பக்கங்கள் செல்ல

Showing posts with label மஹர். Show all posts
Showing posts with label மஹர். Show all posts

Thursday, March 19, 2020

இஸ்லாமிய நிக்காஹ்வின் திருமணக்கொடை (மஹர்) விமர்சனமும் விளக்கமும்

﷽‎

              சில காலமாக சில இந்துத்துவா கும்பலும், கிறித்தவ மிசனரிகளும் இஸ்லாமிய திருமணத்தில் வழங்கப்படும் மஹர் குறித்து விமர்சனம் செய்து வருகின்றன. அது பெண்ணின் யோனியை உபயோகிக்க விதிக்கப்படும் தொகை என கூறி அதை விமர்சித்து வருகின்றன. இஸ்லாமிய திருமண முறையில் இடம் பெறும் மஹர் குறித்து பார்ப்பதற்கு முன்பு திருமணம் என்றால் என்ன என்பதையே இவர்களுக்கு விளக்க வேண்டிய அவல நிலை இங்கு ஏற்பட்டுள்ளது என்பதையே இவர்களின் இந்த அறிவீன வாதம் உணர்த்துகிறது.

திருமணம் ஏன் ?
                 ஒரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது என்ன? மனித வாழ்வில் திருமணம் என்பது சட்டபூர்வமாக பாலியல் இச்சையை தீர்த்து கொள்ளும் ஒரு வடிகால்.அதன் பலனையும் , நஷ்டத்தையும் சட்டபூர்வமாக அனுமதிக்கும் ஒரு முறைதான் திருமணம். இவ்வாறு திருமணம்( அதாவது பாலியல் தேவையை பூர்த்தி செய்வதற்கான அனுமதியை பெற) செய்ய ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு நடைமுறையை கொண்டுள்ளது. சிலர் தாலி கட்டுகிறார்கள், சிலர் மோதிரம் மாற்றுகிறார்கள், சிலர் பதிவு அலுவலகத்தில் பதிந்து நடைமுறையை பின்பற்றி திருமணம் செய்கிறார்கள்.....இஸ்லாமிய மஹர் எனும் முறைமையை கேலி செய்யும் கூமுட்டைகளின் வார்த்தையில் சொல்வதாக இருந்தால் பாலியல் சுகத்தை அடைய தாலி கட்டுகிறார்கள்....விருந்து வைக்கிறார்கள்,... மோதிரம் மாற்றுகிறார்கள்..... இன்னும் இவர்களது பாசையில் சொல்வதாக இருந்தால் மந்திரம் ஓதி ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்த கூட்டி கொடுக்கிறார் ஐயர்.  முதலிரவுக்கு செய்யப்படும் முறைமை என அனைத்தும்.... திருமணத்தின் ஒவ்வொரு பரிமானமும் இருவரின் பாலியல் தேவையை பூர்த்தி செய்ய அனுமதிக்கும் முறைமையே.

        இத்தகைய ஒரு நடைமுறைதான் இஸ்லாமிய திருமணத்தில் நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்படும் பரிசு அல்லது கொடை என்ற இந்த மஹர் ஆகும்.ஆனால் இஸ்லாம் இதை மூடி மறைத்து சொல்லாமல் நாம் மேலே குறிபிட்டது போல பட்டவர்த்தணமாய் சொல்கிறது அவ்வளவே...ஆக இனி மஹர் குறித்த இஸ்லாமிய பார்வை என்ன என்பதையும் பார்ப்போம்..

இஸ்லாமில் மஹர் என்றால் என்ன??

             அல்லாஹ் தனது வேதத்தில் இன்று வழக்கத்தில் இருக்கும் மஹர் குறித்து குறிப்பிடும் போது எந்த இடத்திலும் அதை மஹர் (கூலி) என்று குறிப்பிடவில்லை. குர்ஆன் 4:4 இல் குறிப்பிடும் போது صَدُقَا - தர்மம் என்று கூறுகிறான்

وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுட னும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!(திருக்குர்ஆன் 4:4)

                     அது போல குர்ஆன் 4:24, 5:5, 60:10 குறிப்பிடும் போது أُجُورَ - பரிசு என்று கூறுகிறான்.

وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۖ كِتَابَ اللَّهِ عَلَيْكُمْ ۚ وَأُحِلَّ لَكُم مَّا وَرَاءَ ذَٰلِكُمْ أَن تَبْتَغُوا بِأَمْوَالِكُم مُّحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ ۚ فَمَا اسْتَمْتَعْتُم بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُم بِهِ مِن بَعْدِ الْفَرِيضَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا

24. உங்கள் அடிமைப் பெண்களைத்107 தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை108 கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.(திருக்குர்ஆன் 4:24)
 
الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ ۖ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَّكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ ۖ وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ ۗ وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

5. தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின்27 உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.137 உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட27 கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை108 வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.138 தனது நம்பிக்கையை (இறை)மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் நட்டமடைந்தவராக இருப்பார்.(திருக்குர்ஆன் 5:5)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ ۖ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ ۖ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ ۖ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ ۖ وَآتُوهُم مَّا أَنفَقُوا ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ ۚ وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ وَاسْأَلُوا مَا أَنفَقْتُمْ وَلْيَسْأَلُوا مَا أَنفَقُوا ۚ ذَٰلِكُمْ حُكْمُ اللَّهِ ۖ يَحْكُمُ بَيْنَكُمْ ۚ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
10. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத்460 செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏகஇறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்.91 அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை108 நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏகஇறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.(திருக்குர்ஆன் 60:10)

                     ஆக மேற்குறிபிட்ட வசனங்களை வைத்துப்பார்க்கும் போது மஹர் அல்லது உஜ்ர என்பது திருமணத்தில் பின்பற்றப்படும் ஒரு நிபந்தனை. பளிச்சென்று சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் தனது பாலியல் இச்சையை மேற்கொள்ள பெறும் அனுமதிக்காக நிறைவேற்றும் நிபந்தனைகளில் ஒன்று....

அதனால்தான் பின்வரும் ஹதீஸ் இப்படி கூறுகிறது

புகாரி 5350. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
                      சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த அந்தத் தம்பதியரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர்’ என்று கூறிவிட்டு, (கணவரான உவைமிரைப் பார்த்து), ‘இனி அவளின் மீது உமக்கு எந்த அதிகாரமும் கிடையாது’ என்று கூறினார்கள்.
     அதற்கு அவர், ‘இறைத்தூதர் அவர்களே! (அவளுக்கு நான் மணக்கொடையாக அளித்திருந்த) என்னுடைய பொருள் (என்னாவது)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘உமக்கு (அந்த)ப் பொருள் கிடைக்காது. நீர் அவளின் மீது உண்மை(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், அவளுடைய கற்பை நீர் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். நீர் அவளின் மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், (அவளை அனுபவித்துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தினால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகுதொலைவில் உள்ளது’ என்று கூறினார்கள். 

மேலும் இந்த அனுமதியைப்பெற இன்னும் அதிகப்படியான நிபந்தனைகளை விதிக்கும் அதிகாரம் பெண்ணுக்கு உண்டு அதைத்தான் பதிவாளர் குறிப்பிடும் நஸயீ 3282 குறிப்பிடுகிறது

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ تَمِيمٍ، قَالَ سَمِعْتُ حَجَّاجًا، يَقُولُ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ أَبَا الْخَيْرِ، حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ "إِنَّ أَحَقَّ الشُّرُوطِ أَنْ يُوَفَّى بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ"
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளே ஆகும்.இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல் : நஸயீ 3282)

           ஆக மேற்குறிபிட்ட ஹதீஸ் தெளிவாக ஒன்றை கூறுகிறது அதாவது நிக்காஹ் (பாலுறவு அனுமதி)என்பதற்கு பல நிபந்தனைகளை விதிக்கலாம்...அதில் மஹர் என்பதும் ஒன்று......அதனால்தான் الشُّرُوطِ - நிபந்தனைகள் என்ற பன்மை சொல் ஹதீஸில் பயன்படுத்தப்படுவதை பார்க்க முடிகிறது.

            மேலும் இவர்கள் கூறுவது போன்று இருந்தால் அதாவது மஹர் என்பது பாலுறவுக்கான கூலி இல்லை என்பதால்தான் பெண்கள் குலாஉ அதாவது விவாக முறிவு கோரும் போது பெற்ற மஹரை திருப்பி செலுத்த வேண்டும் என்ற கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது, இதோ பின் வரும் ஹதீஸ் அதை உறுதி செய்கிறது

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
          ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்' என்று கூறினார். அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள் அவர், 'ஆம் (தந்து விடுகிறேன்)' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), 'தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!' என்று கூறினார்கள். (புகாரி : 5273.)

       ஆக மேற்குறிபிட்ட செய்தி தெளிவாக உணர்த்துவது ஒன்றைத்தான் அதாவது மஹர் என்பது நிபந்தனைதான் அது உறவு கொள்வதற்கான கூலி அல்ல....எப்படி தங்கத்தால் ஆன குறிபிட்ட டிசைன் தாலி கட்டுவது நிபந்தனையோ அது போல...அப்படி கூலியாக இருந்தால் கூலி கழிக்கப்பட்ட மஹ்ரை அல்லவா திருப்பி செலுத்த கட்டளையிடப்பட்டிருக்கும்.

       மஹர் என்பது எப்படி ஒவ்வொரு திருமணத்திலும் (அதாவது உறவு கொள்ள அனுமதிக்கும் விழாவிலும்) நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதோ, அது போன்ற ஒன்றுதான் . அதனால்தான் இரும்பு மோதிரத்தையாவது மணக்கொடையாக வழங்க அறிவுறுத்தப்பட்ட நிகழ்வும் மணவாளர் அதுவும் இல்லை எனக்கூறி திருகுர்ஆனின் சில வசனங்களுக்காக திருமணம் செய்யப்பட்ட சம்பவங்களை காணமுடியும் ( முஸ்லீம் 2785)...

       மேலும் இஸ்லாமிய நடைமுறையில் திருமணத்திற்காக கோரப்படும் நிபந்தனைகள் அனைத்தும் பெண்ணின் பாதுக்காப்பை அடிப்படையாக கொண்டது. அதில் பெண்களுக்கான முழு சுதந்திரத்தை இஸ்லாம் வழங்குகிறது.

       இதற்கு மேலும் திருமணம் என்பது சாம்பிராணி போடுவதற்கான அனுமதி நிகழ்வு என்று யாராவது வாதிட்டால் பெண்களே சிந்தித்துக்கொள்ளுங்கள்..... உங்கள் வாழ்கையை காத்துக்கொள்ளுங்கள்.

Monday, April 20, 2015

முஸ்லிம் பெண்கள் விவாகரத்து சட்டமா? 125 சி.ஆர்.பி.சி சட்டமா?


=========================================================
Which one cmpatiple to apply on muslim women's maintanace Isuue 
CRPC 125 Act? or The Muslim women (Protection of Rights on Divorce) Act 1986?
========================================================
ஒரு கணவர் மனைவியை விவாகரத்து செய்த பின் அவள் மறுமணம் செய்யும் வரை அல்லது மரணிக்கும்வரை ஜீவனாம்சம் தரச் சொல்கிறது சி.ஆர்.பி.சி. 125வது பிரிவு. இதை வைத்தே இந்திய நீதிமன்றங்கள் முஸ்லிம் பெண்களின் விவாகரத்து வழக்கிலும் தீர்ப்பளிக் கின்றன என்றாலும், முஸ்லிம் பெண்களின் விவாக ரத்து வழக்கில் வெவ்வேறு விதமான (செய்திக் கட்டுரையில் கண்ட மும்பை குடும்பநல நீதிமன்றத் தைப்போல) தீர்ப்புகளையும் பல்வேறு காலகட்டத் தில் அவை வழங்கியிருக்கின்றன.

1973ல் இயற்றப்பட்ட சி.ஆர்.பி.சி. 125 என்கிற ஜீவனாம்ச சட்டம் அனைத்து இந்தியக் குடிமக்க ளுக்குமான பொதுவான சட்டமாகும். இது எவர் மீதும் விதிக்கப்படும் சட்ட அந்தஸ்து கொண்ட தாக இருந்தாலும், முஸ்லிம் தனியார் சட்டத் தையும் இது விட்டு வைக்கவில்லை. முஸ்லிம் தனியார் சட்டத்தின் மீது மேலாண்மை செய்யும் வகையில் நீதிமன்றங்களில் இந் தச் சட்டம் பிரயோகிக்கப்படுகிறது. 
இந்திய அரசியல் சாசனம் முஸ்லிம் தனியார் சட்டத்தை அங்கீகரித்துள்ளது. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, ஜீவ னாம்சம், திருமண மஹர் தொகை, காப்பாளராகுதல், வக்ஃபு செய் தல், அறக்கட்டளை, அன்பளிப்பு, பெண்களுக்கான சிறப்பு சொத்து உயிலில்லா உரிமையிறக்கம் மற் றும் குடும்ப பிரச்சினைகள் போன்றவற்றை தங்கள் மத வழக் கப்படி தீர்த்துக் கொள்ள உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் தனியார் சட்டம் (Muslim Personal Law (shariat) Application ACT 1937ல் இயற்றப் பட்டு நாம் மேற்சொன்னவற்றை ஷரீயத் சட்டத்தின் அடிப்படை யில் தீர்த்துக் கொள்ள இந்திய முஸ்லிம்களுக்கு சட்ட ரீதியான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சட்டங்களைப் பாது காக்கும் வகையில் 1973ல் முஸ் லிம் தனியார் சட்ட வாரியம் என்ற அரசு சாரா நிறுவனம் உரு வாக்கப்பட்டது. முஸ்லிம்களின் பிரச் சினைகள் குறித்து அது அவ்வப்போது அரசுக்கு ஆலோ சனை சொல்லி வரு கிறது.
இது தவிர, இந் திய அரசியல் சாச னச் சட்டத்தின் பிரிவு 125 எந்த மதத் தினரும் தாங்கள் விரும்பிய மதத்தைப் பின்பற்ற உரிமை தரு கிறது என்ற வகையி லும் தனியார் சட் டங்களை முஸ்லிம் கள் பின்பற்றத் தகுந் தவர்கள் என்றாகிறது.
ஆயினும், இந்த சட்ட உரிமை கள் இருந்தும் இந்திய நீதிமன்றங் களில் அவ்வப்போது வழங்கப்ப டும் தீர்ப்புகள் ஷரீயத் சட்டங்க ளுக்கு முரணாக அமைந்து விடு கின்றன.
இதில் அடிக்கடி இந்திய நீதி மன்றங்களின் தீர்ப்புகளால் சர்ச்சைக்குள்ளாவது ஜீவனாம்ச விவகாரம்தான். ஜீவனாம்சம் கோரி சில முஸ்லிம் பெண்கள் அவ்வப்போது நீதிமன்றத்திற்கு செல்ல... நீதிமன்றம் சி.ஆர்.பி.சி. 125ன் கீழ் தீர்ப்பளிக்க... முஸ்லிம் அறிஞர்களோ முஸ்லிம் தனியார் சட்டத்தில் நீதிமன்றங்கள் தலை யிடுகின்றன என எதிர்ப்புகளை வெளிப்படுத்துகின்றனர். இது விவாதமாக்கப்படுகிறது.

உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் இந்துத்துவா சிந்தனை கொண்டவர்களாக அல்லது இஸ்லாமிய சட்டங்க ளுக்கு எதிரான சிந்தனை கொண்ட இயல்பினராக இருப்ப தாலும், பொது சிவில் சட்டம் தான் இந்தியாவில் இருக்க வேண் டும் என்ற பொதுவான (முஸ்லிம் களுக்கு எதிரான நோக்கமல் லாத) சிந்தனை கொண்டவர்க ளாக இருப்பதா லுமே முஸ்லிம் தனியார் சட்டம் அவ்வப்போது உர சிப் பார்க்கப்படுகி றது.


உயர் நீதிமன்றங் களும், உச்ச நீதி மன்றங்களும் முஸ் லிம் பெண்களின் ஜீவனாம்ச வழக்கு களில் சி.ஆர்.பி.சி. பிரிவு 125ன்படி தீர்ப்பு வழங்காமல் 1986ல் இயற்றப் பட்ட முஸ்லிம் பெண்கள் (விவாக ரத்து உரிமை பாது காப்பு) சட்டத்தின் படி தீர்ப்பளித்தால் சர்ச்சைக்கு இடமிருக்காது. 
ஆனால் இந்த நீதிமன்றங்கள் அவ்வாறு செயல்படுவதில்லை என்பதுதான் வாய்ப்புக் கேடானது.

1980களின் மத்தியில் ஷாபானு வழக்கு இந்திய முஸ்லிம் சமுதா யத்தில் பெரும் விவாத அலை களை உண்டு பண்ணிய பிறகு தான் தனியார் சட்டம் குறித்த விழிப்புணர்வு முஸ்லிம்கள் மத்தி யில் ஏற்பட்டது எனலாம்.
70 வயது நிரம்பிய பேகம் ஷா பானுவை அவரது கணவர் விவா கரத்து செய்கிறார். இதனால் ஷா பானு குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.) 125ன் கீழ் ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) கேட்டு வழக்குத் தொடர, இதன்படி ஷா பானு மறுமணம் செய்யும்வரை அல் லது மரணிக்கும்வரை ஜீவனாம் சம் கொடுக்க வேண்டும் என கண வருக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். இது மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.

ஷா பானுவின் கணவர் இதை மறுத்து இத்தா (விவாகரத்துக் குப் பின் காத்திருப்பு காலம்) வரைதான் பராமரிப்புத் தொகை தர முடியும் என்றார். இதற்கு தனி யார் சட்டத்தை ஆதாரமாகக் காட்டினார் ஷா பானுவின் கணவர். 
பின்னர் உச்ச நீதிமன்றமும் ஷா பானுவிற்கு ஆதரவாக தீர்ப் பளித்தது. சி.ஆர்.பி.சி. 125ன்படி வாழ்க்கை முழுவதும் ஷா பானு விற்கு பராமரிப்புத் தொகை தர வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தீர்ப்பளித்தார்.

சி.ஆர்.பி.சி. 125 என்பது இந் திய குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான சட்டமாகும் என்ப தால் இதன் கீழ் ஷா பானு உரிமை கோரியிருந்தார். 
"சி.ஆர்.பி.சி. 125 பிரிவு எல்லோ ருக்கும் பொதுவானது என்கிற வகையில் இதன் கீழ் ஷாபானு உரிமை கோர முடியும். முஸ்லிம் தனியார் சட்டம் இந்த விஷயத் தில் பொருந்தாது' என நீதிபதி சந்திர சூட் தனது தீர்ப்பில் குறிப் பிட்டிருந்தார்.

இஸ்லாமிய உலமாக்கள் இந்த தீர்ப்பை எதிர்த்தனர். முஸ்லிம் தனியார் சட்டத்தில் நீதிமன்றம் தலையிடுகிறது என கொந்தளித் தனர். ஷரீயத் சட்டம் இறைச் சட்டம். அதில் நீதிமன்றம் தலை யிடக் கூடாது என்றனர். 
இந்த தீர்ப்பில் உச்ச நீதிமன் றம், அப்துல்லாஹ் யூசுஃப் அலி யின் ஆங்கில மொழி பெயர்ப்பு திருக்குர்ஆனிலிருந்து 2.41வது வசனத்தை எடுத்துக் காட்டி விளக்கம் அளித்திருந்தார் நீதிபதி!
"விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண் டும். இது இறையச்சமுடையோ ருக்கு கடமையாகும்' என்கிறது இந்த வசனம்.
நீதிபதி சந்திர சூட், தொடர் ந்து ஜீவனாம்சம் தர வேண்டும் என தீர்ப்பெழுதிவிட்டு, மேற் கண்ட திருக்குர்ஆன் வசனத்தை அந்த தீர்ப்பிற்கு தவறாக பொருத்தியிருந்தார்.
இதனால், குர்ஆன் வசனத் திற்கு எப்படி நீதிபதி தவறான அர்த்தம் கொடுக்கலாம் என முஸ் லிம்கள் கொந்தளித்தனர்.

இந்த சர்ச்சை பெரும் அரசியலாக உருவெடுத்தது. தேசிய அளவில் விவாதமாக்கப்பட்டது இந்த தீர்ப்பு. 
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம்கள் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இறுதியில் நெருக்கடி யின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு பணிந்தது. பின்னர் சி.ஆர்.பி.சி. 125வது பிரிவிலிருந்து முஸ்லிம் பெண்க ளுக்கு விலக்களிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது ராஜீவ் அரசு. இது தான் முஸ்லிம் பெண்கள் (விவா கரத்து பாதுகாப்பு உரிமைச்) சட் டம் 1986.

1986லேயே இது அமுலுக்கு வந்தது. இந்தச் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு பின்னடைவு என்று, முற்போக்கு முஸ்லிம்கள் சிலர் கருத்துரைத்தனர். சி.பி. ஆர்.சி. 125 சட்டம் இஸ்லாத்திற்கு முரணானதல்ல என்றும் அவர் கள் கூறினர்.

புதிய சட்டம் ஒரே தடவை மொத்தமாக ஜீவனாம்சம் தரச் சொல்லி வலியுறுத்துகிறது. முஸ் லிம் அறிஞர்கள், திருக்குர்ஆனின் 2.41வது வசனம், விவாகரத்து செய்யும்போது போதுமான வச திகளுடன் ஒரே தடவை முழுமை யான ஜீவனாம்சம் தருவதை "நல்ல முறையில் வசதிகள் செய்து தரப்பட வேண்டும்' என்று கூறுவ தன் மூலம் இந்த வசனமும் தெளி வுபடுத்துகிறது என்கின்றனர்.

முஸ்லிம் பெண்கள் சட்டம் 1986, கணவர் முன்பு திருமணத் தின்போது மஹர் தராமல் இருந் திருந்தால் அந்த மஹர் தொகையை தர வேண்டும்; குர்ஆனில் சொல் லியிருப்பதுபோல் ஒரே தடவை முழுமையான ஜீவனாம்சம் தொகை தர வேண்டும்; அதோடு, மூன்று மாத காலம்வரை இத்தா கால பராமரிப்புத் தொகை தர வேண்டும் என்கிறது.


இந்த சட்டத்தின்படி, லக்னோ மாவட்ட மாஜிஸ்ட்ரேட் நீதிமன் றம் முதன் முறையாக ரேகா தீட் சித் என்ற (முஸ்லிமாக மாறிய) பெண்ணுக்கு 80 ஆயிரம் ரூபாய் ஜீவ னாம்சம் ஒரே தடவை தர வேண்டும் என்றும், இதில் 60 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வும், 20 ஆயிரம் ரூபாய் மூன்று மாத இத்தாவிற்கான பராமரிப் புத் தொகையாகவும் தர வேண் டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இருப்பினும் ஏராளமான வழக் குகள் சி.ஆர்.பி.சி. 125ன் கீழ் முஸ் லிம் பெண்களால் நீதிமன்றங்க ளில் தாக்கல் செய்யப்படுகின்றன. பல பெண்கள் அமைப்புகள் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 1986ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தி ருந்திருக்கின்றன. 
சில வருடங்களுக்கு முன் மும்பை உயர் நீதிமன்றம் இந்த புதிய சட்டத்தின்படி ஒரே தடவை ஜீவனாம்சம் வழங்கி தீர்ப்பளித் தது.
இதேபோல கொல்கத்தா உயர் நீதிமன்றமும் ஷகிலா பர்வீன் என்ற பெண்ணின் விவாகரத்து வழக்கில் அவள் வாழ்க்கை முழு வதற்கும் தேவையான பொருளா தாரத்தை ஒரே தடவையில் தர வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது.

கடந்த ஜூலை 11, 2000த்தில், இத்தா காலத்திற்குள் விவாக ரத்து செய்யப்பட்ட பெண்ணிற்கு முழு வாழ்க்கைக்குமான நியாய மான வசதிகளை செய்து கொடு க்க வேண்டும் அல்லது அப் பெண் மறுமணம் செய்யும்வரை அல்லது 1986 பெண்கள் பாது காப்பு சட்டத்தின் கூறுகளுக்கு ஒப்ப இவற்றை செய்து தர வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத் தின் முழு அமர்வு தீர்ப்பளித்தி ருந்தது.

நீதிமன்றங்கள் முஸ்லிம் பெண் கள் சட்டம் 1986ன் பிரிவு 3 (ஏ)விற்கு தவறான அர்த்தங்களும் அவ்வப்போது கொடுத்து இத்தா காலம் முடிந்த பின்பும் பெண் ணுக்கு பராமரிப்புத் தொகை தர வேண்டும் என்று தீர்ப்பளிக்கின் றன.
ஆனால் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3 (ஏ) A Reasonable and Fair Provision and Maintenance to be made and paid to her within the iddat period by her former husband என்கிறது.
(நியாயமான முறையில் பொரு ளாதார வசதிகளும் பராமரிப்புத் தொகையும் முன்னாள் கணவரிட மிருந்து இத்தா காலத்திற்குள் பெண்ணுக்கு கொடுக்க வேண் டும்) இந்த அடிப்படையில் நீதிமன் றங்கள் செயல்பட்டாலும் பிரச் சினை இல்லை. ஆனால் இதற்கு தவறான அர்த்தம் தந்து சி.ஆர். பி.சி. 125ஐ அமல்படுத்தி தனியார் சட்டத்தை காலி செய்ய பார்க் கின்றன நீதிமன்றங்கள்.

இஸ்லாம் விவாகரத்தின் போதே போதுமான அளவிற்கு முன்னாள் மனைவியின் வாழ்க் கைக்கு உரிய வசதிகளை அழகிய முறையில் செய்து கொடுக்கச் சொல்லுகிறது. ஆனால் ஜமாஅத் துகள் இதைச் செய்வதில்லை. 
இத்தா காலம்வரை ஜீவனாம் சம் தர வேண்டும் என்று தவறான தீர்வுகளை தரும் சில ஜமாஅத்து கள், திருமணம் நடக்கும்போதும் அந்தப் பெண்ணுக்குரிய மஹரை முறையாக வாங்கித் தருவதில்லை. கடன் மஹர் என்று சொல்லி விட்டு பெண்ணின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகின்றன.

ஆணாதிக்கத்தனம் வெளிப்படும் இது போன்ற ஜமாஅத்துகளின் செயல்பாடுகள்தான் இஸ்லாமிய பெண்களுக்கு உரிமைகள் மறுக் கப்படுகின்றன என பெண்ணுரி மைவாதிகள் பேசவும், நீதிமன் றங்கள் தனியார் சட்டத்தில் தலையிடவும் காரணிகளாகின் றன.  
எப்படியிருப்பினும், ராஜீவ் காந்தி அரசு கொண்டு வந்த 1986 சட்டத்தின்படி நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தாலே ஜீவனாம்ச வழக்குகள் இலகுவாக தீர்க்கப்ப டும். ஆனால் முஸ்லிம் தனியார் சட்டத்தை நீதிமன்றங்கள் மீறுவ துதான் பிரச்சினையே!
கட்டுரையாளர் - அபு ஃபைஸல்

Monday, April 13, 2015

வரதட்சிணைக்கு எதில் சிறந்த தீர்வு இருக்கின்றது?


இன்றைய சூழலில் வரதட்சணை எனும் கொடிய பிடுங்களால் பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்கிறது
பல பெண்கள் முதிர் கண்ணிகளாக ஆக்கப்பட்டுள்ளனர் இந்த வரதட்சணையால்
சில கேடு கெட்ட ஜென்மங்கள் பெண்ணுரிமை சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசினாலும் திருமண நிகழ்வு என வரும் போது தன் ஆண் திமிரினை காட்ட வெட்கத்தை விட்டு   ரொக்கத்தை பெருகின்றனர்
சரி இது குறித்து மேலும் பார்ப்போம்....
வரதட்சனை என்றால் என்ன?

வரதட்சனை என்பதுதிருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் வரையறுக்கப்படுகிறது.
வரதட்சணைக் கொடுமை:

வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
வரதட்சணை இறப்புகள்:
2012க்கான தேசிய குற்றப் பதிவு அமைப்பின் தகவல் படி இந்தியாவில் 8233 வரதட்சணை சாவுகள் நடந்திருக்கின்றன.
  சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணை காரணமாக மரணமடைகிறாள். ஆனால், பதிவு செய்யப்படும் வழக்குகளில் 32 குற்றவாளிகளே தண்டனை பெறுகின்றனர். குடும்ப வன்முறையின் ஒரு பிரதான அடிப்படை வரதட்சணை. 
2012ல் 1,06,527 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நாளைக்கு 292 அல்லது ஒரு மணி நேரத் துக்கு 12 அல்லது 5 நிமிடத்துக்கு ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். குடும்ப வன்முறை வழக்குகளில் 15சதவீதம் பேரே தண்டனை பெறுகின்றனர். தமிழகத்தில் 2012ல் 110 வரதட்சணை சாவுகள், 1965 குடும்ப வன் முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
இந்திய அரசின் சட்டங்கள்:
வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது அவை:
வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.
வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961ல், சில திருத்தங்கள் 1984 மற்றும் 1986ல் செய்யப்பட்டன. மேலும் இந்திய தண்டனை சட்டத்தில் 1983ல் 498 ஏ என்ற பிரிவு இணைக்கப் பட்டு, கணவனும், அவனது உறவினர்களும் மனைவியை உடல் ரீதியாக அல்லது மனரீதியாகக் கொடுமைப் படுத்தினால், 3 ஆண்டுகள் வரை சிறை தண் டனை என்பது அறிமுகப்படுத்தப்பட்டது.

முதன் முறையாக மன ரீதியான சித்ரவதை என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. பிறகு 1986ல், 304 பி என்ற பிரிவு வரதட்ச ணை சாவு குறித்துக் கொண்டு வரப்பட்டது. திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பெண் சந்தேகமான சூழலில் இறந்தால், இறப்பதற்கு முற்பட்ட காலத்தில் வரதட்சணை கொடுமைகள் நடந்திருந்தால், அது வரதட்சணை மரணம் என்று தான் பதிவு செய்யப்படும். கொடுமை செய்த கணவனும், அவர் உறவினர்களும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும். குற்றச்சாட்டு உண்மையல்ல என்று குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தான் நிரூபிக்க வேண்டும். குற்றம் நிரூ பிக்கப்பட்டால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண் டனை வரை கிடைக்கும்.
2005ல் வந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டமும் வரதட்சணையைக் குற்றமாக்குகிறது.1961 சட்டத்தில்திருமணத்துக்காககொடுக்கப்படுவதே வரதட்சணை என்று இருந்தது, 1984ல் திருமணம் தொடர்பாக என்று மாற்றப்பட்டது.
இத்தனை சட்டங்கள் இருந்தும் இந்த வரதட்சணையையும் வரதட்சணை கொடுமையையும் ஒழிக்க முடிந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்
ஆனால் இதை எந்த மதமும் எந்த கொள்கையும் நெறி படுத்தவில்லை அதனால் இதில் இன்னும் குழப்பமும் சோகமுமே மிஞ்சுகிறது
இதற்கான தீர்வு என்னவென்று தீர்வைத்தேடினால் ஆரம்பப்புள்ளியிலேயே முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லுகிறது இஸ்லாமிய மார்க்கம்
இஸ்லாம் சொல்லும் தீர்வு:

" பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!" (குர் ஆன் 4:4)
திருமணம் செய்வதற்காக மணமகன் மணமகளுக்கு வழங்கும் பொருள் மஹர் (மணக் கொடை) எனப்படும்.
ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்பதற்கு உரிமை உள்ளது. அதை அவள் மட்டுமே உடமையாக வைத்துக் கொள்வதற்கும் உரிமை உள்ளது.
இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையை பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.
மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிமையைப் பெண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இவர்கள் மஹர் கேட்காததால் ஆண்கள் வரதட்சனை கேட்கும் கொடுமை அதிகமாகி விட்டது.
கொடுக்கக் கடமைப்பட்ட ஆண்கள் கேட்டுப் பெறக் கூடிய அளவுக்கு மானமிழந்து விட்டனர். வரதட்சணை வாங்காதீர்கள் என்பதை விட நீங்கள் கொடுங்கள் என்பது கடுமையான கட்டளையாகும். உண்மையான எந்த முஸ்லிமும் வரதட்சணை கேட்கத் துணிய மாட்டான்.
இது தான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமாகும்.
பெண்கள் தாம் அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும்.
# ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆண் தனது வீட்டிலேயே இருக்கிறான். தனது தாய், தந்தையர் மற்றும் உறவினருடன் இருக்கிறான். ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள். இந்தத் தியாகத்திற்காக பெண்களுக்குத் தான் ஆண்கள் வழங்க வேண்டும்.
# திருமணத்திற்குப் பின் மனைவிக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை. அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் பெண்கள் கணவனுக்காக சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்து பணிவிடை செய்தல் என்று ஏராளமான சுமைகளைத் தம் தலையில் சுமந்து கொள்கின்றனர். மாமியார் கொடுமைகளையும் சில பெண்கள் கூடுதலாக தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் காரணத்துக்காகவும் ஆண்கள் தாம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
# இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும், சுமையும் இல்லை. பெண்தான் சிரமப்படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை அடைகிறாள். இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தைத் தாங்கிக் கொள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதவைத் தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகவே அவளுக்கு கோடி கொடுத்தாலும் போதாது.
# பிரசவித்த பின் குழந்தைக்காக தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பது தான் நேர்மையானது.
# அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள்.
பெண்களுக்கு ஆண்கள் தான் கொடுக்க வேண்டும் என்பதை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறுக்க முடியாது.
வரதட்சணை கேட்கும் கொடிய வழக்கம் காரணமாக ஏராளமான தீய விளைவுகள் ஏற்படுகின்றன. வரதட்சணை கேட்போரும், அதை ஆதரிப்போரும் அத்தனை தீய விளைவுகளிலும் பங்காளி களாகின்றனர்.
# வரதட்சணை காரணமாக 15 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்கள் முப்பது வயது வரை கூட மண வாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர்.
# இதன் காரணமாக பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி விடுகின்றனர். ஏமாற்றப்படுகின்றனர். விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும் ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது. சில பெண்கள் இதனால் இஸ்லாத்தையே உதறித் தள்ளிவிட்டு பிற மதத்தவர்களுடன் ஓடிப் போகும் நிலையும் உள்ளது.
# மணவாழ்வு கிடைக்காது என்ற நிலையில் தம் உயிரைத் தாமே மாய்த்துக் கொள்ளும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். பெண்ணைப் பெற்றவர்களும் கூண்டோடு தற்கொலை செய்கின்றனர். வரதட்சணை கேட்போர் இந்தப் பாவத்திலும் பங்காளிகள் ஆகின்றனர்.
# மணவாழ்வு கிடைக்காது என்பதால் ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும். இதிலும் வரதட்சணை கேட்பவர்களுக்குப் பங்கு இருக்கிறது.
# வரதட்சணை வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன்கூட்டியே உணர்பவர்கள் பெண் குழந்தை பிறந்ததும் தாமே தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். வேறு சிலர் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை பெண் என்பதை அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்த மாபாதகச் செயலிலும் வரதட்சணை கேட்பவர்கள் பங்காளிகளாகின்றனர்.
# மானத்துடன் வாழ்ந்த ஒருவனை, பெண்ணைப் பெற்ற காரணத்துக்காக ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்க வைக்கின்றனர். இந்தப் பாவமும் இவர்களைச் சும்மா விடாது.
# பருவத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு வடிகால் இல்லாத நிலையில் பெண்களில் பலர் மனநோயாளிகளாகி விடுகின்றனர். இந்தக் கொடுமையிலும் இவர்கள் பங்கு பெற்றுக் கொள்கின்றனர்.
இப்படி ஏராளமான தீமைகளின் மொத்த வடிவமாகத் திகழும் வரதட்சணையை வாங்குவோர், இவ்வளவு பாவங்களுக்கான தண்டனைக்காகத் தம்மை முன்பதிவு செய்கிறார்கள். நியாயத் தீர்ப்பு வழங்கக் கூடிய இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் எவரும் வரதட்சணை கேட்கவே மாட்டார்.
இப்படியான தெளிவான ஒரு வழியை காட்டித்தருகிறது இஸ்லாம் படைத்தவனுக்குத்தானே படைப்பினங்களின் வாழ்வியல் முறை அதனால் தீர்வைத்தேடுவோம் எது சிறந்த கொள்கையை மனித குலத்திற்கு வகுத்துத்தந்துள்ளதோ அதன் மூலம்
சிந்திக்கும் மக்களுக்கு குரானில் பல அத்தாட்சிகள் உள்ளது ஒரு சிறந்த கொள்கையில்லாமல் முரண் வாதம் வைப்போர் சிந்திக்க வேண்டும் தீர்வு எதிலென்று?

                                                               ----- Isma Breezy ---