில் எந்த வகையான ஓசைநயத்திற்கும் ஒத்ததாய் அல் குர்ஆன் இல்லை. ஆக அது கவிதையல்ல என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ்வும் தன்னுடைய வேதத்தில் அதை தெளிவாக குறிப்பிடவும் செய்கிறான் .(அல் குர்ஆன் 36:69). ஆக குர்ஆன் இலக்கியத்தின் எந்த வகையை சார்ந்தது. ஒருவேளை அது உரைநடையா என்று ஆய்வு செய்வோம். அரபிய உரைநடை இரண்டு வகையானது 1. சஜ் 2. முர்சல். இவற்றில் இரண்டாமவது சாதரண உரைநடை. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உரைநடை. முதலாமவது ஒசைநயத்துடன் கூடிய உரைநடை. ஆக குர் ஆனின் நடை சஜ் வகையதா என்றால் அது அதன் தன்மையுலும் இருந்து வேறுபட்டுள்ளது. சஜ் வகையான உரைநடைகளில் இறுதி ஒசையானது பரவலாக பல எழுத்து வடிவங்கள் மாறி மாறி இடம் பெறும். ஆனால் குர் ஆனில் ஒசை முடிவு பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் ஓரே ஒசை யுடையதாய் முடிவுறுவதாக Devin J. Stewart கூறுகின்றனர். இதனால்தான் Arthur J. Arberry, பின்வருமாறு கூறுகிறார்: குர் ஆன் உரையும் அல்ல கவிதையும் அல்ல. ஆனால் இவற்றின் தனிதன்மையுடைய இணைவு (Arthur J. Arberry, The Koran, Oxford University Press, 1998) மேலும் இது குறித்து . Devin J. Stewart குறிப்பிடும் போது குர்ஆனின் நடையானது குரானிக் சஜ்( Quranic Saj) என்ற தனிதன்மையுடைய இலக்கிய அமைப்பு என்று கூறுகிறார்.( Devin J. Stewart, Saj’ in the Qur’an: Prosody and Structure). ஆக குர்ஆன் தனக்கென ஒரு இலக்கிய நடையுடையது என்பதை பார்த்தோம். இதுவல்லாத சில சிறப்புகள் இருப்பதாகவும் அறிஞர்கள் கூறுகினறனர். அவற்றுள் சில இந்த வசனங்களின் சொற்களில் நாம் எந்த வகையான மாற்றமும் செய்ய இயலாது. மீறி செய்யும் போது அதன் ஓசை நயம் கெட்டுவிடும் அல்லது பொருந்தா பொருள் ஏற்படும். அந்த இடத்தில் இருக்கும். அதற்கு இணையான வெறு வார்த்தைகளை அங்கு பொருத்த இயலமல் இருப்பதும் அதன் தனிச்சிறப்பில் ஒன்று. இதனால் தான் முஸைலமா முதல் பஸ்ஸார் இப்னு புர்த் என்று பல வித்தகர்களும் குர் ஆன் போன்ற ஒன்றை உருவாக்க எண்ணி மண்ணை கவ்வியதாக வரலாறு கூறுகிறது. [REFER]
இந்த வசனம் (அல் குர்ஆன் 3: 7) பல மொழிப்பெயர்ப்புகளில் இவர் குறிப்பிடும் படியாகவே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசனத்தை எப்படி பொருள் கொள்வது என்பது குறித்து முதலில் பார்ப்போம். அரபு மொழியின் அடிப்படையில் இந்த வசனத்திற்கு இருவாராக பொருள் கொள்ள முடியும் . ஆயினும் இந்த வசனத்திற்கு பின்வருமாறு பொருள்கொள்வதுதான் சரியானதாகும்.
(முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் "இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 3:7)
நமது பதில்: