பக்கங்கள் செல்ல

Showing posts with label குற்றவியல். Show all posts
Showing posts with label குற்றவியல். Show all posts

Tuesday, December 29, 2015

புகழ்பெற்ற ஹார்ட்வர்ட் சட்டப் பல்கலைகழகத்தால் சிறந்த நீதிச் சட்டங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட வசனம்!

புகழ்பெற்ற ஹார்ட்வர்ட் சட்டப் பல்கழைகழகம், திருக்குரானின் வசனத்தை மிகச் சிறந்த நீதிச் சட்டங்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்துள்ளது.
மனித வரலாற்றில் வெளியான, நீதி தொடர்புடைய சட்டங்களில் சிறந்த ஒன்றாக, ஹார்ட்வர்ட் பல்கழைகழக நூலக நுழைவாயிலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.






Tuesday, April 7, 2015

செம்மரம் கடத்தியதாக தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திராவில் சுட்டுக் கொலை - நியாயம் தானா?


மிகவும் பரிதாபத்திற்குரிய விடயம். சுட்டுக்கொல்லும் அளவிற்கு உள்ள குற்றமா இது?

- சிறுமி முதல் வயதான பெண்மணி வரை கற்பழித்தவர்கள் ரோட்டிலே நிம்மதியாக திரிகின்றனர்

- கலவரங்களில் கற்பினியின் வயிற்றை கிழித்து, குழந்தையை நெருப்பிலே வீசியவர்கள், "நிரபராதிகள்" என அறிவிக்கப்படுகின்றனர்

- அனுதினமும் லஞ்சம் வாங்குவதையே,  அடுத்த மனிதனை ஏமாற்றுவதையே  வாழ்கையின் பிரவிபயனாக கொண்டுள்ள கயவர்கள்  தங்களின் அடுத்த இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கின்றனர்

 - காவலர்களே தங்களின் பொறுப்பில் உள்ள மக்களை அநியாயமாக சுட்டுக்கொன்றுவிட்டு, "என்கௌன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்" என்று பட்டம் சூட்டிக்கொண்டு திரிகின்றார்கள்

ஆனால் , கூலி  தொழிலாளிகளான இந்த 20 பேரின் வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களின்  குடும்பத்தினரின்  வாழ்கையும்  இன்று முடிந்து விட்டது..

மரங்கள் வெட்டப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும்  என்பதில் மாற்று கருத்து இல்லை.  மனிதர்களின் சுய நலத்தால் இயற்கை அழிக்கப்படுகின்றது. தண்டனைகள் கடுமையாக்கபட்டாலே ஒழிய, இதை தடுத்து  நிறுத்த முடியாது அனாலும் இதற்காக மனித உயிர் கொல்லப்படுவதை அறிவார்ந்த எவராலும் எற்றுக்கொள்ள முடியாது.

தீர்வு:  இஸ்லாம் சொல்லும் குற்றவியல் தண்டனை  தான், நியாயமான அதே சமயம் மறுபடியும் குற்றம் செய்ய முடியாமல் தடுக்கும் வழியை  கொடுக்கின்றது.


இவர்களின்   "கையை" வெட்டியிருந்தால், இன்னும் உயிரோடு இருந்து   இருப்பார்கள், மறுபடியும் இந்த தவறை செய்திருக்க மாட்டார்கள், மேலும் மற்றவர்களுக்கும் மிகப்பெரிய படிப்பினையாக இருந்து இருக்கும்.

"அறியாமைக் காலத் தீர்ப்பைத்தான் அவர்கள் தேடுகிறார்களா? உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்? "[திருக்குர்ஆன் 5:50]