இதோ ஒரு உண்மைச் சம்பவம்:
அங்கெ உள்ள அனைத்து மக்களும் அவர்களுக்காக தொழுகை நடத்துகின்றனர். எப்படி அடக்கம் செய்கிறார்கள் என்பதைக் காண நானும் பின்தொடர்ந்தேன்.
தொழுகை முடிந்தவுடன் நான்கு ஜனாஸாக்கள் கொண்டு செல்லப்பட்டன. அந்த ஜனாஸாக்களை சுமந்து செல்ல கடும் போட்டி நடக்கின்றது. ஒவ்வொருவருக்குமென தனியாக குறிப்பிட்ட இடம் இல்லை. எங்கே காலியாக உள்ளதோ அங்கெ அடக்கம் செய்கின்றனர்.
அடக்கம் செய்யும் இடத்தில் பொறுமையாக நின்று ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து, இறுதியில் அமைதியாக கலைந்து செல்கின்றனர்.

பொதுவாக இறந்தவரின் சமூக, மத அந்தஸ்த்தை வைத்து அவரின் இறப்பு தொடர்பான காரியங்களும், அடக்கத்தலங்களும் வேறுபடுவது தான் உலகில் நாம் காணும் ஒன்று ஆனால் அரசன் முதல் ஆண்டி வரை எல்லோருக்கும் ஒரே முறையை செயல்படுத்தி வருவது இஸ்லாம் மட்டுமே.
நபியின் காலம் முதல் இன்று வரை இப்படித்தான் நடக்கின்றது. இஸ்லாம் கூறுவது வெறும் வாரத்தை ஜாலம் அல்ல. செயல்முறை விளக்கம் அதனால் தான் மிகவும் குறுகிய காலத்தில் அதிகமான மக்களை வென்றெடுத்தது, வென்று வருகின்றது மேலும் வென்றெடுக்கும்.