பக்கங்கள் செல்ல

Wednesday, October 28, 2020

பெரும்பான்மை மக்களின் ஓதலும் உஸ்மான்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு, உஸ்மான்(ரலி),குர்ஆன் தொகுப்பு,கிராத் அல் ஆம்மா,அர்தத் அல் ஆஹிரா,


        குர்ஆன் எப்படி மக்கள் உள்ளங்களில் மனனம் செய்யப்பட்டு தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டது என்பதை இஸ்லாமியர்கள் ஆதாரப்பூர்வமாக நிரூவும் போது, இங்கிருக்கும் கிறித்தவ மிசனரிகளும், இஸ்லாமோஃபோபுகளும் , ஹதீஸ்களில் காணப்படும் குர்ஆன் தொகுக்கப்பட்டது குறித்த வரலாற்று குறிப்புகளை முன்வைத்து சில மூடத்தனமான விமர்சனங்களை முன்வைத்த ஆர்தர் ஜெஃப்ரி போன்ற ஓரியண்டலிஸ்டுகளின் புத்தகங்களில் இருந்தும், தற்காலத்தில் சில இஸ்லாமிய எதிர்ப்பு ஆங்கில வளைத்தளத்தில் பதியப்பட்டவைகளையும் அடிப்படையாக கொண்டு தாங்களே தேடி கண்டறிந்தது போன்று விமர்சனங்களை செய்து வருகின்றனர். உண்மையில் சொல்வதாக இருந்தால் ஆர்தர் ஜெஃப்ரி போன்ற ஓரியண்டலிஸ்டுகளே, இஸ்லாமிய அறிஞர்கள் சிலர் இது குறித்து எழுதிய பண்டைய கிரந்தங்களில் இருந்துதான் இத்தகைய விமர்சனங்களை, அறியாமையையும், காழ்புணர்ச்சியையும் அதில் ஏற்றி தங்களது புத்தகங்களில் வழங்கி உள்ளனர். இந்த விசயங்களில் ஆர்தர் ஜெஃரியின் தந்தையாக கருத்தப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களின் நூல்கள் எல்லாம் கிபி 10ம் நூற்றாண்டுகளில் இருந்து இஸ்லாமிய சமூகத்தால் பார்க்கப்பட்டு , அதற்கான தெளிவுரைகளையும் இஸ்லாமிய அறிஞர்களே வழங்கியும் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் இந்த கட்டுரையின் இறுதியில் காணவுள்ளோம்.

   மேற்குறிபிட்ட படியான விமர்சனங்களில், உஸ்மான்(ரலி) அவர்களது காலத்தில் தொகுக்கப்பட்டு பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட குர்ஆன் பிரதிகளின் தொகுத்தலுக்கான நடைமுறைகள் குறித்தவைகளையே இங்கிருக்கும் இஸ்லாமோஃபோபுகள் தங்களது முதன்மை விமர்சனமாக முன்வைத்து வருகின்றனர். உஸ்மான்(ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் நபி(சல்) அவர்களுக்கு இறுதியாக ஓதிக்காண்பிக்கப்பட்ட குர்ஆன் அல்ல என்பது இவர்களின் பிரதான வாதம். அதற்கான விளக்கத்தை தகுந்த தரவுகளுடன் இந்த கட்டுரையில் விளக்கவுள்ளோம்.

உஸ்மான்(ரலி) அவர்களது தொகுப்புதான் அர்தத் அல் ஆகிரா

        நபி(சல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்களால் இறுதி வருடத்தில் ஓதிகாண்பிக்கப்பட்ட  அர்தத் அல் ஆகிரா- இறுதி ஓதல் என்றால் என்ன என்பதை நாம் விளங்கிகொள்ளவது அவசியமாகும்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்:
      ஒவ்வோர் ஆண்டுக்கொரு முறை (வானவர் ஜிப்ரீல் அதுவரை அருளப்பெற்ற) குர்ஆன் வசனங்களை நபி(ஸல்) அவர்களுக்கு (மொத்தமாக) ஓதிக்காட்டுவது வழக்கம். நபி(ஸல்) அவர்கள் இறந்த ஆண்டில் இரண்டுமுறை அவர்களுக்கு (ஜிப்ரீல்) ஓதிக்காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் (ரமளான் மாதத்தின் இறுதிப்)பத்து நாள்கள் 'இஃதிகாஃப்' மேற்கொள்வது வழக்கம். அவர்கள் இறந்த ஆண்டு, (ரமளானில்) இருபது நாள்கள் 'இஃதிகாஃப்' மேற்கொண்டார்கள். (புஹாரி 4998)

    மேற்குறிபிட்ட செய்தியில் கூறப்பட்டது போல் நபி(சல்) அவர்கள் இறந்த வருடத்தில் குர்ஆன் இரண்டுமுறை நபி(சல்) அவர்களுக்கு ஜிப்ரைல்(அலை) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டது. இந்த இறுதி ஓதல்தான் அர்தத் அல் ஆகிரா என்று அழைக்கப்படுகிறது. இது குறித்த நபித்தோழரான சமூரா(ரலி) பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்
 
أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ الْخَلَدِيُّ، ثنا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْبَغَوِيُّ، بِمَكَّةَ، ثنا حَجَّاجُ بْنُ الْمِنْهَا، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: عُرِضَ الْقُرْآنُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَاتٍ فَيَقُولُونَ: إِنَّ قِرَاءَتِنَا هَذِهِ هِيَ الْعَرْضَةُ الْأَخِيرَةُ
சமூரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(சல்) அவர்களுக்கு பல முறை குர்ஆன் ஓதிகாண்பிக்கப்பட்டது. இன்று நமது ஓதல்தான் அர்தத் அல் ஆகிரா என்று கூறப்படுகிறது. ( முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் 2904)
    மேற்குறிபிட்ட இறுதி ஓதல் குறித்து பேசுவதோடு வேறு ஒரு அதிகப்படியான தகவலையும் தருகிறது. மேற்குறிபிட்ட செய்தியில் அல்ஹசன் அல் பஸரி வழியாக சமூரா(ரலி) அறிவிக்கிறார்கள். அல்ஹசன் அல் பஸரி கிபி 642ல் பிறந்தவர் ஆவார். உஸ்மான(ரலி) அவர்களது ஆட்சிக்காலம் கிபி 644- 656 வரையிலானது கிபி 650ல் தான் குர்ஆனை தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அல்ஹசன் அல் பஸரி அவர்களிடம் சமூரா(ரலி) (மரணம் கிபி 680) குறிப்பிட்டு கூறுவதாக மேற்குறிபிட்ட செய்தி இடம் பெறுகிறது. ஆக மேற்குறிபிட்ட செய்தியானது உஸ்மான்(ரலி) அவர்களின் தொகுப்பு குறித்துதான் பேசுகிறது என்பது நமக்கு தெளிவாக நிருபனமாகிறது. 

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَعَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبِيدَةَ، قَالَ: الْقِرَاءَةُ الَّتِي عُرِضَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعَامِ الَّذِي قُبِضَ فِيهِ هِيَ الْقِرَاءَةُ الَّتِي يَقْرَؤُهَا النَّاسُ الْيَوْمَ فِيهِ 

   உபைதா அவர்கள் கூறியதாவது: 
            நபி(சல்) அவர்கள் இறந்த ஆண்டில் ஓதப்பட்டதுதான் நபி(சல்) அவர்களது ஓதல் ஆகும். அதைதான் இன்று மக்கள் ஓதி கொண்டிருக்கிறார்கள். (முஸன்னஃப் இப்னு அபிஷைபா 30291)
       மேலும் உபைதா அவர்கள் அபூபகர்(ரலி) அவர்களது காலத்தின் குர்ஆன் தொகுப்பையும் கண்டவர், உஸ்மான்(ரலி) காலத்தின் குர்ஆன் தொகுப்பையும் கண்டவர் ஆவார்.
     ஆக மேற்குறிபிட்ட இரண்டு செய்திகளும் ஒரு விசயத்தை தெளிவாக உணர்த்துகின்றன. உஸ்மான்(ரலி) அவர்களின் தொகுப்பானது நபி(சல்) அவர்களது குர்ஆனின் இறுதி ஓதல்தான் என்பதை உறுதிப்பட நிறுவுகிறது. மேலும் உஸ்மான்(ரலி) அவர்களால் குர்ஆனை தொகுக்க நியமிக்கப்பட்ட ஜைத் பின் ஸாபித்(ரலி) அவர்களின் ஓதல்தான் நபி(ஸல்) அவர்களது இறுதி ஓதலும், அன்றைய பெரும்பான்மையினரின் ஓதலும் ஆகும். பெரும்பான்மை மக்களின் ஓதல் இஸ்லாமிய வரலாற்றில் கிராத் அல் ஆம்மா என்று அழைக்கப்படுகிறது.

ﻭﺭﻭﻱ ﻋﻦ ﺃﺑﻲ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ اﻟﺴﻠﻤﻲ، ﻗﺎﻝ: ﻛﺎﻧﺖ ﻗﺮاءﺓ ﺃﺑﻲ ﺑﻜﺮ، ﻭﻋﻤﺮ، ﻭﻋﺜﻤﺎﻥ، ﻭﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ، اﻟﻤﻬﺎﺟﺮﻳﻦ ﻭاﻷﻧﺼﺎﺭ ﻭاﺣﺪﺓ، ﻛﺎﻧﻮا ﻳﻘﺮءﻭﻥ ﻗﺮاءاﻟﻌﺎﻣﺔ، ﻭﻫﻲ اﻝﻗﺮاءاﻟﺘﻲ ﻗﺮﺃﻫﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ ﺟﺒﺮﻳﻞ ﻣﺮﺗﻴﻦ ﻓﻲ اﻟﻌﺎﻡ اﻟﺬﻱ ﻗﺒﺾ ﻓﻴﻪ، ﻭﻛﺎﻥ ﻋﻠﻰ ﻃﻮﻝ ﺃﻳﺎﻣﻪ ﻳﻘﺮﺃ ﻣﺼﺤﻒ ﻋﺜﻤﺎﻥ، ﻭﻳﺘﺨﺬﻩ ﺇﻣﺎﻣﺎ. ﻭﻳﻘﺎﻝ: ﺇﻥ ﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﺷﻬﺪ اﻟﻌﺮﺿﺔ اﻷﺧﻴﺮﺓ اﻟﺘﻲ ﻋﺮﺿﻬﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ ﺟﺒﺮﻳﻞ، ﻭﻫﻲ اﻟﺘﻲ ﺑﻴﻦ ﻓﻴﻬﺎ ﻣﺎ ﻧﺴﺦ ﻭﻣﺎ ﺑﻘﻲ.

      அபூபகர், உமர், உஸ்மான் , ஸைத் இப்னு ஸாபித், அனைத்து முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளின் ஓதல் ஒன்றுதான். அவர்கள் குர்ஆனை கிராத் அல் ஆம்மா (பெரும்பான்மை மக்களின் ஓதல்) அடிப்படையில் ஓதினார்கள். இதே ஓதல்தான் நபி(சல்) அவர்கள் மரணித்த ஆண்டில் ஜிப்ரீல் அவர்களால் இரண்டு முறை ஓதிக்காண்பிக்கப்பட்டது. ஸைத் இப்னு ஸாபித் அவர்கள், இந்த இறுதி ஓதலின் (அர்தா அல் ஆகிரா) போது அங்கிருந்தார்கள். அவர் மரணிக்கும் வரை இந்த ஓதலைத்தான் மக்களுக்கு கற்பித்தார்கள்       ( அறிவிப்பாளர்: அபூ அப்திர் ரஹ்மான் அஸ்ஸலாமி, ஸரஹ் ஸுன்னா 4/525)

மேலும் ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களை ஒருமுறை உமர்(ரலி) அவர்கள் ஓதச் சொல்லி, அதைதான் தாங்களும் ஓதுவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

ﻓﻘﺎﻝ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﻟﺰﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ اﻗﺮﺃ ﻳﺎ ﺯﻳﺪ ﻓﻘﺮﺃ ﺯﻳﺪ ﻗﺮاءاﻟﻌﺎﻣﺔ ﻓﻘﺎﻝ ﻋﻤﺮ اﻟﻠﻬﻢ ﻻ ﺃﻋﺮﻑ ﺇﻻ ﻫﺬا

     ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை ஓத உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) கட்டளை இட்டார்கள். ஸைத்(ரலி) அவர்கள் பெரும்பான்மை மக்களின் ஒதலை(கிராத் அல் ஆம்மாவை) ஓதிக்காட்டினார்கள். அதற்கு உமர் (ரலி) இதைத்தான் நானும் அறிவேன் என்று கூறினார்கள்( தாரிக் திமிஸ்க் லி இப்னு அஸாகிர் 7/338, 68/102)
        மேற்குறிபிட்ட ஆதாரங்கள் கிராத் அல் ஆம்மா  - பெரும் பான்மை மக்களின் ஓதலில்தான் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுத்தார்கள் என்பதை விளக்க போதுமானது. மேலும் இந்த கிராத் அல் ஆம்மா தான் நபி(சல்) அவர்களின் இறுதி ஓதல். அன்றைய சமூகத்தின் பெரும்பான்மை ஓதலும் ஆகும். 




          மேற்குறிபிட்ட உதாரணங்களில் இன்றிருக்கும் பெரும்பான்மை மக்களின் ஓதல் நபி(சல்) அவர்களின் இறுதி ஓதலான கிராத் அல் ஆம்மாவுடன் ஒத்திருப்பதை காண இயலும். சென்ற தொடரில் குர்ஆன் என்பது வெகுஜன ஓதல்-கேட்டல் முறை மூலமாக ஒவ்வொரு தலைமுறையிலும் கடத்தப்பட்டது என்பதை வரலாற்று ஆவணங்களின் மூலம் விளக்கியிருந்தோம். 
    
    அதனால் இன்றிருக்கும் பெரும்பான்மை மக்களின் ஒதல்தான் சென்ற தலைமுறையின் பெரும்பான்மை ஓதாலாக இருந்திருக்கும். குர்ஆன் கிராத் பரவலில் உலகளாவிய அளவில் எந்த காலத்திலும் அரசியல் அழுத்தம் இருந்ததில்லை. உஸ்மான்(ரலி) அவர்களது காலத்தில் கூட உலகின் சிறு பகுதிதான் இஸ்லாமிய ஆளுகையில் இருந்தது என்பது குறிப்பிடதக்கது. மேலும் பாரசீகத்தில் தபரி குறிப்பிடும் கிராத் அல் ஆம்மாதான் இஸ்லாமிய ஸ்பெயினின் குர்துபி குறிப்பிடும் கிராத் அல் ஆம்மா.அந்த பெரும்பான்மை ஓதல்தான் இன்றைய பெரும்பான்மை ஓதலாக இருக்கிறது என்பதை மேலே இருக்கும் தஃப்ஸீர் குறிப்புகளால் புரிந்து கொள்ள முடியும்.  குர்ஆன் , வெகுஜன ஓதல்-கேட்டல் முறை மூலமாக ஒவ்வொரு தலைமுறையிலும் கடத்தப்பட்டது என்பதால் இன்றைய பெரும்பான்மை ஓதல்தான் 1400 வருடங்களுக்கு முந்தைய மக்களின் பெரும்பான்மை ஓதலாக இருந்தது என்பதை உறுதியாக கூறமுடியும். நபி(சல்) அவர்களது இறுதி ஓதல்தான் அன்றைய சமூகத்தின் மற்றும் அடுத்து வந்த சமூகத்தின் பெரும்பான்மையினர் ஓதல் என்பதையும் அதனையே ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் உஸ்மான்(ரலி) காலத்தில் தொகுத்தார்கள்  என்பது வரலாற்றில் தெளிவாக பதியப்படுள்ளது என்பதை மேலே விளக்கியுள்ளோம். 

      இத்தகைய தரப்படுத்துதல் துள்ளியமாக இஸ்லாமிய அறிஞர்களால் வரலாற்றில் பதியப்பட்டுள்ளதால்தான் எது பெரும்பான்மை ஓதல் என்பதையும் எது மாறுபட்ட ஓதல் என்பதையும் இன்றும் சரியாக பிரித்து அறிய முடிகிறது.     மேலும் இத்தகைய மாறுபட்ட ஓதல் முறைகள் குறித்து பேசும் நூல்களும், தஃப்ஸீர்களும் இஸ்லாமிய வரலாற்றில் ஏராளம். இஸ்லாமியர்கள் 12 நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆனின்   " Variant Reading"களை இனம் கண்டு அதை பிரித்து அறிவித்திருப்பது இஸ்லாமிய சமூகம் குர்ஆனின் மீது கொண்ட அக்கறையை பறைசாற்றுவதாய் உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்....  
 

Sunday, October 25, 2020

உள்ளத்தில் பாதுக்காக்கப்பட்ட அல் குர்ஆன்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
உள்ளத்தில் பாதுக்காக்கப்பட்ட அல் குர்ஆன்

    குர்ஆனின் பாதுகாப்பு குறித்தும் அது எவ்வாறு பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் இந்த இஸ்லாமிய சமூகம் நன்கு அறியும். ஆயினும் இன்று முளைத்திருக்கும் சில மிசனரிகளும் தங்களை முன்னாள் முஸ்லீம்கள் என்று கூறித்திரியும் சிலரும் இஸ்லாம் மீது கொண்ட காழ்ப்புணர்சியாலும் , ஃபோபியாவினாலும் குர்ஆன் எந்த வழியிலும் பாதுக்காக்கப்பட வில்லை என்று அவதூறு பரப்பி திரிகின்றன. ஆனால் அப்படி பரப்பி திரியும் அரைவேக்காடுகள் ஒரு விஷயத்தை கவனிக்கவோ பகுத்தறிவை கொண்டு சிந்திக்கவோ மறந்துவிட்டன.  எழுத்து வடிவிலும் ஓசை வடிவிலும் பாதுகாக்கப்படாத ஒரு ஏடு எப்படி பல கோடி முஸ்லீம்களிடம் அதுவும் உலகின் பல பகுதியில் வாழும் முஸ்லீம்களிடம் ஒரே மாதிரி இருக்கிறது என்பதை இவர்கள் பகுத்தறிவு ரீதியாக விளக்க வேண்டும். எந்த வழியிலும் பாதுகாக்கப்படாத ஒரு ஏடு பல கோடி மக்களின் கையில் ஒரே மாதிரி இருக்கிறது என்பது ஒரே இரவில் அனைவரிடமும் வந்துவிட வில்லை என்பதற்கு போதிய சான்று. ஆக இவர்களது வெத்து வாதத்தால் நம் கண் முன்பு இருக்கும் ஒரு விசயத்தை தெளிவாக விளக்க முடியவில்லை என்றால் இவர்களது வாதத்தில் மெகா சைஸ் ஓட்டை இருக்கிறது என்பது நிரூபனம் ஆகிறது. இந்த குர்ஆன் எப்படி பல கோடி முஸ்லீம் மக்களின் கையில் ஒரே போன்றுள்ளது என்பதற்கான அடிப்படையை இந்த கட்டுரையில் காணவுள்ளோம் இன்ஷா அல்லாஹ்.

குர்ஆன் மக்களின் உள்ளங்களில்: ஒரு வரலாற்று பார்வை

        குர்ஆன் எவ்வாறு ஓசை வடிவில் பாதுக்காப்படுகிறது என்பதற்கு முன்சென்ற தொடரில் கண்டிருக்கிறோம். இன்றும் உலகில் குர்ஆனை கோடிக்கணக்கான மக்கள் மனனமிட்டு வருவதை நாம் அறிவோம். இப்படி ஒவ்வொரு தலைமுறையிலும் கோடிக்கணக்கான மக்களினால் மனனமிடப்பட்டு இன்றும் குர்ஆன் பாதுக்காக்கப்படுகிறது. இது குறித்த சிறிய வரலாற்று சுருக்கம்.

நபி(சல்) அவர்கள் உருவாக்கிய ஸுஃபா கல்வி நிலையங்கள் 

         நபி(சல்) அவர்கள் மதீனாவிற்கு சென்ற பிறகு அவர்கள் உருவாக்கிய நபவீ பள்ளியில் முதன் முதலில் ஸுஃபா கல்வி நிலையத்தை உருவாக்கினார்கள். அங்கு தங்கி இருப்பவர்கள் அஸ்ஹாபுஸ்ஸுஃபா- ஸுஃபா வாசிகள் அல்லது திண்ணை தோழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் ஏழைத்தோழர்கள், பயணிகள் என்று அனைவரையும் உள்ளடக்கியவர்கள். இவர்களின் முக்கிய பணி நபி(சல்) அவர்களிடம் இருந்து குர் ஆனை கற்பது, மார்க்க விளக்கங்களை கற்பது. அதே போல் போர்களிலும் இவர்களே முன்னின்றனர். இத்தகைய திண்ணை தோழர்களில் ஒருவர்தான் அதிக ஹதீஸ்களை அறிவித்த அபூஹுரைரா(ரலி) அவர்களும். மேலும் இந்த திண்ணையின் கொள்ளளவு குறித்து ஹதீஸ்களில் காணமுடிகிறது. ஜைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களது திருமணத்தின் போது இந்த திண்ணை நிறைந்ததாகவும் அங்கு சற்று ஏறக்குறைய 300 நபர்கள் இருந்ததாகவும் அனஸ் ரலி அவர்கள் பின்வரும் செய்தியில் அறிவிக்கிறார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

….…………..அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை (ஓரிடத்தில்) வை" என்று கூறிவிட்டு, "நீ சென்று எனக்காக இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் மற்றும் நீ சந்திப்பவர்களையும் அழைப்பாயாக!" என்று கூறி, சிலரது பெயரைக் குறிப்பிட்டார்கள். அவ்வாறே அவர்கள் பெயர் குறிப்பிட்டவர்களையும் நான் சந்தித்தவர்களையும் அழைத்தேன். -இதை அறிவிப்பவரான அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "ஏறக்குறைய முன்னூறு பேர் இருந்தார்கள்" என அனஸ் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். (தொடர்ந்து அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அனஸ்! அந்தப் பாத்திரத்தை எடு" என்றார்கள். அப்போது மக்கள் வந்து நுழைந்தனர். திண்ணையும் (அஸ்ஸுஃபா) அறையும் நிரம்பியது……(முஸ்லிம் 2803 )

           மேலும் இந்த திண்ணைவாசிகளை குர்ஆனை கற்கவும் , ஓதிகாட்டவும் தொடர்ந்து  நபி(சல்) அவர்கள் ஆர்வமூட்டினார்கள். 

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலின்) திண்ணையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது "உங்களில் எவர் ஒவ்வொரு நாள் காலையிலும் "புத்ஹான்" அல்லது "அகீக்" (சந்தைக்குச்) சென்று பாவம் புரியாமலும் உறவைத் துண்டிக்காமலும் பருத்த திமில்கள் கொண்ட இரு ஒட்டகங்களுடன் திரும்பி வருவதை விரும்புவார்?" என்று கேட்டார்கள். "நாங்கள் (அனைவருமே) அதை விரும்புவோம்" என்று நாங்கள் பதிலளித்தோம். அதற்கு அவர்கள், "உங்களில் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக் "கற்றுக்கொள்வது" அல்லது "ஓதுவது" இரு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் மூன்று ஒட்டகங்களைவிடவும்,நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களைவிடவும் சிறந்ததாகும். இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த அளவு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக அமையும்" என்று கூறினார்கள்.  (முஸ்லிம் 1469)

     மேலும் இங்கு கல்வி கற்போர் இஸ்லாம் குறித்து கற்பிக்கவும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். உதாரணமாக ஹிஜ்ரி 4 ம் ஆண்டு இவ்வாறு குர்ஆனை கற்ற 70 பேரை இஸ்லாமை கற்பிக்க இணைவைப்போரிடம் அனுப்பினார்கள் அந்த எழுவது பேரையும் அந்த இணைவைப்பாளர்கள் படுகொலை செய்துவிட்டனர்.
ஆஸிம் அறிவித்தார்.
குனூத் பற்றி அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'குனூத் (நபி(ஸல்) அவர்கள் காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்' என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா? பின்பா? என்று கேட்டேன். அதற்கு 'ருகூவுக்கு முன்பு தான்' என்று கூறினார்கள். ருகூவுக்குப் பிறகு என்று நீங்கள் கூறினார்கள் என ஒருவர் எனக்குக் கூறினாரே என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். 'அவர் பொய் சொல்லி இருக்கிறார். நபி(ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம்தான் குனூத் ஓதினார்கள். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரீகீன்களைவிடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே ஓர் உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்றுவிட்டனர்.) அப்போது நபி(ஸல்) அவர்கள் முஷ்ரீகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள் என்று அனஸ்(ரலி) விடையளித்தார்கள். (புகாரி 1002) 
     மதீனா வாழ்கையின் ஆரம்ப காலத்திலேயே 70 நபர்கள் அதுவரை இறங்கிய குர்ஆனை மனனமிட்டிருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறாக இருந்த தோழர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு வரலாற்று ஆசிரியரும் பலவாறாக குறிப்பிடுகிறார்கள். அதாவது 100-900 பேர் வரை திண்ணை தோழர்களின் எண்ணிக்கை இருந்ததாக கூறப்படுகிறது.

السمهودي أن أبا نعيم سرد أسماءهم في الحلية فزادوا على المائة 

அல்சம்ஹூதி கூறியதாவது : அபுநுஐம் அல் ஹிலாயாவில் அவர்களின் நூறு பேரின் பெயர்களை குறிபிட்டுள்ளார்கள்       (சியாரத் அல் நபவீ அல் ஸஹீஹா(1/260))

இது குறித்து கத்தானி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

وقال قتادة بلغوا تسعمائة رجل 

கத்தாதா அவர்கள் (திண்ணை தோழர்களின்) எண்ணிக்கையை 900 எட்டும் என்று கூறுகிறார்கள். (அல் கத்தானி அவர்களது அல்தராதிப் அல் இதாரியா 1/367 ).
      நூற்றுக்கனாக்கனோர் நபி(சல்) அவர்களது காலத்திலேயே அவர்களிடம் இருந்து நேரடியாக குர்ஆனை கற்போராய் இருந்துள்ளனர் என்பது உறுதியாக அறிய முடிகிறது. இது போக நபிதோழர்கள் - நபிதோழர்களிடம் இருந்து கற்றவர்கள் என்று குர்ஆன் முழுமையாகவோ, பகுதிகளாகவோ நபி(சல்) அவர்களது காலத்திலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் மனனமிடப்பட்டிருந்தது. 

நபிதோழர்களின் காலம்:


     நபி(சல்) அவர்களது காலத்திற்கு பின்னான காலத்திலும் நேரடியாக குர்ஆனை கேட்டு மனனமிடும் வழக்கம் தொடர்ந்தது. ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அதன் நன்மையை கருதி குர்ஆனை மனனமிடத்துவங்கினர். இது குறித்து இப்னு மஷ்காம்(ரஹ்) என்ற தாஃபி (நபிதோழர்களை கண்டவர்) பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

عن سام ابن مشكم قال: قال لي أبو الدرداء: اعدد من يقرأ عندي القرآن. فعددتهم ألفا وستمائة ونيفا، وكان, لكل عشرة منهم مقرىء 
    இப்னு மஷ்காம் கூறியதாவது: அபுதர்தா(ரலி) என்னிடம் கூறியதாவது:  இங்கு குர்ஆனை என்னோடு கற்பவர்களை எண்ணச் சொன்னார்கள். நான் எண்ணிய போது ஆயிரத்து ஆறுநூறாக இருந்தது. ஒவ்வொரு பத்து நபர்களுக்கும் ஒரு காரி இருந்தார்கள்.          (அல் தஹபியின் மாஃரிஃபத் அல் குர்ரா ப.எண்:20, இப்னு ஜாஸாரியின் கையத் அல் நிஹாயா ஃபீ தபக்கத் அல் குர்ரா 2480, 1/606-607)
மேற்குறிபிட்டவாறே வேறு ஒரு தாஃபியும் தெரிவிக்கிறார்.
قال سويد بن عبد العزيز: كان أبو الدرداء إذا صلى الغداة في جامع دمشق اجتمع الناس للقراءة عليه فكان يجعلهم عشرة عشرة وعلى كل عشرة عريفا، ويقف هو في المحراب يرمقهم ببصره، فإذا غلط أحدهم رجع إلى عريفه فإذا غلط عريفهم رجع إلى أبي الدرداء يسأله عن ذلك
சுவைத் இப்னு அப்துல் அஸீஸ் கூறியதாவது: அபுதர்தா(ரலி) பஜர் தொழுகையை டமாஸ்கஸ் பள்ளியில் நிறைவேற்றினால் மக்கள் குர் ஆனை ஓத கற்றுக்கொள்ள திரண்டு விடுவார்கள். அவர்களை பத்து நபர்களாக பிரித்து பத்து பேருக்கு ஒரு காரி என்று நியமிப்பார். மிஃராபில் நின்று அதை மேற்பார்வையிடுவார். இதில் ஓதுபவர் தவறிழைத்தால் அதை அந்த குழுவின் காரியிடம் தெரிவிப்பார்கள். காரி ஓதுவதில் தவறிழைத்தால் அபுதர்தாவிடம் முறையிடப்பட்டு அது குறித்து விளக்கப்படும். (தஹபியின் மாஃரிஃபத் அல் குர்ரா அல் கிபார் ப.எண்:20) 
          மேலும் பஸ்ராவில் நபித்தோழர்கள் காலத்தில் பின்வரும் நிலையை அறிய முடிகிறது. உமர்(ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தில் கிபி 639ல் பஸ்ரா நகரித்தின் கவர்னராக நியமிக்கப்பட்டவர் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) ஆவார்கள். அவர்கள் உஸ்மான(ரலி) அவர்களது ஆட்சிகாலம் கிபி 644 வரை பொறுப்பில் இருந்தார்கள். கிட்டதட்ட நபி(சல்) அவர்கள் மரணித்து 10 ஆண்டுகளில் பஸ்ராவில் காணப்பட்ட நிலையை பின்வரும் செய்தி கூறுகிறது.

حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ قَالَ: جَمَعَ أَبُو مُوسَى الْقُرَّاءَ، فَقَالَ: لَا يَدْخُلَنَّ عَلَيْكُمْ إِلَّا مَنْ جَمَعَ الْقُرْآنَ ، قَالَ: فَدَخَلْنَا زُهَاءَ ثَلَاثِمِائَةِ رَجُلٍ فَوَعَظَنَا وَقَالَ: أَنْتُمْ قُرَّاءُ هَذَا الْبَلَدِ وَأَنْتُمْ، فَلَا يَطُولَنَّ عَلَيْكُمُ الْأَمَدُ فَتَقْسُو قُلُوبُكُمْ كَمَا قَسَتْ قُلُوبُ أَهْلِ الْكِتَابِ
அபுல் அஸ்வத்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூமூசா அல் அஸ் அரீ(ரலி) அவர்கள் குர்ஆனை கற்றவர்கள் தவிர யாரும் வரக்கூடாது என்று குறிப்பிட்டு ஒரு கூட்டத்தை கூட்டினார்கள். (அவர்களது அழைப்பை ஏற்று) குர் ஆனை கற்றறிந்த முன்னூறு பேர் அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம் அபூமூசா(ரலி) அவர்கள் “இந்நகரத்தில் நீங்கள்தாம் ஓதுபவர்கள். காலம் நீண்டுவிட்ட போது வேதம் அருளப்பட்டவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம்” என்று கூறினார்கள். (முஸன்னஃப் இப்னு அபி ஷைபா 34823) 
        மேற்குறிபிட்ட சூழல் என்பது ஒரு சில பகுதியில் இருக்கும் நிலையே ஆகும். இப்படி அடுத்த தலைமுறையில் பல்லாயிரக்கணக்கானோர் குர்ஆனை மனனமிட்டனர் என்பது தெளிவாக வரலாற்றில் காணமுடிகிறது. பின்னாட்களில் குர்ஆனை கற்பிக்க பள்ளிவாசல்களுடன் இணைத்த குத்தப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. பிறகு 10-11 ம் நூற்றாண்டுகளில் உயர்கல்வி இஸ்லாமிய சட்ட ஆய்வுகளுக்காக மதரஸாக்கள் உருவாகின, இவ்வாறு அமைக்கப்பட்ட மத்ரஸாக்கள் பக்தாதில் மட்டும் 10ந் நூற்றாண்டிற்குள் 300 ஆக இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள்(1)

   இவ்வாறு மனனமிடப்பட்டு ஒவ்வொரு தலைமுறையிலும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டதால்தான்  இமாம் சுயூத்தி அவர்கள் குர்ஆன் குறித்த தனது இத்கான் ஃபீ உளூம் அல் குர்ஆன் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்:

الْأَوَّلُ: لَا خِلَافَ أَنَّ كُلَّ مَا هُوَ مِنَ الْقُرْآنِ يَجِبُ أَنْ يَكُونَ مُتَوَاتِرًا فِي أَصْلِهِ وَأَجْزَائِهِ وَأَمَّا فِي مَحَلِّهِ وَوَضْعِهِ وَتَرْتِيبِهِ فَكَذَلِكَ عِنْدَ مُحَقِّقِي أَهْلِ السُّنَّةِ لِلْقَطْعِ بِأَنَّ الْعَادَةَ تَقْضِي بِالتَّوَاتُرِ فِي تَفَاصِيلِ مِثْلِهِ لِأَنَّ هَذَا الْمُعْجِزَ الْعَظِيمَ الَّذِي هُوَ أَصْلُ الدِّينِ الْقَوِيمِ وَالصِّرَاطِ الْمُسْتَقِيمِ مِمَّا تَتَوَفَّرُ الدَّوَاعِي عَلَى نَقْلِ جُمَلِهِ وَتَفَاصِيلِهِ فَمَا نُقِلَ آحَادًا وَلَمْ يَتَوَاتَرْ يُقْطَعُ بِأَنَّهُ لَيْسَ مِنَ الْقُرْآنِ قَطْعًا
குர்ஆன் முழுமையாகவும், பகுதியாகவும் தவறே ஏற்படாத அளவிற்கு எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களால் (முத்தாவாதீர்) அறிவிக்கப்பட்டது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அஹ்லுஸ் சுன்னாவை பொருத்தவரை அதன் அமைப்பும், அதன் வரிசை முறையும் எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது , அதனால் அது எந்த சர்ச்சைக்கும் அப்பார்பட்டது. ஏனென்றால் எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களின் செய்தியை உள்ளடக்கிய ஒரு ஆவணம் குர்ஆன் என்பதால், அது அமோதிக்கப்பட்ட உண்மையாகும். அதன் விளையவாக எண்ணிலடங்கா அறிவிப்பாளர் இன்றி ஒற்றை அறிவிப்பாளர் வழியாக வந்த எதுவும் குர்ஆன் ஆகாது (இத்கான் ஃபீ உளூம் அல் குர்ஆன் 1/266)
    மேலே உள்ள கருத்தை எளிமையாக புரிவது என்றால் குர்ஆன் என்பது முதன்மை முத்தவாதீர் செய்தி. அதில் இருக்கும் செய்திகள், அதன் அமைப்பு அதன் வசன வரிசை உட்பட அதற்கு முரணாக வரும் எந்த செய்தியும் நிராகரிக்கத்தக்கது. 


மேலும் குர்ஆன் கற்றல் குறித்து மேற்கத்திய அறிஞர்களும் இந்த கருத்தைதான் முன்வைக்கின்றனர்.இது குறித்து வில்லியம் கிரகாம் என்ற ஹார்வர்ட் பல்கலை ஆசிரியர் குறிபிடும் போது பின்வருமாறு கூறுகிறார்,
ஒரு ஆங்கில அரபியே ஆய்வாளர் முன்பே குறிபிட்டது "குர் ஆனின் முதலில் இருந்து கடைசி வரை கேட்கப்படவேண்டிய புத்தகமே அன்றி வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் அல்ல. இஸ்லாமிய வரலாற்றின் 13 நூற்றாண்டுகளாய் எண்ணிலடங்கா மில்லியன் இஸ்லாமியர்களுக்கு அல் கிதாப் கற்கப்பட்டு, ஓதப்பட்டு பல தடவை ஓதல்களால் மணனமிடப்பட்டு வாய்வழியாக கடத்தப்பட்டிருக்கிறது (P.No: 79-80, Beyond the Written Word: Oral Aspects of the Scriptures in History of Religion by William A.Graham )

மேற்குறிபிட்ட அறிஞரின் கூற்றே அறிவுள்ள மனிதனுக்கு போதுமானது எப்படி இன்று உலகின் பல கோடி இஸ்லாமியர்களின் கையில் ஒரே வகையான குர்ஆன் இருக்கிறது என்பதை விளங்கிகொள்ள.  மேற்குறிபிட்ட வரலாற்று தரவுகள் நமக்கு பின்வரும் முடிவுகளை தருகின்றன.

1.குர்ஆன் என்பது ஒவ்வொரு தலைமுறையிலும் ஆயிரக்கணக்கானோர்களால் மனனமிடப்பட்டு ஏற்கப்பட்டது. மேலே இருக்கும் வரலாற்று ஆவணங்கள் தெளிவாக ஒன்றை விளக்குகிறது அதாவது குர்ஆன் ஆனது வெகுஜன ஓதல்- கேட்டல் முறை மூலமாக நபி(சல்) அவர்களது காலம் முதல் ஐவேலை தொழுகையின் மூலமும், கற்றுக்கொடுத்தல் மூலமும் ஒவ்வொரு தலைமுறையிலும் கடத்தப்பட்டுள்ளது. இன்றும் அதே முறை கையாளப்படுகிறது. 

2. குர்ஆனில் அறிவிப்பாளர் தொடர் என்பது அனைத்து கிரந்தகளில் கூறப்பட்ட முத்தவாதீரான ஹதீஸை விட அதிக அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது என்பது வரலாற்று ரீதியாக நிரூவப்படுகிறது.

3. குர்ஆனின் வசனங்கள் வேறுபட்டதாக கூறும் எந்த ஹதீஸும் குர்ஆனை விட முத்தவாதீர் அல்ல. ஆக அந்த ஹதீஸ்கள் மறுக்கப்படுவதற்கு இதுவே போதிய காரணமாக இருக்கிறது. 

4.குர்ஆன், எழுத்துப்பிரதிகளை நம்பி கடத்தப்படவில்லை என்பது மேற்குறிப்பிடப்பட்ட செய்திகளை படிக்கும் யாரும் அறிந்து கொள்வார்கள். அதனால் இன்று கிடைக்கும் பண்டைய எழுத்துப்பிரதிகளில் இருக்கும் கூட்டல் கழித்தல்கள், மாற்றல்கள் எல்லாம் குர்ஆன் ஓதல் முறையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. (இத்தகைய எழுத்துப்பிரதிகள் குறித்து வரும் தொடர்களில் காணவிருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்)

5.எழுத்து வடிவிலும் பாதுக்காக்கப்படவில்லை, மனன முறையிலும் பாதுக்காக்கப்படவில்லை என்பது சரியென்றால், வேறுபட்ட மொழி பேசும், உலகின் பலபகுதிகளில் இருக்கும் பல கோடி முஸ்லீம் மக்களின்  குர்ஆன் ஓதல் எப்படி  ஒன்றாய் இருக்கிறது என்ற கேள்விக்கு, விடையளிக்க   மேற்குறிபிட்ட வரலாற்று ரீதியாக நிருவப்பட்ட கோட்பாடன்றி வேறு பகுத்தறிவு அடிப்படையிலான கோட்பாடுகள் எதுவும் இந்த அறைவேக்காட்டு இஸ்லாமோஃபோபுகளிடம் இருக்கிறதா ???????

Tuesday, August 25, 2020

உடைந்த சிலுவை பாகம் 15- மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள புதிய ஏற்பாடு மூல கையெழுத்து பிரதிகள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

உடைந்த சிலுவை பாகம் 15- மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள புதிய ஏற்பாடு மூல கையெழுத்து பிரதிகள்

       நாம் சென்ற தொடரில் கிறித்தவர்கள் கொண்டாடும் பழைய ஏற்பாடு எப்படி கிபி 11ம் நூற்றாண்டுவரை யூதர்களால் திருத்தப்பட்டு கரைபடிந்துள்ளது என்பதையும், LXX குறித்த கிறித்தவ வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் தேவாலயபிதாக்களின் முரண்பட்ட உளரல்களையும் கண்டோம். இதுதான் இவர்களது வேதாகமத்தின் ஒரு பகுதியான பழைய ஏற்பாட்டின் மூல கையெழுத்து பிரதிகளின் நிலை என்பதையும் படம் பிடித்து காட்டி இருந்தோம்.
       இப்போது கிறித்தவர்கள் கொண்டாடும் வேதாகமத்தின் மறு பகுதியான புதிய ஏற்பாட்டிற்கு ஒவ்வொரு நூற்றாண்டிலும் எத்துனை துண்டு மூல பிரதி உள்ளது என்பதை பார்க்க போகிறோம். இந்த ஆய்வின் பெரும் பகுதி Kurt Aland and Barbara Aland ஆகியோரால் எழுதப்பட்ட THE TEXT of the NEW TESTAMENT : An Introduction to the Critical Editions and to the Theory and Practice of Modern Textual Criticism நூலின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல புதிய ஏற்பாட்டின் பணடைய கையெழுத்து பிரதிகளை கண்டறிந்து அதில் இருக்கும் விசயங்களையும் தங்களது மேற்குறிபிட்ட நூலின் மூலம் உலகின் வெளிச்சத்திற்கு கொண்டுவதவர்கள். Institute for New Testament Textual Research என்ற நிறுவனத்தை ஜெர்மனியில் உருவாக்கியவர்கள் என்பது குறிப்பிடதக்கது. 

முதலாம் நூற்றாண்டு புதிய ஏற்பாடின் கையெழுத்து பிரதிகள் பாப்பிரஸ்கள்:


      இயேசுவின் சம்காலத்தில் உள்ள புதிய ஏற்பாடின் கையெழுத்து பிரதிகள் எதுவும் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

முதலாம் நூற்றாண்டு- இரண்டாம் நூற்றாண்டு இடைக்கால புதிய ஏற்பாடின்   பாப்பிரஸ்கள்  ( தோராயமாக கிபி 150) 

   முதலாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டு பாப்பிரஸ்கள் குறித்து கூறுகையில் ஆலன் குர்ட்டின் புத்தகம் இரண்டு பிரதிகளைத்தான் காட்டுகிறது THE TEXT of the NEW TESTAMENT : An Introduction to the Critical Editions and to the Theory and Practice of Modern Textual Criticism ப.எண்:81 . 2019 வரை 5 பாப்பிரஸ் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை P104, P52, P90, P32, P98 என்பதாகும். 

1) P104 : Matt 21.34-37, Matt 21.43-45 ஆகிய வசனங்கள் உள்ளன. மொத்தம் 7 வசனங்கள்.

2) P52 : John 18:31-33,37-38 ஆகிய வசனங்கள் உள்ளன. மொத்தம் 5 வசனங்கள்.

3) P90 : John 18:36-19:7 ஆகிய வசனங்கள் உள்ளன. மொத்தம் 10 வசனங்கள்;

4) P32 : Tit. 1:11-15; 2:3-8 ஆகிய வசனங்கள் உள்ளன. மொத்தம் 11 வசனங்கள்

5) P98 : Rev. 1: 13- 20 ஆகிய வசனங்கள் உள்ளன. மொத்தம் 8 வசனங்கள்.

      ஆக மொத்தம் 41 வசனங்கள் தான் ஒன்றாம்- இரண்டாம் நூற்றண்டின் இடைக்காலத்தின் புதிய ஏற்பாடு கையெழுத்து பிரதிகளில் இடம் பெற்றுள்ளது. அதாவது இன்றிருக்கும் புதிய ஏற்பாட்டின் 7958 வசனங்களில் வெறும் 0.5% வசனத்திற்கான கையெழுத்து பிரதிதான் இன்று கிடைத்துள்ளது. இங்கு குர்ஆனின் மூலப்பிரதிகளின் ஒப்பீட்டு அளவை கூட 2ம் நூற்றாண்டிற்கு உள்ளான புதிய ஏற்பாட்டின் கையெழுத்துபிரதிகள் அடையவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இரண்டாம்- மூன்றாம் நூற்றாண்டின் இடைக்காலம்: (தோராயமாக கிபி250) 


      இரண்டாம்- மூன்றாம் நூற்றாண்டின் இடைக்காலத்தின் 3 கையெழுத்து பாப்பிரஸ்கள் கிடைத்துள்ளன. அவை P66, P46,P49. இவற்றில் P46 பவுலின் கடிதங்களின் பெரும் பகுதியை கொண்டிருப்பதாகும். இவை மொத்தம் 1743 வசனங்களை கொண்டிருக்கிறது, ஆக கிட்டத்தட்ட மூன்றாம் நூற்றாண்டு இடைக்காலத்தில்  1784 வசனங்களை கொண்டிருக்கும் 8 மூல கையெழுத்து பிரதிகளை உடைய பாப்பிரஸ்கள்தான் கிடைத்துள்ளன. இது இன்றிருக்கும் புதிய ஏற்பாட்டின் 23% தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கிட்டத்தட்ட மூன்றாம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை புதிய ஏற்பாட்டின் கால் பகுதிக்கான மூல கையெழுத்து பிரதிகள்தான் கிடைத்துள்ளது. 

மூன்றாம் நூற்றாண்டின் முடிவு:


          மூன்றாம் நூற்றாண்டின் முடிவில் கிட்டத்தட்ட மொத்தம் 40ல் இருந்து 50க்குள்ளான கையெழுத்து பிரதிகள்தான் கிடைத்துள்ளது. அதுவும் அது 4070 வசனங்களை தோராயமாக் கொண்டிருக்கிறது. கிபி 300 வரை இன்றிருக்கும் பைபிலின் 52% புதிய ஏற்பாடு வசனங்களை கொண்ட கையெழுத்து பிரதிகள்தான் கிடைத்துள்ளது. 

         ஒவ்வொரு புதிய ஏற்பாடின் புத்தகத்தை எந்த எந்த மூன்றாம் நூற்றாண்டு  வரை உள்ள பாபிரஸ்கள் கொண்டிருக்கிறது என்பதும் அது இன்றிருக்கும் புதிய ஏற்பாட்டின் எத்துனை சதவீதம் கொண்டிருக்கிறது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் விளக்குகிறது. 


Books

Date

Verses

Verses Total in Manuscripts without Repetition

Total verses in

Modern Bible

Total verses in Manuscripts excluding repetition

% of Verses

In

manuscripts

Matthew

3rd Century

Matt. 1:1-9,12,14-20

16

1071

119

11.1

3rd Century

Matt. 26:29-40(1)

1

3rd Century

Matt. 20:24-32; 21:13-19; 25:41-26:39;

45

3rd Century

Matt. 3:9,15; 5:20-22,25-28; 26:7-8,10,14-15,22-23,31-33;

10

3rd Century

Matt. 2:13-16; 2:22-3:1; 11:26-27; 12:4-5; 24:3-6,12-15;

17

2nd–3rd Century

Matt. 23:30-39

10

3rd Century

Matt 3.10, Matt 3.11, Matt 3.12, Matt 3.16, Matt 3.17, Matt 4.1, Matt 4.2, Matt 4.3

8

2nd–3rd Century

Matt 13.55, Matt 13.56,Matt 14.3, Matt 14.4, Matt 14.5

5

2nd Century

Matt 21.34-37, Matt 21.43-45

7

Mark

3rd Century

Mark 4:36-9:3; 11:27-12:28

217

678

223

32.9

2nd–3rd Century

Mark 1:7-9, 16-18

6

Luke

3rd Century

Luke 1:58-59; 1:62-2:1,6-7; 3:8-4:2,29-32, 34-35; 5:3-8; 5:30-6:16;

37

1151

821

71.3

3rd Century

Luke 22:41,45-48,58-61;

0

3rd Century

Luke 3:18-4:2; 4:34-5:10; 5:37-18:18; 22:4-24:53;

784

3rd Century

Luke 6:31-7:7; 9:26-14:33;

0

John

3rd Century

John 1:23-31,33-40; 16:14-30; 20:11-17,19-20,22-25;

0

879

667

75.9

3rd Century

John 15:25-16:2,21-32

12

3rd Century

John 6:8-12, 17-22

0

3rd Century

John 8:14-22;

0

3rd Century

John 10:7-25; 10:30-11:10,18-36,42-57;

0

ca.125

John 18:31-33,37-38

5

2nd–3rd Century

John 1:1-6:11; 6:35-14:26,29-30; 15:2-26; 16:2-4,6-7; 16:10-20:20,22-23;20:25-21:9;

29

3rd Century

John 1:1-11:45,48-57; 12:3-13:1,8-9; 14:8-30; 15:7-8;

610

3rd Century

John 3:34

1

2nd Century

John 18:36-19:7

10

3rd Century

John 5:26-29, 36-38;

0

3rd Century

John 1:29-35, 40-46

0

Acts

3rd Century

Acts 26:7-8,20;

3

1007

313

31.1

3rd Century

Acts 4:27-17:17

284

3rd Century

Acts 23:11-17,23-29;

12

3rd Century

Acts 9:33-10:1;

2

3rd Century

Acts 2:30-37; 2:46-3:2;

12

Romans

3rd Century

Rom. 8:12-22,24-27; 8:33-9:3,5-9;

3

434

216

49.8

3rd century

Rom. 1:24-27; 1:31-2:3; 3:21-4:8; 6:4-5,16; 9:16-17,27;

28

2nd-3rd Century

Rom. 5:17-6:14; 8:15-15:9; 15:11-16:27

185

1 Corinthians

3rd Century

1Cor 7:32-40, 1Cor 8:1-4

0

437

419

95.9

2nd-3rd Century

1 Cor. 1:1-16:22

419

2 Corinthians

2nd-3rd Century

2 Cor. l:l-13:13

257

257

257

100.0

Galatians

2nd-3rd Century

Gal. l:l-6:18

149

149

149

100.0

Ephesians

2nd-3rd Century

Eph. l:l-6:24

155

155

155

100.0

2nd-3rd Century

Eph 4:16-29, 31, Eph 5:1-13

0

Philippians

2nd-3rd Century

Phil. l:l-4:23

104

104

104

100.0

Colossians

2nd-3rd Century

Col. l:l-4:18

95

95

95

100.0

1 Thessalonians

3rd Century

1 Thess. 4:12-5:18, 25-28

20

89

51

57.3

3rd Century

1 Thess. 1:3-2:1,6-13;

17

2nd-3rd Century

1 Thess. 1:1; 1:9-2:3; 5:5-9,23-28

14

2Thessalonians

3rd Century

2 Thes 1:1-2

2

47

2

4.3

Titus

ca. 200.

Tit. 1:11-15; 2:3-8;

11

46

11

23.9

Philemon

3rd Century

Philem. 13-15,24-25

5

25

5

20.0

Hebrews

3rd Century

Heb. 1:1

0

303

303

100.0

2nd-3rd Century

Heb. l:l-13:25

303

James

3rd Century

Jas. 2:19-3:9

17

108

24

22.2

3rd Century

Jas. 1:10-12,15-18

7

1 John

3rd Century

1 John 4:11-12,14-17

6

105

6

5.7

Revelation

3rd Century

Rev. 9:10-17:2

116

404

124

30.7

2nd Century

Rev. 1: 13- 20

8

1 Peter

--

--

0

105

0

0.0

2 Peter

--

--

0

61

0

0.0

Jude

--

--

0

25

0

0.0

2 John

--

--

0

13

0

0.0

3 John

--

--

0

14

0

0.0

1 Timothy

--

--

0

113

0

0.0

2 Timothy

--

--

0

83

0

0.0

Total

4064

7958

4064

51.1%


       இந்த நிலையில் இருக்கும் வேதாகமத்தை வைத்து கொண்டுதான் கிறித்தவ மிசனரிகள் குர் ஆனின் மூல கையெழுத்து பிரதிகள் குறித்து விமர்சித்து வருகின்றனர். உண்மையில் இங்கிருக்கும் மிசனரிகள் தங்களது வேதம் குறித்து போதிய அறிவை கொண்டிருந்தால் மூலப்பிரதி மையபடுத்தி குர்ஆன் குறித்த விமர்சனத்தை வைத்திருக்க மாட்டார்கள் என்பது குறிபிட்ட பதிவை படிக்கும் யாரும் புரிந்து கொள்வார்கள்.

Reference:

1. THE TEXT of the NEW TESTAMENT : An Introduction to the Critical Editions and to the Theory and Practice of Modern Textual Criticism by Kurt Aland and Barbara Aland
2. THE EARLY TEXT OF THE NEW TESTAMENT by CHARLES E. HILL AND MICHAEL J. KRUGER
3.http://www.csntm.org/Manuscript/
4.https://biblearchaeologyreport.com/2019/02/15/the-earliest-new-testament-manuscripts/
5.https://thebible.life/bible-books-and-number-of-chapters/