Sunday, August 11, 2019

இஸ்லாம் கூறும் பலதார மணத்தில் பெண்ணின் உரிமை

ஏக இறைவன் அல்லாஹ்வின்  திருப்பெயரால்

             இந்த பதிவானது பலதார மணம் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன என்பதை தெளிவாக இஸ்லாமிய சகோதர்ரகளுக்கும் இஸ்லாமிய எதிர்பாளர்களுக்கும் விளக்கவே. பொதுவாக இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் பலதார மணம் குறித்து பேசும் போது பெண்ணின் உரிமை பாதிப்பதாகவே வாதிடுவார்கள். மேலும் இதனால் முதல்தாரத்தின் உரிமை பறிக்கப்படுவதாகும் வாதிடுவார்கள். உண்மையில் இஸ்லாமின் பலதார மணம் குறித்த பார்வையை தெளிவு படுத்தினாலே பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எப்படி இஸ்லாம் வரையறுக்கப்பட்ட உரிமைகளையும் கடமைகளையும் வழங்கியுள்ளது என்பது தெளிவாக விளங்கும் இன் ஷா அல்லாஹ்.

இஸ்லாம் கூறும் பலதாரமணம்:

وَإِنْ خِفْتُمْ أَلا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلا تَعُولُوا (٣)

   அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.(அல் குர்ஆன் 4:3)
        இந்த வசனம்தான் ஆண்களுக்கு பலதார மணம் செய்யும் உரிமையை தருகிறது. ஆனால் இந்த வசனம் பலதார திருமணத்தை கட்டாயம் ஆக்கவில்லை. மேலும் பெண்களை திருமணம் செய்ததோடு அவர்களை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற கட்டளையும் சேர்த்து சொல்கிறது.

              இஸ்லாத்தின் அடிப்படை சட்டவாக்கம், சில உரிமைகளை வழங்கும் முன்னர் அதன் தொடர்பாக சில கடமைகளையும் விதிக்கும். அந்த அடிப்படையில் பலதாரமண உரிமையும் அத்தகையதே என்பதை இஸ்லாம் குறித்து தெளிவாகவும், தொடர்ச்சியாகவும் கற்கும் யாரும் புரிந்து கொள்வார்கள்.

    இது தொடர்பாக இஸ்லாமிய எதிர்பாளர்கள் எடுத்து வைக்கும் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது " இதனால் முதல் திருமணம் செய்த பெண்ணின் உரிமை பாதிக்கப்படுகிறது" என்பதேயாகும்.

    ஆம் இதனால் முதல் திருமணம் செய்த பெண்ணின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது. ஒரு பெண் பொருளாதார ரீதியாகவும் கணவனோடு பகிர்துகொள்வதையும் இழக்கிறாள். ஆனால் இஸ்லாம் இது குறித்த தெளிவான பார்வை கொண்டுள்ளது. பலதார திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்கள் தொடர்புடையது. 

    இதுதொடர்பாக இரண்டாவதாக மணம் முடிக்க தயராக இருப்பவளும் பெண்தான் என்பதை நாம் சிந்திக்க கடமை பட்டுள்ளோம். வரதட்சனை, விதவை மறுதிருமண மறுப்பு போன்ற சமுக அவலம் காரணமாகவும், ஆண் விகிதாசார சரிவு போன்ற நிலையினாலும் இரண்டாம் தாரமாகவாவது வாழ ஒரு  பெண் தள்ளப்படுகிறாள் என்பது நிதர்சனம். ஆக இத்தகைய சுழலில் பலதாரமணம் அனுமதிக்கப்படாமல் போகும் போது விபச்சாரம்,ஓரினச் சேர்க்கை போன்ற சமுக கேடுகள் தலைதூக்கும், ஆக இதை எதிர் கொள்ள பலதாரமணம் ஒன்றுதான் தீர்வாக அமையும். ஒரு பெண்ணின் உரிமையை காட்டிலும் சமூக நன்மை முன்னிறுத்தப்படுகிறது.

இந்த விஷயங்களை இஸ்லாம் கருத்தில் கொண்டும் பெண்களின் மனநிலையை கருத்தில் கொண்டும் இஸ்லாம் சில நிபந்தனைகளை கூறுகிறது. இது தொடர்பாக இஸ்லாமியர்கள் மத்தியிலும் கூட தவறான புரிதல் உள்ளது என்பது உண்மைதான்.   இஸ்லாம் கூறும் நிபந்தனைகள் இவ்விஷயத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் முதல் மற்றும் மற்ற மனைவியின் உரிமைகள் பாதுக்காக்கப்படும். அதனால்தான் நபி(சல்) அவர்கள் திருமண ஒப்பந்தம் குறித்து கூறுகையில் பின்வருமாரு கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனையே ஆகும்.இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்: முஸ்லிம் 2772)
   ஆக திருமண நிபந்தனைகளில் பேசப்பட வேண்டிய முக்கியமான சரத்துகளில் இதுவும் ஒன்று. 

மறுதிருமணம் குறித்த நிலைபாடை திருமணத்திற்கு முன்பே இருவரும் முடிவு செய்வது.

        இஸ்லாம் ஒரு ஆண் மறுதிருமணம் செய்வது குறித்த நிபந்தனை பற்றி திருமண ஒப்பந்ததில் முன்பே பேசி தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆண் மற்றும் பெண்ணில் முழு உரிமையும், சமூக நன்மையும் இதனால் காக்கப்படுகிறது. இதை பின் வரும் சம்பவம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

இதற்கான் செயல் வடிவத்தை நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இருந்து பெறலாம்.
அலீ பின் அல்ஹுசைன் (ஸைனுல் ஆபிதீன் - ரஹ்) அவர்கள் கூறியதாவது:
          நாங்கள் (எங்கள் தந்தை) ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட காலத்தில் யஸீத் பின் முஆவியாவைச் சந்தித்துவிட்டு, மதீனாவுக்கு வந்தோம். அங்கு என்னை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் சந்தித்தார்கள்.
        அப்போது அவர்கள், "என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித்தர ஆயத்தமாயிருக்கிறேன்)" என்று கேட்டார்கள். நான் அவர்களிடம், "அப்படி ஏதுமில்லை" என்று பதிலளித்தேன்.
மிஸ்வர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாளை என்னிடம் கொடுக்கிறீர்களா? ஏனெனில்,அந்த (பனூ உமய்யா) கூட்டத்தார் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடமிருந்து அந்த வாளைப் பறித்துக்கொள்வார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை என்னிடம் கொடுத்தால் என் உயிர் போகும்வரை ஒருபோதும் அது அவர்களிடம் போய்ச் சேராது" என்று கூறினார்கள். (பிறகு பின்வரும் சம்பவத்தை விவரிக்கலானார்கள்:)
     ஃபாத்திமா (ரலி) அவர்கள் (தம் துணைவியாக) இருக்கும்போதே, அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அபூஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காதுக்கு எட்டிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது குறித்து மக்களிடம் தமது இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை நான் செவியுற்றேன். -அப்போது நான் பருவவயதை அடைந்து விட்டிருந்தேன்.-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(என் மகள்) ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தனது மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம்முடைய மருமகன் ஒருவரை ("அபுல்ஆஸ் பின் ரபீஆ") பற்றிக் குறிப்பிட்டார்கள்; அவர் (அவருடைய மாமனாரான) தம்முடன் நல்ல மருமகனாக நடந்துகொண்டதைப் பாராட்டினார்கள்: அப்போது அவர்கள், "அவர் என்னிடம் பேசினார். (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார்; அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்.
   மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றை தடை செய்யக்கூடியவன் அல்லன்; தடை செய்யப் பட்ட ஒன்றை அனுமதிக்கக்கூடியவனும் அல்லன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதரின் மகளும் இறை விரோதியின் (அபூ ஜஹ்லின்) மகளும் ஒரே இடத்தில் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒருபோதும் ஒன்றுசேர முடியாது" என்று கூறினார்கள். (நூல்: புஹாரி 4841.)
மேலும் ஒரு நபிமொழி பின்வருமாறு கூறுகிறது
மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்
                இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படி, 'ஹிஷாம் இப்னு முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூ ஜஹ்லுடைய) மகளை அலீ இப்னு அபீ தாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்கமாட்டேன். அலீ இப்னு தாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்குச் செய்துவிட்டு, அவர்களின் மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை  வேதனைப்படுவது என்னை மன வேதனைப்படுத்துவதாகும்'' என்று கூறினார்கள்.
நூல்: புஹாரி 5230
        ஆம் ஃபாத்திமா(ரலி) அவர்களின் திருமணத்தின் போது அலி(ரலி) அவர்கள் வழங்கிய வாக்குறுதியை நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய மற்றொரு மகளின் கணவரை சுட்டிகாட்டி நினைவுகூறுகிறார்கள். திருமணத்திற்கு முன்பே நிபந்தனைகள் பேசப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதிஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன. மேலும் பலதார மணம் புரிய நிபந்தனை அற்ற அனுமதி இருக்குமானால், நபி(சல்) அவர்களிடமோ, அல்லது பாத்திமா(ரலி) அவர்களிடமோ அனுமதி பெற வேண்டிய அவசியம் அலி(ரலி) அவர்களுக்கு இல்லை. அவர்களது அனுமதி கோரல் என்பது திருமணம் ஒப்பந்தத்தில் போடப்பட்ட நிபந்தனையின் அடிப்படையில்தான் என்பதை புரிய முடிகிறது.

        இந்த கருத்தை நாம் கூறியதும் “தற்கால் அறிஞர்கள் யாரும் இதை கூறவில்லை என்று கூறி இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் தைய தக்கா என குதிக்கலாம். ஆனால் இதே கருத்தில் முன்சென்ற அறிஞர்கள் இருந்துள்ளனர்.

   ஒரு மனிதன் மறுதிருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்ற நிபந்தனையை ஏற்று இருந்தால் அதை நிறைவேற்றுவது ஆணின் மீது கடமையாகும். அந்த நிபந்தனயை அவர் மீறும் போது அந்த பெண் திருமண ஒப்பதத்தை முறிக்கலாம்.( இப்னு கைய்யிம் ஜாத் அல் மாத்(5/117-118))

      “அப்போது அவர்கள், "அவர் என்னிடம் பேசினார். (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார்; அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்” என்பது அவர் ஜைனப்(ரலி) (நபி(ஸல்) அவர்களின் மகள்) அவர்களை தவிர வேறு பெண் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று அவர் உறுதி மொழி அளித்து இருப்பார். அதையே அலி(ரலி) அவர்களும் செய்திருப்பார். ..(-இப்னு ஹஜரின் ஃபத்ஹுல் பாரி(7/86))

இந்த நிபந்தனையை ஒரு பெண் ஏற்றுகொள்வாளா?

        இது ஒவ்வொரு பெண்ணின் மனநிலை பொறுத்தது. இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனிக்கவேண்டியுள்ளது. அதாவது இரண்டாம் திருமணத்தை ஏற்று கொள்பவளும் பெண்தான். வரலாற்றில் பெண்களின் மனநிலை சர்வாதிகாரி போன்றது அல்ல. அதிக கருணையுடையவர்கள்தான் பெண்கள் என்பது வரலாறு நெடுக காணக்கிடக்கிறது. இன்றைய பெண்ணியவாதிகளில் சிலர் கூறுவது போல் தன் சகோதரியின் தேவை புரியாத கல்லாலான இதயம் படைத்தவர்கள் அல்ல பெண்கள். வரலாறில் ஆண்களின் விகிதத்தில் சரிவு ஏற்படும் காலங்களில் சமுக கேடுகளை தடுக்கும் எண்ணத்தில் பெண்களே முன்வந்து பலதார மணத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள். உதரணமாக ஹம்ப்ரீ என்ற மானுடவியல் வல்லுனர் இது குறித்து ரஸ்யாவில் இஸ்லாமியர் அல்லாத பகுதியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவை கூறுகிறார். அங்கு இருக்கும் படித்த பெண்களும் கிராம்ப்புறங்களில் இருக்கும் பெண்களும் ஆண்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவினால் ஏற்படும் சிக்கலை சரி செய்ய பலதாரமணத்தை அனுமத்திக்க வேண்டும் எங்கின்றனர். என்று ஹம்ப்ரீ ஆச்சரியம் கொள்கிறார்.[1] 

    அரேபியா போன்ற நாடுகளிலும் மேற்குரிய நிலையே காணப்படுகிறது.மேலும் கென்யா போன்ற நாடுகளில் பால்வினை நோயின் பரவலைத் தடுக்க இது ஒரு வழிமுறையாக அங்கிருக்கும் பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர். எலிசபெத் ஜோசப் போன்ற பெண்ணியலாளர்களும் பலதார மணத்தால் தங்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைப்பதால் ஆதரிக்கின்றனர். இப்படி பல வகையான சமுக சுழலை எதிர் கொள்ள பெண்கள் இத்தகைய பலதாரமணத்தை ஆதரிக்கின்றனர். இரண்டாம் தாரமாக வரும் பெண்ணை வேசியாக்கும் சில முதல் மனைவியின் காழ்புணர்ச்சிதான் பெண்ணியவாதிகள் சிலரின் எண்ணமாகவும் இருக்கிறது. ஆனால் பெண்களை சமுக சிந்தனையற்ற சுயநலமிகள் என்ற பெண்ணியவாதிகளின் எண்ணத்தை பெண்கள் தவிடு பொடியாக்கியுள்ளனர் வரலாறு நெடுகிலும் என்பதுதான் உண்மை.

இயற்கையில் பலதாரமணம் சரியானதா:
                   மனித பால் ஈருருமை (Sexual dimorphism =XM/XF) குறியீடு 1.15. அதாவது ஆண் மற்றும் பெண்ணின் உடலில் இருக்கும் வேறுபாடு. எடுத்துக்காட்டாக ஒத்த வயதுடைய ஆண் மற்றும் பெண்ணின் உடல் எடை வளர்ச்சி போன்றவற்றின் விகிதாச்சார குறியீட்டு எண். இந்த எண் அதிகரிக்கும் போது அந்த உயிரினத்தின் ஆண் பாலினம் பலதார தன்மை உடையதாய் இருக்கும்(2)(3). மேலும் ஒரு உயிரினத்தில் சந்ததியின் உருவாக்கத்தில் அதிகம் செலவு செய்பவை ஒருதார குணமுடையதாய் இருக்கும் என்று “EVOLUTIONARY PSYCHOLOGY” கூறுகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும் போது ஆண்கள் பலதார மணம் புரிவதற்கு தகுதி உடையவராகதான் இருப்பார்கள்.(4) 

                மேலும் கத்தொலிக்க மதம் இவ்வுலகில் பரவிய பிறகே பலதார மணம் குற்றமாக கருதும் நிலை ஏற்பட்டது. ஆனால் மனித பால் ஈருருமை குறியீடு 1.15 என்பதால் SLIGHTLY POLYGAMOUS என்று அறிவியல் கூறுகிறது. இதை அடிப்படையாக கொண்டு சிந்திக்கும் போது ஆண்களின் பலதார மணத்தை 4 என்ற அளவிற்கு இஸ்லாம் சுருக்கி இருப்பது அர்த்தமுடையதுதான். சொல்லப்போனால் பலதார மணத்தை இயற்கையாளர் அல்லது நாத்திகர்கள்தான் அதிகம் ஆதரிக்க வேண்டும். ஆனால் இங்கு நிலை தலைகீழாக உள்ளது. பலதாரமணத்திற்கு தடை என்றும் குற்றம் என்றும் அறிவித்த பல நாடுகளில் இது கள்ளத்தொடர்புகளாகவும் விபச்சாரமாகவும் நடைபெறுகிறது. இதில் பில் கிளின்டன் போன்ற அதிபர்களும் அடக்கம். 

ஏன் பெண்களுக்கு பலதார அனுமதியில்லை:

               மனித வரலாற்றில் அதற்கான் தேவை என்றுமே இருந்ததில்லை. என்றும் அதற்கான் தேவை வரப்போவதும் இல்லை.மனித பால் ஈருருமை (Sexual dimorphism =XM/XF) குறியீடு அதைத்தான் உணர்த்துகிறது. மேலும் ஆண் மற்றும் பெண்ணின் விந்து மற்றும் கரு உற்பத்தியின் எண்ணிக்கை வேறுபாடு இந்த கருத்தை வலுவூட்டுவதாய் உள்ளது. (கரு உற்பத்தியில் இருந்தே சந்ததி உருவாக்கத்தின் செலவு பெண்ணுக்கு தொடங்குகிறது. சராசரியாக ஒரு பெண் தனது வாழ்நாளில் 30 சந்ததிகளைத்தான் உருவாக்க முடியும். ஆனால் ஒரு ஆண் 3000 மேற்பட்ட சந்த்திகளை ஏற்படுத்த முடியும். வேறுபாடு இதில் இருந்தே ஆரம்பம் ஆகிறது. இதனால்தான் ஆண்கள் வரலாறு நெடுக பலதார மணம் உடையவராய் இருந்துள்ளனர் என்று அறிவிலாளர்கள் விவரிக்கின்றனர்.

Citations:
1.http://www.theguardian.com/education/2009/oct/27/polygamy-study-russia-central-asia
2.http://web.missouri.edu/~flinnm/courses/mah/lectures/sexdim.htm
3.https://www.irishtimes.com/news/science/are-humans-naturally-monogamous-or-polygamous-1.3643373
4.https://en.wikipedia.org/wiki/Parental_investment
5.https://carta.anthropogeny.org/moca/topics/sexual-body-size-dimorphism?fbclid=IwAR1B2ncomsdLQeOhSU-es-EXV3__nwr_nlVElkyuxZUkHB_VuHDsjHHvpCw
6.https://academic.oup.com/beheco/article/14/6/818/269169?fbclid=IwAR3AiBG7iTuZy6cRzxALqQplEk10POIyh7yaGbNm56U60_v1IkYo6ZDNo6s
7.https://www.nature.com/scitable/knowledge/library/mating-systems-in-sexual-animals-83033427/

No comments:

Post a Comment