பக்கங்கள் செல்ல

Showing posts with label ஆறுதல். Show all posts
Showing posts with label ஆறுதல். Show all posts

Thursday, January 14, 2016

குறிப்பு 1 - எந்த ஒரு நற்செயலையும் குறைத்து மதிப்பிடவேண்டாம்

இன்றிலிருந்து நாம் ஒரு புதிய புத்தகம் படிக்கலாம்......புத்தகத்தின் தலைப்பு..."70 Tips to win mutual Love and RESPECT (மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்)"

திருக்குர்ஆன் & ஹதீத் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தின் ஒவ்வரு குறிப்புகளையும் சுருக்கமாக பார்ப்போம். நான் ஆங்கிலத்தில் உள்ளதை, நான் புரிந்த  வ
கையில் மொழிபெயர்த்துத் தருகின்றேன்... சரியான மொழிபெயர்பிற்கு, மூல ஹதீத்களை பார்க்கவும்.

குறிப்பு 1:-  

தன்னை மக்கள் விரும்பவேண்டும் என்று ஆசைப்படும் ஒருவன், மக்களை நெருங்கச் செய்யும், எந்த ஒரு செயலையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

ஒரு சிறிய ஆறுதல் அல்லது செயல் அல்லது தர்மம், நமக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அது கிடைக்கப் பெரும் நபரிடத்தில் அதன் மதிப்பு பல மடங்காக இருக்கும்.

நபி (ஸல்) சொன்னார்கள்:

"எந்த ஒரு நற்செயலையும் குறைத்து மதிப்பிடவேண்டாம். அது உன் சகோதரனை முக மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக இருந்தாலும் சரியே."|(சஹீஹ் முஸ்லிம் Book of Goodness to Parents and Keeping Ties. Hadeeth No. 1782)

யாரவது ஒருவன், "இது  மிகவும் குறைவு" என்று எண்ணி, ஒரு செயலை விடுவது, ஷைத்தானின் வழிமுறையில் ஒன்று, மேலும் நல்ல செயல்கள் செய்வதை விட்டும் ஒரு மனிதன் தடுக்கப்படுவதும் இந்த வகையில் தான்.

ஒரு மனிதன் இப்படியே நினைத்து தன் வாழும் காலமெல்லாம் பல முறை நல்லது செய்ய வாய்ப்புக் கிடைத்தும் செய்யாமல், வயது முதிர்ந்ந்து இறந்தும் விடுகின்றான்.

குரான் இதற்க்கு சரியான பதிலாக, நாம் செய்யும் எந்த ஒரு செயலும் அது சிறியதோ அல்லது பெரியதோ, எதுவும் நிராகரிக்கப்படாது என்பதை தெளிவாக்குகின்றது.


"அவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அது மறுக்கப்படாது. (தன்னை) அஞ்சுவோரை அல்லாஹ் அறிந்தவன். (திருக்குர்ஆன் 3:115)"