Thursday, November 30, 2023

அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) மட்டும்தான் சாட்சியா???

  بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

 
        குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகள் மற்றும் கிறித்தவ மிசனரிகளின் விமர்சனங்களுக்கான மறுப்பை நாம் தொடராக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்கள் குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பும் விமர்சனத்திற்கான பதிலை இந்த கட்டுரையில் காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ்.

 
ஆதாரம் 1:
ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) - அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார்.
………………….எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை. (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்யுன்) அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128 , 129) (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர். (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது. இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், '(அவ்விரு வசனங்கள்) 'குஸைமா'(ரலி) அல்லது 'அபூ குஸைமா'(ரலி) அவர்களிடம் இருந்தன' என (ஐயப்பாட்டுடன்) அறிவிக்கப்பட்டுள்ளது. (ஸஹீஹ் புகாரி 4679, மேலும் பார்க்க ஸஹீஹ் புகாரி 4986,4989,7191)

ஆதாரம் 2:
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
        நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, 'அல்அஹ்ஸாப்' அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன். (ஒரு வழக்கின் போது) அவரின் சாட்சியத்தை இரண்டு மனிதர்களின் சாட்சியத்திற்குச் சமமாக நபி(ஸல்) அவர்கள் கருதியிருந்தார்கள்.  அந்த இறைவசனம் இதுதான்: அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23) (ஸஹீஹ் புகாரி 2807,மேலும் பார்க்க:4049, 4784, 4988)

ஆதாரம் 3:

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ أَنَّ الْحَكَمَ بْنَ نَافِعٍ حَدَّثَهُمْ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ أَنَّ عَمَّهُ حَدَّثَهُ وَهُوَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَ فَرَسًا مِنْ أَعْرَابِيٍّ فَاسْتَتْبَعَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَقْضِيَهُ ثَمَنَ فَرَسِهِ فَأَسْرَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَشْيَ وَأَبْطَأَ الْأَعْرَابِيُّ فَطَفِقَ رِجَالٌ يَعْتَرِضُونَ الْأَعْرَابِيَّ فَيُسَاوِمُونَهُ بِالْفَرَسِ وَلَا يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَهُ فَنَادَى الْأَعْرَابِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنْ كُنْتَ مُبْتَاعًا هَذَا الْفَرَسِ وَإِلَّا بِعْتُهُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ سَمِعَ نِدَاءَ الْأَعْرَابِيِّ فَقَالَ أَوْ لَيْسَ قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَقَالَ الْأَعْرَابِيُّ لَا وَاللَّهِ مَا بِعْتُكَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَى قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَطَفِقَ الْأَعْرَابِيُّ يَقُولُ هَلُمَّ شَهِيدًا فَقَالَ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ أَنَا أَشْهَدُ أَنَّكَ قَدْ بَايَعْتَهُ فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خُزَيْمَةَ فَقَالَ بِمَ تَشْهَدُ فَقَالَ بِتَصْدِيقِكَ يَا رَسُولَ اللَّهِ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَةَ خُزَيْمَةَ بِشَهَادَةِ رَجُلَيْنِ

உமாரா பின் குஸைமா தனது தந்தையின் சகோதரி கூறியதாக கூறியதாவது:
        நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் குதிரையை விலைபேசி முடித்தார்கள். அந்தக் கிராமவாசி (அதற்கான கிரயத்தைப் பெறுவதற்காக) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரைந்து நடக்க, அந்தக் கிராமவாசி மெதுவாக நடந்து வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விலைபேசி வாங்கியதை அறியாத மக்கள் அந்தக் கிராமவாசியிடம் கூடுதல் விலைக்கு கேட்கலானார்கள். அப்போது கிராமவாசி நபிகள் நாயகத்தை உரத்த சப்தத்தில் அழைத்து நீங்கள் இதை வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நான் மற்றவருக்கு விற்று விடுவேன் என்று கூறினார். உடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்றார்கள். நான் தான் உன்னிடம் விலை பேசி வாங்கி விட்டேனே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தக் கிராமவாசி அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இதை உங்களுக்கு விற்கவில்லை என்றார். இல்லை நான் உன்னிடம் இதை விலைக்கு வாங்கி விட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது கிராமவாசி இதற்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார். அப்போது குஸைமா என்ற நபித்தோழர் கிராமவாசியைப் பார்த்து நீ நபிகள் நாயகத்திடம் விற்றாய் என்று சாட்சி கூறுகிறேன் என்றார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குஸைமாவிடம் நீ எப்படி சாட்சி கூறினாய் என்று கேட்டார்கள். உங்கள் மீது உள்ள நம்பிக்கையால் சாட்சி கூறினேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது சாட்சியத்தை இருவரின் சாட்சியத்துக்குச் சமமாக ஆக்கினார்கள். (அபூதாவூத் 3130)

மேற்குறிபிட்ட ஆதாரங்களின் ஊடாக இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் வாதங்கள்:

வாதம் 1:
அல்குர்ஆன் 9:128-129, 33:23 ஆகிய வசனங்கள் ஒரே சாட்சியினால்தான் கூறப்பட்டுள்ளது, எனவே அது குர்ஆன் தொகுப்பு குழுவிற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு மாற்றமான ஒன்று. எனவே இம்மூன்று வசனங்களும் ஆதாரமற்றவை.

வாதம் 2:
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தின் முதல் குர்ஆன் தொகுப்பின் போது ஒரு வசனம் விடுபட்டுவிட்டது அதனை மீண்டும் உஸ்மான்(ரலி) அவர்களது காலத்தில் தான் ஸைத்(ரலி) கணடறிந்தார்கள். எனவே முதல் தொகுப்பு அரைகுறையான தொகுப்பு.

வாதம் 3:
ஆதாரம் 3ன் அடிப்படையில் காணும் போது நிகழிடத்தில் இல்லாத குஸைமா(ரலி) பொய்சாட்சியம் பகர்ந்துள்ளார். எனவே அல்குர்ஆன் 9:128-129, 33:23 ஆகிய வசனங்கள் குறித்த அவரது சாட்சியம் நம்பகமற்ற பொய் சாட்சி எனவே அம்மூன்று வசனங்களும் குர்ஆனின் வசனங்களாக இருக்க முடியாது என்பது இஸ்லாமோஃபோபுகள் மற்றும் கிறித்தவ மிசனரிகளின் வாதம்.



        அல் குர்ஆன் 9:128-129 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) அவர்கள் மட்டும்தான் சாட்சி என்பது போல் அவர்கள் முன்வைக்கும் ஆதாரத்தில் தெரிந்தாலும் மொழிபெயர்ப்பாளர்கள் அதில் “எழுதப்பட்டு” என்ற குறிப்பை அடைப்புக்குறிக்குள் இட்டுள்ளதை காணமுடிகிறது. அதாவது எழுத்து வடிவில் குஸைமா(ரலி) அவர்களிடம் மட்டுமே இருந்தது என்பதை குறிக்கும்படியாக அவர்கள் கூறியுள்ளனர். அதற்கான காரணம் பின்வரும் ஆதாரங்கள் தான்.

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺇﺑﺮاﻫﻴﻢ ﺑﻦ ﺳﻌﺪ، ﻋﻦ اﻟﺰﻫﺮﻱ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﻴﺪ ﺑﻦ اﻟﺴﺒﺎﻕ، ﺃﻥ ﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ، ﺣﺪﺛﻪ ﻗﺎﻝ: " ﻓﻘﺪﺕ ﺁﻳﺔ ﻛﻨﺖ ﺃﺳﻤﻊ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﺮﺃ ﺑﻬﺎ، ﻓﺎﻟﺘﻤﺴﺘﻬﺎ، ﻓﻮﺟﺪﺗﻬﺎ ﻋﻨﺪ ﺧﺰﻳﻤﺔ ﺑﻦ ﺛﺎﺑﺖ {ﻟﻘﺪ ﺟﺎءﻛﻢ ﺭﺳﻮﻝ ﻣﻦ ﺃﻧﻔﺴﻜﻢ   (اﻟﺘﻮﺑﺔ :128) اﻵﻳﺔ، ﻓﺄﻟﺤﻘﺘﻬﺎ ﻓﻲ ﺳﻮﺭﺗﻬﺎ

 ஸைத் இப்னு ஸாபித்(ரலி) “நான் ஒரு ஆயத்தை விட்டுவிட்டேன், அதனை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஓத கேட்டுள்ளேன், அதனை தேடினேன், அது குஸைமா இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் பெற்றுக்கொண்டேன்., ‘நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்.(அத் தவ்பா:128)’ என்ற அந்த ஆயத்தை அந்த சூராவில் சேர்த்துக்கொண்டேன்.” என்று கூறினார்கள் (முஸ்னத் அபீதாவூத் அல் தயாலிசி 612)

ஆதாரம் 2: உபை இப்னு கஃஅப்(ரலி) அவர்களது சாட்சியம்

حَدَّثَنَا أَبِي، ثنا يَحْيَى بْنُ الْمُغِيرَةِ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنِ الرَّبِيعِ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ " أَنَّهُمْ جَمَعُوا الْقُرْآنَ، فَلَمَّا انْتَهَوْا إِلَى هَذِهِ الْآيَةِ: {ثُمَّ انْصَرَفُوا صَرْفَ اللَّهُ قُلُوبَهُمْ} [التوبة: 127] فَظُنُّوا آخِرَ مَا نَزَلَ مِنَ الْقُرْآنِ فَقَالَ لَهُمْ أُبَيُّ بْنُ كَعْبٍ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَنِي بَعْدَ هَذَا آيَتَيْنِ: {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ} [التوبة: 128] إِلَى قَوْلِهِ: {لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ} [التوبة: 129]

அபூ ஆலியா,  உபை இப்னு கஃஅப்(ரலி) வழியாக அறிவிப்பதாவது:              அவர்கள் குர்ஆனை தொகுத்து கொண்டிருக்கையில், “பிறகு அவர்கள திரும்பி விடுகின்றனர்; அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான். (அத் தவ்பா:127)” என்ற ஆயத்தை அடைந்த போது, இதுதான் குர்ஆனின் இறுதி ஆயத் என்று எண்ணினார்கள். அப்போது உபை இப்னு கஃஅப், “இதன் பிறகு நபி(ஸல்) அவர்கள் இரண்டு ஆயத்களை என்னிடம் ஓதிக்காட்டியுள்ளார்கள், அவை ‘நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்.( (அத் தவ்பா:128)’ என்பதிலிருந்து ‘அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி" என்று நீர் கூறுவீராக!’ (அத் தவ்பா:12) வரை” என்று கூறினார்கள் (தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்தம் 10172)

மேற்குறிபிட்ட செய்தியில் குஸைமா(ரலி) அவர்கள் மட்டும் இந்த வசனத்திற்கு சாட்சியாக இருக்கவில்லை. மாறாக ஸைத் இப்னு ஸாபித்(ரலி), உபை இப்னு கஃஅப்(ரலி) ஆகியோரும் இந்த 9:128-129 வசனத்திற்கு சாட்சியாக இருந்துள்ளனர். எனவே ஒற்றை சாட்சியத்தின் அடிப்படையில் இந்த வசனங்கள் குர்ஆனில் இணைக்கப்பட்டுள்ளது என்பது எல்லாம் அரைவேக்காட்டு வாதம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குஸைமா(ரலி) அவர்களை தவிர யாரிடமும் அந்த வசனம் இல்லை என்பது எழுத்து பிரதியாக இல்லை என்பதைத்தான் குறிக்கும் என்பதாலேயே மொழிப்பெயர்ப்பாளர் “இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை”  என்று அடைப்புக்குறியுடன் மொழியாக்கம் செய்துள்ளார்.


9:128-129 வசனம் எப்படி பலரால் அறியப்பட்டிருந்ததோ அதுபோலத்தான் 33:23 வசனமும் பலரால் அறியப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரத்தை இங்கு பதிவிடுகிறோம்.

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்
நாங்கள் குர்ஆனுக்குப் பிததிகள் எடுத்தபோது 'அல்அஹ்ஸாப்' எனும் (33 வது) அத்தியாயத்தில் ஒரு வசனம் காணவில்லை. அதனை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். அதை நாங்கள் தேடியபோது அது குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டோம். (அந்த வசனம் இதுதான்:) 'அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெயப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் உயிரை அர்ப்பணிக்க வேண்டுமென்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்ற தக்க தருணம்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23) உடனே நாங்கள் அ(ந்த வசனத்)தை குர்ஆன் பிரதியில் அதற்குரிய அத்தியாயத்தில் இணைத்துவிட்டோம். (ஸஹீஹ் புகாரி 4988)

  ஆதாரம் 2: அனஸ்(ரலி) அவர்களது சாட்சியம்

 ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺣﺎﺗﻢ ﺑﻦ ﻧﻌﻴﻢ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﺣﺒﺎﻥ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﻋﻦ ﺳﻠﻴﻤﺎﻥ ﺑﻦ اﻟﻤﻐﻴﺮﺓ، ﻋﻦ ﺛﺎﺑﺖ، ﻋﻦ ﺃﻧﺲ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﻋﻤﻲ ﺃﻧﺲ ﺑﻦ اﻟﻨﻀﺮ: ﺳﻤﻴﺖ ﺑﻪ. ﻭﻟﻢ ﻳﺸﻬﺪ ﺑﺪﺭا ﻣﻊ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻜﺒﺮ ﺫﻟﻚ ﻋﻠﻴﻪ ﻭﻗﺎﻝ: «ﺃﻭﻝ ﻣﺸﻬﺪ ﺷﻬﺪ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻏﻴﺒﺖ ﻋﻨﻪ، ﺃﻣﺎ ﻭاﻟﻠﻪ ﻟﺌﻦ ﺃﺭاﻧﻲ اﻟﻠﻪ ﻣﺸﻬﺪا ﻓﻴﻤﺎ ﺑﻌﺪ ﻟﻴﺮﻳﻦ اﻟﻠﻪ ﻣﺎ ﺃﺻﻨﻊ» ﻗﺎﻝ: «ﻭﻫﺎﺏ ﺃﻥ ﻳﻘﻮﻝ ﻏﻴﺮﻫﺎ، ﻓﺸﻬﺪ ﻣﻊ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻮﻡ ﺃﺣﺪ ﻣﻦ اﻟﻌﺎﻡ اﻟﻤﻘﺒﻞ، ﻓﺎﺳﺘﻘﺒﻠﻪ ﺳﻌﺪ ﺑﻦ ﻣﻌﺎﺫ» ﻓﻘﺎﻝ: ﻳﺎ ﺃﺑﺎ ﻋﻤﺮﻭ «ﺃﻳﻦ؟» ﻗﺎﻝ: «ﻭاﻫﺎ ﻟﺮﻳﺢ اﻟﺠﻨﺔ، ﺃﺟﺪﻫﺎ ﺩﻭﻥ ﺃﺣﺪ، ﻓﻘﺎﺗﻞ ﺣﺘﻰ ﻗﺘﻞ، ﻓﻮﺟﺪ ﻓﻲ ﺟﺴﺪﻩ ﺑﻀﻊ ﻭﺛﻤﺎﻧﻮﻥ ﻣﻦ ﺑﻴﻦ ﻳﻌﻨﻲ ﺿﺮﺑﺔ، ﻭﺭﻣﻴﺔ، ﻭﻃﻌﻨﺔ» ﻓﻘﺎﻟﺖ ﻋﻤﺘﻲ اﻟﺮﺑﻴﻊ ﺑﻨﺖ اﻟﻨﻀﺮ ﺃﺧﺘﻪ: ﻓﻤﺎ ﻋﺮﻓﺖ ﺃﺧﻲ ﺇﻻ ﺑﺒﻨﺎﻧﻪ ﻗﺎﻝ: ﻭﺃﻧﺰﻟﺖ ﻫﺬﻩ اﻵﻳﺔ {ﻣﻦ اﻟﻤﺆﻣﻨﻴﻦ ﺭﺟﺎﻝ ﺻﺪﻗﻮا ﻣﺎ ﻋﺎﻫﺪﻭا اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻓﻤﻨﻬﻢ ﻣﻦ ﻗﻀﻰ ﻧﺤﺒﻪ ﻭﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﻨﺘﻈﺮ ﻭﻣﺎ ﺑﺪﻟﻮا ﺗﺒﺪﻳﻼ}[ اﻷﺣﺰاﺏ: 23] 

அனஸ்(ரலி)  “என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர்(ரலி) பத்ருப் போரில் கலந்து கொள்ளவில்லை. அவர் (திரும்பி வந்தவுடன்) “இறைத்தூதர் அவர்களுடன் முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை; மீண்டும் போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான்.” என்று கூறினார்கள். அனஸ்(ரலி) கூறினார்கள் “ இன்னும் சிலவற்றை அவர் கூற விரும்பினார். அடுத்த ஆண்டில் இறைத்தூதர் அவர்களுடன் உஹத் போரில் அவர்கள் கலந்துகொண்டார்கள். ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவருக்கெதிரில் வரக்(கண்டு), அபூ அம்ரே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். அதனை உஹுது மலையில் காண்கிறேன்" என்று கூறினார்.அங்கே கொல்லப்படும் வரை போரிட்டார்கள். நாங்கள் அவர் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். அவரின் சகோதரி ரபியா பின்த் நள்ர்(ரலி) அவர்களைத்  தவிர வேறெவரும் அவரை (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியவில்லை; அவரின் விரல்(நுனி)களை வைத்துத் தான் அவரை அடையாளம் காண முடிந்தது.” என்று கூறினார்கள். மேலும் அனஸ்(ரலி) "அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ளனர்." என்கிற (திருக்குர்ஆன் 33:23) இறைவசனம் இறங்கியது.” என்று கூறினார்கள். (ஸுனன் அல் குப்ரா 8223, மேலும் பார்க்க திர்மிதி 3201)   

  ஆதாரம் 3: அபூதர்(ரலி) அவர்களது சாட்சியம்

ﺣﺪﺛﻨﻲ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺻﺎﻟﺢ ﺑﻦ ﻫﺎﻧﺊ، ﺛﻨﺎ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻳﺤﻴﻰ اﻟﺸﻬﻴﺪ، ﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻮﻫﺎﺏ اﻟﺤﺠﺒﻲ، ﺛﻨﺎ ﺣﺎﺗﻢ ﺑﻦ ﺇﺳﻤﺎﻋﻴﻞ، ﻋﻦ ﻋﺒﺪ اﻷﻋﻠﻰ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﺃﺑﻲ ﻓﺮﻭﺓ، ﻋﻦ ﻗﻄﻦ ﺑﻦ ﻭﻫﻴﺐ، ﻋﻦ ﻋﺒﻴﺪ ﺑﻦ ﻋﻤﻴﺮ، ﻋﻦ ﺃﺑﻲ ﺫﺭ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: " ﻟﻤﺎ ﻓﺮﻍ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻮﻡ ﺃﺣﺪ ﻣﺮ ﻋﻠﻰ ﻣﺼﻌﺐ اﻷﻧﺼﺎﺭﻱ ﻣﻘﺘﻮﻻ ﻋﻠﻰ ﻃﺮﻳﻘﻪ، §ﻓﻘﺮﺃ {ﻣﻦ اﻟﻤﺆﻣﻨﻴﻦ ﺭﺟﺎﻝ ﺻﺪﻗﻮا ﻣﺎ ﻋﺎﻫﺪﻭا اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ} (اﻷﺣﺰاﺏ: 23) 

"அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை விட்டுச் சென்ற உஹத் போரின் போது, பாதையில் கொல்லப்பட்டு கிடந்த முஸ்அப் அல் அன்சாரி அவர்களை கடந்து சென்றார்கள். அப்போது “அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெயப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். (அல் குர்ஆன் 33:23) என்ற வசனத்தை ஓதினார்கள்," என்று அபூதர்(ரலி) கூறினார்கள். (முஸ்தத்ரக் அல் ஹாகிம் 4905) 

    மேற்குறிப்பிட்ட செய்திகளை காணும் போது அல்குர்ஆன் 33:23 வசனம் இறங்கிய சூழல் முதற்கொண்டு நபித்தோழர்கள் அறிந்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது. நபி(சஸல்) அவர்கள் அந்த வசனத்தை ஓதக்கேட்டதாக மேற்குறிபிட்ட நபித்தோழர்கள் சாட்சியம் பகர்கின்றனர்.  முன்பு கூறியது போலவே, 9:128-129 ஆகிய வசனங்களைப் போல அல் குர்ஆன்33:23 வசனமும் குஸைமா(ரலி) அவர்களிடம் மட்டுமே எழுத்து வடிவில் இருந்தது என்றே ஸஹீஹ் புகாரி 2807 ஹதீஸ் கூறுகிறது. எனவே  இந்த வசனம் குறித்து குஸைமா(ரலி) அவர்களது சாட்சி மட்டுமே இருப்பதாக கூறும் இஸ்லாமோஃபோபுகளின் வாதம் எந்த மதிப்பும் அற்றது என்பது உறுதியாகிறது. 

        இந்த இடத்தில் “உள்ளத்தில் இவ்வசனங்கள் பாதுக்காக்கப்பட்டிருந்தால் ஏன் தேட வேண்டும்? என்ற கேள்வி எழும். அதற்கான விடையை ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள், தனது ஃபத்ஹுல் பாரி- ஸஹீஹ் புகாரி 4986 ஹதீஸின் விரிவுரையில் பின்வருமாறு விளக்குகிறார்.
وكأن المراد بالشاهدين الحفظ والكتاب , أو المراد أنهما يشهدان على أن ذلك المكتوب كتب بين يدي رسول الله صلى الله  عليه وسلم , أو المراد أنهما يشهدان على أن ذلك من الوجوه التي نزل بها القرآن . وكان غرضهم أن لا يكتب إلا من عين ما كتب   بين يدي النبي صلى الله عليه وسلم لا من مجرد الحفظ

 மேலும் இரண்டு சாட்சிகள் என்பதன் நோக்கம், ஒன்று மனனம் மற்றும் எழுத்து என்பதாகும், அல்லது அவர்கள் இருவரும், எது எழுதப்பட்டுள்ளதோ, அது இறைத் தூதர்(ஸல்) அவர்களின் கட்டளையின் கீழ் எழுதப்பட்டது என்று சாட்சியம் அளித்தார்கள் என்று பொருள். மேலும் அவர்கள் மனனம் செய்யப்பட்டிருந்தால் மட்டும் அதனை எழுதவில்லை, எதனை நபி(ஸல்) அவர்களது காலத்திலேயே எழுதப்பட்டதாகவும் பெறுகிறார்களோ அதையே எழுதுவது என்பதே அவர்களது குறிக்கோளாகும். 

            அதாவது மனனத்தில் இருப்பதை மட்டும் எழுதுவதற்காக இரு சாட்சிகள் என்ற அளவுகோல் முன்வைக்கப்படவில்லை. மாறாக எது மனனமும் செய்யப்பட்டு நபி(ஸல்) அவர்களது காலத்தில் நபி(சல்) அவர்களது உத்தரவின் பேரில் எழுதவும் பட்டதோ அதனையே குர்ஆன் தொகுப்பில் இணைத்தார்கள். அதனால்தான் ஸைத்(ரலி) தானே அதனை அறிந்திருந்த போதும், அந்த வசனத்தை தேடியதாக கூறுகிறார்.

அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தின் தொகுப்பு அரைகுறையானதா???

     அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தின் தொகுப்பு அரைகுறையானது என்ற இஸ்லாமோஃபோபுகளின் இந்த வாதத்திற்கான காரணம் புகாரி ஹதீஸ் 4988 ஆகிய ஹதீஸ்களில் அடைப்புக்குறியில் “(உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) என்ற குறிப்பை மொழிபெயர்ப்பாளர்கள் சேர்த்துள்ளனர். இவ்வாறு அல் குர்ஆன் 33:23 வசனம் சேர்க்கப்பட்ட்து உஸ்மான்(ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தில் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அல் குர்ஆன் 33:23 வசனம் தொடர்பாக இடம் பெறும் எந்த ஹதீஸிலும் அது எந்த காலத்தின் தொகுப்பு என்ற எந்த குறிப்பும் இடம் பெறவில்லை மாறாக பின்வரும் செய்திகள், இரண்டு வசனங்களின் சேர்க்கையும் அபூபகர்(ரலி) அவர்களது காலத்திலேயே நடைபெற்றது என கூறுகிறது…….(குறிப்பு: ஸஹீஹ் புகாரி 4679 ஹதீஸை படித்துவிட்டு இந்த செய்தியை படிக்கவும்)

ﺣﺪﺛﻨﺎ ﺣﻔﺺ ﺑﻦ ﻋﻤﺮ اﻟﺪﻭﺭﻱ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﺑﻦ ﺟﻌﻔﺮ ﺃﺑﻮ ﺇﺑﺮاﻫﻴﻢ، ﻋﻦ ﻋﻤﺎﺭﺓ ﺑﻦ ﻏﺰﻳﺔ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ، ﻋﻦ ﺧﺎﺭﺟﺔ ﺑﻦ ﺯﻳﺪ ,عن زيد بن ثابت ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ: " ﻋﺮﺿﺖ اﻟﻤﺼﺤﻒ ﻓﻠﻢ ﺃﺟﺪ ﻓﻴﻪ ﻫﺬﻩ اﻵﻳﺔ {ﻣﻦ اﻟﻤﺆﻣﻨﻴﻦ ﺭﺟﺎﻝ ﺻﺪﻗﻮا ﻣﺎ ﻋﺎﻫﺪﻭا اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻓﻤﻨﻬﻢ ﻣﻦ ﻗﻀﻰ ﻧﺤﺒﻪ ﻭﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﻨﺘﻈﺮ ﻭﻣﺎ ﺑﺪﻟﻮا ﺗﺒﺪﻳﻼ}[اﻷﺣﺰاﺏ: 23] ﻗﺎﻝ: ﻓﺎﺳﺘﻌﺮﺿﺖ اﻟﻤﻬﺎﺟﺮﻳﻦ ﺃﺳﺄﻟﻬﻢ ﻋﻨﻬﺎ ﻓﻠﻢ ﺃﺟﺪﻫﺎ ﻣﻊ ﺃﺣﺪ، ﺛﻢ اﺳﺘﻌﺮﺿﺖ اﻷﻧﺼﺎﺭ ﺃﺳﺄﻟﻬﻢ ﻋﻨﻬﺎ، ﻓﻠﻢ ﺃﺟﺪﻫﺎ ﻣﻊ ﺃﺣﺪ ﻣﻨﻬﻢ، ﺣﺘﻰ ﻭﺟﺪﺗﻬﺎ ﻣﻊ ﺧﺰﻳﻤﺔ ﺑﻦ ﺛﺎﺑﺖ اﻷﻧﺼﺎﺭﻱ ﻓﻜﺘﺒﺘﻬﺎ، ﺛﻢ ﻋﺮﺿﺘﻪ ﻣﺮﺓ ﺃﺧﺮﻯ ﻓﻠﻢ ﺃﺟﺪ ﻓﻴﻪ ﻫﺎﺗﻴﻦ اﻵﻳﺘﻴﻦ: {ﻟﻘﺪ ﺟﺎءﻛﻢ ﺭﺳﻮﻝ ﻣﻦ ﺃﻧﻔﺴﻜﻢ}  [اﻟﺘﻮﺑﺔ: 128] ، ﺇﻟﻰ ﺁﺧﺮ اﻟﺴﻮﺭﺓ  ﻗﺎﻝ: ﻓﺎﺳﺘﻌﺮﺿﺖ اﻟﻤﻬﺎﺟﺮﻳﻦ ﺃﺳﺄﻟﻬﻢ ﻋﻨﻬﺎ ﻓﻠﻢ ﺃﺟﺪﻫﻤﺎ ﻣﻊ ﺃﺣﺪ ﻣﻨﻬﻢ، ﺛﻢ اﺳﺘﻌﺮﺿﺖ اﻷﻧﺼﺎﺭ ﺃﺳﺄﻟﻬﻢ ﻋﻨﻬﻤﺎ ﻓﻠﻢ ﺃﺟﺪﻫﻤﺎ ﻣﻊ ﺃﺣﺪ ﻣﻨﻬﻢ ﺣﺘﻰ ﻭﺟﺪﺗﻬﻤﺎ ﻣﻊ ﺭﺟﻞ ﺁﺧﺮ ﻳﺪﻋﻰ ﺧﺰﻳﻤﺔ ﺃﻳﻀﺎ ﻣﻦ اﻷﻧﺼﺎﺭ ﻓﺄﺛﺒﺘﻬﻤﺎ ﻓﻲ ﺁﺧﺮ ﺑﺮاءﺓ "

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறியதாவது: நான் முஸ்ஹஃபை முதல் முறை சரி பார்த்தேன், அதில் "அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் நம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். தமது இலட்சியத்தை அடைந்தவரும் அவர்களில் உள்ளனர் (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றவில்லை [அல்குர்ஆன் 33:23]" என்ற வசனத்தை காணவில்லை. அதனை முஹாஜிர்களிடம் தேடினேன், யாரிடமும் கிடைக்கவில்லை. பிறகு அன்ஸாரிகளிடம் தேடினேன், குஸைமா இப்னு ஸாபித் அல் அன்ஸாரி அவர்களைத் தவிர யாரிடமும் கிடைக்கவில்லை. அதனை எழுதிக்கொண்டேன். பிறகு மீண்டும் ஒருமுறை அதனை சரிபார்த்தேன். அப்போது "உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். .[அல்குர்ஆன் 9:128] என்பதிலிருந்து அந்த சூராவின் முடிவு வரை உள்ள இரு வசனங்களை காணவில்லை. அதனை முஹாஜிர்களிடம் தேடினேன், யாரிடமும் கிடைக்கவில்லை. பிறகு அன்ஸாரிகளிடம் தேடினேன், அன்ஸாரிகளில் ஒருவரான குஸைமாவிடம் தவிர யாரிடமும் கிடைக்கவில்லை. அதனை பாரஅத் சூராவின் இறுதியில் சேர்த்துவிட்டேன்." (தாரிக் மதீனா 3/1001)

 எனவே மேற்குறிபிட்ட செய்தியை காணும் போது 9:128-129 மற்றும் 33:23 ஆகிய குர்ஆன் வசனங்கள் அபூபக்ர்(ரலி) குர்ஆன் தொகுப்பிலேயே இடம் பெற்றுவிட்டது என்பதை அறிய முடிகிறது. உஸ்மான்(ரலி) அவர்கள் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்த அபூபக்ர்(ரலி) காலத்து குர்ஆன் தொகுப்பினை பிரதி எடுத்தும், ஒவ்வொரு முறையும் ஒப்பிட்டு சரிபார்த்தும் இஸ்லாமிய ஆட்சியின் அரபு அல்லாத பகுதிக்கு அனுப்பினார்கள் என்று இந்த தொடரின் பல இடத்தில் பதிவு செய்துள்ளோம். எனவே அபூபக்ர்(ரலி) காலத்து குர்ஆன் தொகுப்பு முழுமையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை… 

        மேற்குறிபிட்ட ஆதாரங்களே அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) அவர்கள் மட்டுமே சாட்சியாக இல்லை என்பதை விளக்க.  அவர்கள் முன்வைக்கும் ஆதாரம் 3ன் அடிப்படையிலும் அது தொடர்பான ஹதீஸ்களின் அடிப்படையிலும் குஸைமா(ரலி) அவர்களது சாட்சி பொய்யானது அல்ல என்பதை நிறுவ சில சிந்தனைக்கான விஷயங்களை முன்வைக்கிறோம்.

1.குஸைமா(ரலி) அவர்களது சாட்சியை வாதி பிரதி வாதியாக இருந்த நபி(ஸல்) மற்றும் அந்த கிராமவாசி ஏற்றிருக்கும் போது 14 நூற்றாண்டுகள் பிறகு வந்தவர்கள் எதன் அடிப்படையில் பொய் சாட்சி என்று கூறுகின்றனர். குறிப்பாக கிராமவாசி குஸைமா(ரலி) அவர்களது சாட்சியை பொய் சாட்சி என்று கூறினாரா???. 

 2.மேலும் அஹ்மத் 21883 ஹதீஸில் பின்வருமாறு இடம்பெறுகிறது 

 .......ﺟﺎء ﻣﻦ اﻟﻤﺴﻠﻤﻴﻦ ﻗﺎﻝ ﻟﻷﻋﺮاﺑﻲ: ﻭﻳﻠﻚ ﺇﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻟﻢ ﻳﻜﻦ ﻟﻴﻘﻮﻝ ﺇﻻ ﺣﻘﺎ. ﺣﺘﻰ ﺟﺎء ﺧﺰﻳﻤﺔ ﻟﻤﺮاﺟﻌﺔ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﻣﺮاﺟﻌﺔ اﻷﻋﺮاﺑﻲ

......முஸ்லீம்களில் ஒருவர் கிராமவாசியிடம் " உங்களுக்கு கேடுதான்! அல்லாஹ்வின் மீதாணையாக!, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையைத் தவிர வேறு எதையும் சொல்ல மாட்டார்கள் என்று குஸைமா(ரலி), நபி(ஸல்) அவர்களையும், கிராமவாசியையும் சந்தித்து பரிசீலிக்கும் வரை கூறிக்கொண்டிருந்தார்.....

3.குஸைமா(ரலி),  நபி(ஸல்) அவர்களையும், கிராமவாசியையும் பரிசீலித்து கிராமவாசி விற்றார் என்று அறிவித்தால் அது எப்படி பொய் சாட்சியமாகும்?...ஷஹித என்ற சொல் கண்ணால் கண்டதற்கு சாட்சியம் அளிப்பதை மட்டும் குறிக்காது. பரிசீலித்து அறிவிப்பதையும் குறிக்கும். இன்றும் முஸ்லீம்கள் சொல்லும் “ஷஹாதா” அது போன்றதுதான். 

4.இஸ்லாமின் முழு அதிகாரம் படைத்த நபி(ஸல்) அவர்களே குஸைமா(ரலி) அவர்களது சாட்சியத்தை ஏற்றிருக்கும் போது, முஸ்லீம்களாகிய எங்களுக்கும், ஸைத்(ரலி) அவர்களுக்கும் அதில் எந்த சிக்கலும் இல்லை.

        மேற்குறிபிட்ட செய்திகளையும் கேள்விகளையும் அறிவுள்ள யார் ஆய்வு செய்தாலும் குஸைமா(ரலி) கூறியது பொய் சாட்சி அல்ல என்றே கூறுவார். 

        நாம் முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) மட்டும் ஆதாரம் அல்ல, ஸைத் இப்னு ஸாபித்(ரலி), உபை இப்னு கஃஅப்(ரலி), அனஸ்(ரலி), அபூதர்(ரலி) உள்ளிட்ட நபித்தோழர்கள் நேரடியாக அந்த வசனங்களை நபி(ஸல்) அவர்களிடமே சேவியுற்றுள்ளனர் என்பது நிரூபனம் ஆகிறது. குஸைமா(ரலி) கூறிய சாட்சியம் அவர் பரிசீலித்து வழங்கியது என்பது நிரூபனம் ஆகிறது. எனவே அது பொய் சாட்சியம் அல்ல என்பது உறுதியாகிறது. அவரது சாட்சியம் எந்த விதத்திலும் குறையுள்ளது அல்ல. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நபிதோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் செவியுற்று அறிவிக்கும் எந்த முத்தவாதீர் கிராத்திலும் மேற்குறிபிட்ட வசனங்கள் விடுபடவில்லை என்பதிலிருந்து அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்கள் அல் குர்ஆனின் பகுதிதான் என்று உறுதியாகிறது…..அல்ஹம்துலில்லாஹ்…. 

No comments:

Post a Comment