Friday, January 12, 2018

எதிர்தொடர் 25: போர்களத்தில் வானவர்களும் அல்லாஹ்வின் அற்புதமும்

ஏக இறைவனின் திருப்பெயரால்


             சென்ற தொடரில் நிலவு பிளந்தது குறித்து கண்டோம். இத்தொடரில் போர்களங்களில் அல்லாஹ் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்த நமது எதிர் தரப்பினரின் விமர்சனங்களையும்(1) அது எவ்வளவு கண்மூடித்தனமானது என்பதையும் காண்போம் இன்ஷா அல்லாஹ். சென்ற தொடரில் நாம் அற்புதம் குறித்து ஓரளவிற்கு விளக்கியுள்ளதால் இந்த தொடரில் வீணான விளக்கங்கள் தேவைபடாது என்று எண்ணுகிறேன்.
  
   போர்க்களங்களில் வானவர்கள் இறக்கப்படுவதும், அவர்கள் போரிடுவதும் இறைவனின் விதிப்படிதான். இறைநம்பிக்கையாளரை எதிர்த்த எதிரிகள் யார்? அந்த கூட்டுபடையினரையும், அவர்களது நிலையையும், இறைநம்பிக்கையாளர்களின் நிலையையும் ஒப்பிட்டாலே வானவர்களை போர்க்களத்தில் இறக்கியதில் எந்த தவறும் இல்லை. இறைநம்பிகையை ஏற்றதால் மட்டும் ஒருவருக்கு எளிமையாக சொர்க்கம் கிடைக்கும் என்பதை இஸ்லாம் மறுக்கிறது. இந்த உலக வாழ்வை சோதனை களமாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். ஆக சோதனைக்கு பிறகு அல்லாஹ் தனது வல்லமையால் வெற்றியளிக்கிறான். அவ்வளவே. அல்லாஹ் நம்பிக்கை என்னும் கீற்றை இதன் மூலம் இறைநம்பிக்கையாளர்களுக்கு விதைக்கிறான்.

இதுபோக பல தொடர்களில் விடையளிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையே கட்டுரையாளர் முன்வைக்கிறார்.

1.நபி(சல்) அவர்களின் மனைவிமாரிடையே ஏற்பட்ட சச்சரவை தீர்க்கவா அல்லது மனித சமுதாயத்திற்கு வழிகாட்ட இறைசெய்தி இறங்கியதா? என்பதை இந்த தொடரில் காண்க 
http://theervaithedi.blogspot.in/2015/04/7.html

2.நபி(சல்) அவர்களை படைக்காவிட்டால் இந்த பிரபஞ்சத்தை படைத்திருக்க மாட்டேன் என்பதின் விளக்கம் இந்த தொடரில் உள்ளது 

3.உயிர் ரூஹ் குறித்து இஸ்லாமின் நிலைபாடு எந்த அளவிற்கு அறிவியல் பூர்வமானது, எந்த அளவிற்கு விளக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பின்வரும் தொடர்களில் காண்க

No comments:

Post a Comment