பக்கங்கள் செல்ல

Saturday, March 12, 2016

புற்று நோய் மிகக் குறைவாக இருந்த நாட்டில் 4000 மடங்கு அதிகரிப்பு - அதிர்ச்சி ரிப்போர்ட்! ஹிரோஷிமாவை விட அதிகம் பாதிப்பு!!

புற்று நோய் மிகக் குறைவாக இருந்த நாட்டில் 4000 மடங்கு அதிகரிப்பு - அதிர்ச்சி ரிப்போர்ட்! ஹிரோஷிமாவை விட அதிகம் பாதிப்பு!!


அமெரிக்கா இராக்கின் மேல் குண்டு வீசுவதை இப்போது நிறுத்தி இருக்கலாம் ஆனால் குண்டு வீச்சினால் ஏற்பட்ட பாதிப்புகள் இராக்கில் உள்ள மனித உடல்களை பல தலைமுறைகளுக்கு பாதிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. பிறக்கும் குழந்தைகளின் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், அதிசியமான வியாதிகள், மேலும் எண்ணிலடங்கா புற்று நோய் பாதிப்புகள் என அந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆயுதங்களால் ஏற்பட்ட சுற்றுப்புற சூழல் பாதிப்பு, குறிப்பாக யுரானிய வெடிமருந்துகளால் ஏற்பட்ட தாக்கம் தான் இராக் மக்களை மிகவும் கடுமையாக பாதித்து வருகின்றது. இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தைகள், ஒரு கண்ணுடன் பிறந்த குழந்தைகள், முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில் பிறக்கும் குழந்தைகள் என மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள் பிறப்பதற்கான காரணம் இந்த ஆயுந்தங்களினால் ஏற்பட்ட தாக்கம் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று, 15 சதவீத பலூஜா குழந்தைகள் பிறக்கும்போதே ஊனமுற்றதாக பிறக்கின்றன. இது 14 மடங்கு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகஷாக்கி மாநிலங்களை விட அதிகம். ஐரோப்பாவை விட 33 மடங்கு அதிகம். மேலும் இந்த பாதிப்பு ஆண்/பெண் சதவீதத்தையும் தாக்கியுள்ளது. தற்போது, 100 பெண்களுக்கு, 86 ஆண்கள் மட்டுமே உள்ளனர்.

பொய்யை மூலதனமாக வைத்து ஒரு நாட்டு மக்களையே நாசப்படுத்திய ரவுடிப் படைகளோ, இதைப்பற்றிக் கவலைகொள்வதாக இல்லை. ஒரு காலத்தில் மருத்துவத்தில் மட்டுமில்லாமல் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சிய இராக், இப்போது அநியாயக்காரர்களின் அக்கிரமத்தால் தன வளத்தை இழந்து, வருங்கால சந்ததிகளையும் இழந்து வருவது வேதனையிலும் வேதனை.

இந்த அக்கிரமக்காரர்களுக்கு என்ன தான் தண்டனை? இதைப்பற்றி திருக்குர்ஆன் என்ன சொல்கின்றது என்று பார்ப்போம்.

"மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்." [14:42]
"அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளைச் செய்து கொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக்கூடியவையாக இருந்தபோதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது." [14:46]

"இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்." [14:48]


"இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்." [14:49]

Saturday, February 6, 2016

இஸ்லாத்தின் பார்வையில் அடிமை முறையும், சமத்துவமும் - 1

இஸ்லாம் அடிமைகளை ஆதரிக்கின்றது ..அதனால் இஸ்லாத்தில் சமத்துவம் இல்லை என்று கூறும் சிலரின் கூற்றில் உள்ள முரண்பாடுகளை எடுத்துக்காட்டுவதற்காக இந்தத் தொடர் எழுதப்படுகின்றது.

அடிமைத் தனம் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பாகவே இருந்து வந்த  ஒரு கொடுமையான பழக்கம்.  கேட்பார் யாருமில்லை... தடி எடுத்தவன் தண்டல் காரன்  என்ற பழமொழி இன்றைக்கு எவ்வாறு பொருந்துமோ, அதைவிட பல்லாயிரம் மடங்கு கூடுதலாக அன்று பொருந்தியது.


  • ஒரு மனிதன், மற்றொரு மனிதனின் சொத்தாக கருதப்பட்டான் 
  • வாரச் சந்தையில் மனிதர்களும் விற்கப்பட்டனர் 
  • தந்தை தன் வாரிசுகளை விற்கவோ அல்லது பரிமாற்றம் செய்யவோ அதிகாரம் கொண்டவனாக  இருந்தான் 
  • தங்களிடம் உள்ள அடிமைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து,
  • சமூகத்தில் அவர்களின் அந்தஸ்துகள் உயர்ந்தன 
  • ஒரு அடிமைக்  கொல்லப்பட்டால், அதற்க்கு எந்த தண்டனையும் கிடையாது 
  • எந்த ஒரு ரோமன் பேரரசிடரிடமும், குறைந்த அளவு 20,000 அடிமைகள் இருந்தனர் 

  • தங்களின் பொழுது போக்கிற்காக, அடிமைகளை சண்டையிட வைத்து  சாகடித்த சம்பவங்கள் ஏராளம் 

 சமீப காலங்களில் கூட இன்னும்  மோசமாக பலராலும்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது

macquirealtory.com

  • அமெரிக்கர்களால் நடை முறைப்படுத்தப்பட்டு  வந்த அடிமை முறை (trans-atlantic) மனித வரலாற்றில் நடந்த கொடூரமான சம்பவங்களில் ஒன்று 
  • இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் ஒழிக்கப்பட்ட தேவதாசி முறை 
  • அந்நிய  நாட்டில் உள்ள ஒருவரை எந்த வித சட்ட விதிமுறைகளும் இல்லாமல், கடத்திச் சென்று, குவாண்டானமோ சிறைச்சாலையில் அடைத்து வைத்திருப்பதும் நவீன கால நாயகர்களின் சாதனை 

இன்னும் நாட்டிற்கு நாடு, மதத்திற்கு மதம் இவைகள் மாறுபட்டு இருப்பதை நாம் காணலாம்.

இதை இஸ்லாம் எப்படி அணுகியது? இஸ்லாத்தின் விதிமுறைகள், மற்றவர்களின் கொள்கையோடு எப்படி வேறுபடுகின்றது என்பதை அடுத்தடுத்த பாகங்களில் பார்ப்போம்.

இஸ்லாம், இறைச் சட்டமாக இருப்பதால் தான்,  எந்தக் காலத்திற்கும் மாற்றம் தேவைப்படாத, ஒரு பிரச்சனையின் அனைத்துக் கோணங்களையும் அலசி அதற்க்கான முடிவுகளைத் தருகின்றது.

விமர்ச்சனம் செய்பவர்களை, உங்கள் வாதங்களில் நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் இது போன்ற பிரச்சனைகளுக்கு எக்காலத்திலும் மாற்ற முடியாத அளவிற்கு தீர்வுகளைத் தாருங்கள் என்றும் கேட்கின்றது.


Thursday, January 14, 2016

குறிப்பு 1 - எந்த ஒரு நற்செயலையும் குறைத்து மதிப்பிடவேண்டாம்

இன்றிலிருந்து நாம் ஒரு புதிய புத்தகம் படிக்கலாம்......புத்தகத்தின் தலைப்பு..."70 Tips to win mutual Love and RESPECT (மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்)"

திருக்குர்ஆன் & ஹதீத் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தின் ஒவ்வரு குறிப்புகளையும் சுருக்கமாக பார்ப்போம். நான் ஆங்கிலத்தில் உள்ளதை, நான் புரிந்த  வ
கையில் மொழிபெயர்த்துத் தருகின்றேன்... சரியான மொழிபெயர்பிற்கு, மூல ஹதீத்களை பார்க்கவும்.

குறிப்பு 1:-  

தன்னை மக்கள் விரும்பவேண்டும் என்று ஆசைப்படும் ஒருவன், மக்களை நெருங்கச் செய்யும், எந்த ஒரு செயலையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

ஒரு சிறிய ஆறுதல் அல்லது செயல் அல்லது தர்மம், நமக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அது கிடைக்கப் பெரும் நபரிடத்தில் அதன் மதிப்பு பல மடங்காக இருக்கும்.

நபி (ஸல்) சொன்னார்கள்:

"எந்த ஒரு நற்செயலையும் குறைத்து மதிப்பிடவேண்டாம். அது உன் சகோதரனை முக மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக இருந்தாலும் சரியே."|(சஹீஹ் முஸ்லிம் Book of Goodness to Parents and Keeping Ties. Hadeeth No. 1782)

யாரவது ஒருவன், "இது  மிகவும் குறைவு" என்று எண்ணி, ஒரு செயலை விடுவது, ஷைத்தானின் வழிமுறையில் ஒன்று, மேலும் நல்ல செயல்கள் செய்வதை விட்டும் ஒரு மனிதன் தடுக்கப்படுவதும் இந்த வகையில் தான்.

ஒரு மனிதன் இப்படியே நினைத்து தன் வாழும் காலமெல்லாம் பல முறை நல்லது செய்ய வாய்ப்புக் கிடைத்தும் செய்யாமல், வயது முதிர்ந்ந்து இறந்தும் விடுகின்றான்.

குரான் இதற்க்கு சரியான பதிலாக, நாம் செய்யும் எந்த ஒரு செயலும் அது சிறியதோ அல்லது பெரியதோ, எதுவும் நிராகரிக்கப்படாது என்பதை தெளிவாக்குகின்றது.


"அவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அது மறுக்கப்படாது. (தன்னை) அஞ்சுவோரை அல்லாஹ் அறிந்தவன். (திருக்குர்ஆன் 3:115)"

Saturday, January 9, 2016

பிற மதத்தவர்களுடன் நல்லுறவு............. (பதிவு : சகோதரர் அப்துல் சலாம் , வரைகலை : Meezan-தராசு )





பிற மதத்தவர்களுடன் நல்லுறவு............. 
==================================
முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களை முஸ்லிம்கள் உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் பல இடங்களில் கட்டளையிடுகிறது. இஸ்லாம் இன வெறியைத் தூண்டுவதாக இவ்வசனங்களைப் பார்க்கும் சிலர் எண்ணலாம்.
இவ்வாறு எண்ணுவது தவறாகும். திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையாளர்களும், யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருந்தார்கள். எப்படியாவது முஸ்லிம்களை அழித்து இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள். போர் நடக்காத வருடமே இருக்கவில்லை. சில வருடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட போர்களையும் முஸ்லிம்கள் சந்தித்தனர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சில முஸ்லிம்களின் உறவினர்களும், நண்பர்களும் எதிரிகளின் பகுதிகளில் இருந்தனர். அவர்களுடன் முஸ்லிம்கள் உறவாடி வந்தனர். முஸ்லிம்கள் மூலம் அவர்களுக்குத் தகவல்கள் கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
திருக்குர்ஆனிலேயே இது பற்றி விளக்கமும் உள்ளது. இஸ்லாத்தைக் கேலிப் பொருளாக ஆக்கியவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 5:57)
………………………………….
உங்களுக்குப் பகைவர்களாக இருப்போரையும், கைகளாலும் நாவுகளாலும் உங்களுக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுவோரையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 60:2)
…………………………………
உங்கள் பகைவர்களாகவும் இருந்து கொண்டு, உங்களையும், நபிகள் நாயகத்தையும் ஊரை விட்டே விரட்டியடித்தவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 60:1)
…………………………………
மார்க்கத்துக்கு எதிராக உங்களுடன் போருக்கு வருவோரையும், உங்களையும் நபிகள் நாயகத்தையும் விரட்டியடித்தவர்களையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள்! அவ்வாறு நடக்காத முஸ்லிமல்லாதவர்களுடன் நட்புப் பாராட்டுவது மட்டுமின்றி அவர்களுக்கு நன்மையும் செய்யுங்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 60:8-9)
…………………………………
வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்டி, உள்ளுக்குள் உங்களை ஒழிக்கத் திட்டமிடுவோரை நண்பர்களாக்காதீர்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 3:118)
…………………………………
அன்றைய கிறித்தவ சமுதாயத்தினர் முஸ்லிம்களிடம் நெருக்கமான அன்பு கொண்டவர்கள். (பார்க்க: திருக்குர்ஆன் 5:82)
…………………………………
ஒரு சமுதாயம் உங்களுக்குச் செய்த தீமை காரணமாக அவர்களுக்கு அநியாயம் செய்யாதீர்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 5:2, 5:8)
………………………………….
உடன்படிக்கை செய்து முறையாக நடப்போரிடம் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 9:4)
…………………………………
முஸ்லிமல்லாதவர் அடைக்கலம் தேடி வந்தால் அவருக்கு அடைக்கலம் அளிக்குமாறு திருக்குர்ஆன் 9:6 வசனம் கூறுகிறது.
………………………………………
பெற்றோர்கள் முஸ்லிம்களாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுமாறு திருக்குர்ஆனின் 31:15, 29:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
………………………………..
இவ்வசனங்களையும் சேர்த்துக் கவனித்தால் போர்ப் பிரகடனம் செய்யாத முஸ்லிமல்லாத மக்களுடன் நன்றாகப் பழகவே இஸ்லாம் கட்டளையிடுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அது மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் சகல உரிமையும் பெற்று வாழ்ந்தனர்.
…………………………………….
நபிகள் நாயகத்தின் மிகப் பெரிய எதிரிகளாக இருந்த யூத சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளர்களில் ஒருவராக வைத்திருந்தார்கள். (நூல்: புகாரி 1356)
…………………………………………………
நபிகள் நாயகம் (ஸல்) தமது கவச ஆடையை யூதரிடம் அடைமானம் வைத்தனர். (நூல்: புகாரி 2916, 2068) யூதப் பெண்ணின் விருந்தை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுள்ளனர். (நூல்: புகாரி 2617)
யூதர்களே நியாயம் கேட்டு நபிகள் நாயகத்திடம் வந்தனர். (நூல்: புகாரி 2412, 2417)
…………………………………………
இவர்களெல்லாம் போர்ப் பிரகடனம் செய்யாது முஸ்லிம்களுடன் பழகியவர்கள். இன்னும் சொல்லப் போனால் நட்பு பாராட்டுவதாக நடித்த நயவஞ்சகர்கள் கூட, வெளிப்படையாகப் போர்ப் பிரகடனம் செய்யாததால் அவர்களுடனும் முஸ்லிம்கள் பழகி வந்தனர். அதனால் தான் இஸ்லாம் அந்த மக்களை வென்றெடுத்தது. போர்ச் சூழ்நிலையில் எந்த ஒரு நாடும் எடுக்கக் கூடிய அவசர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இடப்பட்ட கட்டளை தான் இந்த வசனங்களில் (3:28, 4:89, 4:139, 4:144, 5:51, 5:80, 9:23) கூறப்பட்டுள்ளன.

நன்றி :Meezan-தராசு

Saturday, January 2, 2016

திருகுர்ஆனின் அல் பாத்திஹா சூராவிற்கு உருக்கமாக விளக்கமளித்து சபையோரை கண்ணீர் சிந்தவைத்த அமெரிக்க திரைப்படதுறை ஜாம்பவான் பிரான்ஸிஸ் போர்ட் கொப்போலா



















திருகுர்ஆனின் அல் பாத்திஹா சூராவிற்கு உருக்கமாக விளக்கமளித்து சபையோரை கண்ணீர் சிந்தவைத்த அமெரிக்க திரைப்படதுறை ஜாம்பவான் பிரான்ஸிஸ் போர்ட் கொப்போலா
=====================================================
அமெரிக்காவின் Detroit, மிக்ஸிகன் மாநிலத்தில் பிறந்த பிரான்ஸிஸ் போர்ட் கொப்போலா(Francic Ford Coppola) அமெரிக்க ஒஸ்கார் வரலாற்றில் இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை இம்மூன்றுக்காகவும் ஒஸ்கார் பரிசுபெற்ற ஆறு பேரில் ஒருவராவார். இவர் 15 பேரை கொண்ட திரைப்படதுறை நீதிபதிகளின் தலைவரும், The God Father, Apocalypse போன்ற பிரமாண்டமான படங்ககளின் தயாரிப்பாளரும் ஆவார்.
மொரோக்கோவில் மரகஸ் என்னும் இடத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், கேள்வி நேரத்தின்பொழுது இஸ்லாம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு புனித திருகுர்ஆனின் முதல் சூராவாகிய அல்ஹம்து சூராவின் கருத்தை மிக அழகாகவும், உணர்வுபூர்வமாகவும், சபையோர் முன்நிலையில் எடுத்துக்கூறினார். 
இது பலருடைய மனதை வருடக்கூடியதாகவும், கண்ணீரை வரவழைப்பதாகவும் இருந்தது.
அவர் மைக்ரோபோனை கையிலெடுத்து, சூரா அல் பாத்திஹா கூறும் சமாதானம், அன்பு, சகிப்புத்தன்மை, போன்றவற்றை எவ்வாறு கையாள்கிறது என்பதற்கு விளக்கம் கூறியபொழுது, சபையோர்கள் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
அழகான இம்மார்க்கம் அராபிய நாகரீகத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் விஞ்ஞானம், கணிதம், மருத்துவம் போன்ற துறைகளில் அதிஉயர் பீடங்களை அடைந்திருந்தது.
இப்புனித புத்தகத்தில் முதல் பக்கத்திலேயே இறைவன் அளவற்ற அருளாளனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் கூறப்பட்டு, கடைப்பிடிக்கவும்பட்டது. அத்தகைய இறைவன் அனுப்பிய இந்த புனித நூல் இன்று நம் மத்தியில் மிகத்தவறாக சித்தரிக்கப்பட்டதன் மூலமாக மக்களின் மனதை நாம் துன்பப்படுத்துவதை விட்டும் எம்மை பாதுகாப்பானாக.
அங்கிருந்த சபையோரில் அதிகமானோர் பேசா மடந்தைகளாகவும், கண்ணீர் சொரிந்தவர்களாகவும் காணப்பட்டனர்.

நன்றி : Meezan-தராசு