Wednesday, May 6, 2020

விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளம்பெண் ஆயிஷா(ரலி)



ஆதாரம் 2: விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளம்பெண் ஆயிஷா(ரலி)
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، عَنْ عِيسَى، عَنِ الأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتُرُنِي بِرِدَائِهِ، وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ، حَتَّى أَكُونَ أَنَا الَّذِي أَسْأَمُ، فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ الْحَرِيصَةِ عَلَى اللَّهْوِ.

புஹாரி 5236. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் என்னைத் தம் மேல் துண்டால் மறைத்துக்கொண்டிருக்க பள்ளிவாசல் வளாகத்தில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் (என் வீட்டிலிருந்தபடி) பார்த்துக கொண்டிருந்தேன். நானாகச் சடைந்துவிடும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகளின் மீது பேராவல் கொண்ட இளம் வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.
    ஆதாவது மேற்குறிபிட்ட செய்தியை பதிவிட்டு ஆயிஷா(ரலி) இளம் பெண்ணாக இருந்தார் என்ற வாதத்தை முன்வைத்து, அவர் பருவம் அடையவில்லை என்று கூறுகிறார்கள். இதுவும் நேரடியான ஆதாரம் அல்ல ஆயிஷா(ரலி) பருவம் அடையவில்லை என்பதற்கு. மேலும் இது சார்ந்த ஏனைய ஹதீஸ்களை சற்று ஆய்வு செய்தால் ஆயிஷா(ரலி) இந்த சம்பவம் நடைபெறும் போது ஏற்குறைய 14 வயது என்பது விளங்கும். இந்த செய்தி சற்றுகூடுதல் விளக்கத்துடன் ஸஹீஹ் இப்னு ஹிப்பானில் காணப்படுகிறது. 

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ أَبَا بَكْرٍ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ تُغَنِّيَانِ بِدُفَّيْنِ، وَتُغَنِّيَانِ فِي أَيَّامِهِمَا، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَتِرٌ بِثَوْبِهِ، فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ، فَكَشَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ، وَقَالَ: "دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ، فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ"، قَالَتْ عَائِشَةُ: وَلَمَّا قَدِمَ وَفْدُ الْحَبَشَةِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامُوا يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي بِرِدَائِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِمْ وَهُمْ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ حَتَّى أَكُونَ أنا الذي أَسْأَمُ، فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ الْحَرِيصَةِ على اللهو
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் அருகில் இரு (அன்சாரிச்) சிறுமியர் (சலங்கையில்லா கஞ்சிராக்களை) அடித்து பாட்டு பாடிக்கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆடையால் போர்த்திக்கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அச்சிறுமியர் இருவரையும் அதட்டினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மீதிருந்த) துணியை விலக்கி "அவர்களை விட்டு விடுங்கள், அபூபக்ரே! இவை பண்டிகை நாட்கள்" என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி) கூறினார்கள் அபீசீனிய தூதுக்குழு நபி(சல்) அவர்களிடம் வந்த போது, அவர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக்கொண்டிருக்க, (என் வீட்டிலிருந்தபடி) பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் இளம்வயதுப் பெண்ணாக இருந்தேன். விளையாட்டுமீது பேராவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.(சஹீஹ் இப்னு ஹிப்பான் 5876)
       ஆதாவது மேற்குறிபிட்ட சம்பவமானது அபீசீனிய தூதுக்குழு வந்த போது நடைபெற்றதாக ஆயிஷா(ரலி) குறிப்பிடுகிறார்கள். அதாவது அபிசீனிய தூதுக்குழு கைபர் யூத்தத்திற்கு பிறகு நபி(சல்) அவர்களிடம் வந்த தூதுக்குழு இது குறித்து பின்வரும் செய்தி குறிப்பிடுகிறது.
புகாரி 3136. அபூ மூஸா அல்-அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டுவிட்ட செய்தி நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரிய வந்தது. உடனே, நானும் என் இரண்டு சகோதரர்களும் நபி(ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரண்டு சகோதரர்களில் ஒருவர் அபூ புர்தா அவர்களும் மற்றொருவர் அபூ ருஹ்கி அவர்களுமாவர். நானே அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன். 'என் குலத்தாரில் ஐம்பதிற்கு மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்' என்றோ, 'ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம்' என்றோ என் தந்தை அபூ மூஸா(ரலி) சொன்னார்கள் என்று நான் நினைக்கிறேன்" என அறிவிப்பாளர் அபூ புர்தா(ரஹ்) கூறினார் - நாங்கள் ஒரு கப்பலில் ஏறிப் பயணித்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் மன்னர் நஜாஷீயிடம் எங்களை இறக்கிவிட்டது. அவரிடம் (அபிசீனியாவில்) ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் அவர்களையும் அவர்களின் சகாக்களையும் தற்செயலாகச் சந்தித்தோம். ஜஅஃபர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை இங்கு அனுப்பி (இங்கேயே) தங்கும்படி உத்தரவிட்டுள்ளார்கள். எனவே, நீங்களும் எங்களுடன் (இங்கேயே) தங்குங்கள்" என்று கூறினார்கள். எனவே, நாங்கள் அவருடன் தங்கினோம். இறுதியில் நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) சென்றோம். நபி(ஸல்) அவர்கள் கைபரை வென்றபோது அவர்களைச் சென்றடைந்தோம். உடனே அவர்கள் (கைபர் போரில் கிடைத்த பொருட்களில்) எங்களுக்கும் பங்கு கொடுத்தார்கள். அல்லது எங்களுக்கும் அதிலிருந்து கொடுத்தார்கள். கைபர் வெற்றியில் கலந்து கொள்ளாத எவருக்கும் அதிலிருந்து எதையும் நபி(ஸல்) அவர்கள் பங்கிட்டுத் தரவில்லை. தம்முடன் (அதில்) பங்கெடுத்தவர்களுக்கு மட்டும் தான். பங்கிட்டுத் தந்தார்கள். ஆனால், எங்கள் கப்பலில் வந்தவர்களுக்கு மட்டும் ஜஅஃபர்(ரலி) அவர்களுடனும் அவர்களின் சகாக்களுக்கடனும் (சேர்த்துப்) பங்கிட்டுத் தந்தார்கள். 
         ஆயிஷா(ரலி) அவர்களுக்கு அப்போது வயது 14 என்பதையும், இப்னு ஹஜர் அவர்களது விளக்கத்தையும் சென்ற ஆதாரத்தின் மறுப்பில் விளக்கியுள்ளோம். ஆக மேற்குறிபிட்ட செய்தியும் ஆயிஷா(ரலி) பூப்பெய்த வில்லை என்பதற்கான சான்றாக கொள்ள முடியாது. மேலும் மேற்குறிபிட்ட செய்தியில்- الْجَارِيَةِ என்ற சொல் இடம்பெறுகிறது அதனால் ஆயிஷா(ரலி) சிறுமி என்று வாதிடுகிறார்கள், அதன் விளக்கத்தை அடுத்த ஆதார விளக்கத்தில் காண்போம் இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment