பக்கங்கள் செல்ல

Thursday, April 23, 2015

இஸ்லாத்தில் கூறப்பட்டது போல், ஆண்கள் போன்று பெண்களும் ஓரே நேரத்தில் பலதார திருமணம் செய்தால் என்ன நடக்கும்?? ஓர் சிறிய கற்பனை


பகுத்தறிவுவாதிகள், பெண்ணியவாதிகள் என தம்மை அழைத்துக்கொள்பவர்கள் இஸ்லாத்தில் ஆண்கள் செய்யும் பலதார திருமண முறையை ஆணாதிக்க முறை, பெண்ணடிமைத்தனம் என்று பலவாறாக கூறுவார்கள், இஸ்லாம் பலதார திருமண முறையை வலியுறுத்தி கூறவில்லை. தேவையேற்பட்டால் அவ்வாறு செய்யலாம் எனக்கூறுகின்றது. பெண்கள் அதிகம் உள்ள ஊர்களில் இதனை சாத்தியமான நடைமுறை ஒன்றாக கூறலாம். ஆனால் அண்மையில் முன்னாள் முஸ்லிம் தன்னை அழைத்துக்கொள்ளும் தஸ்லிமா நஸ்ரின் என்னும் பகுத்தறிவாதி நானும் ஆண்கள் போல் ஓரே நேரத்தில் 4 திருமணம் செய்வேன். ஆணும் பெண்ணும் சமம் எனக்கூறினார். இதே கருத்தையே பல பகுத்தறிவாதிகளும் இன்று கூறி வருகின்றனர். இது சாத்தியமானல் என்ன நடக்கும் ஒரு சிறு கற்பனை!

நம்ம ஆளுங்க எல்லாருக்கும் பொதுவா சில விஷயங்கள சொல்ல வேண்டியது இருக்கு. நம்ம சகோதரர்கள் பல பேருக்கு அடிக்கடி கண்ல படுற ஒரே விஷயம், இந்த முஸ்லிம் பசங்க மட்டும் 4 பொண்ணு 7 பொண்ணுன்னு நிக்காஹ் செஞ்சுக்குவோம்னு சொல்றாங்க, ஆனா பாவம் முஸ்லிம் புள்ளைங்கள மட்டும் ஒரே நேரத்துல நாலு நிக்காஹ் பண்ணிக்க விட மாட்டேங்குறாங்க. ஏன் இந்த அநியாயம், எதற்கு இந்த ஆணாதிக்கம், இந்த அநியாத்த தட்டிக்கேக்க ஆளே இல்லையா? அப்டின்னு கேட்டுட்டே இருக்காங்க.

இதுக்கெல்லாம் தனியா யாரும் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. வெறும் இளங்கலைப் பட்டம் வாங்கிட்டு, 24 வயசுல மாசம் 15-ம் தேதிக்கு மேல அப்பா காச எதிர்பாக்குற என்ன மாதிரி சின்னப் பையனுக்கு புரிஞ்ச சாதாரணமான விஷயம் ஏன் இங்க இருக்குற பெரியவங்களுக்கு புரிய மாட்டேங்குதுன்னு தெரியலைங்க.

சரி இப்போ விஷயத்துக்கு வருவோம்....

ஒரு ஆண் 4 மனைவிய கட்டிக்கிறது ஒன்னும் லேசு பட்ட காரியம் இல்லைங்க. அதுக்கு இஸ்லாம் நெறைய கட்டுப்பாடுகளை விதிச்சிருக்கு. முதல்ல அவனோட எல்லா மனைவிகளுக்கும் சம உரிமை குடுக்கணும். அவங்க தலைக்கு தேய்க்கிற எண்ணைல இருந்து கால்ல போட்டு நடக்குற செருப்பு வரைக்கும் அவனால வாங்கி குடுக்க முடியுற அளவுக்கு வசதி இருக்கணும்.

அந்த மனைவிகளுக்கு கொழந்த பொறந்தா அவங்கள ஒரே மாதிரி பாதுகாத்து பராமரிச்சு வளக்குற பொறுப்பு இருக்கணும்.

இப்பிடி A-Zநு பெரிய லிஸ்டே இருக்கு. இதுக்கு உட்பட்டு தான் 4 இல்லனா 5 திருமணம்.

சரி, ஆம்பளைங்க நீங்க மட்டும் இவ்ளோ திருமணம் பண்ணிக்கிறீங்களேப்பா... அந்த பொண்ணுங்களுக்கும் இந்த உரிமையை குடுக்கலாமேனு நீங்க கேக்கலாம். அப்டி பொண்ணுங்க 5 - 6 நிக்காஹ் பண்ணா என்ன ஆகும்னு கொஞ்சம் அலசி, புழிஞ்சு ஆராயணும்.

ஒரு பொண்ணு திருமணம் பண்றது வெறும் உடல் உறவுக்குனு சொன்ன, அந்த பொண்ணு எவ்ளோ பேர வேணாலும் கட்டிக்கலாம். ஏன்னா, படுக்கைய பகிர்ந்துக்குறது பெரிய விஷயமே இல்ல (பச்சையா சொன்னா, ஒரே நேரத்துல பல பேர் கூட உறவு கொள்ள முடியும்).

ஆனா திருமணம் வெறும் கட்டில் தொடர்பானது இல்லையே!!!

1. நம்ம பையனுக்கு நாலு சம்சாரம் இருக்குனு வச்சுக்குவோம், அவங்க நாலு பேரும் நம்ம பையனுக்காக விடிஞ்சும் விடியாம ஆளுக்கொரு டிபன் செஞ்சு மூஞ்சி முன்னால நீட்டுவாங்க. நம்ம பயலும் அத கொஞ்சம் அப்டியே அட்ஜஸ்ட் பண்ணி சாப்ட்டு, பாத்ரூம்ல போய் அத ரிலீஸ் பண்ணிருவான்.

இதுவே ஒரு பொண்ணு 4 பசங்கள கட்டிக்கிட்டா அவனுங்க நாலு பேர்ல ஒவ்வொருத்தனுக்கும் புடிச்ச சாப்பாட செஞ்சு முடிக்கவே காலைல மணி 10 ஆகிடும். அப்பறம் ஆளுக்கொரு அற விட்டுட்டு ஆஃபீஸ் கெளம்பி போயிருவானுங்க. நம்ம புள்ள ரொம்ப பாவம்.

2. நம்ம பையன் ஒரே நேரத்துல 4 சேலைய வாங்கிட்டு வந்து, ஒவ்வொரு சம்சாரத்துக்கும் ஒவ்வொரு சேலைய குடுத்து கட்டிட்டு வாங்கம்மான்னா வேல முடிஞ்சுது.

ஆனா நம்ம புள்ளைக்கு அவளோட நாலு புருசனும் ஆளாளுக்கு ஒரே நேரத்துல சேலை வாங்கிக் குடுத்து கட்டிட்டு வாம்மான்னா... அந்தப் புள்ள பாவம் எதத் தான் கட்டிட்டு வரும்? வேணும்னா 4 சேலையையும் ஒன்னாக் கட்டித் தூக்கு போட்டுக்கலாம்.

3. நம்ம பய ஒரு கார் வாங்குறான்னு வச்சுக்குவோம். ஒரே கார்ல நம்ம பய டிரைவரா உக்காந்துட்டான்னா அவன் சம்சாரம் ஒவ்வொன்னும் அதுங்களுக்குள்ள சரி செஞ்சிகிட்டு, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நாள் முன் சீட்ல உக்காருவாங்க, ஆனா எப்போவுமே எல்லா சம்சாரமும் நம்ம பய கூடவே சுத்துவாங்க.

நம்ம புள்ளையோட புருசனுங்க நாலு பேரும் ஆளுக்கொரு கார வாங்கி அதுல அந்த புள்ளையக் கூட்டிட்டுப் போகணும்னா நம்ம புள்ள எப்போ ஒவ்வொருத்தன் கூட போகும்? எப்போ எல்லாப் புருஷன் கூடையும் சேர்ந்து ஊர் சுத்தப் போவும்? அதுக்கு பதிலா அந்தக் கார் டயர்லயே தலைய குடுத்துறலாம்னு முடிவு பண்ணிரும்.

4. நம்ம பய ஒரு மாசத்துக்கு ஒரு மாமியார் வீட்டுக்குப் போனா கூட, அவனால மாமியார் வீட்ட சமாளிக்கிறதோ, மாமியார் வீட்ல இருக்குறவங்களுக்கு நம்ம பயல சமாளிக்கறதோ பெரிய விஷயமே இல்ல. ஏன்னா அடுத்தடுத்த மாசம் வேற வேற மாமியார் வீடு...

ஆனா, நம்ம புள்ளையோட புருசனுங்க அத்தன பேரும் ஒரே நாள்ல மாமியார் வீட்டுக்குப் போனா... மாமியார் வீட்டு நெலம என்ன ஆகும்?

5. நம்ம பய அவனோட சம்சாரத்துல யாரையாவது கர்ப்பமாக்கிட்டான்னு வச்சிக்குவோம், ஒடனே அவன் சம்சாரம் எல்லாமே ஆளுக்கொரு புளிப்பு மிட்டாய் வேணும்னு கேக்குற மாதிரி ஆளுக்கொரு கொழந்த வேணும்னு கேக்குங்க. நம்ம பயலும் (ஆம்பள ஆப் தி வேர்ல்டு) அத்தன சம்சாரத்துக்கும் வஞ்சகம் இல்லாம விருந்து வெச்சிருவான்.

நம்ம புள்ளையோட நெலம?!?
ஆளுக்கொரு கொழந்த அட்டட்டைம்ல வேணும்னு 4 பேரும் கேட்டானுங்கனு வைங்க, நம்ம புள்ளையோட போட்டோவ அஞ்சலி போஸ்டர்ல தான் பாக்கணும்.

6. இப்போதான் க்ளைமாக்ஸ்: நம்ம பையனோட அத்தன சம்சாரத்துக்கும் ஒவ்வொன்னோ, ரெண்ரெண்டோ கொழந்த பொறக்குதுன்னு வைங்க, அந்த கொழந்தைக்கு பிறப்பு கொடுத்தவ தான் அம்மா, அந்த எல்லாக் கொழந்தைக்கும் இவன் தான் அப்பான்னு ஊருக்கே தெரியும்.

ஆனா... நம்ம புள்ளைக்கு ஒரு கொழந்த பொறந்தாக் கூட அதுக்கு அப்பன் யாருன்னு சண்ட வந்துரும். அப்பறம் அந்த கொழந்த அப்பன் பேர் தெரியாமையே வளரும்.

இப்போ சொல்லுங்க மக்களே, ஆம்பள மட்டும் ஏன் நெறையா கல்யாணம் பண்றான்? பொண்ணு ஏன் நெறையா கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு யாராச்சும் கேபீங்க?

(நம்மளப் படைச்ச இறைவனுக்கு நம்மள விட அதிகமாவே தெரியும் சகோதரர்களே)

இத எல்லாம் புரிஞ்சுக்க கொஞ்சம் common sense இருந்தாலே போதும்.

நன்றி: Abdul Rahman Crafter (சுட்டது 😜)

Tuesday, April 21, 2015

எதிர்தொடர் 11: வங்கலவியும் வேதவெளிப்பாடும்- பதில்

ஏக இறைவனின் திருபெயரால்.....
            
             இந்த முறை நமது கட்டுரையாசிரியர் இஸ்லாத்தில் உள்ள அடிமை முறையை குற்றம்சுமத்த ஒரு கட்டுரை எழுதியுள்ளார். பெண்களை அடிமைகளாக பிடித்தல் பற்றி மிக விசாலாமாக ????  விளக்கியுள்ளார்.[refer:Source]. அவர் அப்படி என்னதான் குற்றம் சுமத்துகிறார்....சற்று விரிவாக அலசுவோம்....

குற்றச்சாட்டு 1.அடிமைகள் கால்நடைகளா?


நமது பதில்: 
    இந்த கட்டுரை ஆசிரியர் அடிமைகளை கால்நடைகள் போல் இஸ்லாம் சித்தரிப்பதாக கூறுகிறார். என்னமோ அந்த காலத்தில் மற்ற இடங்களில் எல்லாம் அடிமைகள் பண்புடன் நடத்தப்பட்டது போல ஒரு பொய்த்தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார். ஆனால் அன்றைய காலத்தில் மிகவும் மோசமாக அடிமைகள் நடத்தப்பட்டனர். இதோ ரோம் சாம்ராஜியத்தில் ஒர் பார்வை. அப்யுலியஸ்( ad 120-174) தனது THE GOLDEN ASS என்ற புத்தகத்தில் பின் வருமாரு கூறுகிறார். 

Good guys, what scrawny little slaves there were! Their skin was embroidered with purple welts from their many beatings ... All of them, decked out in rags, carried brands on their foreheads, had their heads half-shaved, and wore chains around their ankles ...

Slaves in chains, relief found at Smyrna (present day İzmir, Turkey), 200 AD

அடிமைகள் எப்படி நடத்தவேண்டும் என்பது குறித்து அல்லாஹ் தனது வேதத்தில் பின்வருமாறு கட்டளையிடுகிறான்


    மேலும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடமும், உறவினர்களிடமும், அநாதைகள் மற்றும் வறியவர்களிடமும் நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப் போக்கர் மற்றும் உங்கள் ஆதிக்கத்திலுள்ள அடிமைகள் ஆகியோ ருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் தற்பெருமை கொண்டு கர்வமாக நடப்பவர்களை நேசிப்பதில்லை. 
(திருக்குர்ஆன் 4:36)

அடிமைகள் குறித்த நபி(சல்)அவர்களது கட்டளை:
      நான், அபூதர் கிஃபாரீ (ரலி) அவர்கள் ஒரு மேலங்கியை (தம் மீது) அணிந்தவர் களாக இருக்கும் நிலையில் அவர்களைக் கண்டேன். அப்போது அவர்களின் அடிமையும் ஒரு மேலங்கியை அணிந் திருந்தார். அதைப்பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூதர் (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்: நான் ஒருவரை (அவருடைய தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) இவரது தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா? என்று கேட்டார்கள். பிறகு, உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். ஆகவே, எவரு டைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கின்றாரோ அவர், தன் சகோதரருக்கு தான் உண்பதிலிருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்கள் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள் என்று கூறினார்கள்.
புஹாரி:2545
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ உங்களை மகிழ்விக்கும் அடிமைக்கு நீங்கள் உண்ணுவதில் இருந்து உண்ணக்கொடுங்கள் . நீங்கள் உடுத்துவதை அவர்களுக்கு உடுத்தகொடுங்கள். உங்களை மகிழ்விக்க வில்லை என்றால் அவர்களை விற்றுவிடுங்கள் .அல்லாஹ்வின் படைப்பின்ங்களை துன்புறுத்தாதீர்கள் “. 
நூல்: கிதாப் அல் அதப் (5161) ,அபூதாவுத்
     இந்த கட்டுரை ஆசிரியர் எதற்காக அல்லது யாருக்காக போராடுகிறார். இஸ்லாம் நாம் உண்ணுவதைப் போன்றதை அடிமைகளுக்கு வழங்க சொல்கிறது. நாம் உடுத்துவதை அவர்களுக்கு கொடுக்க கட்டளையிடுகிறது.  இப்படிதான் கால்நடைகளை மனிதன் நடத்துவானா? அவனது சுமைகளை பங்கிட வலியுறுத்தும் இஸ்லாமின் மீது இவ்வாறு அவதூறு பரப்பும் இந்த கட்டுரையாளர் ஒரு அரைவேக்காடு என்பதற்கு அடுத்த சான்று தான் நான் மேலே குறிப்பிட்டது 

குற்றச்சாட்டு 2:அடிமைகளை உற்பத்தி செய்வதா?

 நமது பதில்:

     அடிமைகளை உற்பத்தி செய்வதை இஸ்லாம் வலியுற்த்துவதாக நமது கட்டுரையாளர் உளறுகிறார். ஆனால் அடிமையாக இருக்கும் பெண் பிள்ளை பெற்றால் அந்த பெண் விடுதலை அடைந்துவிடுவார் என்பதும் அந்த குழந்தை உரிமையாளரின் வாரிசாகிவிடும் என்பதும் இந்த கூமுட்டை எழுத்தாளருக்கு தெரியவாய்ப்பில்லை. இதோ பின்வரும் ஹதிஸை பார்க்கவும். 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களும் ஓர் இளைஞன் விஷயத்தில் (நபி (ஸல்) அவர்களிடம்) வழக்காடினர்.
சஅத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த இளைஞன் என் சகோதரர் உத்பா பின் அபீவக்காஸின் மகன் ஆவான். என் சகோதரர் (தமது இறப்பின்போது) இந்த இளைஞன் தம்முடைய மகன் என்று என்னிடம் வலியுறுத்திக் கூறினார். இந்த இளைஞன் அவரது சாயலில் இருப்பதை நீங்கள் கவனியுங்கள்" என்று கூறினார்கள்.அதற்கு அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த இளைஞன் என் சகோதரன் ஆவான். என் தந்தைக்குச் சொந்தமான அடிமைப் பெண்ணுக்கு இவன் பிறந்தான்" எனக் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்விளைஞனிடம் உத்பாவின் தெளிவான சாயலைக் கண்ட பிறகும் (அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களிடம்), "அப்தே! அவன் உமக்குரியவனே. (ஒரு பெண் பெற்றெடுத்த) குழந்தை, (அப்)பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே உரியது. விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்" எனக் கூறினார்கள்.
பிறகு (தம் மனைவி சவ்தா (ரலி) அவர்களிடம்), "சவ்தாவே! இந்த இளைஞனிடத்தில் பர்தாவைப் பேணிக்கொள்" என்று கூறினார்கள். "அதற்குப் பிறகு சவ்தா (ரலி) அவர்களை அந்த இளைஞன் ஒருபோதும் கண்டதில்லை" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

முஸ்லிம்: 2888
மேலும் இவ்வாறு சுதந்திரமானவர்களை விற்பதை இஸ்லாம் தடையும் செய்தது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:


   "மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்' என்று அல்லாஹ் கூறினான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


புஹாரி 2227
       ஆக நிச்சயம் இஸ்லாம் அடிமைமுறைக்கான அனுமதியை      அடிமையை உற்பத்தி செய்யவதற்காக செய்தது என்பது அவதூறு என்பது தெளிவாக தெரிகிறது.
குற்றச்சாட்டு 3: முன்சென்ற காலங்களில் போர்கைதிகளை விற்பது இல்லாத ஒன்றா 


நமது பதில்:  
        அடிமைகளை பயன்படுத்துவிட்டு விற்பது குறித்த குற்றச்சாட்டை பதிவுசெய்கிறார். ஆனால் அன்றைய காலத்தில் பெண்போர்கைதிகளின் நிலை குறித்து சற்று விரிவாக காண்போம். போதுவாக பெண்போர்கைதிகள் பிடிக்கப்பட்ட பிறகு அவர்கள் ரோம் சாம்ராஜ்ஜியதில் எதற்காக பயன்படுத்தப்பட்டனர் என்பதை விளங்க வேண்டும். போரில் பிடிக்கப்படும் பெண்போர்கைதிகள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.  அதற்கு மூலகாரணமாக அமைந்தது அவர்களை நிர்வகிக்கும் செலவிற்கான தொகையை அவர்களே ஈட்டவேண்டும் என்ற நிர்பந்தம். ஆனால் இஸ்லாம் அடிமையாக பிடிக்கப்பட்ட பெண்போர்கைதிகளை விபச்சாராத்தில் ஈடுபடுத்துவதை கடுமையாக கண்டிக்கிறது. ஆக அடிமையாக அரசினால் நமக்கு வழங்கப்பட்ட அடிமையின் நிர்வாகச்செலவு நம்மை சார்ந்தது. ஒருவரால் நிர்வகிக்க முடியவில்லை எனும் போது அவர்களை விற்பது சிறந்த தீர்வா அல்லது விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்துவது சிறந்ததா என்பதை சிந்திக்க வேண்டும். போர்கைதிகளுடன் உறவு கொள்வது அன்றைய காலத்தில் உள்ள நடைமுறைதான். ஏன் முழுமையாக இஸ்லாம் அடிமை முறையை ஒழித்திருக்கலாம் என்ற கேள்விக்கான பதிலும் இதுதான். நமது பெண்கள் எதிரிகளால் கைப்பற்றப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் போது அடிமைகளை சிறப்பாக நடத்த இஸ்லாம் கட்டளையிடுகிறது . அன்றைய சூழலில் அடிமைமுறையை தடை செய்வது என்பது சரியான தீர்வு அல்ல. அந்த முறை அன்று இல்லை என்றால் நம்மவர்களை எதிரிகளிடம் இருந்து மீட்பது என்பது சாத்தியமற்றதாகும். மேலும் கைத்திகள் பரிமாற்றத்திற்கு பிறகு மிஞ்சியவர்களை விடுவிப்பதும் சரியான முறைஅல்ல. அவர்கள் எதிரிகளுக்கு உளவாளிகளாக மாறும் வாய்ப்பும் உள்ளது. 
      மேலும் புணர்ச்சி இடைமுறிப்பு  என்பது கருத்தடையில் அவ்வளவு வெற்றிகரமான முறையும் இல்லை. ஆனால் இவர்கூறும் ஹதீசிலும் புண்ர்ச்சி இடைமுறிப்பு செய்வதை தவிர்கவே நபி(சல்) அவர்கள் கூறியதாக இவர் குறிப்பிடுகிறார்.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் (பனூ முஸ்தலிக் போரில்) சில (அரபு) போர்க கைதிகளைப் பெற்றோம். (அவர்களிடையே இருந்த பெண் கைதிகளுடன் உடலுறவுகொள்ளவும்) 'அஸ்ல்' செய்து கொள்ளவும் விரும்பினோம். (அது குறித்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவினோம். அப்போது அவர்கள் '(இந்த அஸ்லை) நீங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள்?' என்று கேட்டுவிட்டு, 'மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்'' என்று கூறினார்கள்.

                                                          புஹாரி 6603





ஆனால் பெண்போர்கைதிகள் மனித உரிமைகள் பெரிதும் காக்கப்படுவதாக கூறப்படும் இன்றும் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை 

Donald G. Dutton, என்ற அறிஞர் தனது புத்தகமான  “The Psychology of Genocide, Massacres, and Extreme Violence: Why “Normal” People Come to Commit Atrocities.” பின்வருமாறு கூறுகிறார்.

        மேலே குறிப்பிட்டது போன்ற அநீதிகள் இன்றும் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. இஸ்லாத்தின் இந்த விஷயத்தில் கடுமையான விமர்சனம் வைக்கும் மேதாவிகளுக்கு இதை தடுக்க என்ன தீர்வு கண்டுள்ளனர்....ஒன்றுமில்லை என்பதுதான் உன்மை.


இஸ்லாம் போதிப்பது என்ன:


   இஸ்லாம் இவ்வாறு வன்புணர்வில் ஈடுபடுவதை தடுக்கிறது. வண்புணர்வு என்ற வார்த்தையை எந்த கொம்பனாலும் மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களில் இருந்து எடுத்துகாட்ட முடியாது. உன்மையில் போரில் ஈடுபடகூடியவர்கள் அனுமதி பெற்று வன்புணர்ச்சியில் ஈடுபடுதல் என்பது இல்லாத ஒன்று. இரண்டாம் உலகப்போரில் செம்படை ஸ்டாலின் அனுமதியொடுதான் ஜெர்மானிய பெண்களை வன்புணர்ச்சி செய்தனரா? ஆனால் நபி(சல்) அவர்களது காலத்தில் இவ்வாறு பிடிக்கப்பட்ட பெண்கள் காத்திருப்பு காலத்திற்கு ( சரசரியாக ஒரு மாதவிடாய்காலத்திற்கு) பிறகுதான் அடிமையாக பெற்றவரால் உறவே கொள்ள முடியும். மேலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்று இருக்க வேண்டும்.


 وَلا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلأمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ (٢٢١)



இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கத்திற்கும் மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
                                          அல் குர்ஆன்: 2: 221
       இதில் இடம்பெறும்நிகாஹ்எனும் வார்த்தை உறவு கொள்வதை அனுமதிக்கும் நடைமுறைகள் அனைத்தையும் குறிக்கும்( திருமணம் மற்றும் உரிமையாளர் அடிமை உறவு) என்பது குறிப்பிடதக்கது

     மேலும் இத்தகைய காத்திருப்பு காலத்திற்குள் இவ்வாறு பிடிக்கப்பட்ட பெண்கள் தங்களது உரிமையாளரிடம் தங்களது விடுதலை குறித்தும் தங்கள் நடத்தப்படும் விதம் குறித்தும்  விரும்பியவாறு ஒப்பந்த்தில் ஈடுபடலாம். அத்தகைய உடன்படிக்கையில் ஈடுபடுவதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.  


       திருமணம் செய்ய வசதியற்றவர்களை அல்லாஹ் தனது அருளால் தன்னிறைவு பெற்றோராக ஆக்கும் வரை அவர்கள் கற்பொழுக்கம் பேணட்டும். உங்கள் அடிமைகளில் விடுதலைப் பத்திரம் எழுதிக் கேட்போரிடம் நல்லதை நீங்கள் அறிந்தால் அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள்! கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்! யாரேனும் அவர்களை நிர்பந்தித்தால் நிர்பந்திக்கப்பட்ட அப்பெண்களை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். 

அல் குர்ஆன் 24:33
     அபூசயித் அல் குத்ரி(ரலி) நபி(சல்) அவர்கள் அவ்தாஸில் கைபற்றப்பட்ட அடிமைப் பெண்கள் குறித்து “ கர்பமுற்ற பெண்களை குழந்தை பெற்றுக்கொள்ளும் வரை நெருங்கக்கூடாது என்றும் மற்ற பெண்களை ஒரு மாதவிடாய் காலம் நெருங்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார்கள்


நூல் அபூதாவுத் 2157
        இவ்வாறு இஸ்லாம் அடிமைபெண்கள் குறித்து தெளிவான வரைவுகளை ஏற்படுத்துயுள்ளது. அடிமைகளை துன்புறுத்துவதை இஸ்லாம் தடை செய்து இருக்கிறது என்பதை முன்பே விளக்கியுள்ளோம். அடிமைகளை கண்ணத்தில் அரைவதற்கே அனுமதி இல்லை எனும் போது வன்புணர்ச்சியில் ஈடுபடுவதை இஸ்லாம் அனுமதிக்குமா? வன்புணர்ச்சி என்பதும் துன்புறுத்தலில்தான் அடங்கும் என்பது கட்டுரை ஆசிரியருக்கு தெரியவில்லை ஆக மேலே கூறப்பட்டிருக்கும் சம்பவம் வன்புணர்ச்சியல்ல.

குற்றச்சாட்டு 4: முன்பு தடுக்கப்பட்டதா?
 


நமது பதில்:




  ட்டுரை ஆசிரியர் அடுத்ததாக முன்பு இறைவன் தடை செய்த ஒன்றை அனுமதித்தது போல கதை கெட்டுகிறார். மேலும் இத்தகைய செயலை நபி(சல்) அவர்கள்தான் உருவாகினார் என்ற பொய்யான தோற்றத்தை இந்த கட்டுரையாளர் உருவாக்க நினைக்கிறார். ஆனால் ரோம் சாம்ராஜியத்தில் பெண்களும் சிறுவர்களும் இவ்வாறு போரில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டனர் என்று டசிடஸ் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். போரில் வன்புணர்ர்ச்சியில் ஈடுபடுவதை இஸ்லாம் தடைசெய்ததே மாபெரும் புரட்சி. முன்பு பெண்கள் பிடிக்கப்பட்ட போது அவர்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால் இஸ்லாம் இவ்வாறு பிடிக்கப்பட்ட பெண்களை காத்திருப்பு காலத்திற்கு பிறகே அவர்களின் முறையான அனுமதியுடன் நெருங்க அனுமதித்தது. கற்பழிப்பு தொடர்பான சட்டம் குறித்து விளக்கும் பகுதியில் உன்மையில் அடிமைகளை கற்பழிக்க இஸ்லாம் அனுமதித்ததா என்பதை காண்போம்

குற்றச்சாட்டு 5:

நமது பதில்: 

கட்டுரை ஆசிரியர் பெண்கள் அடிமைப்பெண்கள் எப்படி இவ்வாறு அனுமதித்தனர் என்று கேள்வி எழுப்புகிறார். அடிமை முறை இல்லாத ( ஆனால் அதை விட கேடாக நடத்தப்படும் போர்சிறைகள் உள்ள) 21ம் நூற்றாண்டில் இருந்து கொண்டு இந்த கேள்வியை கேட்பது அறிவு அல்ல. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்று இதை பார்ப்பது தான் அறிவுடமையாகும். இது குறித்து சாமுவேல் பெர்னார்ட் என்ற வரலாற்று அறிஞர் கூறுகையில்

    பண்டைய காலத்தில் தந்தையொடோ அல்லது கணவனுடனோ போருக்கு செல்லும் பெண்கள் திருமண நிச்சயதார்த்தத்திற்கு அணியும் ஆடை போன்று அணிந்து செல்வது வழக்கம் ஆகும். இது தாங்கள் சிறைபிடிக்கப்பட்டால் ஆக்கிரமிப்பாளர்களால் தாங்கள் ஈர்க்க பட வேண்டும் என்பதற்காக.( இதை சாமுவேல் பெர்னார்ட் அவர்கள் தனது கிழக்கத்திய பழக்க வழக்கம் என்ற நூலில்(vol 2 , page no 79,Oriental Customs: Or, an Illustration of the Sacred Scriptures, 1807) ஒவிட் என்ற கிபி 17ல் வாழ்ந்த கவிஞரின் கூற்றாக குறிப்பிடுகிறார்)  

மேலும் தவறானவர்களிடம் பெண்கள் தாங்கள் விழுவதை தவிர்ப்பதற்கு அவர்களும் இதை ஏற்றுக்கொண்டனர்அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் போன்ற நயவஞ்சகர்களிடம் மாட்டும் அடிமை பெண்களின் நிலை மோசமானதாக இருந்தது.


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது

     (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல் லாஹ் பின் உபை பின் சலூல், தன் அடிமைப் பெண்ணிடம், "நீ சென்று விபசாரத்தில் ஈடுபட்டு எதையேனும் ஈட்டி வா'' என்று சொன்னான். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபசாரத்துக்கு நிர்பந்திக்காதீர்கள். யாரேனும் அவர்களை நிர்பந்தித் தால் நிர்பந்திக்கப்பட்ட அப்பெண்களை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' (24:33) எனும் வசனத்தை அருளினான்.
முஸ்லிம்  5763 
       ஆக பெண்கள் இதை அனுமதிப்பது பண்டைய வழக்கம் என்பதற்கு ஒவிட்ன் குறிப்பு போதுமானது. இதன் காரணத்தால் தான் நபி(சல்) அவர்களின் அனைத்து நடை உடை பாவணையையும் பதிவு செய்தவர்களின் குறிப்புகளில் இருந்து இவ்வாறு குற்றம் சாட்டுவோர்களால் கற்பழிப்பு குறித்து ஒரு வரலாற்று சான்றையும் கொண்டுவர இயலவில்லை. மேலும் நபி(சல்) அவர்கள் கற்பழிக்க கட்டளை இட்டார்கள் என்பது குறித்து ஒரு பலவீனமான் இட்டுகட்டப்பட்ட ஒரு செய்தியையும் இந்த அறிஞரால் காட்ட முடியவில்லை. மேலும் கற்பழிப்பு என்ற வார்த்தையை கூட போர்தொடர்பான செய்திகளில் காட்ட முடியவில்லை. ஏன் யுதர்களின் செய்திகளை அப்படியே பதிவு செய்த இப்னு இஸாக்கின் வரலாற்று நூலில் இருந்து கூட காட்ட முடியவில்லை. அந்த காலத்து யுதர்கள் சொல்ல மறந்த அல்லது மறுத்த ஒரு நிகழ்வை நபி(சல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று கூறுவது என்பது அவதூறு என்பதில் எள்முனையளவும் சந்தேகம் இல்லை

6.அல்லாஹ்வின் தீர்ப்பும் கட்டுரை ஆசிரியரின் அரைவேக்காட்டுதனமும்


நமது பதில்: 



இவர் புரிதலின் தவறால் ஏற்பட்ட மிகை கற்ப்பனைதான் இது. போரில் பிடிக்கப்பட்டவர்கள் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று, பிறகு அவரது உறவினர்களால் மீட்கப்படாமல் அல்லது உறவினர்கள் இல்லாமல் விடப்பட்ட பெண்கள் தங்களது உரிமையாளருடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு பிறகு தான் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரிமையாளர் அடிமைபெண் உறவு ஏற்படும் என்ற இஸ்லாம் கூறும் சட்ட வரையறை ஒன்றுமே தெரியாத கூமுட்டை எழுத்தாளர் போலும்...! 



குற்றச்சாட்டு 7: அடிமைகளுடன் உறவு கொள்வது விபச்சாரமா?



நமது பதில்:

     வன்கலவிக்கு அடிமைபெண்கள் உடபடுத்தப்பட வில்லை என்பதை முன்பே வரலாற்று குறிப்புகளுடன் விளக்கியுள்ளோம். அடிமையுடன் கொள்ளும் உறவை விபச்சாரத்துடன் ஆசிரியர் ஒப்பிடுகிறார். விபச்சாரத்திற்கும் முறையான உறவுக்கும் வித்தியாசம் தெரியாத முடர். உறவு கொள்வது மட்டும்தான் விபச்சாரத்தை வரையறுக்கும் காரணி என்றால் திருமணமும் விபச்சாரம் ஆகிவிடும். ஆனால் விபச்சாரத்தை முறையான உறவில் இருந்து பிரிப்பது அந்த பெண்ணுக்கு பொறுப்பாளியாக இருப்பவரின் நிலைதான். முறையான உறவில் பெண்ணின் குழந்தை உரிமையாளரின் வாரிசாக ஆகிவிடும். இப்படிதான் விபச்சாரத்தில் நடைபெறுமா? ஒருவேளை கட்டுரை ஆசிரியர் இத்தகைய விபச்சார முறையை உருவாக்கி உள்ளாரா.  



8.உன்மையை உணரா மூடர்: கற்பழிப்புக்கு இஸ்லாத்தில் என்ன தண்டனை:




நமது மறுப்பு: 
  

கற்பழிப்புக்கான தண்டனையை காட்ட முடியாது என்று தன்னுடைய அறியாமையை கட்டுரையாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். இதோ



      வாயில் இப்னு ஹஜ்ர்(ரலி) அவர்கள் கூறியதாவது, “நபி(சல்) அவர்களது காலத்தில் ஒரு பெண் தொழுகைக்காக வெளியே சென்ற போது ஒரு மனிதர் அவரை தாக்கி வன்புணர்ச்சி செய்து விட்டார். அந்த பெண் கூச்சலிட அந்த மனிதர் ஓடி விட்டார். அப்போது அங்கு வந்த ஒருவரிடம் அந்த பெண் “இந்த நபர் இன்னின்னவாறு செய்து விட்டார் என்று விவரிக்க , முஹாஜிர்களின்  கூட்டம் ஒன்று அங்கு வந்தது. அவர்களிடம் அப்பெண் அதை விவரிக்க அவர்கள் அவ்வாறு செய்தர் என்று கருதிய நபரை நபி(சல்) அவர்களிடம் இழுத்து வந்தனர். நபி(சல்) அவர்கள் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்க முற்பட்ட போது உன்மையில் அவரை வன்புணர்ச்சி செய்தவர் எழுந்து “நான் தான் அவரை இவ்வாறு செய்தவர் என்று கூற, நபி(சல்) அவர்கள் தவறாக அழைத்துவர பட்டவரை விடுவித்து சில இனிமையான சொற்களை கூறினார்கள். பிறகு அந்த பெண்ணிடம், “அல்லாஹ் உனக்கு மன்னிப்பை வழங்கிவிட்டான்” என்று நபி(சல்) அவர்கள் கூறினார்கள். குற்றமிழைத்தவரை கல்லெறிந்து கொல்ல உத்தரவிட்டார்கள்.....

நூல்:அல் கிதாப் அல் ஹத்(4379), அபூதாவூத் , அல் கிதாப் அல் ஹத்(1454), திர்மிதி.

          இதில் அடிமைபெண்கள் அடங்கமாட்டார்கள் என்று கூறலாம். ஆனால் இஸ்லாம் ஒரு சட்டதை கூறிவிட்டால் அது அனைவருக்கும் பொறுந்தும் தனிச்சலுகை குறிப்பிடப்படாத வரை. குற்றவியல் சட்டங்கள் அனைத்தும் அப்படிதான் உள்ளது விபச்சாரத்தை தவிர. ஆக கற்பழிப்புக்கான தண்டனை அடிமை சுதந்திரமானவர் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் பொதுவானது என்பதற்கு மேலே கூறிய ஹதீஸே போதுமானது. இனி மறுக்க கூடியவர் அடிமைகளுக்கான தனி சலுகைகான ஆதாரத்தை காட்ட வேண்டும் ஆகவேதான் பின் வந்த மாலிக் பின் அனஸ் போன்ற அறிஞர்கள் நான் மேலே கூறிய கருத்தில் உள்ளனர். முவத்தாவில் பின் வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

யஹ்யா மாலிக்(ரஹ்) அவர்களிடம் செவியுற்றதாக கூறினார்:
நம் சமுகத்தில் ஒரு பெண் வன்புணர்ச்சிக்கு ஆளானால் , வன்புணர்ச்சிக்கு ஆளான பெண் சுதந்திரமானவராக இருந்தாலும், அடிமையாக இருந்தாலும் வன்புணர்ச்சியில் ஈடுபட்டவற்கு ஹத் நிறைவேற்றப்படும்
         பாடம்: வன்புணர்ச்சிக்கு ஆளான பெண் குறித்த தீர்ப்பு, தீர்ப்புகள்

குற்றச்சாட்டு 10: எதற்கு அஞ்சினர் சஹாபாக்கள்:

நமது பதில்:

பெண்களின் கணவன்மார்கள் இருந்ததால் நபிதோழர்கள் அஞ்சியதாக கூறுகிறார். ஏன் இதற்கு முன்பு பெண்கள் கைபற்றபட்ட போது எப்படி நடத்தப்பட்டனர். இஸ்லாமை மக்களுக்கு நபி(சல்) அவர்கள் மக்களுக்கு கூறுவதற்கு முன்பு போரில் வெற்றி பெற்றவுடனே வன்புணர்ச்சியில் போர்வீர்ரகள் ஈடுபட்டதாக கூறுகிறது வரலாறு. மறுபடியும் இவர் தவாறான புரிதலைதான் வெளிப்படுத்துகிறார். கணவன்மார்களின் முன்னிலை என்பது அப்பட்டமானது இந்த வார்த்தை அமைப்புடன் ஒரு செய்தியை இந்த கட்டுரை ஆசிரியர் காட்டட்டுமே பார்க்கலாம். மேலும் அவர்களது கணவன்மார்கள் இணைவைப்பாளர்களாக இருந்ததால் என்பதுதான் அந்த ஹதீஸின் சாரமே.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரின்போது (ஹவாஸின் குலத்தார் வசிக்கும்) "அவ்தாஸ்" என்ற பகுதிக்கு ஒரு படையை அனுப்பினார்கள். அவர்கள் எதிரிகளை எதிர்கொண்டு, போரிட்டு அவர்களை வெற்றி கொண்டனர். (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) அவர்களின் சில பெண்களையும் அவர்கள் சிறை பிடித்தனர். (போரில் சிறை பிடிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட) அப்பெண்களுக்கு இணைவைப்பாளர்களான கணவர்கள் இருக்கிறார்கள் என்பதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் அப்பெண்களுடன் தாம்பத்திய உறவு கொள்வதைத் தவறாகக் கருதினர். இது தொடர்பாகவே பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்:

மேலும், கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், போரில்) உங்களுக்கு உடைமையாகிவிட்ட பெண்களைத் தவிர. (இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டமாகும். (4:24) அதாவது, (போரில் சிறை பிடிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட) அப்பெண்களின் காத்திருப்பு (இத்தா)க் காலம் முடிந்துவிட்டால்,அவர்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவர். (அவர்களுடன் நீங்கள் தாம்பத்திய உறவு கொள்ளலாம்.) 
முஸ்லிம் :2885.
      எப்போது பெண்கள் அடிமையாக பிடிக்கப்பட்டுவிட்டாரகளோ அப்போதெ அப்பெண்ணின் திருமணம் ரத்தாகிவிடும் என்று இஸ்லாம் கூறுகிறது. இது தான் சமுகத்தில் தீமை பரவாமல் இருக்க சரியான வழி. கணவன் எங்கோ இருக்கிறார். அவர் அந்த பெண்ணை மீட்கவும் இல்லை எனும்  போது அந்த திருமணம் ரத்து செய்யப்படுகிறது. இதில் எந்த தவறும் இல்லை. அவர்கள் தங்களின் வழியை தேர்வு செய்யும் முழு அதிகாரம் அல்லவா அது. அவர்கள் விரும்பினால் விடுதலை பத்திரம் பெற்று கொள்ளலாம். அல்லது தனது உரிமையாளரை வாழ்கை துணையாக ஆக்கிக் கொள்ளலாம். மேலும் அடிமையின் உரிமையாளர்களை அடிமைகளுக்கு திருமணம் செய்விக்கவும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். 
அல் குர்ஆன்: 24:32.
      இந்த ஆசிரியர் போன்ற மனிதாபிமானமற்றவர்கள் இத்தகைய இறை தீர்ப்பை ஏற்கமுடியவில்லை என்பதற்கு கால்புணர்ச்சி என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்.........அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்