பக்கங்கள் செல்ல

Monday, May 11, 2020

எப்படி அரேபியாவை இஸ்லாம் குறுகிய காலத்தில் வென்றது? - உலக வரலாற்றையே மாற்றியமைத்த முதல் போர்!

"#பத்ரு" என்று அழைக்கப்படுவது ஏன்?


-------------------------------------------------
எப்படி அரேபியாவை இஸ்லாம் குறுகிய காலத்தில் வென்றது?
பழைய கிணற்றின் படம்*
குறைஷிகள் தங்களது பயணத்தின் போது வழிகாட்டியாக அல்-நாதர் குலத்தைச் சேர்ந்த ஒருவரை வைத்திருந்தனர். அவர் அந்த வழியே பயணம் செய்யும் குரைஷிகளுக்கு தேவையான உதவிகளை அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவரது மகனின் பெயர் "பத்ரு".
அவரது மகன் அந்த இடத்தில் மக்கள் தாக்கம் தீர்க்க ஒரு கிணறைத் தோண்ட, அவரின் நினைவாக அதற்க்கு "பத்ரு" என்றே மக்கள் அழைக்கத் தொடங்கினர். அதுவே தான் அந்தப் பகுதி முழுவதும் தற்போது "பத்ரு" என்று அழைக்கப்படுகின்றது.

தற்போதைய கிணற்றின் படம்*
சிலரின் நற்செயல்கள் கடவுளால் ஏற்றுக்கொள்ளப் படுவதின் அடையாளம் அது உலகம் இருக்கும் வரை நினைவுக்கூறப்படும். அதற்க்கு மத நம்பிக்கை முக்கியமல்ல.








                                                                                                                 தொடரும்...!











தொடர்பான மேலதிக தகவல்:

 எப்படி அரேபியாவை இஸ்லாம் குறுகிய காலத்தில் வென்றது? - போர் கைதிகளின் உரிமை!




Badr Well - IslamicLandMarks.com

Sunday, May 10, 2020

எப்படி அரேபியாவை இஸ்லாம் குறுகிய காலத்தில் வென்றது? - போர் கைதிகளின் உரிமை!

அன்றைய காலத்தில் போரில் வெற்றி பெற்றவர்கள், மீதமுள்ள எதிர் அணியினரை அடிமைகளாக எடுத்துக்கொண்டனர். போர்கைதிகளுக்கான உரிமை என்ற சிந்தனையே அப்போது இல்லை.
இந்த நிலையில் தான் இஸ்லாமிய வரலாற்றின் முதல் போர் "பத்ரு" என்ற இடத்தில் நடந்து அதில் பல மடங்கு எண்ணிக்கையிலும், ஆயுதத்திலும் பலமான எதிரிகளை இறைவனின் துணையால் முஸ்லிம்கள் வென்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவென்றால், போர் கைதிகள் எப்படி நடத்தப்படவேண்டும் என்று சட்டம் இறைவனால் கொடுக்கப்படுகின்றது.
"பத்ரு போர் முடிந்தவுடன் கைதிகள் நபிகளிடம் கொண்டு வரப்படுகின்றனர். அதில் அல்-அப்பாஸ் என்பவரும் ஒருவர். சட்டையில்லாமல் வருகிறார். அவருக்கு சரியான சட்டையை கொடுக்குமாறு தோழர்களிடம் கூறுகின்றார்கள். அப்துல்லா பின் உபை என்பவற்றின் சட்டை பொருந்தி போகின்றது. நபியவர்கள் தங்களின் சட்டையை அப்துல்லாவிற்கு கொடுக்கின்றார்கள்." (Bhukari)
அதேபோல் மற்றொரு கைதியான தமாமா அல்-ஹனாஃபி, நபியவர்களிடம் கொண்டு வரப்படுகின்றார். அவர் இஸ்லாத்தை ஏற்க விரும்பவில்லை . அவர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்: “நீங்கள் என்னைக் கொன்றால், என்னைக் கொன்றதற்காக பழி தீர்க்கப்படும் ஒரு மனிதனைக் கொன்றுவிடுவீர்கள். நீங்கள் கருணையுடன் நடந்துகொண்டால் , நன்றி பாராட்டக்கூடிய ஒரு மனிதனுக்கு நீங்கள் கருணையுடன் இருக்கிறீர்கள். நீங்கள் பணத்திற்கு ஆசைப்பட்டால், நீங்கள் விரும்பும் தொகையை என்னிடம் கேளுங்கள். ”
நபி (ஸல்) அவர்கள் இரண்டு நாட்களாக அவர் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மூன்றாம் நாளில், நபி (ஸல்) அவர்கள் அல்-ஹனாபியை விடுவிக்குமாறு தனது தோழர்களுக்கு கட்டளையிட்டனர்.

திருடர்கள் என்ற வதந்தி வைத்தே இன்று மக்கள் கொல்லப்படுகின்றனர் ஆனால் அன்று தங்களை கொள்ள வந்தவர்களையே கண்ணியமாக நடத்தியது இஸ்லாம்.

போரில் தோல்வியடைந்து அவமானப்பட்டு தங்களின் உயிர்க்கு அஞ்சியவர்களாக இருந்த கைதிகளிடம் சொல்லுமாறு இறைவன் இந்த வசனத்தை அருளினான்:

"நபியே! உங்கள் வசத்தில் இருக்கும் கைதிகளை நோக்கிக் கூறுவீராக: “உங்களுடைய உள்ளங்களில் ஏதாவது ஒரு நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத்தொகையாக) எடுத்துக் கொள்ளப்பட்டதைவிட (இவ்வுலகில்) மேலானதை உங்களுக்கு அவன் கொடுப்பான்; (மறுமையில்) உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் - அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்." [8:70]

கைதிகள் மனம் மாறினார்கள்...அரேபியாவும் மனம் மாறியது.

Friday, May 8, 2020

அறிவியலில் மற்றும் வேலைவாய்ப்பில் அதிரடி வளர்ச்சி காணும் இன்றைய முஸ்லீம் பெண்கள்!

அரபு நாடுகள் முதல் அமெரிக்கா வரை அனைத்து துறைகளிலுமான முஸ்லீம் பெண்களின் அதிரடியான வளர்ச்சி, உலக பொருளாதாரத்தில் ட்ரில்லியன் டாலர் மார்கெட்டாக உலக பொரூளாதார சங்கம்   அறிவித்துள்ளது. (World Economic Forum)

ஒரு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள் என்று கருதப்பட்ட முஸ்லீம் பெண்கள், அறிவியல் துறையில் சாதனைப் படைத்து வருவது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.


உலக பொருளாதார சங்கம், முஸ்லீம் பெண்களின் அபாரமான வளர்ச்சி குறித்து  இந்த பத்து குறிப்புகளை தந்துள்ளது:

அறிவியலில் மற்றும் வேலைவாய்ப்பில் அதிரடி வளர்ச்சி காணும் இன்றைய முஸ்லீம் பெண்கள்!
Tahani Amer, Nasa
இன்றைய இளைய முஸ்லிம்கள், இஸ்லாமிய வரலாற்றிலேயே மிக உயர்ந்த கல்வித்திறனை கொண்டுள்ளார்கள். புதிய அணுகுமுறைகளோடு, நவீன தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளார்கள்.


உலக கிராமத்தில் முஸ்லிம்கள் தான் மற்றவர்களை விட வயதில் இளையவர்களாக உள்ளனர்.

"உலக மக்களின் சராசரி வயது 28.          உலக முஸ்லிம்களின் சராசரி வயது 23."

    1.  முஸ்லீம் உலகில், பல்கலைக்கழக மாணவர்களில்
         பெண்கள் தான் இப்போது பெரும்பான்மையாக உள்ளனர்.

     2. STEM education (Science, Technology, Engineering and Mathematics ) துறையில் 
முஸ்லீம் பெண்களின் பங்களிப்பு நான்காவது தொழில்துறை புரட்சிக்கு வழிவகுத்துள்ளது. ஐந்து நாடுகளில் ஆண்களைவிட அதிகமாக பெண்கள் தான் இந்தத் துறையில் பங்கேற்றுள்ளனர். அதில் இரண்டு நாடுகள் புரூணை மற்றும் குவைத்.

3. கடந்த ஆயிரம் ஆண்டுகளிலே முதன்மையாக, ஐந்து கோடிக்கும் அதிகமான முஸ்லீம்  பெண்கள் வேலை வாய்ப்புகளில் பங்கேற்றுள்ளனர் 

4. அவர்களின் ஒருங்கிணைந்த வருவாய், முஸ்லீம் பெண்களை உலகின் 16 வது பணக்கார நாடாக மாற்றும்

Dr. Hina ChaudhryDirector of Cardiovascular Regenerative Medicine 

5. இந்த பொருளாதார புரட்சிக்கு சில வரலாற்று முன்மாதிரிகள் உள்ளன. 
முஸ்லீம் உலகெங்கிலும் உழைக்கும் பெண்களின் அதிரடியான  உயர்வு புதியது என்றாலும், இன்றைய லட்சிய வணிகப் பெண்களின் முன்னேற்றத்திற்கு  ஒரு வரலாற்று  முன்மாதிரியைக்  காணலாம். முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர், கதிஜா என்ற தொழிலதிபர். அவர் நபிகள் நாயகத்தை வேலைக்கு அமர்த்தி மெக்காவிலிருந்து சிரியாவிற்கு ஒரு வர்த்தக பணிக்கு அனுப்பினார். பின்னர் நபிகள் நாயகத்தை  அவர் திருமணம் செய்து கொண்டதோடு மட்டுமில்லாமல், இஸ்லாத்திற்க்காக அதிக நிதி உதவியையும் செய்தார்.

6. உலகமயமாக்கல், தொழில்நுட்பம், லட்சியம் மற்றும் பொருளாதாரத் தேவை ஆகியவை முஸ்லிம் உலகின் வளர்ந்து வரும் சந்தைகளில் உழைக்கும் பெண்களின் எழுச்சிக்கு ஒரு 'சரியான புயலை' உருவாக்கியுள்ளன.

7. வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகள் விஷயத்தில், பெண்கள் இன்னும் பெரும்பாலான பொறுப்பைச் சுமக்கிறார்கள்.

8. தொழில்துறையினர் இந்த புதிய போக்கை ஏற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சட்டமியற்றுபவர்கள் இதை ஏற்றுக்கொள்வதில் விரைவு காட்ட வேண்டும் 
Cryptologist Hoda Al Khzaimi is a leader in cybersecurity research

9. தற்காலிக  அல்லது ஒப்பந்த அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் (Gig platforms) மற்றும் மின்-வணிகம் ( e-commerce) போன்ற துறைகள் முஸ்லீம் பெண்களுக்கு முன்பில்லாத வகையில் அதிகமான பொருளாதார வாய்ப்புகளைக் கொடுக்கின்றன 

10. இதன் தாக்கங்கள், முஸ்லீம் நாடுகளின் எல்லைகளைத் தாண்டியும் எதிரொலிக்கும்.



Ref:

Hina Chaudhry - Medical Scientist


"இறைவனுக்கு உண்மையில்  நன்றியுடன் நடந்துகொண்டால், அனைத்து உயிரினங்களுடனும் நிச்சயம் அன்பு செலுத்துவீர்கள். கல்வி தான் அனைத்து வாய்ப்புகளின் திறவுகோல். பிறருக்கு இரக்கத்தோடும், கருணையோடும் உதவி செய்யுங்கள்"  - Tahani Amer - Nasa

Dr. Hoda Al Khzaimi (Phd in Cryptogrpahy, Cyber Security)

Working Muslim women are a trillion-dollar market - World Economic forum

Fifty Million Rising Generation By Saadia Zahidi

Wednesday, May 6, 2020

நபி(சல்) அவர்கள் தவழும் குழந்தையை கண்டு காமுற்றார்களா?: விமர்சனமும் விளக்கமும்

நபி(சல்) அவர்கள் தவழும் குழந்தையை கண்டு காமுற்றார்களா?: விமர்சனமும் விளக்கமும்


          நபி(சல்) - ஆயிஷா(ரலி) திருமணம் குறித்த அனைத்து வாதங்களும் திருமணம் தொடர்பான ஹதீஸ்களை சுற்றியே இருந்தாலும் அவை அனைத்தும் சென்ற தொடர்களில் மறுக்கப்பட்டுள்ளது. இதே போன்று இஸ்லாமிய அறிஞர்கள் மறுத்ததை ஒட்டி அவதூறு பரப்பிகள் தங்களது வாதங்களுக்கு முட்டு கொடுக்க சில உப செய்திகளை தூக்கி வருகின்றனர். அவற்றை இங்கு பதிவிட்டு அதன் விளக்கத்தை காண்போம் இன்ஷா அல்லாஹ்.

7075- حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ قَالَ: أَخْبَرَنِي حُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى أُمَّ حَبِيبَةَ وَهِيَ فُوَيْقَ الْفَطِيمِ، فَقَالَ: «لَئِنْ بَلَغَتْ بُنَيَّةُ الْعَبَّاسِ هَذِهِ وَأَنَا حَيٌّ لَأَتَزَوَّجَنَّهَا»
[حكم حسين سليم أسد] :إسناده ضعيف جدا

        உம்முல் ஃப்ழ்ல் பின்த் அல் ஹாரீஸ்(ரலி) கூறியதாவது: நபி(சல்) அவர்கள் தவழ்ந்து கொண்டிருந்த உம்மு ஹபீபாவை கண்டுவிட்டு , "இவள் பருவமடைவதை நான் காணும் வயதுவரை இருந்தால் இவளை நான் திருமணம் செய்வேன்" என்று கூறினார்கள்.


மேற்குறிபிட்ட இந்த செய்தி பின்வரும் ஹதீஸ் கிரந்தங்களின் ஓரே அறிவிப்பாளர் தொடருடன் இடம்பெருகிறது.

முஸ்னத் அஹ்மத் 26870/26329/25636, முஸ்னத் அபி யஃலா 7075, அல் மஜ்மு அல் ஜாவயித் 7456, அல் தப்ரானீ மஜ்மு அல் கபீர் 25/92/238.
 
          மேலும் வரலாற்று கிரந்தமான  சீரா இப்னு இஸ்ஹாக் (அரபு 1/268 , ஆங்கில மொழியாக்கம் 1/311)  பின்வருமாறு இடம் பெறுகிறது . 
نا أحمد: نا يونس عن ابن إسحق قال: حدثني الحسين بن عبد اللَّه بن عبيد اللَّه بن عباس عن عكرمة عن ابن عباس قال: نظر رسول اللَّه صلى الله عليه وسلم إلى أم حبيب ابنة عباس وهي بدر «2» بين يديه فقال رسول اللَّه صلى الله عليه وسلم: لئن بلغت هذه وأنا حي لأتزوجنها

      இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது: நபி(சல்) அவர்கள் தவழ்ந்து கொண்டிருந்த இப்னு அப்பாஸின் மகளான உம்மு ஹபீபாவை கண்டுவிட்டு , "இவள் பருவமடைவதை நான் காணும் வயதுவரை இருந்தால் இவளை நான் திருமணம் செய்வேன்" என்று கூறினார்கள்.


        மேற்குறிபிட்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஹுஸைன் இப்னு அப்துல்லாஹ் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். இவர் குறித்து இவர் ஹதீஸில் தவறிழைக்கக்கூடியவர் என்று அஹ்மத் கூருகிறார். அதுபோல் யஹ்யா இப்னு மயீன் , அபூ ஹாத்தம் போன்றவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறுகின்றனர். ஆக இதை அனைத்தையும் தொகுத்து வழங்கிய இப்னு ஹஜர் அவர்கள் இவரை பலவீனமானவராக வகைப்படுத்துகிறார் (தக்ரீப் அல் தஹ்தீப் 2/167)

      மேற்குறிபிட்ட செய்தி பலவீனமானதாகும். இந்த செய்தியை இப்னு இஸ்ஹாக் தனது சீராவிலும் ஹுசைன் என்பவர் வழியாகவே அறிவிக்கிறார். ஆக மேற்குறிபிட்ட செய்திகள் அனைத்தும் பலவீனமானது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.


நபி(சல்) அவர்கள் மீதான விமர்சனங்கள் அனைத்தும் இட்டுகட்டல்களே. இவர்களை அவதூறு பரப்பிகள் என்று நாம் கூறியதில் எந்த தவறும் இல்லை. இன்ஷா அல்லாஹ் வரும் தொடர்களில் பெண்ணின் திருமண வயது குறித்த இஸ்லாமின் நிலைப்பாட்டையும், அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை திருமணம் செய்த போது வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை திருமணம் செய்த போது வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள்.

விமர்சனம்: நபி(சல்) அவர்களுக்கும் ஆயிஷா(ரலி) அவர்களுக்கும் வயது வித்தியாசம் அதிகம்: நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை திருமணம் செய்த போது வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள். 


நமது பதில்:

                முதலில் இந்த விமர்சனமே தவறானது. இத்தகைய விமர்சனம் இன்றும் நாம் முழுமையாக ஏற்காத ஒன்று. இன்றும் இந்த வயதுடையவர் இந்த வயதுடையவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற எந்த அளவுகோலும் இல்லை. உள்ளங்கள் ஒத்துப்போனால் எந்த வயது வேறுபாட்டிலும் திருமணம் செய்யலாம் . உடலால், மனத்தால் தகுதியுடன் இருந்தால் போதுமானது. ஆயிஷா(ரலி) அத்தகைய தகுதியுடன் இருந்தார்கள் என்பதற்கு போதிய சான்றுகள் உள்ளன. உதாரணமாக முன் சென்ற அபீசினியர்கள் விளையாட்டுகளை கண்ணுற்ற சம்பவத்தை சற்று பார்ப்போம்.

முஸ்லிம் 1622. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

       என் அருகில் இரு சிறுமியர் "புஆஸ்” போர் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்; படுக்கையில் படுத்து, தமது முகத்தை (வேறு பக்கம்) திருப்பிக்கொண்டார்கள். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து என்னை அதட்டி "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?" என்று கடிந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ரை முன்னோக்கி "அச்சிறுமியரை விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பியபோது அவ்விரு சிறுமியரையும் குறிப்பால் உணர்த்தி (வெளியேறச் சொன்)னேன். உடனே அவர்கள் இரு வரும் வெளியேறிவிட்டனர். அன்று பெருநாள் தினமாக இருந்தது. சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுகள்) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நான் (அந்த விளையாட்டைப் பார்க்க) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம் நீ (இவர்களின் வீரவிளையாட்டுகளைப்) பார்க்க விரும்புகிறாயா?" என்று கேட்க, நான் "ஆம்" என்று கூறியிருக்க வேண்டும் (சரியாக எனக்கு நினைவில்லை). உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் கன்னம் அவர்களுடைய கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்கவைத்துக்கொண்டார்கள். "அர்ஃபிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்" என்று கூறினார்கள். நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது, "போதுமா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க,நான் "ஆம் (போதும்)" என்று சொன்னேன். "அப்படியானால் நீ போகலாம்!" என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

முஸ்லிம் 1624. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

    நான் அந்த விளையாட்டு வீரர்களிடம் "நான் உங்க(ளின் விளையாட்டு)களைப் பார்க்க விரும்புகிறேன்" எனக் கூறி (அனுப்பி)னேன். அவர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் விளையாடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதைப் பார்த்துக்கொண்டு) நிற்க, நான் (எனது அறை) வாசலில் நின்றுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காதுகளுக்கும் தோள்களுக்குமிடையே (எனது முகத்தை வைத்து) அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(அந்த வீரர்கள்,) பாரசீகர்கள் அல்லது அபிசீனியர்கள் ஆவர். "அல்ல; அவர்கள் அபிசீனியர்களே ஆவர்" என என்னிடம் இப்னு அத்தீக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
       ஆக மேற்குறிபிட்ட செய்தியானது ஆயிஷா(ரலி) அவர்களது 15 வயதில் நடைபெற்றதாக முன்பே கண்டோம். சராசரியாக நபி(சல்) அவர்களின் உயரத்திற்கு நிகரான உயரம்தான். எந்த பென்ணும் பூப்பெய்த பிறகு அதிகபட்சமாக மூன்று வருடங்கள் வளருவார்கள். அதிகபட்சமாக ½ அடி.(1) ஆக நபி(சல்)- ஆயிஷா(ரலி) வீடு கூடிய போது அவர்கள் நபி(சல்) அவர்களை விட அதிகபட்சமாக ½ அடிதான் உயரம் குறைவாக இருந்திருப்பார்கள் என்பதை உறுதி பட கூற முடியும்.

          அதுபோல் அவர்களது உடலும் திருமணத்திற்கு பிறகு வீடு கூடுவதற்காக தயார்படுத்தப்பட்டதாக ஆயிஷா(ரலி) அவர்களே கூறுவது கவனிக்கத்தக்கது. 

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا نُوحُ بْنُ يَزِيدَ بْنِ سَيَّارٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ أَرَادَتْ أُمِّي أَنْ تُسَمِّنِّي لِدُخُولِي عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ أَقْبَلْ عَلَيْهَا بِشَىْءٍ مِمَّا تُرِيدُ حَتَّى أَطْعَمَتْنِي الْقِثَّاءَ بِالرُّطَبِ فَسَمِنْتُ عَلَيْهِ كَأَحْسَنِ السِّمَنِ ‏.‏

முஃமீன்களின் அன்னை ஆயிஷா(ரலி) கூறியதாவது:
எனது தாயார் அல்லாஹ்வின் தூதரின் வீட்டுக்கு அனுப்புவதற்காக உடல் பருமனாக்க நினைத்து பலவற்றை முயன்றார்கள். ஆனால் வெள்ளரிக்காயுடன் பேரிச்சை பழங்களே பயனளித்தன. பிறகு நான் பருமனானேன்.( நூல்: அபூதாவுத், ஹதீஸ் எண்: 3904)
ஆக அவர்களது உடலும் வீடு கூடுவதற்கு ஏற்ற வகையில் இருந்ததை அறிய முடிகிறது.
حَدَّثَنَا أَبُو صَالِحٍ الأَنْطَاكِيُّ، مَحْبُوبُ بْنُ مُوسَى أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ، - يَعْنِي الْفَزَارِيَّ - عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، وَعَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ قَالَتْ فَسَابَقْتُهُ فَسَبَقْتُهُ عَلَى رِجْلَىَّ فَلَمَّا حَمَلْتُ اللَّحْمَ سَابَقْتُهُ فَسَبَقَنِي فَقَالَ ‏"‏ هَذِهِ بِتِلْكَ السَّبْقَةِ ‏"‏ ‏.‏
முஃமீன்களின் அன்னை ஆயிஷா(ரலி) கூறியதாவது: ஒருமுறை நான் அல்லாஹ்வின் தூதருடன் ஒரு பயணத்தில் இருந்த போது எனக்கும் அவர்களுக்கும் ஓட்டப்பந்தயம் வைத்துக்கொண்டோம். அதில் நான் நபி(சல்) அவர்களை முந்தியும் விட்டேன். நான் உடல் பருமனான பிறகு மீண்டும் அதே போன்று அவர்களும் நானும் ஓட்டப்பந்தயம் வைத்துக்கொண்டோம் அதில் அவர்கள் முந்திவிட்டார். அவர்கள் கூறினார்கள்; “அதற்கு இது நேராகிவிட்டது என்று கூறினார்கள். (நூல்: அபூதாவுத், ஹதீஸ் எண்: 2579)
            அதே போன்று உஹத் போரில் பங்கேற்றார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இது குறித்து அனஸ் ரலி பின்வருமாறு அறிவிக்கிறார்கள்.

புகாரி 2880. அனஸ்(ரலி) அறிவித்தார்.
உஹுதுப் போரின்போது மக்கள் நபி(ஸல்) அவர்களைவிட்டுவிட்டுத் தோல்வியுற்று (பின்வாங்கிச்) சென்றபோது நான் ஆயிஷா பின்த்து அபீ பக்ர்(ரலி) அவர்களையும் உம்மு சுலைம்(ரலி) அவர்களையும் கண்டேன். அப்போது அவர்கள் இருவரும் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து கொண்டு வேக வேகமாக நடந்து (சென்று காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதும் பிறகு (தண்ணீர் காலியானதும்) திரும்பிச் சென்று அவற்றை நிரப்பிக் கொண்டு, மீண்டும் வந்து மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதுமாக இருந்தார்கள். நான் அவர்களின் கால்களில் அணிந்திருந்த தண்டைகளைப் பார்க்கும் அளவிற்கு வரிந்து கட்டிக் கொண்டு (மும்முரமாகப்) பணிபுரிந்து கொண்டிருந்தார்கள்.
"தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து வேகமாக நடந்து சென்று" என்பதற்கு பதிலாக, 'தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து எடுத்துச் சென்று" என்று மற்றோர் அறிவிப்பாளர் கூறினார்.

உஹத் யுத்ததிற்கும்(ஹிஜ்ரி 3) ஆயிஷா(ரலி) திருமணத்திற்கும் (ஹிஜ்ரி 1) அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். போரில் பங்கேற்று காயம்பட்டோருக்கும் சேவை செய்யும் அளவிற்கு உடல் தகுதியுடன் இருப்பவர்தான் போருக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்பது உலகறிந்த ஒன்று. மேலும் இத்தகைய நீர்பைகளை சுமப்பவர் எத்தகைய உடல் தகுதியுடன் இருப்பார்கள் என்பது போர் தளவாடங்கள் குறித்து அறிந்தவர்களுக்கு தெரியும். ஒருவேளை அவதூறு பரப்பும் கூமுட்டைகளுக்கு அது தெரியாமல் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு விசயத்தையும் நாம் கண்ணுரும் போது அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் வீடு கூடுதலுக்கு தயரானவர் என்பதை நாம் அறிய முடிகிறது. அவதூறு பரப்பும் கூமுட்டைகள் கேலிச்சித்திரங்களை கண்டு ஏமாந்த அறிவிலிகளாகத்தான் நமக்கு தெரிகிறது.