பக்கங்கள் செல்ல

Showing posts with label அடிமைகள். Show all posts
Showing posts with label அடிமைகள். Show all posts

Tuesday, April 28, 2015

எதிர் தொடர் 12: இஸ்லாம் எந்த வகையான ஒழுக்க நெறிகளை போதிக்கிறது

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

எதிர்தொடர் 12:இஸ்லாம் எந்த வகையான ஒழுக்கநெறியை போதிக்கிறது
      இந்த கட்டுரையில் ஒரு சேர பல குற்றச்சாட்டுகளை கட்டுரையாளர் அடுக்கியுள்ளார்.[refer:Source] அடிமை முறை குறித்து முன் சென்ற கட்டுரையில் தெளிவாக கண்டுவிட்டோம். அவரது அறியாமை இந்த தொடரிலும் பல்லிளிக்கிறது. இந்த தொடரில் அவரது அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரப்பூர்வமான சான்றுகளைக் கொண்டு பதிலளித்துள்ளோம்.

குற்றச்சாட்டு 1:


நமது பதில்:
உமர்(ரலி) அவர்களை கண்டு விருண்டோடும் ஷைத்தான்கள்:
            இந்த தொடரில் உமர்(ரலி) அவர்களின் நச்சரிப்பால்தான் பர்தா வந்ததாக உளரியுள்ளார். அது தவறு என்பதை சென்ற தொடர்களில்( எதிர் தொடர் 10) விளக்கியுள்ளோம். அது போகட்டும் இந்த தொடரில் உமர்(ரலி) அவர்களின் ஒழுக்கத்தை எடை போட முற்பட்டுள்ளார். அவர் பதிவு செய்த ஆதாரம் இதோ, 

أخبرنا محمد بن عمر أخبرنا سيف بن سليمان عن قيس مولى بن علقمة عن داود بن أبي عاصم الثقفي عن سعيد بن المسيب قال خرج عمر بن الخطاب على أصحابه يوما فقال أفتوني في شيء صنعته اليوم فقالوا ما هو يا أمير المؤمنين قال مرت جارية لي فأعجبتني فوقعت عليها وأنا صائم قال فعظم عليه القوم وعلي ساكت فقال ما تقول يا بن أبي طالب فقال جئت حلالا ويوما مكان يوم فقال أنت خيرهم فتوى

இதன் அறிவிப்பாளர் தொடர்:
Qays bin Sa'd al-Mky-->Syf bin Sulaiman(death 150 ah)-->Muhammad ibn Umar al-Waqidi(birth 130 ah)-->Muhammad ibn Sa'd ibn Mani' al-Hashimi al-Baghdadi(ibn sa'd)

    இப்னு சஅத் அவர்கள் முஹம்மது இப்னு உமர் அல் வாகிதி என்பாரிடம் செவியேற்றதாக இந்த செய்தியை பதிவு செய்துள்ளார். ஆனால் இவர் பொய்யர் என்று பல அறிஞ்கர்களால் சாடப்பட்டவர். நவவீ , தாரகுத்னீ இவரை பலவீனமானவர் என்றும், ஷாஃபிஹ், அஹமது இப்னு ஹம்பல், புஹாரி,நஸயீ ஆகியோர் வாகிதியை பொய்யர் என்றும் ஹதீஸ்களில் இட்டுகட்டுபவர் என்றும் கூறுகின்றனர். ஆக இவர் கூறும் இந்த செய்தி பலவீனமானதாகும். ஏற்கத்தக்கது அல்ல. இந்த ஆசிரியர் சரியான செய்திகளில் இருந்து எந்த குற்றச்சாட்டையும் கூற முடியாத காரணத்தால்தான் இத்தகைய இட்டுகட்டபட்ட செய்திகளின் பக்கம் ஓடிகொண்டிருக்கிறார். தனது ஹதீஸ் குறித்த அறிமுகத்தில் இவர் கூறியது எதையுமே இவர் ஏற்று கொள்ள வில்லை. அல்லது செயல் படுத்தவில்லை என்பது தெளிவு..

குற்றச்சாட்டு 2: முஸ்லிம்கள் அடிமைகளுக்கு காயடித்தனரா?

நமது பதில்:
அடிமைகளை சேதப்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?
நபி(சல்) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:
      தனது அடிமையை கொலை செய்தவரை நாமும் கொலை செய்வோம் சேதப்படுத்தியவரை நாமும் சேதப்படுத்துவோம்.யார் காயடித்தாரோ அவருக்கு நாம் காயடிப்போம்.
அறிவிப்பாளர்: சமுரா பின் ஜுன்துப்(ரலி)
நூல்: நஸயீ(4740), இப்னு மாஜா(2663)

  இஸ்லாம அடிமைகளை இவ்வாறு சேதப்படுத்துவதையும் காயடிப்பதையும் இஸ்லாம் தடை செய்து உள்ளது எனபதை மேற்குறிப்பிட்ட அறிவிப்பு கூறுகிறது. அப்படி இருக்கும் போது இவர் கூறும் குற்றச்சாட்டுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இவர் முன் சென்ற கட்டுரையில் ஒரு குற்றச்சாட்டை பதிந்து உள்ளார். அதாவது அடிமைகளை உற்பத்தி செய்வதற்குதான் இஸ்லாம் அடிமை முறையை ஆதரித்ததாக கூறினார்.( தொடர் 11: வன் கலவியும் வேதவெளிப்பாடும்) அடிமைகளை உற்பத்தி செய்வது நோக்கமாக இருந்தால் ஏன் அடிமைகளுக்கு காயடிக்க வேண்டும் . ஏன் இவரது ஒவ்வோறு தொடரும் இவரது குற்றச்சாட்டை இவரே மறுப்பதாக அமைந்துள்ளது என்பதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்

அடிமைகளுக்கு காயடித்த பாதிரிகள்:
                ஆனால் இவ்வாறு காயடிக்கப்படாவிட்டால் ஏன் அடிமைகள் பெருக வில்லை. என்பதற்கான விடையை நாம் வரலாற்றில் தேடுவோம். இது குறித்து ஆய்வு செய்த இஸ்ரேலிய அறிஞர் EHUD TOLEDANO பின்வருமாறு கூறுகிறார்

P.No.383 
        அதாவது 19ம் நூற்றாண்டு வரை காயடிக்கும் பழக்கத்திற்கான சான்றுகளை உஸ்மானிய பேரசுகளில் காணமுடியவில்லை என்று கூறுகிறார். பிறகு எப்படி காயடிக்கப்பட்ட அடிமைகள் உள்ளே கொண்டுவரப்பட்டனர். அதற்கான காரணத்தையும் அவர் விளக்குகிறார்.
THE IMPERIAL EUNUCHS OF ISTANBUL FROM AFRICA TO THE HEART OF ISLAM-P.No.383 

      அதாவது கிறித்தவ பகுதிகளில் கிறித்தவ பாதிரிகளால் காயடிக்கப்பட்டு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் UNESCO வின் International  Scientific Committee for Drafting of a Genaral History of Africa வெளியிட்டுள்ள ஆப்ரிக்க வரலாற்று நூல் 16ம் பக்கத்தின் அடிக்குறிப்பு பின்வருமாறு கூறுகிறது.


           அதாவது Reinhard Dozy என்ற பிரஞ்சு அறிஞர் ஐரோப்பாவின் வெர்டுன் நகரைஅரவாணி தொழிற்சாலைஎன்று கூறுவதாக அந்த நூல் சாடுகிறது. ஆக இஸ்லாமியர்கள் இப்படி ஒரு அநீதியை இழைக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவு.

       ஆனால் இதற்கு பின்னால் ஒரு சூழ்ச்சி ஒளிந்து உள்ளது. கிறித்தவ சாம்ராஜ்ஜியத்தில் அடிமைகளை இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் விற்பதற்கு தடை பலமுறை கிறித்தவ போப்புகளால் விதிக்கப்பட்டது ( 1317, 1323, 1329, 1338,  1425 ). இது தடை செய்யப்பட்டதற்கான காரணம் இவ்வாறு விற்கப்படும் அடிமைகள் இஸ்லாமியர்களின் போர்படைகளில் இணைக்கப்பட்டனர். அந்த அடிமைகள் பிற்காலத்தில் விடுதலை அடைந்த்தோடு அல்லாமல் அவர்கள் தங்களது முன்னால் எஜமானர்களை போர்களில் வீரியமாக எதிர்த்தனர் என்ற கவலைதானாம்.( Slavery, Slave Trade. ed. Strayer, Joseph R. Dictionary of the Middle Ages. Volume 11. New York: Scribner, 1982) உன்மையில் முஸ்லிம்கள் அடிமைகளை துன்புறுத்தியிருந்தால் ஏன் தங்களது முன்னால் எஜமானர்களை வீரியத்துடன் எதிர்க வேண்டும். சரி இதன் பின்னணியில் உள்ளதை நாம் தொடர்வோம். பலமுறை போப் அடிமை முறையை தடை செய்தும் ஏன் அரவாணி உற்பத்தி நிலையங்கள் வெனிஸ் நகரத்திலேயே செயல்பட்டது. (Mary A. Valante, Castrating Monks: Vikings, the Slave Trade, and the Value of Eunuchs, in 'Castration and Culture in the Middle Ages' ed. Larissa Tracy). கிறித்தவ போப் அடிமைகளை விற்பதை தடை செய்ய காரணம அவர்கள் முஸ்லிம்களால் போர்விரர்களாக ஆகப்பட்டதுதான் என்று முன்பே குறிப்பிட்டோம். இது தான் அந்த அடிமைகளுக்கு காயடிக்கவும் காரணம். அவர்களை ஆண்மை நீக்கம் செய்வதால் பேடிகளாக்கலாம், போர்படையின் எண்ணிக்கையை கட்டுபடுத்தலாம், என்ற கிறித்தவ உலகின் எண்ணத்தில் இஸ்லாமிய அரசுகள் மண்ணைவாரி இறைத்தது. ஆம் இவ்வாறு ஆன்மைநீக்கம் செய்யப்பட்ட ஆண்களை போர்வீரர்களாக்க இஸ்லாமிய அரசுகளால் PALACE SCHOOLல் அரச பிள்ளைகளுடன் பயிற்றுவிக்கப்பட்டு ஈட்டி வீர்ர்களாகவும் , மெய்காப்பாளராகவும் மாற்றப்பட்ட்தாக வரலாற்று அவனங்கள் பதிவு செய்துள்ளன. நாத்திகர்கள் இஸ்லாமியர்களின் சாதனைகளை என்றும் வெளிகூறமாட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. கிறித்தவதிற்கு என்றுமே ஓத்தூதும் கயவர்கள்தான் நாத்திகர்கள் என்பது தெள்ளத் தெளிவு.

குற்றச்சாட்டு 3:


நமது பதில்:
      கற்பழிப்பிற்கு தண்டனை இல்லை என்பது பொய் என்பதை முன்பே விளக்கியுள்ளோம். எங்கே இஸ்லாம் குறித்து மக்கள் விழிப்படைந்துகொள்வார்களோ என்ற கள்ளத்தனம்தான் மேற்குறிப்பட்ட விமர்சனத்தில் காணப்படுகிறது.

குற்றச்சாட்டு 4:

நமது பதில்:
      முதலில் அந்த ஹதீஸை இவர் முழுமையாக படிக்க வில்லை. இந்த குறிப்பிட்ட ஹதீஸ் முழுமையாக முழுவிவரத்துடன் புஹாரியிலேயே இடம் பெற்றுள்ளது.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
      ஒருவர் தமக்குச் சொந்தமான அடிமை தம் மரணத்திற்குப் பின் விடுதலையாவார் என்று கூறியிருந்தார். அம்மனிதருக்குப் பொருள் தேவை ஏற்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையைப் பெற்று, 'இவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்பவர் யார்?' என்று கேட்டார்கள். அவரை நுஅய்கி இப்னு அப்தில்லாஹ்(ரலி) இன்ன விலைக்கு வாங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள், அவரிடம் அந்த அடிமையைக் கொடுத்தார்கள்.
புஹாரி  2141. 

         மரணத்திற்கு பிறகு விடுவிப்பதாக அறிவிப்பு செய்தவருக்கு சிக்கல் ஏற்பட்ட போது அந்த அடிமையை பெற்று நபி(சல்) அவர்கள் விற்றதாகத்தான் உள்ளது. மேலும் மனிதன் இறந்த பிறகு அவன் விட்டுச்செல்லும் எதற்கும் சொந்தம் கொண்டாட முடியாது. அடிமையை விடுவிப்பவர் இறக்கும் முன்பு விடுவிப்பதுதான் சிறந்தது. இதோ பின் வரும் செய்தி அதை தெளிவாக உணர்த்துகிறது..

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
          ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
புஹாரி: 2748

குற்றச்சாட்டு 5:

நமது பதில்:
        இந்த செய்தியில் இடம்பெறும் வாசகம் என்ன கூறுகிறது. இறுதி வாசகம் மர்வான் தனது அடிமைப்பெண்ணின் கால்களை கண்டதற்காக தனது மகனை அந்த பெண்ணை நெருங்கக்கூடாது என்று தனது மகனுக்கு அறிவுறுத்தியதாக கூறி மர்வான் அவர்களின் குணத்தை சுட்டுகிறார். இத்தகைய ஒழுக்க விழுமியங்களைதான் இஸ்லாம் மக்களுக்கு போதித்தது. கச முசா செய்ய சொன்னதை அடிக்கொடிட்டு கச முசாக்களை தேடுபவருக்கு இது தெரிய வாய்ப்பில்லை. இந்த ஆசிரியரின் எண்ண ஓட்டம் எதுவோ அதுதான் அவரது கேள்விகளில் தெரிகிறது. (மேலும் அடிமைப்பெண்கள் தொடர்பான தெளிவிற்கு முன் சென்ற எதிர்தொடர் 11 காண்க. refer: source )

குற்றச்சாட்டு 6:

நமது பதில்:  
      முதலில் அல்மூத்ஆ திருமணம் குறித்து  இந்த ஆசிரியரின் போதிய தெளிவு இன்மையைதான் காட்டுகிறது. மூத்ஆ திருமணம் அல்லது தற்காலிக திருமணம் நபி(சல்) அவர்களது காலத்திற்கு முன்பே நடைமுறையில் இருந்த ஒன்று. இதை நபி(சல்) அவர்கள் முதலில் இக்கட்டான சுழலில் மட்டும் அனுமதித்து ஏனைய காலங்களில் தடை செய்கிறார்கள். இதுவே மாபெரும் சமுக மாற்றம் இல்லையா? என்றும் செய்யலாம் என்பதற்கும் இக்கட்டான சூழலில் மட்டும் செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதை பின் வரும் அறிவிப்பு கூறுகிறது. 

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
       (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் (ஒரு நாள்) மக்காவில் (சொற்பொழிவாற்ற) எழுந்து நின்று, "அல்லாஹ், மக்களில் சிலருடைய கண்களைக் குருடாக்கியதைப் போன்று அவர்களின் உள்ளங்களையும் குருடாக்கிவிட்டான்;அவர்கள் "அல்முத்ஆ" திருமணம் (தற்போதும்) செல்லும் எனத் தீர்ப்பளிக்கின்றனர்" என்று கூறி, ஒரு மனிதரைச் சாடையாக விமர்சித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை அந்த மனிதர் அழைத்து, "நீர் ஒரு விவரமற்ற முரடர்; என் ஆயுளின் (அதிபதி) மீதாணையாக! பயபக்தியாளர்களின் தலைவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது) காலத்தில் "அல்முத்ஆ" திருமணம் நடைமுறையில் இருந்தது" என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், "(அது அப்போதே மாற்றப்பட்டுவிட்டது என்பதை அறிந்து) உம்மை நீர் பக்குவப்படுத்திக்கொள்வீராக! (இந்த விவரம் தெரிந்த பின்பும்) அவ்வாறு நீர்("அல்முத்ஆ" திருமணம்) செய்தால், (அது விபசாரக் குற்றம் என்பதால்) உம்மைக் கல்லால் எறிந்து கொல்வேன்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
               என்னிடம் காலித் பின் அல்முஹாஜிர் பின் சைஃபில்லாஹ் (ரஹ்) அவர்கள், "நான் ஒரு மனிதருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவரிடம் ஒருவர் வந்து "அல் முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் குறித்துத் தீர்ப்புக் கேட்டார். அப்போது அந்த மனிதர் அதற்கு அனுமதியளித்தார். அப்போது (தீர்ப்பளித்த) அந்த மனிதரிடம் இப்னு அபீஅம்ரா அல்அன்சாரி (ரலி) அவர்கள், "நிதானி(த்துத் தீர்ப்பளி)ப்பீராக!" என்றார்கள். அதற்கு அவர், "அவ்வாறில்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! பயபக்தியாளர்களின் தலைவர் (நபி (ஸல்) அவர்களது) காலத்தில் அது ("அல்முத்ஆ" திருமணம்) நடைபெற்றது" என்று கூறினார்.
          அதற்கு இப்னு அபீஅம்ரா (ரலி) அவர்கள், "அல்முத்ஆ (தவணை முறைத்) திருமணம், இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நிர்ப்பந்தத்திற்குள்ளானவருக்கு மட்டும் செத்த பிராணி, இரத்தம், பன்றி இறைச்சி ஆகியவை அனுமதிக்கப்பட்டதைப் போன்று அனுமதிக்கப்பட்டிருந்தது. பிறகு அல்லாஹ் இந்த மார்க்கத்தை உறுதியாக்கியதும் அத்திருமணத்திற்குத் தடை விதித்துவிட்டான்" என்று கூறினார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறினார்கள் என அவர்களுடைய புதல்வர் ரபீஉ பின் சப்ரா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு என்னிடம் தெரிவித்தார்கள்:
             நான் பனூ ஆமிர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரு சிவப்புப் போர்வைகளைக் கொடுத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்திருந்தேன். பின்னர், "அல்முத்ஆ" திருமணம் செய்யலாகாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்துவிட்டார்கள்.
தொடர்ந்து இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
              ரபீஉ பின் சப்ரா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது நான் அங்கு அமர்ந்திருந்தேன்.
முஸ்லிம் 2736.
        அல்மூத்ஆ குறித்து பெண்கள் கேட்டுஇருந்தால் என்னவாகிருக்கும் என்று கூறுகிறார். பெண்கள் கேட்காததற்கு ஒரு காரணம் உண்டு. அல்மூத்ஆ இதற்கு முன்பு என்றுமே நடைமுறையில் இருந்ததை, நபி(சல்) அவர்கள் இக்கட்டான சுழலில் மட்டும் என்று மாற்றும் போது அன்றைய பெண்களின் எண்ண ஓட்டம் எப்படி இருந்து இருக்கும் என்பதை வாசிப்பவரின் எண்ணத்திற்கு விடுகிறேன். பெண்கள் குறித்த கேவலமான எண்ண ஓட்டத்தைதான் இந்த கட்டுரையாளரின் கற்பனை நமக்கு காட்டுகிறது.
         அதாவது மக்கா வெற்றிக்கு பிறகும் படையெடுப்புகள் இருக்கத்தான் செய்தது. இன்னும் சொல்வதாக இருந்தால் நெடுந்தொலைவிற்கான படையெடுப்புகள் இதற்கு பிறகுதான நடைபெற்றது. மூத்ஆவின் தேவை அப்போதுதான். ஆனால் அப்பொழுது இத்தகைய திருமணம் தடை செய்யப்பட்டு விட்டது. முன் கூட்டியே நபி(சல்) அவர்கள் எப்படி தனது ஆசை நிறைவேறியதாக அறிந்து கொண்டார்கள்? தனது ஆசை இதுதான் என எங்கும் கூறியுள்ளார்களா? ஆக நபி(சல்) அவர்களுக்கு முன்னறிவிப்பு வந்தது என்பதை கட்டுரையாளர் ஏற்று கொள்கிறாரா? அடுத்ததாக சஹாபாக்களுக்காக இந்த வகையான முறையை கைகொண்டதாகவும் தனது ஆசையை அதன்மூலமாக நிறைவேற்றிகொண்டதாகவும் கூறுகிறார். போர் போன்று எந்த ஒரு காரணமும் இல்லாமல் என்றும் அனுபவிக்கும் ஒரு ( மூத்ஆ போன்ற ) சுகத்தை இஸ்லாத்தை ஏற்காமல் என்றும் நபிதோழர்கள் அனுபவித்து இருக்கலாம். ஏன் கல்லால் அடிவாங்கி, நட்டை துறந்து சென்று, பிறகு போரில் ரத்தம் சிந்தி பெறவேண்டும். இவரது எண்ண ஓட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் இஸ்லாம் எவ்வாறு மக்களிடம் சென்றிருக்கும். இத்தகைய லாஜிக்கான கேள்விகளுக்கு கதை ஆசிரியர் என்ன பதில் வைத்திருக்கிறார் ......
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்..........    




Tuesday, April 21, 2015

எதிர்தொடர் 11: வங்கலவியும் வேதவெளிப்பாடும்- பதில்

ஏக இறைவனின் திருபெயரால்.....
            
             இந்த முறை நமது கட்டுரையாசிரியர் இஸ்லாத்தில் உள்ள அடிமை முறையை குற்றம்சுமத்த ஒரு கட்டுரை எழுதியுள்ளார். பெண்களை அடிமைகளாக பிடித்தல் பற்றி மிக விசாலாமாக ????  விளக்கியுள்ளார்.[refer:Source]. அவர் அப்படி என்னதான் குற்றம் சுமத்துகிறார்....சற்று விரிவாக அலசுவோம்....

குற்றச்சாட்டு 1.அடிமைகள் கால்நடைகளா?


நமது பதில்: 
    இந்த கட்டுரை ஆசிரியர் அடிமைகளை கால்நடைகள் போல் இஸ்லாம் சித்தரிப்பதாக கூறுகிறார். என்னமோ அந்த காலத்தில் மற்ற இடங்களில் எல்லாம் அடிமைகள் பண்புடன் நடத்தப்பட்டது போல ஒரு பொய்த்தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார். ஆனால் அன்றைய காலத்தில் மிகவும் மோசமாக அடிமைகள் நடத்தப்பட்டனர். இதோ ரோம் சாம்ராஜியத்தில் ஒர் பார்வை. அப்யுலியஸ்( ad 120-174) தனது THE GOLDEN ASS என்ற புத்தகத்தில் பின் வருமாரு கூறுகிறார். 

Good guys, what scrawny little slaves there were! Their skin was embroidered with purple welts from their many beatings ... All of them, decked out in rags, carried brands on their foreheads, had their heads half-shaved, and wore chains around their ankles ...

Slaves in chains, relief found at Smyrna (present day İzmir, Turkey), 200 AD

அடிமைகள் எப்படி நடத்தவேண்டும் என்பது குறித்து அல்லாஹ் தனது வேதத்தில் பின்வருமாறு கட்டளையிடுகிறான்


    மேலும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடமும், உறவினர்களிடமும், அநாதைகள் மற்றும் வறியவர்களிடமும் நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப் போக்கர் மற்றும் உங்கள் ஆதிக்கத்திலுள்ள அடிமைகள் ஆகியோ ருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் தற்பெருமை கொண்டு கர்வமாக நடப்பவர்களை நேசிப்பதில்லை. 
(திருக்குர்ஆன் 4:36)

அடிமைகள் குறித்த நபி(சல்)அவர்களது கட்டளை:
      நான், அபூதர் கிஃபாரீ (ரலி) அவர்கள் ஒரு மேலங்கியை (தம் மீது) அணிந்தவர் களாக இருக்கும் நிலையில் அவர்களைக் கண்டேன். அப்போது அவர்களின் அடிமையும் ஒரு மேலங்கியை அணிந் திருந்தார். அதைப்பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூதர் (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்: நான் ஒருவரை (அவருடைய தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) இவரது தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா? என்று கேட்டார்கள். பிறகு, உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். ஆகவே, எவரு டைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கின்றாரோ அவர், தன் சகோதரருக்கு தான் உண்பதிலிருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்கள் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள் என்று கூறினார்கள்.
புஹாரி:2545
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ உங்களை மகிழ்விக்கும் அடிமைக்கு நீங்கள் உண்ணுவதில் இருந்து உண்ணக்கொடுங்கள் . நீங்கள் உடுத்துவதை அவர்களுக்கு உடுத்தகொடுங்கள். உங்களை மகிழ்விக்க வில்லை என்றால் அவர்களை விற்றுவிடுங்கள் .அல்லாஹ்வின் படைப்பின்ங்களை துன்புறுத்தாதீர்கள் “. 
நூல்: கிதாப் அல் அதப் (5161) ,அபூதாவுத்
     இந்த கட்டுரை ஆசிரியர் எதற்காக அல்லது யாருக்காக போராடுகிறார். இஸ்லாம் நாம் உண்ணுவதைப் போன்றதை அடிமைகளுக்கு வழங்க சொல்கிறது. நாம் உடுத்துவதை அவர்களுக்கு கொடுக்க கட்டளையிடுகிறது.  இப்படிதான் கால்நடைகளை மனிதன் நடத்துவானா? அவனது சுமைகளை பங்கிட வலியுறுத்தும் இஸ்லாமின் மீது இவ்வாறு அவதூறு பரப்பும் இந்த கட்டுரையாளர் ஒரு அரைவேக்காடு என்பதற்கு அடுத்த சான்று தான் நான் மேலே குறிப்பிட்டது 

குற்றச்சாட்டு 2:அடிமைகளை உற்பத்தி செய்வதா?

 நமது பதில்:

     அடிமைகளை உற்பத்தி செய்வதை இஸ்லாம் வலியுற்த்துவதாக நமது கட்டுரையாளர் உளறுகிறார். ஆனால் அடிமையாக இருக்கும் பெண் பிள்ளை பெற்றால் அந்த பெண் விடுதலை அடைந்துவிடுவார் என்பதும் அந்த குழந்தை உரிமையாளரின் வாரிசாகிவிடும் என்பதும் இந்த கூமுட்டை எழுத்தாளருக்கு தெரியவாய்ப்பில்லை. இதோ பின்வரும் ஹதிஸை பார்க்கவும். 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களும் ஓர் இளைஞன் விஷயத்தில் (நபி (ஸல்) அவர்களிடம்) வழக்காடினர்.
சஅத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த இளைஞன் என் சகோதரர் உத்பா பின் அபீவக்காஸின் மகன் ஆவான். என் சகோதரர் (தமது இறப்பின்போது) இந்த இளைஞன் தம்முடைய மகன் என்று என்னிடம் வலியுறுத்திக் கூறினார். இந்த இளைஞன் அவரது சாயலில் இருப்பதை நீங்கள் கவனியுங்கள்" என்று கூறினார்கள்.அதற்கு அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த இளைஞன் என் சகோதரன் ஆவான். என் தந்தைக்குச் சொந்தமான அடிமைப் பெண்ணுக்கு இவன் பிறந்தான்" எனக் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்விளைஞனிடம் உத்பாவின் தெளிவான சாயலைக் கண்ட பிறகும் (அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களிடம்), "அப்தே! அவன் உமக்குரியவனே. (ஒரு பெண் பெற்றெடுத்த) குழந்தை, (அப்)பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே உரியது. விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்" எனக் கூறினார்கள்.
பிறகு (தம் மனைவி சவ்தா (ரலி) அவர்களிடம்), "சவ்தாவே! இந்த இளைஞனிடத்தில் பர்தாவைப் பேணிக்கொள்" என்று கூறினார்கள். "அதற்குப் பிறகு சவ்தா (ரலி) அவர்களை அந்த இளைஞன் ஒருபோதும் கண்டதில்லை" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

முஸ்லிம்: 2888
மேலும் இவ்வாறு சுதந்திரமானவர்களை விற்பதை இஸ்லாம் தடையும் செய்தது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:


   "மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்' என்று அல்லாஹ் கூறினான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


புஹாரி 2227
       ஆக நிச்சயம் இஸ்லாம் அடிமைமுறைக்கான அனுமதியை      அடிமையை உற்பத்தி செய்யவதற்காக செய்தது என்பது அவதூறு என்பது தெளிவாக தெரிகிறது.
குற்றச்சாட்டு 3: முன்சென்ற காலங்களில் போர்கைதிகளை விற்பது இல்லாத ஒன்றா 


நமது பதில்:  
        அடிமைகளை பயன்படுத்துவிட்டு விற்பது குறித்த குற்றச்சாட்டை பதிவுசெய்கிறார். ஆனால் அன்றைய காலத்தில் பெண்போர்கைதிகளின் நிலை குறித்து சற்று விரிவாக காண்போம். போதுவாக பெண்போர்கைதிகள் பிடிக்கப்பட்ட பிறகு அவர்கள் ரோம் சாம்ராஜ்ஜியதில் எதற்காக பயன்படுத்தப்பட்டனர் என்பதை விளங்க வேண்டும். போரில் பிடிக்கப்படும் பெண்போர்கைதிகள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.  அதற்கு மூலகாரணமாக அமைந்தது அவர்களை நிர்வகிக்கும் செலவிற்கான தொகையை அவர்களே ஈட்டவேண்டும் என்ற நிர்பந்தம். ஆனால் இஸ்லாம் அடிமையாக பிடிக்கப்பட்ட பெண்போர்கைதிகளை விபச்சாராத்தில் ஈடுபடுத்துவதை கடுமையாக கண்டிக்கிறது. ஆக அடிமையாக அரசினால் நமக்கு வழங்கப்பட்ட அடிமையின் நிர்வாகச்செலவு நம்மை சார்ந்தது. ஒருவரால் நிர்வகிக்க முடியவில்லை எனும் போது அவர்களை விற்பது சிறந்த தீர்வா அல்லது விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்துவது சிறந்ததா என்பதை சிந்திக்க வேண்டும். போர்கைதிகளுடன் உறவு கொள்வது அன்றைய காலத்தில் உள்ள நடைமுறைதான். ஏன் முழுமையாக இஸ்லாம் அடிமை முறையை ஒழித்திருக்கலாம் என்ற கேள்விக்கான பதிலும் இதுதான். நமது பெண்கள் எதிரிகளால் கைப்பற்றப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் போது அடிமைகளை சிறப்பாக நடத்த இஸ்லாம் கட்டளையிடுகிறது . அன்றைய சூழலில் அடிமைமுறையை தடை செய்வது என்பது சரியான தீர்வு அல்ல. அந்த முறை அன்று இல்லை என்றால் நம்மவர்களை எதிரிகளிடம் இருந்து மீட்பது என்பது சாத்தியமற்றதாகும். மேலும் கைத்திகள் பரிமாற்றத்திற்கு பிறகு மிஞ்சியவர்களை விடுவிப்பதும் சரியான முறைஅல்ல. அவர்கள் எதிரிகளுக்கு உளவாளிகளாக மாறும் வாய்ப்பும் உள்ளது. 
      மேலும் புணர்ச்சி இடைமுறிப்பு  என்பது கருத்தடையில் அவ்வளவு வெற்றிகரமான முறையும் இல்லை. ஆனால் இவர்கூறும் ஹதீசிலும் புண்ர்ச்சி இடைமுறிப்பு செய்வதை தவிர்கவே நபி(சல்) அவர்கள் கூறியதாக இவர் குறிப்பிடுகிறார்.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் (பனூ முஸ்தலிக் போரில்) சில (அரபு) போர்க கைதிகளைப் பெற்றோம். (அவர்களிடையே இருந்த பெண் கைதிகளுடன் உடலுறவுகொள்ளவும்) 'அஸ்ல்' செய்து கொள்ளவும் விரும்பினோம். (அது குறித்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவினோம். அப்போது அவர்கள் '(இந்த அஸ்லை) நீங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள்?' என்று கேட்டுவிட்டு, 'மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்'' என்று கூறினார்கள்.

                                                          புஹாரி 6603





ஆனால் பெண்போர்கைதிகள் மனித உரிமைகள் பெரிதும் காக்கப்படுவதாக கூறப்படும் இன்றும் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை 

Donald G. Dutton, என்ற அறிஞர் தனது புத்தகமான  “The Psychology of Genocide, Massacres, and Extreme Violence: Why “Normal” People Come to Commit Atrocities.” பின்வருமாறு கூறுகிறார்.

        மேலே குறிப்பிட்டது போன்ற அநீதிகள் இன்றும் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. இஸ்லாத்தின் இந்த விஷயத்தில் கடுமையான விமர்சனம் வைக்கும் மேதாவிகளுக்கு இதை தடுக்க என்ன தீர்வு கண்டுள்ளனர்....ஒன்றுமில்லை என்பதுதான் உன்மை.


இஸ்லாம் போதிப்பது என்ன:


   இஸ்லாம் இவ்வாறு வன்புணர்வில் ஈடுபடுவதை தடுக்கிறது. வண்புணர்வு என்ற வார்த்தையை எந்த கொம்பனாலும் மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களில் இருந்து எடுத்துகாட்ட முடியாது. உன்மையில் போரில் ஈடுபடகூடியவர்கள் அனுமதி பெற்று வன்புணர்ச்சியில் ஈடுபடுதல் என்பது இல்லாத ஒன்று. இரண்டாம் உலகப்போரில் செம்படை ஸ்டாலின் அனுமதியொடுதான் ஜெர்மானிய பெண்களை வன்புணர்ச்சி செய்தனரா? ஆனால் நபி(சல்) அவர்களது காலத்தில் இவ்வாறு பிடிக்கப்பட்ட பெண்கள் காத்திருப்பு காலத்திற்கு ( சரசரியாக ஒரு மாதவிடாய்காலத்திற்கு) பிறகுதான் அடிமையாக பெற்றவரால் உறவே கொள்ள முடியும். மேலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்று இருக்க வேண்டும்.


 وَلا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلأمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ (٢٢١)



இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கத்திற்கும் மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
                                          அல் குர்ஆன்: 2: 221
       இதில் இடம்பெறும்நிகாஹ்எனும் வார்த்தை உறவு கொள்வதை அனுமதிக்கும் நடைமுறைகள் அனைத்தையும் குறிக்கும்( திருமணம் மற்றும் உரிமையாளர் அடிமை உறவு) என்பது குறிப்பிடதக்கது

     மேலும் இத்தகைய காத்திருப்பு காலத்திற்குள் இவ்வாறு பிடிக்கப்பட்ட பெண்கள் தங்களது உரிமையாளரிடம் தங்களது விடுதலை குறித்தும் தங்கள் நடத்தப்படும் விதம் குறித்தும்  விரும்பியவாறு ஒப்பந்த்தில் ஈடுபடலாம். அத்தகைய உடன்படிக்கையில் ஈடுபடுவதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.  


       திருமணம் செய்ய வசதியற்றவர்களை அல்லாஹ் தனது அருளால் தன்னிறைவு பெற்றோராக ஆக்கும் வரை அவர்கள் கற்பொழுக்கம் பேணட்டும். உங்கள் அடிமைகளில் விடுதலைப் பத்திரம் எழுதிக் கேட்போரிடம் நல்லதை நீங்கள் அறிந்தால் அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள்! கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்! யாரேனும் அவர்களை நிர்பந்தித்தால் நிர்பந்திக்கப்பட்ட அப்பெண்களை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். 

அல் குர்ஆன் 24:33
     அபூசயித் அல் குத்ரி(ரலி) நபி(சல்) அவர்கள் அவ்தாஸில் கைபற்றப்பட்ட அடிமைப் பெண்கள் குறித்து “ கர்பமுற்ற பெண்களை குழந்தை பெற்றுக்கொள்ளும் வரை நெருங்கக்கூடாது என்றும் மற்ற பெண்களை ஒரு மாதவிடாய் காலம் நெருங்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார்கள்


நூல் அபூதாவுத் 2157
        இவ்வாறு இஸ்லாம் அடிமைபெண்கள் குறித்து தெளிவான வரைவுகளை ஏற்படுத்துயுள்ளது. அடிமைகளை துன்புறுத்துவதை இஸ்லாம் தடை செய்து இருக்கிறது என்பதை முன்பே விளக்கியுள்ளோம். அடிமைகளை கண்ணத்தில் அரைவதற்கே அனுமதி இல்லை எனும் போது வன்புணர்ச்சியில் ஈடுபடுவதை இஸ்லாம் அனுமதிக்குமா? வன்புணர்ச்சி என்பதும் துன்புறுத்தலில்தான் அடங்கும் என்பது கட்டுரை ஆசிரியருக்கு தெரியவில்லை ஆக மேலே கூறப்பட்டிருக்கும் சம்பவம் வன்புணர்ச்சியல்ல.

குற்றச்சாட்டு 4: முன்பு தடுக்கப்பட்டதா?
 


நமது பதில்:




  ட்டுரை ஆசிரியர் அடுத்ததாக முன்பு இறைவன் தடை செய்த ஒன்றை அனுமதித்தது போல கதை கெட்டுகிறார். மேலும் இத்தகைய செயலை நபி(சல்) அவர்கள்தான் உருவாகினார் என்ற பொய்யான தோற்றத்தை இந்த கட்டுரையாளர் உருவாக்க நினைக்கிறார். ஆனால் ரோம் சாம்ராஜியத்தில் பெண்களும் சிறுவர்களும் இவ்வாறு போரில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டனர் என்று டசிடஸ் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். போரில் வன்புணர்ர்ச்சியில் ஈடுபடுவதை இஸ்லாம் தடைசெய்ததே மாபெரும் புரட்சி. முன்பு பெண்கள் பிடிக்கப்பட்ட போது அவர்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால் இஸ்லாம் இவ்வாறு பிடிக்கப்பட்ட பெண்களை காத்திருப்பு காலத்திற்கு பிறகே அவர்களின் முறையான அனுமதியுடன் நெருங்க அனுமதித்தது. கற்பழிப்பு தொடர்பான சட்டம் குறித்து விளக்கும் பகுதியில் உன்மையில் அடிமைகளை கற்பழிக்க இஸ்லாம் அனுமதித்ததா என்பதை காண்போம்

குற்றச்சாட்டு 5:

நமது பதில்: 

கட்டுரை ஆசிரியர் பெண்கள் அடிமைப்பெண்கள் எப்படி இவ்வாறு அனுமதித்தனர் என்று கேள்வி எழுப்புகிறார். அடிமை முறை இல்லாத ( ஆனால் அதை விட கேடாக நடத்தப்படும் போர்சிறைகள் உள்ள) 21ம் நூற்றாண்டில் இருந்து கொண்டு இந்த கேள்வியை கேட்பது அறிவு அல்ல. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்று இதை பார்ப்பது தான் அறிவுடமையாகும். இது குறித்து சாமுவேல் பெர்னார்ட் என்ற வரலாற்று அறிஞர் கூறுகையில்

    பண்டைய காலத்தில் தந்தையொடோ அல்லது கணவனுடனோ போருக்கு செல்லும் பெண்கள் திருமண நிச்சயதார்த்தத்திற்கு அணியும் ஆடை போன்று அணிந்து செல்வது வழக்கம் ஆகும். இது தாங்கள் சிறைபிடிக்கப்பட்டால் ஆக்கிரமிப்பாளர்களால் தாங்கள் ஈர்க்க பட வேண்டும் என்பதற்காக.( இதை சாமுவேல் பெர்னார்ட் அவர்கள் தனது கிழக்கத்திய பழக்க வழக்கம் என்ற நூலில்(vol 2 , page no 79,Oriental Customs: Or, an Illustration of the Sacred Scriptures, 1807) ஒவிட் என்ற கிபி 17ல் வாழ்ந்த கவிஞரின் கூற்றாக குறிப்பிடுகிறார்)  

மேலும் தவறானவர்களிடம் பெண்கள் தாங்கள் விழுவதை தவிர்ப்பதற்கு அவர்களும் இதை ஏற்றுக்கொண்டனர்அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் போன்ற நயவஞ்சகர்களிடம் மாட்டும் அடிமை பெண்களின் நிலை மோசமானதாக இருந்தது.


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது

     (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல் லாஹ் பின் உபை பின் சலூல், தன் அடிமைப் பெண்ணிடம், "நீ சென்று விபசாரத்தில் ஈடுபட்டு எதையேனும் ஈட்டி வா'' என்று சொன்னான். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபசாரத்துக்கு நிர்பந்திக்காதீர்கள். யாரேனும் அவர்களை நிர்பந்தித் தால் நிர்பந்திக்கப்பட்ட அப்பெண்களை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' (24:33) எனும் வசனத்தை அருளினான்.
முஸ்லிம்  5763 
       ஆக பெண்கள் இதை அனுமதிப்பது பண்டைய வழக்கம் என்பதற்கு ஒவிட்ன் குறிப்பு போதுமானது. இதன் காரணத்தால் தான் நபி(சல்) அவர்களின் அனைத்து நடை உடை பாவணையையும் பதிவு செய்தவர்களின் குறிப்புகளில் இருந்து இவ்வாறு குற்றம் சாட்டுவோர்களால் கற்பழிப்பு குறித்து ஒரு வரலாற்று சான்றையும் கொண்டுவர இயலவில்லை. மேலும் நபி(சல்) அவர்கள் கற்பழிக்க கட்டளை இட்டார்கள் என்பது குறித்து ஒரு பலவீனமான் இட்டுகட்டப்பட்ட ஒரு செய்தியையும் இந்த அறிஞரால் காட்ட முடியவில்லை. மேலும் கற்பழிப்பு என்ற வார்த்தையை கூட போர்தொடர்பான செய்திகளில் காட்ட முடியவில்லை. ஏன் யுதர்களின் செய்திகளை அப்படியே பதிவு செய்த இப்னு இஸாக்கின் வரலாற்று நூலில் இருந்து கூட காட்ட முடியவில்லை. அந்த காலத்து யுதர்கள் சொல்ல மறந்த அல்லது மறுத்த ஒரு நிகழ்வை நபி(சல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று கூறுவது என்பது அவதூறு என்பதில் எள்முனையளவும் சந்தேகம் இல்லை

6.அல்லாஹ்வின் தீர்ப்பும் கட்டுரை ஆசிரியரின் அரைவேக்காட்டுதனமும்


நமது பதில்: 



இவர் புரிதலின் தவறால் ஏற்பட்ட மிகை கற்ப்பனைதான் இது. போரில் பிடிக்கப்பட்டவர்கள் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று, பிறகு அவரது உறவினர்களால் மீட்கப்படாமல் அல்லது உறவினர்கள் இல்லாமல் விடப்பட்ட பெண்கள் தங்களது உரிமையாளருடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு பிறகு தான் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரிமையாளர் அடிமைபெண் உறவு ஏற்படும் என்ற இஸ்லாம் கூறும் சட்ட வரையறை ஒன்றுமே தெரியாத கூமுட்டை எழுத்தாளர் போலும்...! 



குற்றச்சாட்டு 7: அடிமைகளுடன் உறவு கொள்வது விபச்சாரமா?



நமது பதில்:

     வன்கலவிக்கு அடிமைபெண்கள் உடபடுத்தப்பட வில்லை என்பதை முன்பே வரலாற்று குறிப்புகளுடன் விளக்கியுள்ளோம். அடிமையுடன் கொள்ளும் உறவை விபச்சாரத்துடன் ஆசிரியர் ஒப்பிடுகிறார். விபச்சாரத்திற்கும் முறையான உறவுக்கும் வித்தியாசம் தெரியாத முடர். உறவு கொள்வது மட்டும்தான் விபச்சாரத்தை வரையறுக்கும் காரணி என்றால் திருமணமும் விபச்சாரம் ஆகிவிடும். ஆனால் விபச்சாரத்தை முறையான உறவில் இருந்து பிரிப்பது அந்த பெண்ணுக்கு பொறுப்பாளியாக இருப்பவரின் நிலைதான். முறையான உறவில் பெண்ணின் குழந்தை உரிமையாளரின் வாரிசாக ஆகிவிடும். இப்படிதான் விபச்சாரத்தில் நடைபெறுமா? ஒருவேளை கட்டுரை ஆசிரியர் இத்தகைய விபச்சார முறையை உருவாக்கி உள்ளாரா.  



8.உன்மையை உணரா மூடர்: கற்பழிப்புக்கு இஸ்லாத்தில் என்ன தண்டனை:




நமது மறுப்பு: 
  

கற்பழிப்புக்கான தண்டனையை காட்ட முடியாது என்று தன்னுடைய அறியாமையை கட்டுரையாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். இதோ



      வாயில் இப்னு ஹஜ்ர்(ரலி) அவர்கள் கூறியதாவது, “நபி(சல்) அவர்களது காலத்தில் ஒரு பெண் தொழுகைக்காக வெளியே சென்ற போது ஒரு மனிதர் அவரை தாக்கி வன்புணர்ச்சி செய்து விட்டார். அந்த பெண் கூச்சலிட அந்த மனிதர் ஓடி விட்டார். அப்போது அங்கு வந்த ஒருவரிடம் அந்த பெண் “இந்த நபர் இன்னின்னவாறு செய்து விட்டார் என்று விவரிக்க , முஹாஜிர்களின்  கூட்டம் ஒன்று அங்கு வந்தது. அவர்களிடம் அப்பெண் அதை விவரிக்க அவர்கள் அவ்வாறு செய்தர் என்று கருதிய நபரை நபி(சல்) அவர்களிடம் இழுத்து வந்தனர். நபி(சல்) அவர்கள் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்க முற்பட்ட போது உன்மையில் அவரை வன்புணர்ச்சி செய்தவர் எழுந்து “நான் தான் அவரை இவ்வாறு செய்தவர் என்று கூற, நபி(சல்) அவர்கள் தவறாக அழைத்துவர பட்டவரை விடுவித்து சில இனிமையான சொற்களை கூறினார்கள். பிறகு அந்த பெண்ணிடம், “அல்லாஹ் உனக்கு மன்னிப்பை வழங்கிவிட்டான்” என்று நபி(சல்) அவர்கள் கூறினார்கள். குற்றமிழைத்தவரை கல்லெறிந்து கொல்ல உத்தரவிட்டார்கள்.....

நூல்:அல் கிதாப் அல் ஹத்(4379), அபூதாவூத் , அல் கிதாப் அல் ஹத்(1454), திர்மிதி.

          இதில் அடிமைபெண்கள் அடங்கமாட்டார்கள் என்று கூறலாம். ஆனால் இஸ்லாம் ஒரு சட்டதை கூறிவிட்டால் அது அனைவருக்கும் பொறுந்தும் தனிச்சலுகை குறிப்பிடப்படாத வரை. குற்றவியல் சட்டங்கள் அனைத்தும் அப்படிதான் உள்ளது விபச்சாரத்தை தவிர. ஆக கற்பழிப்புக்கான தண்டனை அடிமை சுதந்திரமானவர் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் பொதுவானது என்பதற்கு மேலே கூறிய ஹதீஸே போதுமானது. இனி மறுக்க கூடியவர் அடிமைகளுக்கான தனி சலுகைகான ஆதாரத்தை காட்ட வேண்டும் ஆகவேதான் பின் வந்த மாலிக் பின் அனஸ் போன்ற அறிஞர்கள் நான் மேலே கூறிய கருத்தில் உள்ளனர். முவத்தாவில் பின் வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

யஹ்யா மாலிக்(ரஹ்) அவர்களிடம் செவியுற்றதாக கூறினார்:
நம் சமுகத்தில் ஒரு பெண் வன்புணர்ச்சிக்கு ஆளானால் , வன்புணர்ச்சிக்கு ஆளான பெண் சுதந்திரமானவராக இருந்தாலும், அடிமையாக இருந்தாலும் வன்புணர்ச்சியில் ஈடுபட்டவற்கு ஹத் நிறைவேற்றப்படும்
         பாடம்: வன்புணர்ச்சிக்கு ஆளான பெண் குறித்த தீர்ப்பு, தீர்ப்புகள்

குற்றச்சாட்டு 10: எதற்கு அஞ்சினர் சஹாபாக்கள்:

நமது பதில்:

பெண்களின் கணவன்மார்கள் இருந்ததால் நபிதோழர்கள் அஞ்சியதாக கூறுகிறார். ஏன் இதற்கு முன்பு பெண்கள் கைபற்றபட்ட போது எப்படி நடத்தப்பட்டனர். இஸ்லாமை மக்களுக்கு நபி(சல்) அவர்கள் மக்களுக்கு கூறுவதற்கு முன்பு போரில் வெற்றி பெற்றவுடனே வன்புணர்ச்சியில் போர்வீர்ரகள் ஈடுபட்டதாக கூறுகிறது வரலாறு. மறுபடியும் இவர் தவாறான புரிதலைதான் வெளிப்படுத்துகிறார். கணவன்மார்களின் முன்னிலை என்பது அப்பட்டமானது இந்த வார்த்தை அமைப்புடன் ஒரு செய்தியை இந்த கட்டுரை ஆசிரியர் காட்டட்டுமே பார்க்கலாம். மேலும் அவர்களது கணவன்மார்கள் இணைவைப்பாளர்களாக இருந்ததால் என்பதுதான் அந்த ஹதீஸின் சாரமே.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரின்போது (ஹவாஸின் குலத்தார் வசிக்கும்) "அவ்தாஸ்" என்ற பகுதிக்கு ஒரு படையை அனுப்பினார்கள். அவர்கள் எதிரிகளை எதிர்கொண்டு, போரிட்டு அவர்களை வெற்றி கொண்டனர். (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) அவர்களின் சில பெண்களையும் அவர்கள் சிறை பிடித்தனர். (போரில் சிறை பிடிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட) அப்பெண்களுக்கு இணைவைப்பாளர்களான கணவர்கள் இருக்கிறார்கள் என்பதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் அப்பெண்களுடன் தாம்பத்திய உறவு கொள்வதைத் தவறாகக் கருதினர். இது தொடர்பாகவே பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்:

மேலும், கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், போரில்) உங்களுக்கு உடைமையாகிவிட்ட பெண்களைத் தவிர. (இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டமாகும். (4:24) அதாவது, (போரில் சிறை பிடிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட) அப்பெண்களின் காத்திருப்பு (இத்தா)க் காலம் முடிந்துவிட்டால்,அவர்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவர். (அவர்களுடன் நீங்கள் தாம்பத்திய உறவு கொள்ளலாம்.) 
முஸ்லிம் :2885.
      எப்போது பெண்கள் அடிமையாக பிடிக்கப்பட்டுவிட்டாரகளோ அப்போதெ அப்பெண்ணின் திருமணம் ரத்தாகிவிடும் என்று இஸ்லாம் கூறுகிறது. இது தான் சமுகத்தில் தீமை பரவாமல் இருக்க சரியான வழி. கணவன் எங்கோ இருக்கிறார். அவர் அந்த பெண்ணை மீட்கவும் இல்லை எனும்  போது அந்த திருமணம் ரத்து செய்யப்படுகிறது. இதில் எந்த தவறும் இல்லை. அவர்கள் தங்களின் வழியை தேர்வு செய்யும் முழு அதிகாரம் அல்லவா அது. அவர்கள் விரும்பினால் விடுதலை பத்திரம் பெற்று கொள்ளலாம். அல்லது தனது உரிமையாளரை வாழ்கை துணையாக ஆக்கிக் கொள்ளலாம். மேலும் அடிமையின் உரிமையாளர்களை அடிமைகளுக்கு திருமணம் செய்விக்கவும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். 
அல் குர்ஆன்: 24:32.
      இந்த ஆசிரியர் போன்ற மனிதாபிமானமற்றவர்கள் இத்தகைய இறை தீர்ப்பை ஏற்கமுடியவில்லை என்பதற்கு கால்புணர்ச்சி என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்.........அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்