பக்கங்கள் செல்ல

Thursday, April 23, 2015

இஸ்லாத்தில் கூறப்பட்டது போல், ஆண்கள் போன்று பெண்களும் ஓரே நேரத்தில் பலதார திருமணம் செய்தால் என்ன நடக்கும்?? ஓர் சிறிய கற்பனை


பகுத்தறிவுவாதிகள், பெண்ணியவாதிகள் என தம்மை அழைத்துக்கொள்பவர்கள் இஸ்லாத்தில் ஆண்கள் செய்யும் பலதார திருமண முறையை ஆணாதிக்க முறை, பெண்ணடிமைத்தனம் என்று பலவாறாக கூறுவார்கள், இஸ்லாம் பலதார திருமண முறையை வலியுறுத்தி கூறவில்லை. தேவையேற்பட்டால் அவ்வாறு செய்யலாம் எனக்கூறுகின்றது. பெண்கள் அதிகம் உள்ள ஊர்களில் இதனை சாத்தியமான நடைமுறை ஒன்றாக கூறலாம். ஆனால் அண்மையில் முன்னாள் முஸ்லிம் தன்னை அழைத்துக்கொள்ளும் தஸ்லிமா நஸ்ரின் என்னும் பகுத்தறிவாதி நானும் ஆண்கள் போல் ஓரே நேரத்தில் 4 திருமணம் செய்வேன். ஆணும் பெண்ணும் சமம் எனக்கூறினார். இதே கருத்தையே பல பகுத்தறிவாதிகளும் இன்று கூறி வருகின்றனர். இது சாத்தியமானல் என்ன நடக்கும் ஒரு சிறு கற்பனை!

நம்ம ஆளுங்க எல்லாருக்கும் பொதுவா சில விஷயங்கள சொல்ல வேண்டியது இருக்கு. நம்ம சகோதரர்கள் பல பேருக்கு அடிக்கடி கண்ல படுற ஒரே விஷயம், இந்த முஸ்லிம் பசங்க மட்டும் 4 பொண்ணு 7 பொண்ணுன்னு நிக்காஹ் செஞ்சுக்குவோம்னு சொல்றாங்க, ஆனா பாவம் முஸ்லிம் புள்ளைங்கள மட்டும் ஒரே நேரத்துல நாலு நிக்காஹ் பண்ணிக்க விட மாட்டேங்குறாங்க. ஏன் இந்த அநியாயம், எதற்கு இந்த ஆணாதிக்கம், இந்த அநியாத்த தட்டிக்கேக்க ஆளே இல்லையா? அப்டின்னு கேட்டுட்டே இருக்காங்க.

இதுக்கெல்லாம் தனியா யாரும் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. வெறும் இளங்கலைப் பட்டம் வாங்கிட்டு, 24 வயசுல மாசம் 15-ம் தேதிக்கு மேல அப்பா காச எதிர்பாக்குற என்ன மாதிரி சின்னப் பையனுக்கு புரிஞ்ச சாதாரணமான விஷயம் ஏன் இங்க இருக்குற பெரியவங்களுக்கு புரிய மாட்டேங்குதுன்னு தெரியலைங்க.

சரி இப்போ விஷயத்துக்கு வருவோம்....

ஒரு ஆண் 4 மனைவிய கட்டிக்கிறது ஒன்னும் லேசு பட்ட காரியம் இல்லைங்க. அதுக்கு இஸ்லாம் நெறைய கட்டுப்பாடுகளை விதிச்சிருக்கு. முதல்ல அவனோட எல்லா மனைவிகளுக்கும் சம உரிமை குடுக்கணும். அவங்க தலைக்கு தேய்க்கிற எண்ணைல இருந்து கால்ல போட்டு நடக்குற செருப்பு வரைக்கும் அவனால வாங்கி குடுக்க முடியுற அளவுக்கு வசதி இருக்கணும்.

அந்த மனைவிகளுக்கு கொழந்த பொறந்தா அவங்கள ஒரே மாதிரி பாதுகாத்து பராமரிச்சு வளக்குற பொறுப்பு இருக்கணும்.

இப்பிடி A-Zநு பெரிய லிஸ்டே இருக்கு. இதுக்கு உட்பட்டு தான் 4 இல்லனா 5 திருமணம்.

சரி, ஆம்பளைங்க நீங்க மட்டும் இவ்ளோ திருமணம் பண்ணிக்கிறீங்களேப்பா... அந்த பொண்ணுங்களுக்கும் இந்த உரிமையை குடுக்கலாமேனு நீங்க கேக்கலாம். அப்டி பொண்ணுங்க 5 - 6 நிக்காஹ் பண்ணா என்ன ஆகும்னு கொஞ்சம் அலசி, புழிஞ்சு ஆராயணும்.

ஒரு பொண்ணு திருமணம் பண்றது வெறும் உடல் உறவுக்குனு சொன்ன, அந்த பொண்ணு எவ்ளோ பேர வேணாலும் கட்டிக்கலாம். ஏன்னா, படுக்கைய பகிர்ந்துக்குறது பெரிய விஷயமே இல்ல (பச்சையா சொன்னா, ஒரே நேரத்துல பல பேர் கூட உறவு கொள்ள முடியும்).

ஆனா திருமணம் வெறும் கட்டில் தொடர்பானது இல்லையே!!!

1. நம்ம பையனுக்கு நாலு சம்சாரம் இருக்குனு வச்சுக்குவோம், அவங்க நாலு பேரும் நம்ம பையனுக்காக விடிஞ்சும் விடியாம ஆளுக்கொரு டிபன் செஞ்சு மூஞ்சி முன்னால நீட்டுவாங்க. நம்ம பயலும் அத கொஞ்சம் அப்டியே அட்ஜஸ்ட் பண்ணி சாப்ட்டு, பாத்ரூம்ல போய் அத ரிலீஸ் பண்ணிருவான்.

இதுவே ஒரு பொண்ணு 4 பசங்கள கட்டிக்கிட்டா அவனுங்க நாலு பேர்ல ஒவ்வொருத்தனுக்கும் புடிச்ச சாப்பாட செஞ்சு முடிக்கவே காலைல மணி 10 ஆகிடும். அப்பறம் ஆளுக்கொரு அற விட்டுட்டு ஆஃபீஸ் கெளம்பி போயிருவானுங்க. நம்ம புள்ள ரொம்ப பாவம்.

2. நம்ம பையன் ஒரே நேரத்துல 4 சேலைய வாங்கிட்டு வந்து, ஒவ்வொரு சம்சாரத்துக்கும் ஒவ்வொரு சேலைய குடுத்து கட்டிட்டு வாங்கம்மான்னா வேல முடிஞ்சுது.

ஆனா நம்ம புள்ளைக்கு அவளோட நாலு புருசனும் ஆளாளுக்கு ஒரே நேரத்துல சேலை வாங்கிக் குடுத்து கட்டிட்டு வாம்மான்னா... அந்தப் புள்ள பாவம் எதத் தான் கட்டிட்டு வரும்? வேணும்னா 4 சேலையையும் ஒன்னாக் கட்டித் தூக்கு போட்டுக்கலாம்.

3. நம்ம பய ஒரு கார் வாங்குறான்னு வச்சுக்குவோம். ஒரே கார்ல நம்ம பய டிரைவரா உக்காந்துட்டான்னா அவன் சம்சாரம் ஒவ்வொன்னும் அதுங்களுக்குள்ள சரி செஞ்சிகிட்டு, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நாள் முன் சீட்ல உக்காருவாங்க, ஆனா எப்போவுமே எல்லா சம்சாரமும் நம்ம பய கூடவே சுத்துவாங்க.

நம்ம புள்ளையோட புருசனுங்க நாலு பேரும் ஆளுக்கொரு கார வாங்கி அதுல அந்த புள்ளையக் கூட்டிட்டுப் போகணும்னா நம்ம புள்ள எப்போ ஒவ்வொருத்தன் கூட போகும்? எப்போ எல்லாப் புருஷன் கூடையும் சேர்ந்து ஊர் சுத்தப் போவும்? அதுக்கு பதிலா அந்தக் கார் டயர்லயே தலைய குடுத்துறலாம்னு முடிவு பண்ணிரும்.

4. நம்ம பய ஒரு மாசத்துக்கு ஒரு மாமியார் வீட்டுக்குப் போனா கூட, அவனால மாமியார் வீட்ட சமாளிக்கிறதோ, மாமியார் வீட்ல இருக்குறவங்களுக்கு நம்ம பயல சமாளிக்கறதோ பெரிய விஷயமே இல்ல. ஏன்னா அடுத்தடுத்த மாசம் வேற வேற மாமியார் வீடு...

ஆனா, நம்ம புள்ளையோட புருசனுங்க அத்தன பேரும் ஒரே நாள்ல மாமியார் வீட்டுக்குப் போனா... மாமியார் வீட்டு நெலம என்ன ஆகும்?

5. நம்ம பய அவனோட சம்சாரத்துல யாரையாவது கர்ப்பமாக்கிட்டான்னு வச்சிக்குவோம், ஒடனே அவன் சம்சாரம் எல்லாமே ஆளுக்கொரு புளிப்பு மிட்டாய் வேணும்னு கேக்குற மாதிரி ஆளுக்கொரு கொழந்த வேணும்னு கேக்குங்க. நம்ம பயலும் (ஆம்பள ஆப் தி வேர்ல்டு) அத்தன சம்சாரத்துக்கும் வஞ்சகம் இல்லாம விருந்து வெச்சிருவான்.

நம்ம புள்ளையோட நெலம?!?
ஆளுக்கொரு கொழந்த அட்டட்டைம்ல வேணும்னு 4 பேரும் கேட்டானுங்கனு வைங்க, நம்ம புள்ளையோட போட்டோவ அஞ்சலி போஸ்டர்ல தான் பாக்கணும்.

6. இப்போதான் க்ளைமாக்ஸ்: நம்ம பையனோட அத்தன சம்சாரத்துக்கும் ஒவ்வொன்னோ, ரெண்ரெண்டோ கொழந்த பொறக்குதுன்னு வைங்க, அந்த கொழந்தைக்கு பிறப்பு கொடுத்தவ தான் அம்மா, அந்த எல்லாக் கொழந்தைக்கும் இவன் தான் அப்பான்னு ஊருக்கே தெரியும்.

ஆனா... நம்ம புள்ளைக்கு ஒரு கொழந்த பொறந்தாக் கூட அதுக்கு அப்பன் யாருன்னு சண்ட வந்துரும். அப்பறம் அந்த கொழந்த அப்பன் பேர் தெரியாமையே வளரும்.

இப்போ சொல்லுங்க மக்களே, ஆம்பள மட்டும் ஏன் நெறையா கல்யாணம் பண்றான்? பொண்ணு ஏன் நெறையா கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு யாராச்சும் கேபீங்க?

(நம்மளப் படைச்ச இறைவனுக்கு நம்மள விட அதிகமாவே தெரியும் சகோதரர்களே)

இத எல்லாம் புரிஞ்சுக்க கொஞ்சம் common sense இருந்தாலே போதும்.

நன்றி: Abdul Rahman Crafter (சுட்டது 😜)

No comments:

Post a Comment