மிசனரிகள் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து நபி(சல்) அவர்கள் மீது பரப்பப்படும் அவதூறுகளில் இதுவும் ஒன்று. அதாவது நபி(சல்) அவர்கள் அலி(ரலி) யின் தாயார் ஃபாத்திமா பின்த் அசத்(ரலி) அவர்கள் மரணித்த போது அவரது பிரேதத்துடன் உறவு கொண்டார்கள் என்பதுதான். ஃபாத்திமா பின்த் அசத்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களது பெரிய தந்தையான அபூதாலிப் அவர்களது மனைவியும், நபி(சல்) அவர்களது பெரியன்னையும் ஆவார்கள், மேலும் நபி(சல்) அவர்களது தாயாரான ஆமினா அவர்கள் மரணித்த, பிறகு நபி(ஸல்) அவர்களை வளர்த்த அன்னை ஆவார்கள். இவர்களது பிரேத்துடந்தான் நபி(சல்) அவர்கள் உறவுகொண்டார்கள் என்ற அவதூறை பரப்பி திரிகின்றனர். அது குறித்து இஸ்லாமிய ஆதாரங்களான ஹதீஸ்களில் என்ன காணப்படுகிறது என்பதை காண்போம். இது குறித்து இரண்டு செய்திகள் காணப்படுகிறது:
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது: அலி(ரலி) யின் தாயார் ஃபாத்திமா அவர்கள் இறந்த போது நபி(ஸல்) அவர்கள் அவருக்கு தனது மேலாடையை கழட்டி அனிவித்து, பின்னர் அவரது கப்ரில் படுத்தார்கள். அப்போது சிலர் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே நீங்கள் யாருக்கும் இதுவரை செய்திராத ஒன்றை செய்தீர்களே?? என்று கூறினர். அதற்கு நபி(சல்) அவர்கள் “:அவர், அல்-ஜன்னத்தின் ஆடையை அணியவேண்டும் என்பதற்காக என்னுடைய ஆடையை அவருக்கு அணிவித்தேன்,. மேலும் அவரின் கப்ர் வேதனை குறைக்கப்படும் என்பதற்காக நான் அவரது கப்ரில் அவருடன் படுத்தேன். அபூதாலிப்பிற்கு பிறகு அல்லாஹ்வின் படைப்புகளில் எனக்கு மிக சிறந்தவர் அவரே" என்றார்கள் (கிதாப்: மாஃரிஃபத்தில் சஹாபா 289/271/273)மேற்குறிபிட்ட செய்தி மாரிஃபத்துல் சஹாபா என்ற நூலில் இருந்து கன்சுல் உம்மாலின் நூல் ஆசிரியர் பதிந்துள்ளார். மேற்குறிபிட்ட இந்த செய்தியில் இரண்டு பலவீனம் காணப்படுகிறது.
1. سَعْدَانُ بْنُ الْوَلِيدِ என்ற அறிவிப்பாளர் ஹதீஸில் யார் என்று அறியப்படாதவர். இவரை பற்றி அல் ஹாக்கிம் அவர்கள் இவர் ஹதீஸில் மதிப்பில்லாதவர் என்று கூறுகிறார். மேலும் அல் ஹைதமி குறிப்பிடும் போது இவர் அறியப்படாதவர் என்கிறார்.
2.அவரிடமிருந்து செவியுரும் الْحَسَنُ بْنُ بِشْرٍ الْبَجَلِيُّ என்பவர் பலவீனமானவர் என்று நஸயீ குறிப்பிடுகிறார். அப்துர் ரஹ்மான் இப்னு யூஸூஃப் அல் ஹராஸ் இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று கூறுகிறார். நினைவாற்றல் குறைபாடு உடையவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜரால் தரப்படுத்தப்பட்டவர் (அல்தக்ரீப் அல்தஹ்தீப்:158). ஆக மேற்குறிபிட்ட செய்தி பலவீனமானது.
செய்தி 2:
அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்ததாவது: அலி(ரலி)யின் தாயார் ஃபாத்திமா பின்த் அசத் அவர்கள் இறந்த போது நபி(சல்) அவர்கள் அவர்களது தலைக்கருகில் அமர்ந்து” என் அன்னையே! அல்லாஹ் உங்களுக்கு கருணை புரிவானாக. எனது அன்னைக்கு பிறகு உங்களையே எனது அன்னையாக அழைத்தேன். நீங்கள் பசித்திருந்தும் எனக்கு வயிறு நிரம்ப உணவளித்தீர்கள்.. உங்களுக்கு இல்லாதபோதும் எனக்கு நல்ல உணவும் உடையும் கொடுத்தீர்கள். அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவும் மறுமை வெற்றிக்காகவும் தாங்கள் இவற்றை செய்தீர்கள்”,என்று கூறினார்கள். பின்பு அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் அவர்களை மூன்று முறை குளிப்பாட்ட உத்தரவிட்டார்கள். கற்பூரம் கலந்த நீர் கொண்டுவரப்பட்டதும், நபி(சல்) அவர்கள் தனது கைகளில் சிறிதளவு ஊற்றிக்கொண்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் தனது மேலாடையை கழற்றி அவர்களுக்கு அணிவித்து தனது ஆடையினால் அவர்களுக்கு கஃபனிட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் உசாமா பின் ஜைத்(ரலி), அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி), உமர் இப்னு அல் கத்தாப்(ரலி) மற்றும் ஒரு கருப்புநிற அடிமை ஆகியோரை அழைத்து கப்றினை தோண்ட கட்டளையிட்டார்கள். அவர்கள் கப்றினை தோண்டி( பிரேதம் வைக்கும் பகுதியை அடைந்ததும்) “லஃஹ்த்” என்ற பிரதேம் வைக்கும் பகுதியை நபி(சல்) அவர்கள் தனது கைகளினாலே தோண்டினார்கள். (“லஃஹ்த்” என்பது குழியின் பக்கவாட்டில் அறை போன்று தோண்டுவதாகும்). அனைத்தும் முடிந்ததும் நபி(சல்) அவர்களே அதில் படுத்தார்கள் பிறகு “அல்லாஹ்வே பிறப்பையும் இறப்பையும் கட்டுபடுத்துபவன்.அவனே என்றும் வாழ்பவன். என்றும் மரணிக்காதவன் .(யா அல்லாஹ்) எனது அன்னை ஃபாத்திமா பின்த் அஸத் அவர்களை மன்னிப்பாயாக. கேள்வி கேடகப்படும் போது அவர்களை சரியாக பதிலளிக்கச் செய்வாயாக. உனது தூதரின் பொருட்டும், முன் சென்ற தூதர்களின் பொருட்டும் அவர்களது கப்றை விரிவுபடுத்துவாயாக. நிச்சயமாக நீ அளவில்லா கருணையாளன்” என்றார்கள்.மீண்டும் “அல்லாஹ் மிகப்பெரியவன்” என்று நான்கு முறை கூறினார்கள். பிறகு நபி(சல்) அவர்கள், அப்பாஸ்(ரலி) மற்றும் அபுபக்கர் (ரலி) ஆகியோர் அவர்களை(ஃபாத்திமா பின்த் அசத்) கபறினில் இறக்கினார்கள்.மேற்குறிபிட்ட ஹதீஸை காணும் போது முதல் செய்தியை விட விளக்கமானதாக தோன்றினாலும் இந்த ஹதீஸும் பலவீனமானதுதான். ஹதீஸின அறிவிப்பாளர் தொடரில் ரவ்ஹ் இப்னு ஸலாஹ் என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களில் தவறிழைகக்கூடியவர் என்று ஹைதமீ குறிப்பிடுகிறார் (மஜ்ம உல் ஜாவாயித்). இவரது ஹதீஸ்கள் மறுக்கப்பட வேண்டியவை என்று இப்னு அதீ அவர்கள் கூறுகிறார்கள் (அல் காமில் இப்னு அதீ) தாரக்குத்தினீ இவர் பலவீனமானவர் என்று குறிப்பிடுகிறார்கள் (லீசான் அல் மீசான்).
(நூல்: தப்ரானி அல் அவ்ஸத் பக்கம் 67 ஹதீஸ் எண்:189)

முஸ்லீம் 1761. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:இன்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் இத்தகைய கப்றுகள் பயன்பாட்டில் உள்ளது. ஆக இந்த கபரில் படுத்து உறவு கொண்டார்கள் என்பது எவ்வளவு முட்டாளதனமானது.
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயில் இருந்தபோது, "(நான் இறந்ததும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகச் செய்யப்பட்டதைப் போன்று, (குழியினுள்) எனக்காக உட்குழியொன்றை வெட்டுங்கள்; என்மீது நன்கு செங்கற்களை அடுக்கிவையுங்கள்!" என்று சொன்னார்கள்.
1160. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.லஹ்த் வகை கப்ருகளில் ஒருபக்கமாய் அதாவது கிப்லா திசையை நோக்கி சாய்த்துதான் பிரேத்தை கிடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதை படத்தில் சுட்டிகாட்டியுள்ளோம்.
நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 19. தஹஜ்ஜுத்
மேலும் மேற்கண்ட ஹதீஸிக்கு ஜகாரியா என்பவர் கூறுவதாவது:
" முஹம்மது நபியவர்கள் அவருடன் படுத்ததால் அவள் அவனுக்கு மனைவியாகி விட்டாள். அதனால் அவள் மூமின்களுக்கு தாய் எனும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விட்டார் என்று குறிப்பிடுகிறார். "நமது பதில்:
1.முதலாவது இது ஒரு பொருந்தாத வாதம் ஆகும். ஏனெனில் திருமணம் என்பதற்கு இரு தரப்பு உடன்படிக்கையையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதனால் இறந்து போன ஒருவர் உடன் படுப்பதன் மூலம் மனைவி என்ற அந்தஸ்தை ஒருவருக்கு கொடுத்து விட முடியாது.
2.இரண்டாவது இஸ்லாத்தில் ஒருவருக்கு திருமணம் செய்ய முடியாத உறவு முறைகள் என்று சில உறவு முறைகள் வரையறை செய்யப்பட்டுள்ளது. அத்தகையை உறவுமுறைகளில் அம்மா சித்தி பெரியம்மா அத்தை போன்ற உறவு முறைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இஸ்லாம் தடுத்திருக்கும் ஒரு உறவுடன் திருமணத்தை முஹம்மது நபியவர்கள் செய்தார் என்பது பொய்யானது.
3.மூன்றாவது நபியின் மனைவி என்ற சிறப்பு அந்தஸ்தை காட்டிலும் நபியின் வளர்ப்பு தாய் என்ற மிக உயர்ந்த அந்தஸ்தை அவர் பெற்றிருந்தார். அதனால் பாத்திமா அவர்கள் சிறப்பு அந்தஸ்தை பெற வேண்டும் என்பதற்காக முஹம்மது நபியவர்கள் அவரை திருமணம் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இதன் மூலம் சக்கரியாவின் வாதம் இங்கு உடைந்துவிடுகிறது.
ஆக இவர்களின் இந்த குற்றச்சாட்டு அரைவேக்காட்டு தனத்தினாலும் காழ்புணர்ச்சியாலும் தோன்றியது என்பது தெள்ளத்தெளிவாக நிருபனமாகிறது
யூதர்களில் அநேகம்பேர் தீர்க்கதரிசிகளை பழித்தும் அவதூறாகப் பேசி வெறுப்பையும் தண்டனையையும் பெற்றுக் கொண்டார்கள் அதேபோல கிறிஸ்தவர்களும் இறுதி தீர்க்கதரிசியை இழித்துப் பழித்துப் பேசி யூதர்கள் வழிமுறையைப் பின்பற்றி கர்த்தரின் சாபத்திற்கு ஆளாகாமல் இயேசுவை எப்படி ஒரு முறை துணிச்சலாக ஏற்றுக்கொண்டு சத்தியத்திற்கு சாட்சி சொன்னார்களோ அதே துணிச்சலை வெளிக்காட்டி இந்த தீர்க்கதரிசியும் ஏற்றுக்கொண்டு கர்த்தரின் இரட்டிப்பு நன்மையை பெற்றுக் கொள்ளட்டும் எங்கள் தாத்தாவும் இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவராக வாழ்ந்தவர்தான் ஆனால் அவர் இறுதி தீர்க்கதரிசியான முகமது நபியையும் ஏற்றுக்கொண்டார்கள் அனைத்து கிறிஸ்தவ காக்க நானும் ஜெபிக்கிறேன் கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும் ஆமென்
ReplyDelete