பக்கங்கள் செல்ல

Showing posts with label படுகொலை. Show all posts
Showing posts with label படுகொலை. Show all posts

Saturday, April 9, 2016

நகபாஹ் தினம் - 1948 ல் நடந்த மாபெரும் படுகொலை

நகபாஹ் தினம் - 1948ல் இன்றைய தினத்தில் நடந்த மாபெரும் படுகொலை:
--------------------------

ஏப்ரல் 09, 1948ல்  அமைதியாக  வாழ்ந்து வந்த மிக அழகிய பாலஸ்தீன கிராமம் தேர் யாசீன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் எந்த வித தூண்டுதலுமின்றி அழித்தொழிக்கப்பட்ட கிராமம். பெண்கள், குழந்தைகள். முதியவர்கள் அனைவரும் சுட்டுக்  கொல்லப்பட்டனர். சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் பயத்தினால் வெளியேறவே, இந்த பகுதிகள் அனைத்தும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் அபகரிக்கப்பட்டு, இன்று வரை சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட யாரும் தண்டிக்கப்படவில்லை மாறாக குற்றம் சாட்டப்பட்ட அமைப்பில் உள்ள ஒருவன் இஸ்ரேலின் 6வது பிரதம மந்திரியாக பதவி வகித்துள்ளான்.

1947-49:


  •  750,000 பாலஸ்தீனியன் மக்கள் (முஸ்லிம் & கிறிஸ்த்துவர்) கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் 
  • 531 பாலஸ்தீனிய கிராமங்கள் அழிக்கப்பட்டன
  • 33 இடங்களில் மக்கள் படுகொலைச் செய்யப்பட்டனர் 


ஆயிரக்கணக்கான யூதர்களை இரண்டாவது உலகப் போரின் பொது காப்பாற்றிய, ஸ்வீடன் செஞ்சிலுவைச் சங்க முன்னாள் அதிகாரி போல்கே பெர்நோடட்டே,  ஐநாவின் பிரதிநிதியாக  பாலஸ்தீன்  பிரச்சனையில் நியமிக்கப்பட்டவர். பாலேச்தீன அகதிகள் விடயத்தில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

" வெளியேற்றப்பட்ட இந்த அகதிகளை தங்களின் வசிப்பிடங்களுக்கு வரவிடாமல் தடுப்பது,  நீதி முறையின் அடிப்படைக்கு முரணானது".



ஆயிரகணக்கான யூதர்களை காப்பாற்றிய அந்த அதிகாரியின் நேர்மையான கருத்திற்கு கிடைத்தப் பலன், ஒரு யூதனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த யூதன், பின்பு இஸ்ரேலிய பிரதமராக வந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று வரை இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பின் மூலம் பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்து வருகின்றது. எந்த அராஜகமும் நீடித்ததாக வரலாறு இல்லை. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஒரு நாள் முடிவுக்கு வரும்.. அந்த நாள் இஸ்ரேலுக்கு மிகக் கெட்ட நாளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Ref:
1. http://www.ifamericansknew.org/history/ref-nakba.html
2. https://en.wikipedia.org/wiki/1948_Palestinian_exodus
3. http://www.theguardian.com/world/2014/may/02/nakba-israel-palestine-zochrot-history
4. http://whatreallyhappened.com/WRHARTICLES/mapstellstory.html