இஸ்லாமோ போஃபுகளின் குருட்டு வாதம்
ஆதாரம் 1:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:இப்னு மஸ்வூத்(ரலி), அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப் மற்றும் முஆத் இப்னு ஜபல் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி 3806)
ஆதாரம் 2:
قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ وَالْفَضْلُ بْنُ دُكَيْنٍ قَالا: حَدَّثَنَا الْمَسْعُودِيُّ عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: كَانَ أَوَّلُ مَنْ أَفْشَى الْقُرْآنَ بِمَكَّةَ مِنْ فِيَّ رَسُولِ الله.
காஸிம் இப்னு அப்துர் ரஹ்மான் கூறியதாவது: நபி(சல்) அவர்களிடம் இருந்து முதன் முதலில் குர்ஆனை மக்காவில் ஓதியவர் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆவார்கள்.(தபக்கத் இப்னு சாஃத் 3/112)
قَالَ الزُّهْرِيُّ فَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ كَرِهَ لِزَيْدِ بْنِ ثَابِتٍ نَسْخَ الْمَصَاحِفِ وَقَالَ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ أُعْزَلُ عَنْ نَسْخِ كِتَابَةِ الْمُصْحَفِ وَيَتَوَلاَّهَا رَجُلٌ وَاللَّهِ لَقَدْ أَسْلَمْتُ وَإِنَّهُ لَفِي صُلْبِ رَجُلٍ كَافِرٍ يُرِيدُ زَيْدَ بْنَ ثَابِتٍ
அல் ஜுஹ்ரி கூறியதாவது உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா தெரிவிப்பதாவது ,அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) மஸாஹிஃப்களை பிரதி எடுப்பதை விரும்பவில்லை. மேலும் கூறினார்கள் : முஸ்லீம் மக்களே! அந்த முஸ்ஹஃபையும் , அவரது ஓதலையும் பிரதி எடுப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இஸ்லாத்தை தழுவிய போது அவர் (ஸைத் (ரலி) இறைமறுப்பாளரின் முதுகில் இருந்தார். (திர்மிதி 3104)
குருட்டு வாதம்:
இப்னு மஸ்ஊத்(ரலி) மட்டும்தான் குர்ஆன் ஓதலில் தலைசிறந்தவரா?
ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:(ஒரு முறை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "யார் மோசடி செய்கிறாரோ அவர், தாம் மோசடி செய்தவற்றுடன் மறுமை நாளில் வருவார்" (3:161) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டி விட்டு, "யாருடைய ஓதல் முறைப்படி நான் ஓத வேண்டுமெனக் கூறுகிறீர்கள்? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களை ஓதிக்காட்டியுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், அவர்களிலேயே நான்தான் இறைவேதத்தை நன்கு கற்றவன் என்பதை அறிந்துள்ளார்கள். என்னைவிட (இறைவேதத்தை) நன்கு அறிந்த ஒருவர் இருக்கிறார் என நான் அறிந்தால், (அவர் எங்கு இருந்தாலும் சரி) அவரை நோக்கி நான் பயணம் மேற்கொள்வேன்" என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் கூடியிருந்த (அந்த) அவையில் வீற்றிருந்தேன். அவர்களில் எவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை; அதற்காக அவரைக் குறை கூறவுமில்லை.(முஸ்லிம் 4860)
நபி(ஸல்) அவர்களிடம் முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்த ஸைத்(ரலி)
கதாதா(ரஹ்) அறிவித்தார்.இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித் ஆகியோர் தாம் அவர்கள்" என்று அனஸ்(ரலி) கூறினார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்" என்று பதிலளித்தார்கள்.(புகாரி 3810)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: «جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةٌ مِنَ الْأَنْصَارِ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَبُو الدَّرْدَاءِ، وَسَعْدُ بْنُ عُبَادَةَ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَفِي حَدِيثِ زَكَرِيَّا وَكَانَ جَارِيَةُ بْنُ مُجَمِّعِ بْنِ جَارِيَةَ قَدْ قَرَأَهُ إِلَّا سُورَةً أَوْ سُورَتَيْنِ
ஆமிர் அல் ஸ’அபி கூறியதாவது:
நபி(சல்) அவர்களிடம் அவர்களது காலத்தில் முழுமையாக மனனமிடப்பட்டு தொகுக்கப்பட்டது. அவர்கள் ஆறு பேரும் அன்சாரிகள் ஆவார்கள். அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அபூ ஸைத்(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி), அபூதர்தா(ரலி), சஅத் இப்னு உபாதா(ரலி) மற்றும் உபை இப்னு கஃப்(ரலி) ஆவர். மேலும் ஸகரிய்யா அவர்களது அறிவிப்பில் , முஜம்மி பின் ஜாரியா(ரலி) முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்தார்கள் ஒன்றிரண்டு சூராக்களை தவிர என்று இடம் பெற்றுள்ளது. ( மஜ்ம உல் கபீர் 2092)
أخبرنا أبو بكر محمد بن عبد الباقي أنا الحسن بن علي أنا أبو عمر بن حيوية أنا أحمد بن معروف نا الحسين بن الفهم نا محمد بن سعد أنا محمد بن يزيد الواسطي عن إسماعيل بن أبي خالد عن الشعبي قال جمع القرآن على عهد رسول الله صلى الله عليه وسلم ستة نفر أبي بن كعب ومعاذ بن جبل وأبو الدرداء وزيد بن ثابت وسعد وأبو زيد وكان مجمع ابن جارية قد جمع القرآن إلا سورتين أو ثلاثا وكان ابن مسعود قد أخذ بضعا وسبعين سورة وتعلم بقية القرآن من مجمع.
ஆமிர் அல் ஸ’அபி கூறியதாவது: நபி(சல்) அவர்களிடம் அவர்களது காலத்தில் முழுமையாக மனனமிடப்பட்டு தொகுக்கப்பட்டது. அவர்கள் ஆறு பேர் ஆவார்கள். அவர்கள் உபை இப்னு கஃப்(ரலி),முஆத் இப்னு ஜபல்(ரலி), அபூதர்தா(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி),சஅத் (ரலி) மற்றும் அபூ ஸைத்(ரலி), ஆவர். மேலும் முஜம்மி இப்னு ஜாரியா குர்ஆன் முழுவதையும் மனனமிட்டிருந்தார்கள் இரண்டு அல்லது மூன்று சூராக்களை தவிர. மேலும் இப்னு மஸ்ஊத்(ரலி) 70 சூராக்களை மனனமிட்டிருந்தார்கள். குர்ஆனின் ஏனைய பகுதியை முஜம்மி(ரலி)- அவர்களிடம் இருந்து மனனமிட்டார்கள். (அல் தாரிக் வ அல் திமிஸ்க் பாகம் 47 பக்கம் 111)
மேற்குறிபிட்ட செய்திகளில் இருந்து இரு விசயங்கள் தெளிவாகிறது." நிதர்சனம் என்னவென்றால் அபூபக்ர்(ரலி), உமர்(ரலி) மற்றும் உஸ்மான்(ரலி) ஆகியோர் ஸைத்தை(ரலி) குர்ஆனை தொகுக்க முன்னிறுத்தியது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களைவிட ஸைத் அவர்கள் சிறந்தவர் என்பதற்காக அல்ல. இப்னு மஸ் ஊத்(ரலி) இஸ்லாமில் முந்தியவர், அதிக போரில் பங்கு பெற்றவர் மேலும் பல சிறப்புக்கள் அவருக்கு உண்டு. ஆனால் ஸைத்(ரலி) அவர்கள் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களைவிட குர்ஆனில் அதிகம் கற்றவர். அவர்கள் நபி(சல்) அவர்களது காலத்திலேயே முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்தார்கள். மாறாக இப்னு மஸ்ஊத்(ரலி) எழுவது சூராக்களைதான் மனனமிட்டிருந்தார்கள். யார் நபி(சல்) அவர்களது காலத்திலேயே முழூ குர்ஆனையும் கற்று மனனமிட்டிருந்தாரோ அவர்தான் குர்ஆனை தொகுக்க முழு தகுதி உடையவர் அதனால் தேர்வு செய்யவும் பட்டார். இது இப்னு மஸ்ஊத்(ரலி) மீதான தாக்குதலாக எந்த அறிவற்றவரும் கருதக்கூடாது, இருவரிலும் ஸைத்(ரலி) அவர்கள் அதிகம் குர்ஆனை மனமிட்டவர் என்பதானது அனைத்திலும் சிறந்தவர் என்ற பொருளைத்தராது ஏனென்றால் ஸைத்(ரலி) அபூபகர் மற்றம் உமரை விட அதிகம் குர்ஆனை மனனமிட்டவர், ஆனால் அவர்கள் இருவரின் சிறப்பில் (ஸைத்(ரலி) மேன்மையானவரோ, நிகரனாவரோ அல்ல என்பது உறுதியானது." (தஃப்ஸீர் குர்துபீ 1/54)
No comments:
Post a Comment